Sunday, July 31, 2016

அம்மா ஆட்சியினை பழித்ததால்...

இனி பலபேர் யாரையாவது அடித்துவிட்டு, அம்மா ஆட்சியினை பற்றி தப்பாக பேசியதால் அடித்தேன் என கிளம்பிவிடுவார்களோ என பயமாக இருக்கின்றது,

இனி சொந்த பிரச்சினையில் அடித்துவிட்டு அம்மா ஆட்சியினை பழிக்க என்ன தைரியம் என சீறிவிட்டு வந்துவிடலாம், அது துண்டு பீடி, குவார்ட்டர் என என்ன பிரச்சினையாகவும் இருந்தாலும், அம்மா ஆட்சியினை பழித்ததால் அடித்தேன் என சொல்லிவிடலாம்

இன்னும் என்னென்ன விசித்திரங்களை எல்லாம் தமிழகம் காணபோகின்றதோ தெரியவில்லை, எதற்கும் எல்லோரும் ஹெல்மெட் மாட்டிகொண்டு நடமாடுவதுநல்லது,


அது விமான நிலையமாக இருந்தாலும் சரி, ரயில் நிலையமாக இருந்தாலும் சரி.

ஆனால் அதே டெல்லியில் உச்சநீதிமன்றம் அவதூறு வழக்கில் தமிழக அரசினை முறைத்த விஷயம் சற்றே ஆறுதளிக்கின்றது, ஏதும் சிக்கல் என்றால்

"அரசை விமர்சித்தால் முன்பு வழக்கு போட்டார்கள், இப்பொழுது கன்னத்திலே பளாரென்று போடுகின்றார்கள்" என வாதிடலாம்

நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கின்றது என நீதிபதி மனதிற்குள் நினைத்துகொள்வார்

நல்ல வேளையாக சீமானியரும், புலியரும், புதிதாக சம்பாதித்த ரஞ்சித் வெறியர்களும் என் அருகில் இல்லை

இருந்திருந்தால் என் கன்னம் என்ன ஆகி இருக்கும் :) , அம்மாவை பற்றி பேசிய உன்னை விடுவோமா என பாய்ந்திருப்பார்கள், அதில் திமுகவினரும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்

Saturday, July 30, 2016

இன்று உலக நண்பர்கள் தினம்

இன்று உலக நண்பர்கள் தினமாம்

முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறோம், இந்த விஞ்ஞா வீதியான‌ முகநூலில் மில்லியன் கணக்கான நபர்கள் உண்டு எனினும் நமக்கு நண்பர்கள் என வாய்த்தவர்கள் வித்தியாசமானவர்கள்

பெரும்பாலும் நாட்டுபற்றுள்ளவர்ர்கள், சாதி கடந்தவர்கள், ஓரளவிற்கு எது தர்மம் என அறிந்தவர்கள் , குறுகிய வட்டத்தில் தன்னை அடைத்துகொள்ளா பெரும் மனதிற்கு சொந்தகாரர்கள் எனது முகநூல் நண்பர்கள் எனும்பொழுது மனம் மகிழ்கின்றது.


சர்ச்சை செய்வார்கள், வாதம் செய்வார்கள், கடுமையாக விமர்சனம் செய்வார்கள். மறுநொடி அப்புறம்... என சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள்

பெரும் ஆச்சரியமாக இதில் 90% நண்பர்களை நான் நேரில் பார்த்ததே இல்லை, அதனால் என்ன?

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பின் ஆண்ராய்ட் வெர்ஷன் என சொல்லிவிடலாம்

அதுபோலவே நட்பில் உறுதி என்பது மட்டும் உண்மை

குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

முகநூலில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர்கள் இப்படியானவர்கள், ஒன்றுபட்ட எண்ணங்களே நம்மை எல்லாம் நட்பாக நிறுத்தியிருக்கின்றன.

நட்பு நாளின் வாழ்த்துக்கள் நண்பர்களே, கொண்டாடுவோம்

சிதறல்கள்

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை , இனியாவது விழிக்குமா அரசு : அன்புமணி சாடல்

அதாகபட்டது தாழ்த்தபட்ட சாதிக்காரன் காதல் திருமணம் செய்து சர்ச்சைகுரிய "தற்கொலை" செய்தால் அரசு தூங்கட்டும் என விட்டுவிடுவார், ஆனால், விவசாயி செத்தால் மட்டும் அரசினை விழிக்க சொல்வார்

எந்த சாதி விவசாயி என்பதை அன்னார் விரைவில் சொல்வார் என எதிர்பார்க்கலாம், பொதுவாக வன்னிய விவசாயிகளை தவிர யாருக்கும் இந்த அன்புமகன் வாய்திறப்பதில்லை




கர்நாடகாவில் இன்று பந்த், மகதாயி நதியினை மராட்டியத்துடன் பகிர்ந்துகொள்வதை கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலமையில் பந்த் ஆர்பாட்டம்

வாட்டாள் நாகராஜ் எனும் கன்னட வெறியருக்கு தண்ணி ராசி, எங்காவது நீரை பங்கிட வேண்டும் என்றால் பொங்கிவிடுவார். ஆந்திரா, தமிழத்தை தொடர்ந்து இதோ மகாராஷ்ட்டிரத்திடம் மல்லு கட்டுகின்றார்.

தமிழகத்திற்கு எதிராக இவர் பேசிய பேச்சுக்கள் சாதரணமானவை அல்ல.


கன்னட மக்கள் ஒரு வகையில் வித்தியாசமானவர்கள், என்னதான் கன்னடர் நலம், கன்ன்ட வெறி என கத்தும் இம்மாதிரி சண்டியர்களை தெருக்கத்தலுக்கு மட்டும்
அனுமதிப்பார்களே தவிர

ஒரு போதும் ஆட்சிக்கு அல்ல.

அவ்வகையில் தனித்து நிற்கிறது கன்னடம்




 

Friday, July 29, 2016

இதுதான் ஆசிய ராணுவ நிலை




இந்திய ராணுவத்தினை பற்றி ஏதும் தெரியாமல், அல்லது சீன ராணுவத்தினை பற்றியோ அதன் புத்த எதிர்ப்பு பற்றியோ தெரியாமல் எப்படி உளறமுடியும் என்றால் இப்படித்தான்

v

அட மானிட பதரே, கொஞ்சமேனும் உலக ராணுவ நிலவரம் புரியுமா?

புத்தமதம சீன கம்யூனிச அரசுக்கு எதிரி, அவ்வளவுதான் திபெத்தை பிடித்தார்கள், அதையொட்டிய சில பகுதிகளில் வந்தார்கள், அருணாசல பிரதேசம் சர்ச்சை எல்லாம் அதனிலிருக்கும் பெரும் புத்தமடாலயம் பற்றியே


புத்தமதம் எழும் பட்சத்தில் சீன கம்யூனிச அரசு தூக்கி எறியபடும் எனும் அச்சமே அவர்களை இதனை செய்யவைத்தது, இன்றும் தலாய்லாமா மூலம் இந்தியா ஏதும் செய்யலாம் எனும் அச்சம் அவர்களுக்கு உண்டு

1962 யுத்தம் எதிர்பாராமல் நடந்தது, இந்தியா சுதாரிக்க கொஞ்சம் காலமானது, அதன் பிறகு எங்கே தாக்க வந்தார்கள் சொல்லுங்கள்?

சீன ராணுவம் அப்படி உலகில் எங்கே கிழித்தது?

ரஷ்யாவிடம் மங்கோலிய பகுதியில் அடிவாங்கியது, கொரிய போரில் அது இறங்கினாலும் முழுவெற்றி பெற்றதா?

அவ்வளவு ஏன் அதன் காலடியில் இன்றளவும் நான் தான் சைனா, நீ டூப்ளிகேட் என சவால் விடும் சின்ன நாடான தைவானை என்ன செய்தது சீனா?

கடந்த வருடம் தன் எல்லையிலிருந்த சீன கடற்படையினை விரட்டி அடித்தது வியட்நாம், என்ன செய்தது சீனா?

அவ்வளவு ஏன் வெள்ளையன் திரும்ப ஒப்படைத்த ஹாங்காங்கினை கூட அதனால் முழு நிர்வாகம் செய்ய முடியவில்லை, இன்னும் அது சுயாட்சியே, மீறி இணைக்க முயன்றபோது ஹாங்காங் மக்கள் பொங்கி எழ பின் வாங்கியதுதான் சீனா

ஜப்பானை மிரட்டிகொண்டே இருக்கின்றதே தவிர அடுத்த கட்டம் செல்ல சொல்லுங்கள், செல்ல மாட்டார்கள்

இதோ சர்வதேச தீர்ப்பாயம் வியட்நாம் தீவு விவகாரத்தில் செவிட்டில் அறைந்திருக்கின்றது, என்ன செய்துவிட்டது சீனா

அவர்கள் யோசிக்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் நமது 40 ஆண்டுகால வளர்ச்சி அடியோடு நின்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியாததல்ல‌

இந்தியாவோடு மோதினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும், ஷாங்காய் வரை நமது ஏவுகனைகள் தாக்கும், போதாகுறைக்கு வியட்நாமிலும் நமது பிரம்மோஸ் ஏவுகனைகளை நிறுத்தியாயிற்று

எல்லை தகறாறுகள் எல்லா நாட்டிலும் உண்டு, ஆனால் ஒரு தயக்கம் சில நாடுகளுக்கு வரும், அதில் இன்னும் கையினை பிசைகிறது சீனா, இன்னும் அது நினைத்தவாறு அதனால் புத்தமத மூலத்தை தொடமுடியவில்லை

எமது ராணுவம் பெருமை மிகு ராணுவம், 1962ல் சிறுகுழந்தையாக அது இருந்தபொழுது சீனா அடித்திருக்கலாம், இன்றோ வளர்ந்விட்ட காளை அது

மிரட்டலிலே பாகிஸ்தான் இருக்காது, மோதினால் சீனாவும் பெரும் இழப்பினை சந்திக்கும்

இதுதான் ஆசிய ராணுவ நிலை

தைவானிடமும், வியட்நாமிடமும் கிழிக்க முடியாத சீனா, இந்தியாவில் கிழித்துவிடுமாம்.

Jai Hind

இதில் இவர் கக்கூசில் இருந்து அவருக்கு வந்த மலச்சிக்கலுக்கு இப்படி எல்லாம் யோசித்தால் மனிதருக்கு மலச்சிக்கல் மட்டுமல்ல வேறு ஏதோ ஒன்றும் சிக்கல் என முடிவிற்க்கு வரலாம்





பெண் உரிமை

சவுதியில் பெண் உரிமை எப்படி உள்ளது என சொல்லி தெரியவேண்டியதில்லை, கார் வோட்டவோ தனிமையில் நடக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை,

அந்நாட்டு பெண்கள் குரலெழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்

தாலிபான்கள் மலைலாவினை கல்விக்காக கொல்லமுயன்றது உலகறிந்தது, இன்றோ அவர் பெரும் உதாரணமாக வளர்ந்து நிற்கின்றாள்.

இதோ ஈரானில் பெண்களுக்கு கட்டாய பர்தா அணியவைக்க கூடாது என ஆண்களும் போராடுகின்றனர், ஆண்கள் பர்தா அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

எங்களுக்கு கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும் என ஆப்கானிய பெண்கள் கல்விசாலையில் குவிகின்றார்கள்

இந்து மதத்திலும் பெண்ணடிமை தனம் உண்டு, அடக்குமுறை உண்டு

அவற்றை எல்லாம் மதங்களை கடந்து கண்டித்து போராடிய , பெண் உரிமையும், பெண் கல்வியும் வேண்டுமென்று சொன்ன பெரியாரின் சிலையினை, ஷிர்க் ஒழிப்பு என்று சிலர் உடைத்து அவமானபடுத்தியிருக்கின்றார்களாம்

அன்பர்களே

மதங்களை விட மனிதநேயம் எவ்வளவு உயர்ந்தது, பெண்விடுதலை உயர்ந்தது என அவர்கள் உணர்ந்து அரேபியர்கள், ஆப்கானியர்கள் மாறி கொண்டிருக்கின்றார்கள்.

இங்கோ நிலை கற்காலம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது

இனி ஒரு காலத்தில் பெரியார் ஈரான், ஆப்கானிய எல்லையில் கொண்டாடபடலாம், அவரின் முக்கியத்துவம் அந்நாடுகளில் தெரியலாம்

இங்கோ ஷிர்க் என சொல்லி பெரியாரின் சிலையினை உடைத்து கொண்டே இருங்கள், அதனை மட்டும்தான் உங்களால் செய்யமுடியும்,

மாறாக பெரியாரின் கொள்கைகளை அல்ல ,

மத அடக்குமுறை உள்ள எல்லா இடங்களிலும் அவர் கொள்கை என்றும் தேவைபடும், வரும் காலத்தில் உங்கள் சந்ததிகளே உணரலாம், அவர் ஒருபோதும் தோற்பதில்லை.

பெரியாரின் சிலை ஷிர்க் ஒழிப்பு என அவமானபடுத்தபட்டது என‌ அங்கே போராடும் ஈரானிய இஸ்லாமியருக்கு , மலைலாவிற்கு தெரிந்தால் ஓடிவந்து அந்த சிலையினை கண்ணீரால் கழுவி சுத்தபடுத்துவார்கள்.

பெரியாரின் மதிப்புமதிப்பும், அவர் கொள்கைகளின் தேவையும் அந்த கண்ணியமிக்க‌ இஸ்லாமியருக்கு நன்றாகவே விளங்கி இருக்கின்றது.

மகிந்த ராசபக்சே

FB_IMG_1469772240484

பொதுவாக யுத்ததில் பெரும் வெற்றி ஒரு ஆட்சியாளரின் மமதையினை அதிகரிக்கும் என்பார்கள், வங்கப்போரின் வெற்றிக்கு பின் இந்திராவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன‌

இலங்கையில் ராஜபக்சேவும் அப்படித்தான் இருந்திருக்கின்றார், யாரும் பெறமுடியாதவெற்றி பெற்றாகிவிட்டது, இனி அசைக்க யாருமில்லை என்றளவில் அவரது குடும்பத்தாரின் மோசடிகள் எல்லை மீறி இருக்கின்றன, ஆடிமாத காற்றாக ஆர்பரித்திருக்கின்றார்கள்

ஆனால் அடுத்து வந்த அரசு போட்டு தாக்குகின்றது, குடும்பத்தார் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதியபடுகின்றன, உச்சமாக அவரின் மகன் கைதுசெய்யபடும் சூழல் உருவாகியுள்ள்ளது.

நமக்கு தெரியும், ராஜபக்சேவினை தமிழக மூலை முடுக்களில் எல்லாம் தெரியசெய்தவர்கள் வைகோசீமானியர், ம்ம்மேஏஏ என கத்தும் ஆட்டு மந்தை என பலர். அவர்கள்தான் தமிழகத்தில் ராஜபக்சேவினை பிரபலபடுத்தியவர்கள்

அடிக்கடி ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறுவார்கள், இப்பொழுது சத்தம் குறைவு

சரி ராஜபக்சே என்ன செய்கிறார், அவருக்கு இன்னமும் வலுவான மக்கள் பலம் உள்ளது, தமிழர் மத்தியிலும் அவருக்கு பெரும் ஆதரவு உண்டு, அவரோ தண்டி யாத்திரை செல்கிறார், கண்டி முதல் கொழும்பு வரை வைகோ ஸ்டைலில் நடைபயணம்

அது இலங்கை ஸ்டைல், சிங்கள பாணி. ஏதும் சிங்கள மக்களை திரட்டவேண்டுமென்றால் அங்கே இப்படித்தான் கிளம்புவார்கள், முன்பு ஜெயவர்த்தனே கடைபிடித்தார்.

ஆக அவர் ஒருசிக்கலும் இன்றி அட்டகாசமாக அரசியல் செய்கிறார், வைகோவின் ராஜ தந்திரம் வென்று அவரும் செட்டிலாகிவிட்டது, சீமானும் இயற்கை விவசாயம் செய்ய கலப்பை பிடித்தாகிவிட்டது

நமது சந்தேகம் எல்லாம் ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறியவர்கள், ராஜபக்சே குடும்பத்தார் போல தமிழக ஊழல் வாதிகளும் தண்டிக்கபடவேண்டும் என என்றாவது கேட்டதுண்டா? நிச்சயம் மாட்டார்கள்

லைக்கா எனும் நிறுவணத்திற்காக விஜயின் கத்தி படத்தினை கத்தி கத்தி தடுத்த தமிழர் அமைப்புகளையும் காணவில்லை, இனி அந்த லைக்கா அதிபர் சுபாஷ்கரன் சென்னை வந்து ரஜினியோடு அடிக்கடி போஸ் கொடுப்பார், எந்திரன் 2.0 எனும் அடுத்த நாடக தயாரிப்பாளர் அவரே.

ஒரு சத்தம் வந்தது அல்லது வரும், வராது. அதே சுபாஸ்கரன் தான் ராஜபக்சேயோடு கைகுலுக்கிய அவரே தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரஜினியினை சீண்டும் நாம் தமிழர் மந்தை கூட இதனை சொல்லாது, காரணம் தலைவர் அங்கிள் சைமன் லைக்கா என்றால் மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கின்றார்.

காரணம் ராஜபக்சே சுபாஷ்கர வியாபார உறவு அப்படி, அதனால் வியாபாரியான அங்கிளும் கப்சிப்

சொல்லமுடியாது இனி லைக்கா வெற்றிவிழாவிற்கு ராஜபக்சே சிறப்பு விருந்தினராக வந்தாலும் சத்தமிருக்காது

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் ஆரம்பம்

FB_IMG_1469765034155

அடுத்த வாரம் தொடங்க உள்ளது ஒலிம்பிக் போட்டி, உலகமெல்லாம் கடும் பரபரப்பு, எல்லா நாட்டு அணிகளும் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிரமாக உள்ளன‌

அமெரிக்காவோ மீண்டும் முதலிடம் பிடிக்கும் வேட்கை, சீனாவிற்கு தக்க வைத்துகொள்ளும் வெறி, குட்டி நாடுகளான ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு முதல் 10 இடங்களுக்குள் வந்தே விடவேண்டும் என்ற கடும் பதைபதைப்பு

ஜிம்னாஸ்டிக்கிலும், போல் வாட் போன்ற போட்டிகளின் பதக்கங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் ரஷ்யாவிற்கு ஊக்க மருந்து தடை, மிக சில வீரர்களே பங்கு பெறலமாம், பொறுமிகொண்டிருக்கின்றார் புடின்

இப்படி உலகமே எதிர்நோக்கி இருக்க, இங்கு எவனும் தீபாவளி கொண்டாட்ட வருவானோ என எல்லா உளவு அமைப்புகளும் களமிறங்கவிட்டன,

வளரும் நாடான பிரேசில் இப்போட்டியினை சிறப்பாக‌ நடத்தி தன்னை உலகிற்கு நிரூபிக்க கடும் பிரயத்தனத்தில் உள்ளது, அதன் விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன‌

(நமக்கோ சென்னை விமான நிலையம் 66வது முறை நொறுங்கி இருக்கின்றது.)

இப்படி உலகமே பிரேசில் பக்கம் திரும்பி நிற்க, எல்லா நாட்டு மீடியாவும் அதில் குவிந்திருக்க, தமிழக மீடியாக்களின் தலைப்பு செய்தி என்ன தெரியுமா?

"விஜய் அமலா பால் ஏன் பிரிந்தார்கள்?" "விவாகரத்தின் காரணம் என்ன விளக்குகின்றார் விஜய்", என ஏக அழிச்சாட்டியங்கள், வாழ்க தமிழ் ஊடகம்

இனி போட்டி தொடங்கும், ஐரோப்பியர்களும் கிழக்காசியர்களும் பின்னி எடுப்பார்கள், நாம் வழக்கம் போல பார்த்துகொண்டே இருப்போம்.

முன்பே சிக்கல்தான், இப்பொழுது மாட்டுகறி உண்ண கூடாது என பல அழிச்சாட்டியம் செய்யும் இந்த தேசத்திலிருந்து எப்படி பலமான வீரர்கள் வருவார்கள்?

இந்திய துணைகண்டம் என்பது மிக சரியான வார்த்தை, உலகத்தில் ஒருபோதும் ஒட்டாத, அதனைபற்றி கவலைபடாத நாடு இது

இப்பொழுதும் பாருங்கள், சில நாட்டுபற்றாளர்களின் கவனம் பாகிஸ்தான் எத்தனை பதக்கம் எடுத்தது என்பதிலே தான் இருக்கும, அதனை தாண்டி யோசிக்க மாட்டார்கள். அவர்கள் கவலை அது.

Thursday, July 28, 2016

ரஜினி : அவர் அவராகவே இருப்பார்

ரஜினியின் சில தந்திரங்கள் மகத்தானவை, எந்த முத்திரையும் தன் மீது படியாமல் பார்த்துகொள்வதில் அவருக்கு அவ்வளவு அக்கறை. அப்படித்தான் கலைஞரை வாழ்த்துவார், கலைஞரை பாராட்டுவார், இளங்கோவனுடன் டீ குடிப்பார், மோடிபுடன் யோகா செய்வார்

இப்படி எல்லாவற்றிலும் மகா கவனமாக இருக்கும் ரஜினி, தனக்கு தலித் அனுதாபி எனும் ஒரு முத்திரை கபாலியோடு கபாலத்தில் குத்தபடுமோ என உணர்ந்து அவசரமாக சோ ராமசாமியினை கபாலி பார்க்க அழைத்திருக்கின்றார்

இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த ரஜினி என்றாவது இப்படி பெரும்பிரமுகர்களை ஸ்பெஷல் ஷோவிற்கு அழைத்திருக்கின்றாரா என்றால் அழைத்திருக்கின்றார், அப்பொழுதெல்லாம் டைரக்டரும் அருகில் இருப்பார்.


ஆனால் சோவினை அழைத்தது இதுதான் முதல் முறை, இன்னொரு முக்கிய‌ விஷயம் இயக்குநர் ரஞ்சித் அழைக்கபடவில்லை, ஒருவேளை அழைக்கபட்டிருந்தால் சோ அருகே ரஞ்சித் அமர்ந்து படம் வெளிவந்திருந்தால்? நிச்சயம் அழிச்சாட்டியம் தாங்காது

இன்னொன்று சோ ரஜினி படங்களும் காட்சிகளும் இணையமெங்கும் வலம் வருகின்றன அல்லது வர வைக்கபடுகின்றன‌

சோ வினை பற்றி தெரியுமல்லவா? அவரை அழைத்தால் மொத்த பிராமண சமூகத்தையும் அழைத்ததற்கு சமம். ஆக ரஜினி எதனையோ சொல்ல வருகின்றார், கலைஞரை அடிக்கடி சீண்டும் சோ வும் கலைஞர் போலவே வீல் சேரில் வந்திருக்கின்றார் என்பது ஒரு வகை மேட்சிங், இருவருமே வில்லாதி வில்லன்கள்

பொதுவாக சோ வின் பார்வை வித்தியாசனாமது, அவரது ஈழக்கோணம் சரி, புலிகளை குறித்து முதன் முதலில் 1986களில் தமிழகத்தில் எச்சரித்த ஒரே நபர் அவர்தான், பின்னாளில் அது மிக சரி என புலிகளே காட்டினர்.

இனி கபாலி பற்றி என்ன எழுதி மலேசிய தமிழர்கள் நிலை பற்றி சொல்லபோகின்றாரோ தெரியவில்லை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரஜினி யார் மூலமாக தன் தலித் அரசியல் முத்திரையினை நீக்க முயல்கின்றார் என உலகம் கண்டுகொண்டிருக்கின்றது, இதுதான் ரஜினி, மனிதர் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல, சில விஷயங்களில் இப்படியான ரசிக்கதக்க வில்லனும் கூட‌

ரஜினிக்கென்ன, நாளையே அறிவிப்பு கொடுத்தால் போயஸ் கார்டன் முழுக்க இயக்குநராக குவிவார்கள், ஒரு படத்தில் ஜமீந்தாராக வந்து ஏழைகளுக்கு சொத்து எழுதி வைத்தால் முடிந்தது பிரச்சினை, டக்கென்று எழும்பி விடுவார்

அந்த வேகம் தான் ரஜினி, அவர் அவராகவே இருப்பார்.

ஆனால் ரஞ்சித் அப்படி அல்ல, இன்னொரு நெருப்பாற்றினை நீந்தி கடக்கவேண்டும். அதில் அவரோ அல்லது அவரின் தனிதன்மையோ காணாமல் போகலாம்

கபாலியை ஏன் விமர்சித்தோம்?

கபாலியினை ஏன் விமர்சித்தோம் என்றால், ரஞ்சித் மீதுள்ள வன்மம் அல்ல, மாறாக அவர் மறைத்த விஷயங்கள் ஏராளம்

மலேசியா அற்புதமான நாடு, மூன்று இனங்களும் கலந்து வாழும் நாடு, வரலாற்றினை கவனியுங்கள் சிங்கப்பூர் தனிநாடாகும் போது ஒரு சொட்டு ரத்தம் சிந்தி இருக்கும்? உலகில் எங்காவது அப்படி பிரிவினை உண்டா?

அந்த பெரும் மனதிற்கு சொந்தக்காரர்கள் அவர்கள், அப்படி ஒரு மனம் எந்த இனத்திற்கு வரும்? சிங்கள்ன், யூதன், வெள்ளையன், ம்ம் ஹூம்.. யாருக்கும் வராது

இன்றும் இரு நாடுகளும் பகை அல்ல, ராணுவ குவிப்புகள் அல்ல, ஏவுகனைகள், அணுகுண்டுகள் இம்சைகள் இல்லை, எப்படி அமைதியாக வாழ்கின்றார்கள்

காரணம் பரந்த மனமும், விட்டுகொடுக்கும் பண்பும், உழைத்தால் வாழலாம் எனும் வாழ்க்கை தத்துவமும் அப்படி வாழ வைக்கின்றன. மலாய் மக்களின் பெரும் பரந்த மனம் அவர்களின் புன்னகை போலவே அழகானது, விசாலமானது

இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்தார்கள், காரணம் வறுமையும் அறியாமையும் அவர்களிலும் உண்டு , மக்களாட்சியில் பெரும்பான்மை இன ஆதரவு இல்லாமல் ஆட்சி சாத்தியமில்லை

அப்படி வந்ததில்தான் 7% மக்கள் தொகை கொண்ட இந்தியருக்கு குறிப்பிட விகிதமே கொடுக்க முடியும், அதிலும் பஞ்சாபியர், தெலுங்கர், மலையாளி என எல்லா இனமும் உண்டு ஆக தமிழர் என்பவர்கள் இவர்களோடு சேர்ந்த இந்தியரே

இதில் கல்வி கற்ற தமிழர் நல்ல பணிகளில் உண்டு, உழைத்து மேல் எழும்பிய தமிழர் உண்டு. சீன இனம் கேட்கவே வேண்டாம் அசாத்திய உழைப்பில் பிரமாண்டமாக எழும்பி இருக்கும் இனம அது.

இப்படி பல வாய்ப்புள்ள அழகிய தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையினை படமாக்குவேன், அதிலும் பல உண்மைகளை மறைத்து தலித்தியம் பேசுவேன், மக்கள் புறக்கணிக்கபட்டதை போலத்தான் காட்டுவேன் என்றால் விமர்சனம் செய்யமாட்ட்டார்களா?

எல்லா விஷயத்தையும் காட்டிவிட்டல்லவா இன்னொரு முகத்தை காட்டவேண்டும்?

இந்நாட்டில் வரதட்சனை இல்லை, அரசு கல்வி கடனுக்கு ரெடி இன்னும் ஏராளமான வசதிகள் உண்டு, ஒரே விஷயம் பெற்றோற் பிள்ளைகளின் வாழ்வினை நிர்மானிக்க முடியாது

அதாவது அவர்களின் தலைவிதியினை அவர்களே முடிவுசெய்கின்றார்கள், இதுதான் யதார்த்தம்

இவ்வளவிற்கும் போதை பொருள் இருந்தால் கடும் தண்டனை என வைத்திருக்கும் நாடு இது, அந்நாடு அதில் கடுமையாக இருக்கின்றது

இதனை எல்லாம் எப்பக்கமாவது நீங்கள் அப்படத்தில் காண முடிந்ததா?

அம்பேத்கர் என்றால் யார் என இவர்களுக்கு தெரியுமா? அவ்வளவாக தெரியாது, ஆக கோட் வசனம், ஆண்ட பரம்பரை எல்லாம் வலிந்து திணிக்கபட்ட வசனங்களே

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எல்லா விஷயங்களையும் தொட்டு செல்வார் மணிரத்னம், கொழும்பில் தமிழ் இலக்கிய கூட்டம் நடக்கும், அதாவது இப்படியும் சில தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றார்கள், ஆனால் வடக்கே ஒரு தமிழ் குழந்தையின் தாய் என்ன பாடுபடுகின்றாள்

அக்குழந்தை போராளிகளில் ஒன்றாய் வாழவேண்டிய பெண் சென்னையில் வளர்ந்ததால் எப்படி ஒப்பிட்டு பேசுகின்றாள் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தில் மொத்த வலியும் புரியும். அகதி முகாம் ரணம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும்

ஆனால் ரஞ்சித் அப்படி பரந்து பார்க்காமல், மிக மிக குறுகிய வட்டத்தில் காட்டிய படம் அது. எல்லா விஷயங்களையும் காட்டிவிட்டு இப்பக்கம் வந்தால் எப்படி இருந்திருக்கும்?

சீனர், பஞ்சாபியர், வங்கத்தவர், மலையாளி, தெலுங்கள் என எத்தனை இனங்கள் உண்டு, அவர்கள் வாழவிலையா? அடிமைகள் நாங்கள் என ஓலமிட்டார்களா? கேட்டதுண்டா? இதனை எல்லாம் சொல்லி இருக்கவேண்டாமா?

ஆக தமிழன் மட்டும் அடிமையா என்ற வசனம் எல்லாம் வியாபாரம் அல்லவா?

அதனைத்தான் சொன்னேன், அதற்கு எனக்கு கிடைத்தது சாதி வெறியன், பிராமண அடிவருடி, தலித் வளர பிடிக்காதவன் இன்னும் ஏராளம்

கொடுமையாக சீன பெருஞ்சுவர் அளவிற்கு நீண்ட கடிதங்கள்

நான் கம்பனுமல்ல‌... நீங்கள் சடையப்பனுமல்ல




நண்பர்கள் என சொல்லிகொண்டவர்களின் ஜாதி வெறி அப்பட்டமாக தெரியும் நேரமிது, எனக்கு ஜாதி பற்றி பெரும் பிம்பமெல்லாம் இல்லை, நானும் அடக்கபட்ட சூத்திர சாதியே, அடக்குதல் என்றால் விரட்டி விரட்டி அடக்குதல் எனும் ஒருவகை வன்மத்தால் அந்நாளில் விரட்டபட்ட சாதி

ஆனால் அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் ஏக மாறுதல் உண்டு, உலகமயமாக்கம் எனும் இக்கால கட்டத்தில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கின்றது, வாழ நினைத்தால் வாழலாம் எனும் கனவு கனியும் காலம்

யாரும் யாரையும் நம்பி இருக்கவேண்டிய நிலை இல்லை, இப்படி எல்லாம் சாதி பேசுபவர்கள், வெளிமாநிலம் சென்றால் தமிழன் எனவும் அதே வெளிநாடு சென்றால் இந்தியன் எனவும், இன்னும் தாண்டி ஐரோப்பா சென்றால் ஆசிய கருப்பன் எனவும்தான் அழைக்கபடுவார்கள், நானை செவ்வாய் சென்றால் பூமிக்காரன் என்பார்கள்

ஆக மிக உயர்ந்த சிந்தனையும், பரந்த மனமுமே ஒருவனுக்கு வேண்டுமே தவிர, குறுகிய சுயநல சாதி வெறி அல்ல, அதனால் ஒன்றையும் கிழித்துவிட முடியாது.

இது உழைக்க வாய்ப்புள்ள காலம், இன்னொன்று நாம் எல்லோருமே வளரும் வர்க்கம், அதனால்தான் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கின்றோம், உலகம் அப்படி ஆகிவிட்டது,

காலத்திற்கேற்ப வாழவேண்டும் அதனை விட்டு பழங்கதைகளை பெசினால், உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கு பேச விஷயம் இல்லையா? புரட்சி, விடுதலலை, அடக்கப்ட்டோர் முன்னேற்றம் என சொல்ல தெரியாதா?

வேண்டாம்

காரணம் அது தேவை இல்லா காலம், வீணாண சர்ச்சைகளையும் அர்த்தமில்லா குழப்பங்களையும் அது கொண்டுவரும், அதனை வைத்து அரசியல் செய்யலாமே தவிர வேறு ஒன்றும் அல்ல‌

என்னை சாதி வெறியன், குழப்பவாதி என நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள், ஈழம் பற்றி மட்டும் எழுத நான் என்ன கதிர்காமத்திற்கு நேர்ந்துவிட பட்டவனா?

பிடிக்கவில்லை என்றால் நகர்ந்துவிடலாம் அல்லவா? உங்களை போலவே நானும் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி?

இதோ என் தாத்தா செருப்பினை கையிலேந்தி நடந்த அக்கிரகாரத்துல் என்னால் ஷூ போட்டு நடக்க முடிகின்றது, அங்கே வீடும் வாங்கி நடுத்தெருவில் கருவாடும் காயவைக்க முடிகின்றது என்றால் காலம் மாறி இருக்கின்றது என்றுதான் பொருள், இதில் நான் ஷூ போட்டது அரசியல் என சொல்லமுடியுமா?

திறமை உள்ளவர்கள் ஒருநாளும் சாதிய போர்வையில் , சிறுபான்மை போர்வையில் தன்னை அடைத்துகொள்ள மாட்டார்கள், திறமை அவர்களை உயர்த்தும்

தலித் மக்களின் வலியினை பாரதி கண்ணம்மா படம் அழுதமாக சொன்னது என்றால் அதிலென்ன தவறு கண்டீர்கள்?

எல்லாவற்றையும் சாதிய கண்ணோட்டத்ததோடு பார்த்தால் உங்களுக்கு கிளிண்டன் பிராமணனாகவும், சதாம் உசேன் தேவராகவும்தான் தெரிவார், பில்கேட்ஸ் நாடாராக தெரியலாம்

லெனின், மாவோ போன்றார் தாழ்த்தபட்டவராக தெரியலாம்.

என்ன பைத்தியக்ரமான சிந்தனை இது

சிவாஜி கணேசன் பெரும் உச்சம் பெற சாதி உதவிற்றா? இவ்வளவிற்கும் அவர் சொந்த சாதிகாரனன தேவர் பிலிம்ஸ் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை?

இப்படி சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்

திறமையுள்ள யாருடைய முன்னேற்றதை இங்கு சாதி தடுத்தது? சொல்லுங்கள், நாங்களும் திரையுலகம் அறிவோம்

ஒடுக்கபட்ட இனத்தின் அவருக்கும், மேட்டுகுடியான சுஜாதாவிற்கும் பெரும் நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள், யாழ் தாழ்திருக்கின்றார் அல்லது தாழ்த்தப்ட்டிருக்கின்றார்?

நேற்று அப்துல் கலாம் நினைவுநாள், தாழ்த்தபட்ட மீணவ குப்பத்துக்காரரான அவருக்கும் மேட்டுகுடி சுஜாதாவிற்கும் நல்ல நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள்

பாரதியாரின் இறுதி நாட்களில் அவருக்கு துணை யார்?, காமராஜர் ஜாதி வைத்தா அகில இந்திய காங்கிரசினை ஆட்டி வைத்தார்?

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே , அதாவது நல்லவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு

மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் சென்றுவிடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,

நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல‌




சிதறல்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம், சிலர் பலி, கலவரத்தை அடக்க ராணுவம் குவிப்பு

எங்கே ஆட்டு மந்தை இயக்கமும், அங்கிள் சைமனும் இன்னும் பிற மனிதநேயர்களும்? இந்திய காஷ்மீர்வாசிதான் சகோதரனா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வாசி எதிரியா?

இப்படித்தான் இனி யாழ்பாண தமிழன் தொப்புள் கொடி, கொழும்பு தமிழன் உச்சி ..ர் என இருந்துவிடுவீர்களா?


அப்படி உங்கள் சகோதரத்துவமும், உங்கள் மனிதநேயமும் உண்மை என்றால் பாகிஸ்தான் ராணுவத்தை கண்டித்து ஊர்வலமும், அவர்கள் தூதரகம் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டமும் செய்யுங்கள் பார்க்கலாம்.





உலகெல்லாம் சில நாடுகளில் இந்திய அரசின் மறைமுக உதவியுடன் மோடி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா பெரு விருந்தோடு கொண்டாட படுகின்றதாம்,

அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார்கள் என கொண்டாடுகின்றார்களோ தெரியவில்லை, ஒருவேளை இரு ஆண்டுகளில் நாடு திவால் ஆகவில்லை என்பதை கொண்டாடி இருக்கலாம்

அதற்கு உண்மையில் கச்சா எண்ணெய் விலை குறைவிற்கு காரணமான ஐஎஸ் இயக்கத்திற்கும், ஈரானுக்கும் தான் விருந்து கொடுக்கவேண்டும்


என்ன கிழித்தார்களோ தெரியாது, தினமும் காலண்டரை கிழித்து நாட்களை கடத்துவதுதான் சாதனை என எண்ணி இருக்கலாம்

(இப்பொழுது வந்து கமெண்டில் ஆடுவார்கள் பாருங்கள், மோடி ஜப்பானிலும், தான்சானியாவிலும் அடித்த டிரம் போல சத்தம் வரும் :) )

Wednesday, July 27, 2016

கபாலி : கருத்தரங்கு, விவாதம் ....




Stanley Rajan

ஒரு பெரும் புரட்டு எப்படி இருக்கும், எதையுமே மகா குறுகிய சுயநல புத்தியுடன் காணும் ஒருவரின் பார்வை எப்படி இருக்கும்.

இந்த திருமுருகன் எழுதியது போல இருக்கும்.

மலேசிய தமிழரில் பிரிவுகள் என்ன? எப்படி எல்லாம் ஒரு பிரிவு வாழ்கின்றது என்றெல்லாம் இவருக்கு தெரியுமா? எத்தனை அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மில்லியனர்கள் இருக்கின்றார்கள், எத்தனை கல்வி மான்கள், பன்னாட்டு நிறுவண பெரும் பொறுப்பில் எத்தனை தமிழர்கள்?


வாய்ப்பு கொட்டி கிடக்கும் தேசமது, கிட்டதட்ட 20 லட்சம் அந்நிய நாட்டினர் வேலை செய்வதாக ஆய்வு சொல்கிறதெனில் வேலை வாய்ப்பு என்ன?

இந்திய தமிழனை இங்குள்ள தமிழ் முதலாளிகள் படுத்தும் பாடென்ன? அவர்கள் படும் சிரமம் என்ன?

அந்த நாட்டை எப்படி எழுதுகின்றார் பார்த்தீர்களா? சரி தமிழனை ஒடுக்கும் நாடு சீனனை விடுமா? சீன சமூகத்திடம் ஒரு எதிர்குரல் உண்டா?

உச்சமாக சொல்கிறார் பாருங்கள், ரஞ்சித்தால் தான் ரஜினி இந்த படத்தில் தெரிகின்றாராம், இல்லை என்றால் படம் லிங்கா ஆகியிருக்குமாம், (இப்பொழுது பாபா ஆனது வேறு கதை)

இப்படி எல்லாம் எழுத எந்த மனசாட்சி உள்ளவனாலும் முடியாது, தன் நெஞ்சறிய பொய் சொல்லும் வகை இது

இவர்தான் ஈழதமிழருக்கு நீதிவாங்கி தரப்போகிறவன் நான் எனும்பொழுதுதான், அம்மக்களை பரிதாபமாக பார்க்க தோன்றுகிறது

நீங்களே படியுங்கள், கூடுமானவரை ஏதும் இல்லா இடத்தில் படியுங்கள், இல்லை எதனையாவது உடைப்பீர்கள் அல்லது முட்டி கொள்வீர்கள்

உதாரணம் , //ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு நீண்ட நாளைக்கு பின் வந்திருக்கும் மிக மிக அரிய வாய்ப்பு இது, ஒரு வகையில் ரஜினி அதனை வீணடித்தும் இருக்கின்றார் //

சொல்லுங்கள் இது எல்லாம் என்ன ரகம்?

ரஞ்சித் 30 வருடம் அனுபவமுள்ளவரா? இல்லை ரஜினி அவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டாரா?

அந்த கொடூர காமெடி இதோ


















பல விவாதங்களை ‘கபாலி’ திரைப்படம் உருவாக்கியிருக்கிறதெனில் அது, ரஜினியின் படம் என்பதற்காக அல்ல .அவ்வகையில் ஒரு இயக்குனராக தோழர் .ரஞ்சித் வெற்றியடைந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் அவலம் பற்றி வந்த வெகுசில…



TAMILSNOW.COM



















அண்ணன் Stanley Rajan அவர்களுக்கு ஒரு கடிதம்/பதிவு!











"சினிமாவில்‬ எல்லாமே வர்த்தகம்!! எல்லா பிரச்சினைகளையும் காட்டி அப்படி இப்படி சம்பாதிப்பார்களே தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. புரட்சி எழுச்சி எல்லாம் சாத்தியமில்லை" -அண்ணன் ஸ்டான்லி ராஜன்

கே.பி.சுந்தரம்மபாள் மற்றும் டி.கே. பட்டம்மாள் போன்றோர் தேசப்பக்தி பாடல்கள் மூலமாக தானே இந்திய விடுதலை உணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்தார்கள். இவர்களின் பாடல்களால் ஈர்க்கப்பட்டு போராட்ட இயக்கங்களில் பங்குபெற்ற தொண்டர்கள் ஏராளம். அதன் மூலம் மக்களிடையே ஒரு எழுச்சி ஏற்பட்டது என்பதை மறுக்க முடியுமா? (கலையின் பெருமையை விளக்க இதைவிட ஒரு நல்ல உதாரணம் தேவையில்லை).

இருந்தாலும் உங்களோட எம்ஜிஆர்‬(MGR) மற்றும்  என்டிஆர்(NTR) போன்ற நடிகர்கள் எல்லாம் இங்க ஆட்சியை புடிச்சது பெண்ணிய விடுதலை பேசியா? ஈழ விடுதலை பேசியா? இல்லை புரட்சி பேசியா ? தனி நாடு கேட்டா? தமிழ் தேசியம் பேசியா? இல்லையே!!

இதெல்லாம் நடந்தது சினிமாவால்தானே??

கபாலி‬ போன்ற திரைப்படங்களால் சமூகத்தில் அதைப்பற்றிய ஒரு விவாதத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைப்பது, வசனம் எழுதுவது, காட்சிகள் அமைப்பது. குறியீடுகளை பயன்படுத்துவது, படம் எடுப்பது எல்லாம் இரஞ்சித்தின் விருப்பம். சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் இலங்கைப்பிரச்சினையைப்பற்றி மட்டும் தான் நான் எழுத வேண்டும், இதை எழுதக்கூடாது அதை எழுதக்கூடாது என்று பிறர் சொல்கிறார்கள் என்று கூறினீர்களே அதைப்போன்றுதான்..!! அவருக்கு பிடித்ததை அவர் செய்கின்றார். ரஞ்சித்தின் படைப்பை விமர்சிப்பது உங்கள் விருப்பம் என்றால் உங்களை விமர்சிப்பது அதாவது உங்கள் கருத்துக்களை விமர்சிப்பது என் விருப்பம் என நினைத்து இதை பதிவிடுவிறேன் தவறாக எண்ண வேண்டாம்.

சினிமாவால் எதையும் செய்ய முடியாது, அது வணிக நோக்க முடையது என்று கூறும் நீங்களே சில நாட்களுக்கு முன்பு இதிலிருந்து முரண்பட்டு "கண்ணதாசன்‬, நம்மை உலக நாடுகளுக்குள்ளும், அழகான சோலைகளுக்குள்ளும், பண்டைய செய்யுள்களுக்கும்,இந்து மத ஞானத்திற்குள்ளும் அழைத்துச்சென்றார்" என்று ஏன் கூறினீர்கள்!! எப்படி அவரால் உங்களை அழைத்து செல்ல முடிந்தது? அது பொய்யா? உண்மையென்றால் சினிமாவால்/கவிதைகளால் சந்தோஷத்தை மட்டும் தான் நம் மனதில் ஏற்படுத்த முடியுமா? புரட்சியையோ, சமூக நீதியையோ குறைந்தது அதைப்பற்றிய ஒரு விவாதத்தையோ வெகுஜன சினிமாவின் மூலம் ஏற்படுத்த முடியாது என்று நீங்கள் கூறுவது சரியா என்பதை நீங்கள்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!!

‪‎கவிதைகளால்‬ கண்ணதாசனால் இதைச்செய்யமுடியுமென்றால்,
எம்ஜிஆரால்‬ முதலமைச்சராக முடியுமென்றால்,
விஜயகாந்தால்‬ அரசியல் கட்சி தொடங்கி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவராக முடியுமென்றால், பல நடிகர்கள்‬சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்களாக முடியுமென்றால்,
ரஜினி‬ சாதாரண பேருந்து நடத்துனராக இருந்து இன்று இந்தியாவில் மிகப்பிரபலமாக மனிதராக முடியுமென்றால்,
இரஞ்சித்‬ ஏன் இது போன்ற திரைப்படங்களை இயக்கக்கூடாது ?
அவர் நினைத்தது நடக்கும், நடக்காது என்பதைக்கூற நீங்கள் ஒன்றும் ஜோதிடர் இல்லையே சகோ!!

அவருடைய திரைப்படம் தமிழகத்தில் இன்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நீங்களே அறிந்திருப்பீர்கள்! அவர் நினைத்த விவாதத்தை இங்கு மக்களிடையே ஏற்படுத்திவிட்டார் அவர் ஜெயித்துவிட்டார்.. இங்க இருக்கும் நிறைய பெருஷ மனுஷங்களோட முகத்திரையை கிழிந்துள்ளதிலிருந்து அது நிரூபணம் ஆகியிருக்கிறது!!

இது_மாதிரியெல்லாம்_படம்_எடுத்தால்_ரஞ்சித்_காணாமல்_போய்விடுவார்_என்று_கூறுகிறீர்கள்‬. அப்படி கூறுவதும் அவர் மீதுள்ள அக்கறை‬ தான் என்றும் கூறினீர்.

இதை நான் முரண் என்று தான் கூறுவேன். உதாரணமாக ஒரு குழந்தை மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டுமானால், பழகும்போது கீழே விழும் அடி படும். குழந்தைக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களின் மீதுள்ள அக்கறையின் காரணமாக பெற்றோரே அக்குழந்தை மிதிவண்டி ஓட்டுவதை தடுப்பது, அவர்களின் அக்கறையே குழந்தையின் சுதந்திரத்தை/விருப்பத்தை தடுப்பது போலாகும். ரஞ்சித் நினைப்பதை செய்யவிடுங்கள். அவர் அடிபட்டு கற்றுக்கொள்ளட்டும்.

அப்படி அவர் அடிபட்டு காணாமல் போனால் போகட்டும் வெளிச்சம் தரும் ஒரு மெழுகுவர்த்தியாக. அதுவும் வெற்றி தானே?? . அப்படி நடந்தால் இந்த சமூகத்தில் சாதிய பாகுபாடு இன்னும் ஒழியவில்லை என்பது உறுதியாகிவிடும் அல்லவா? அது ஒரு புரட்சியை முன்னெடுக்காவிடிலும் குறைந்தது "இப்ப எல்லாம் யாரு சாதி எல்லாம் பாக்குறாங்க சார்னு" பேசுற வசனமாச்சும் இல்லாமல் போக்கட்டும்... இந்த சமூகம் சாதிய சமூகம்தான்!! சாதிய அடிப்படையிலான வன்முறைகளும், ஆணவக்கொலைகளும்,
பல்கலைக்கழக தற்கொலைகளும் நடந்து கொண்டிருப்பதும், திருமண வரன் பார்க்கும் எண்ணற்ற வலைத்தளங்களும் இதை தான் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

அத்தோடு ஒடுக்கப்பட்டவரின் புரட்சி பேசியதால் தான் ரஞ்சித் திரைப்படத்துறையில் இருந்து தூக்கி வீசப்பட்டான் என்று இந்த சாதிய சமூகத்தில் பதிவு செய்யப்படட்டும்!! சக மனிதர்களின் ‪#‎வெற்றி‬ நம்மில் தன்னம்பிக்கையையும் தோல்வி‬ நம்மில் பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதாவது இதை செய்யக்கூடாது என்ற பயம்.

நீங்கள் சொல்வது போல நடந்துவிட்டால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு திரைத்துறையில் ரஞ்சித்தின் வீழ்ச்சி ஒரு பயத்தையும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஒரு கர்வத்தையும் கொடுக்கும். இதுவும் பாகுபாடான சமூகம் என்பதை உறுதிப்படுத்தும். ஒடுக்கப்பட்டவரின் பயம் அவர்களை மேலும் விழிப்படையச்செய்யும், அது அவர்களை மேலும் உழைக்க தூண்டும். அதற்காகவாவது ரஞ்சித்தின் தோல்வி பயன்பட்டுள்ளது என்பதை நினைத்துக்கொள்வோம். பலரின் வெற்றி தோல்விகள் சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கலாமின் வெற்றி இந்த தலைமுறை இளைஞர்களை பாதித்ததை போல.. அவருடைய வாழ்க்கை வரலாறும் ஒரு நாள் திரைக்காவியமாகும்!! அதையும் நாம் பார்ப்போம்!!! விவாதிப்போம்!!

சினிமாவால்‬ கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா முடியாதா என்றால் முடியும்‬ என்பது தான் நிதர்சனமான உண்மை...

இதை நான் நேற்றே எழுதிவிட்டேன், நேற்று வைரமுத்துவின் கருத்தை கேட்ட பின்பு, எப்படியும் நீங்கள் அவர் பேசியதை நியாயப்படுத்தி ஒரு கருத்தை சொல்வீர்கள் அதன் பிறகு பதிவிடலாம் என்று காத்திருந்தேன். நேற்றுவரை உங்களுக்கு மிகவும் பிடித்த கவியரசு கண்ணதாசனை புகழ கவிப்பேரரசு வைரமுத்துவை இகழ்ந்த நீங்கள் இன்று நீங்கள் அவரின் கருத்து உங்களின் கருத்தோடு ஒத்திருந்தமையால் அதை நியாயப்படுத்தி பேசுகிறீர்கள்.

இதற்கு பெயர் சந்தர்ப்பவாதம் இல்லையா? அரசியலில் மட்டும்தான் சந்தர்ப்பவாதம் தவறா? பொதுவாழ்விலோ தனி வாழ்விலோ கிடையாதா? இது ஒன்றை மட்டும் வைத்து நான் இதைக்கூறவில்லை!! காமராஜர், கண்ணதாசன், ரஜினி ஆகியோரை புகழும்போது, கலைஞர், வைரமுத்து, கமலஹாசன் ஆகியோரை சிறுமைப்படுத்தியுள்ளீர்.

ஒரு சில நேரங்களில் சீமானை‬ திட்ட வேண்டுமானால் அந்த இடத்தில் தனக்கு பிடிக்காத ஒருவரையே அதாவது கலைஞரையே புகழ்வது, ஆனால் கண்ணதாசனை சினிமாவிலிருந்தே துரத்த நினைத்த எம்ஜிஆரைப்பற்றியும், காங்கிரஸ்காரார் ஒருவரின் உதவியால் கண்ணதாசன் எம்ஜிஆரை கேவலப்படுத்த வெளியிட்ட "உள்ளும்_புறமும்" என்ற நூலைப்பற்றியோ அதிலுள்ளவைகளை பற்றியோ கூறாமல் மறைத்து, இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று எழுதுவது!! ஒருவரை இகழ வேண்டுமானால் அதற்கு இனையான இன்னொருவரை அந்த இடத்திலே புகழ்வது அல்லது ஒருவரை இகழ வேண்டுமானால் அந்த இடத்திலே இன்றொருவரை புகழ்வது தான் உங்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் என்று கருதுகிறேன். அதை நீங்கள் செம்மையாக செய்து வருகிறீர்கள்!!

அதாவது சமீபத்தில்,
கபாலியை சிருமைப்படுத்த பாரதி கண்ணம்மாவை புகழ்ந்ததைபோல!!

இறுதியாக, உங்களுக்கு ஆண்பாவம் திரைப்படத்திலுருந்து, இளையராஜா இசையில் அமைந்த "இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமா தான்" என்ற பாடலை டெடிகேட் செய்கிறேன்!!

நான் சின்ன பையன் தான்
உங்க அளவுக்கு எழுதவராது,
நான் எல்லாம் உங்கள பத்தி பேசுறதுக்கு என்ன தகுதியிருக்குனு கூட நினைக்கலாம்... அப்படி நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள் பரவாயில்லை!! இழக்க ஒன்றுமில்லை!!

சினிமாபிடிக்கும்‬
‪‎மகிழ்ச்சி‬


















Sathya Gowtham அருமை சகோ.. தெளிவான பதிவு.. எனக்கும் சினிமா ரொம்ப புடிக்கும்.. ஸ்டான்லி அண்ணனின் பதிவுகளில் சினிமா பற்றிய பார்வையில் மட்டும் எப்பவும் நான் வேறுபடுவேன்.. அதுவும் இந்த கபாலி, ரஞ்சித் விஷயத்தில் நானே சொல்லலாம் னு நெனச்சேன்.. நீங்க சொல்லிட்டீங்க.. சூப்பர் 👍👍👍






















Stanley Rajan நல்லது நண்பரே, மகா சீரியசாக இருக்கின்றீர் என்பது மட்டும் புரிகின்றது

சுருக்கமாக சொல்லிவிடுகின்றேன், அக்காலம் வேறு இக்காலம் வேறு, அன்று சுப்புலட்சுமி முதல் எம்ஜிஆர் வரை ஒரு ஈர்ப்பு இருந்தது, பிரமிப்பு இருந்தது, இன்னொன்று அரசாங்கம் படு சுதந்திரமாக இவர்களை அனுமதித்தது, பட்டுகோட்டை செய்யாத புரட்சியினையா இன்னொருவர் செய்துவிடமுடியும்? ஆனால் விளைவு என்ன?

இன்று அப்படி அல்ல,

அப்படி இருந்திருந்தால் விஜயகாந்த், வடிவேல் எல்லோரும் இப்படி ஓரம் கட்டபட்டிருக்க மாட்டார்கள்.

நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தம்.

ரஞ்சித் புதியவர், முளை விடும் நாற்று. அவர் திறமையான இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்படி பேசிகொண்டிருந்தால் சினிமா தயாரிப்பாளர்கள் யோசிப்பார்கள்,

பெரும் உதாரணம் இதோ சூர்யா படம் நிறுத்தபட்டிருக்கின்றது , கண்டீர்களா?

அவர் இன்னும் வளரவேண்டும், அதற்கு கொஞ்சம் நிதானம் வேண்டும்.இளையராஜா வளர்ந்தார் , ரகுமான் வளர்ந்தார், இவர்கள் எல்லாம் துறையினை தவிர ஏதும் பேசி கண்டீர்களா?

இளையராஜா தலித்தியம் பேசி, நான் இப்படித்தான் என்று எஙகாவது சவால் விட்டு கண்டீர்களா?

இவருக்கு வயது இருக்கின்றது, இன்னும் வளரவேண்டும் இல்லையா?

அப்படி வளர்ந்தபின் சொந்தமாக இவரே படம் எடுக்கலாம் அல்லவா? யார் தடுக்க முடியும்?

பெரும் இயக்குநராக அவர் பரிணமித்தால் நாமெல்லாம் அவரை ஒதுக்கிவிட முடியுமா? ஒருவேளை இந்திய தலித்கள் நிலை பற்றி பெரும் படம் எடுத்தால் ஆஸ்கார் அடிக்கலாம், ஸ்லம்டாக் மில்லியனர் அப்படித்தான், வெள்ளையனுக்கும் அப்படிபட்ட ஆசை அதிகம்

ஆனால் வளர்வதற்கு முன்பே புரட்சி என்றால் முளையிலே கருகிவிடாதா? கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள், சில விஷயம் புரியும்


















Stanley Rajan என்ன சொன்னீர்? சிலரை இகழ்வதும், அவரை புகழ்வதும் என்ன முரண்பாடா?

இந்த இடத்தில் இவர் முகம் இப்படி, இந்த இடத்தில் இவர் முகம் இப்படி என சொல்லா விட்டால்தான் குற்றம், உண்மையினை இப்படித்தான் சொல்லமுடியும் வேறு எப்படி?

என்னை கவனித்தீர்கள்தானே? யார் மீதும் முழு வெறுப்பும் அல்ல யார் மீதும் முழு ஆதரவும் அல்ல என்பது புரியும், புரியாவிட்டால் நீர் கவனிக்கவில்லை என்பது உண்மை.

இதற்கு ஏன் இவ்வளவு நீண்ட கடிதம்?

ஆனால் என்னையும் ஒரு மனிதனாக மதித்து நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்லி இருக்கின்றேன் நன்றி

மற்றபடி நடக்க இருப்பதை காலம் சொல்லும், தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் தனி மனிதனாக புரட்சி செய்திருக்க முடியாது, எம்ஜிஆர் மட்டும் வரலாறு, காரணம் அவரின் கட்சி பின்புலம் அப்படியானது,

வீழ ஆரம்பித்த பாகவதரில் இருந்து சந்திரபாபு, கண்ணதாசன் (அவர் முழுக்க பிரகாசிக்கவில்லை) இன்னும் ஏராளமான கலைஞர்களை காட்ட முடியும்

அதுவும் இன்றுள்ள வர்த்தக சினிமா எதற்கும் இடமளிக்காது, கொஞ்சம் கவனியுங்கள் நீண்ண்ண்ட நாளைக்கு பின் பிரச்சினை இல்லாமல் வந்த விஜய் படம் தெறி, அதிமுக ஆட்சிதான் ஆனால் வடிவேலுவினை காணவே இல்லை, ஏன்? அதுதான் இக்காலம்

இப்படி ஆயிரம் சிக்கல் உள்ளது தமிழ்சினிமா

கால வேறுபாடுகளை அறியுங்கள், இன்னொன்று நன்றிகெட்ட உலகம் ஒன்று உண்டென்றால் அது சினிமா உலகம்தான் , அது நடுவீதியில் நிறுத்தியிருக்கும் கலைஞர்கள் எத்தனையோ ஆயிரம்

அவர்களில் ரஜினிக்கு ஒரு காலத்தில் ஹிட் கொடுத்த இயக்குநர்களும் உண்டு

ரஜினிக்கு நாளையே இன்னொரு இயக்குநர் கிடைப்பார், ஆனால் ரஞ்சித் தன்னை நிலை நிறுத்த இன்னும் பெரும் பாடு படவேண்டும்

இன்னும் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள், இன்னொரு கடிதத்திற்கு பதிலளிக்க முடியாது































[facebook url="https://www.facebook.com/we.are.thoothukudi/videos/922960961183215/" /]

















சிதறல்கள்

மராட்டிய மண்ணின் மைந்தரான ரஜினிக்கு , மராட்டிய கெய்க்வாட் எனப்படும் சாதியில் பிறந்து முத்திரை பதித்த அவருக்கு

மராட்டிய அரசின் பூஷன் விருதை அளித்துவிட்டு பாரத ரத்னா விருது வழங்கவும் பாடு பட‌ வேண்டும்: மராட்டிய எம்.எல்.ஏ அனில் கோடே

ஒரு மனுஷனுக்கு கிரகம் சரியில்லணா கஷ்டம் மொத்தமாக வருமாம், அவரே கபாலி வெற்றிபடம்னு தனியா சிரித்து சமாளித்துகொண்டிருக்கின்றார், இதில் இதுவேறா?


அவர் கன்னடனா? தமிழனா என கயிறு இழுத்து போராடும் நிலையில், ரஜினியே நான் கோட் போட்ட தமிழன் என மார்தட்டிய புரட்சி நிலையில் இவர் இப்படி கிளம்பினால் என்ன ஆகும்? ரஜினிக்கு சிக்கல்தான்.

ரஜினி தமிழர், தமிழ்போராளி என சொல்பவன் எல்லாம் இனி சும்மா இருக்க முடியுமா? விடுவார்களா?

ஜெய்க்வாட் ஜாதியில் பிறந்தவரை வைத்துதான் தலித் அரசியல் படம் எடுக்கமுடியுமா? என கேட்க ஒருவனுமா இல்லை? இதனை எல்லாம் நாமும் கேட்க கூடாது

சரி, அப்படி ரஜினி நடிப்பில் என்ன உச்சம் கண்டுவிட்டார் மராட்டிய அமைச்சர்?
, ஓஓஓ அதுவாகத்தான் இருக்கும், நிச்சயம் அதுவேதான்

அதாகபட்டது கபாலி பெருவெற்றிபடம் என கூசாமல் அறிக்கை விட்டார் அல்லவா? ரஜினி. அந்த நடிப்பிற்கு ஆஸ்காரே கொடுக்கலாம், எப்படிபட்ட நடிப்பு அது?





அது எப்படி 1200 பள்ளிகளை மூடலாம் என கிளம்பிவிட்டார்கள், ராஜாஜி மூடியது போல இதுவும் என கிளம்பி கொடிபிடிக்க வந்தாயிற்று.

காலம் எவ்வளவு மாறிவிட்டது என்பதனை மட்டும் மறந்துவிடுகின்றார்கள், ராஜாஜி காலத்தில் தனியார் ஆங்கில பள்ளிகள் முகநூல் போராளிகள் போல இப்படியா இருந்தது? இத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தார்களா?

இன்று ஆங்கில பள்ளிகள் என்ன? மூலை முடுக்கு, சாக்கடை பொந்து , முட்டு சந்து, நடுகாடு, சுடுகாடு என சகலமும் அது நிறைந்திருக்கின்றது, எல்லாம் தனியார் பள்ளிகள்.


அப்படியானால் அரசு பள்ளிகளில் யார் இருப்பார்? ஆசிரியர், சத்துணவு பணியாளர். இவர்களுக்கா பள்ளி திறந்து வைப்பார்கள்?

போராடுபவர்கள் தனியார் பள்ளிகளை அனுமதித்த அரசினை எதிர்க்கவேண்டும், கல்வி கட்டணங்களை கொள்ளையிடும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என போராடவேண்டும்

டாஸ்மாக்கினை எடுத்து நடத்தும் அரசுக்கு, தனியார் பள்ளிகளை எடுத்து நடத்த எவ்வளவு நேரமாகும் அப்படியானால் எல்லாம் அரசு பள்ளி அல்லவா? பின் எதனை மூடினால் என்ன திறந்தால் என்ன? எல்லாம் அரசுக்கே

இதனை சொல்லமாட்டார்கள், சொன்னால் ஜெயலலிதாவோடு சேர்ந்து கலைஞரையும் கிழிக்கவேண்டி இருக்கும், காரணம் சீரழிவிற்கு காரணம் இவர்கள் இருவருமே

இதனை சொன்னால் நான் காங்கிரஸ்காரன், ஆர்எஸ்எஸ், இப்பொழுது புதிதாக பிராமண பட்டம் வேறு




 

இந்திய ராணுவம் :தேசம் காக்கும் பெரும் படை

எவனோ ஒரு குறுக்கிய மனமுள்ளவன், கோணல் புத்திக்காரன் , ஆட்டு மூளையன் ஒரு பதிவினை போட்டிருந்தான், அதாவது இந்திய ராணுவத்தில் சாவதெல்லாம் தாழ்ந்த சாதியாம், ஒரு பிராமணன் கூட இல்லையாம்.

இது பார்பனிய இந்தியாவாம், சரி உன் பெரும் அபிமான ராஜராஜ சோழன் காலத்தில் என்ன நடந்தது? பிராமணனா சண்டையிட்டான்? எண்ணிக்கையில் மிக சிறிய கூட்டமான அது ஆலோசனைகளை சொன்னதே அன்றி, அவர்கள் யுத்தம் நடத்தியா ராஜ ராஜ சோழனை உயர்த்தினார்கள்? எல்லா அரசுகளும் மற்ற சாதியினரே, பிராமணர் என்பது சிறுபான்மை, எக்காலமும்

இவனை எல்லாம் என்ன சொல்லி திட்டுவது என்றே தெரியவில்லை.


ராணுவம் என்பது தேசம் காக்கும் அமைப்பு, அதில் சாதி எல்லாம் இல்லை, மாறாக அவரவர் தகுதிக்கும் உடல்வாக்கிற்கும் ஏற்ப பொறுப்புகள் தரப்படும்.

பெரும் விஞ்ஞான மூளைகளை, பெரும் தந்திரோபயமான ஆட்களை துப்பாக்கி கொடுத்து முன்னால் நிறுத்த முடியாது, திறமையினை பொறுத்தே ராணுவம் செயல்படும்

சீக்கியர்களில் அடிமட்ட சிப்பாய்களும் உண்டு, பெரும் தளபதிகளும் உண்டு, தமிழக தென்னக தாழ்த்தபட்ட சாதிகள் கூட பெரும் கடற்படை பொறுப்பினை வகித்த பெருமைகள் உண்டு.

இந்த ஆட்டுமந்தை மண்டையன் இன்று சிந்திக்கவேண்டிய நாள், கலாம் பெரும் விஞ்ஞானி, அறிவாளி. ஆனால் என்ன செய்தார்? வந்தே மாதரம் என துப்பாக்கி தூக்கி காஷ்மீர் எல்லைக்கு ஓடினாரா?

அல்ல ஏவுகனைகள் தயாரிதார், ராணுவத்திற்கு கொடுத்தார். ராணிவத்தின் பணியினை எளிதாக்கினார். இதோ டெய்சி தாமஸ் இருக்கின்றார், நான் ஜான்சி ராணி என சொல்லி வாளெடுத்தாரா? அல்ல மாறாக பிரம்மோஸ் எனும் பாசுபதக்கனையினை உருவாக்கினார்

ஆக ராணுவம் என்பது சாதி,மதம், பிராமணியம், தலித்தியம் இன்ன பிற அழிச்சாட்டியங்கள் நிறைந்த கட்சியோ, அமைப்போ அல்ல, அது தேசம் காக்கும் பெரும் படை, நித்தமும் சாவை எதிர்பாக்கும் தியாக கூட்டம்

இந்திய ராணுவத்திற்காய் தன் வாழ்நாளை அர்பணித்து அந்த ராணுவத்தல் வணங்கபடும்

அப்துல்கலாம் போன்றோர் பிறந்த மண்ணில் இப்படியும் சில ஆட்டுமூளைகள்

அடக்குனா அடங்குற ஆளா நீர்...





முதல்வர் வீட்டில் தங்கியிருந்து, கபாலி படத்தின் உரிமையை பெற்று, கோடிக் கணக்கில் லாபம் அடைந்தவருக்கு, எந்த தண்டனையும் கிடையாதா?' : கலைஞர் கேள்வி

ஆமாம், ஒரு படம் வாங்கி சம்பாதித்தால் அது எவ்வளவு பெரும் தவறு தண்டனை, அய்யகோ என்ன கொடுமை இது.

ஆனால் மேகலா பிக்சர்ஸ் தொடங்கி இவர் அள்ளியதாகட்டும், சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன் என இவர் குடும்பத்த்தார் வைத்திருக்கும் கம்பெனிகள் ஆகட்டும் அதனை பற்றி எல்லாம் நாமும் பேசகூடாது, அவரும் பேச மாட்டார், ரோபோ படத்திற்காக தன் பேரன்களுடன் இவர் போஸ் கொடுத்தது எல்லாம் உங்கள் நினைவுக்கு வரக்கூடாது


சினிமா கொள்ளை என்பதை தமிழ் உலகிற்கு சொல்லி, காசு முதல் முதல்வர் பதவி வரை அள்ளலாம் என செய்துகாட்டியது யார்?

ஆனாலும் ஒரே அறிக்கையில் பல மாங்காய் அடித்திருக்கின்றார், அதாவது ஜெயலலிதாவினை கேள்வி கேட்டாயிற்று, கபாலி வெற்றி படம் என ரஜினியினை மகிழ்வித்தாயிற்று, ஒரு வேளை விநியோகிஸ்தர்கள் பின்னாளில் புலம்பினால் சசிகலா கோஷ்டியினைரை இப்பொழுதே அடையாளம் காட்டியாயிற்று.

இவர் கபாலி ரிசல்ட் தெரிந்து விநியோகிஸ்தர்களுக்கு ஏதோ சொல்ல வருகின்றார் என்பது மட்டும் புரிகின்றது

# அடக்குனா அடங்குற ஆளா நீர்...
# கலைஞர்டா







இந்தியாவின் அக்னி சிறகு அப்துல் கலாம் : நினைவாஞ்சலி



இந்தியாவின் அக்னி சிறகு

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம்.

ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது,

ap

மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி அனுதாபம் தேடியவரில்லை, அவருக்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு, தேசாபிமானம் மட்டுமே

நவீன இந்தியாவில் விக்ரம்சாராபாய், ஜஹாங்கீர் பாபா, சதிஷ் தவான் , சிதம்பரம் (ப.சிதம்பரம் அல்ல) , போன்ற வரிசையில் மிக முக்கியமான பெயர் அப்துல்கலாம்.

இரண்டாம் உலகப்போருக்கு பின் யுத்தம் என்பது விண்வெளிக்கு மாறிற்று, செயற்கை கோள்களும், ஏவுகனைகளும்தான் ஒரு தேசத்தின் பாதுகாப்பினை நிர்ணயம் செய்தன, அது இல்லாத சமயத்தில் சீனா நமது முதுகில் குத்திய வஞ்சம் நடந்தது.

உலக நாடுகள் எல்லாம் மிக ஏளனமாக பார்த்த இந்திய ராணுவ ஏவுகனை துறையையும், அதற்கு மிக பக்கபலமான விண்வெளி துறையும் உலகின் மிக முண்ணனி நாடாகளுள் ஒன்றாக மாற்றிய பெருமை அப்துலகாலாமிற்கு உண்டு,

அவரது முதல் படைப்பே மிக சிறியரக ராணுவ ஹெலிகாப்டர், இறுதியாக கொடுத்தது (ஓய்வுபெற்றாலும் அவரின் வழிகாட்டல் உண்டு) இன்று உலகின், கவனியுங்கள் உலகிலே அதிவேக ஏவுகனையான பிரம்மோஸ், இன்று இந்தியாவின் பிரம்மாஸ்திரம், இன்று சீனாவின் தூக்கத்தை தொலைதுவிட்ட பாசுபதகனை.

1980வரை இந்தியாவிடம் சொல்லிகொள்ளும் ஏவுகனைகள் கிடையாது, ரஷ்யா நண்பன் தான் எனினும் சொல்லிதராது, அல்லது சொல்லிதர விடமாட்டார்கள். இந்திராவின் எழுச்சியான இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணத்தில் ஒரு பகுதி தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி அலுவலகம் என மாற்றபட்ட பின் அப்துல் கலாம் யுகம் உருவாகிறது.

பெரும் தோல்விகள், ஏராளமான அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டித்தான் அவரால் ஏவுகனை திட்டத்தை செயல்படுத்த முடிந்தது, காரணம் ஏவுகனை என்பது மிக மிக சக்திவாய்ந்தது மட்டும் அல்ல பெரும் சிக்கல் வாய்ந்த நுட்பம்., விமான அறிவும் விண்வெளி தொழில்நுட்ப அறிவும் நிரம்ப கலந்து இல்லாமல் அது சாத்தியமே இல்லை.

அக்னி,ப்ரித்வி,நாக்,திரிசூல்,ஆகாஷ் என வரிசையாக செய்து கொடுக்கும்பொழுது உலகம் ஆடத்தான் செய்தது, அக்னி நீண்ட தூர ஏவுகனை சீனாவிற்கானது என சொல்லி தெரிவதில்லை, ஆனால் பிரித்வி நடுத்தரமானது, அதன் தாக்கும் தூரத்தை கூட கணிக்காமல் "பிரித்வி" என்ற பெயரை கேட்டதும் அலறியது

பாகிஸ்தான், காரணம் பிரித்விராஜன் என்ற மன்னன் அக்காலத்தில் ஆப்கான் முஸ்லீம் கொள்ளையனுக்கு பெரும் எதிரி.
(அந்த ராஜஸ்தான் மன்னனை குறிப்பிட்டு அதாவது இதனை ராஜஸ்தான் எல்லையில் நிறுத்துவோம் என சொல்லாமல் சொல்லது இந்தியா :))

உடனே புறவாசல் வழியாக ஏதோ ஒரு மொக்கை ஏவுகனையை வாங்கி "கோரி" (கோரி முகமது) என பெயரிட்டு மகிழ்ந்து பாகிஸ்தான் (ஆனால் அது வேலை செய்யுமா என கூட தெரியாது :) ), இன்றும் ஐரோப்பாவில் களவெடுத்து சீனாவிடம் கொடுத்து, 1950 மாடலில் செய்த பழைய அணுகுண்டு பாகிஸ்தானிடம் இருப்பதாக நம்பபடுகின்றது, மற்றபடி சொந்த தொழில்நுட்பம் ஏதும் அவர்களிடம் கிடையாது தீவிரவாதம் தவிர.

இன்னொன்று பாகிஸ்தான் ஜாதகம் அபாரமானது, போராடமலே அவர்களுக்கு நாடு கிடைக்கும், அவர்கள் கேட்காமலே வல்லரசுகள் அவர்களுக்கு நவீன ஆயுதம் கொடுக்கும், அணுகுண்டு கொடுக்கும் எல்லாம் எதற்காக? இந்தியாவினை முடக்க,

அப்படியும் யுத்ததில் அடிவாங்கும் பாகிஸ்தான், 4 தீவிரவாதிகளை வைத்து இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும், அதோடு வல்லரசுகளை நோக்கி கட்டை விரலை உயர்த்தும், அவர்கள் காரி துப்புவார்கள்.

ஆனால் நிச்சயமாக சொல்லலாம் இந்தியா ஓரளவு சொந்த தயாரிப்பு கொண்டது, இன்று ஓரளவிற்கு இந்திய ராணுவம் வலிமையுடையது என்றால் அதன் ஏவுகனை பலம் ஒரு காரணம், அதன் மூலம் சந்தேகமே இல்லாமல் அப்துல் கலாம்.

இதனால்தான் மிகநவீன கிரையோஜனிக் ராக்கெட் எஞ்சின்களை ரஷ்யா தர சம்மதித்தபொழுது குறுக்கே பாய்விரித்து படுத்து தடுத்தது அமெரிக்கா, அதனால்ததான் இன்னும் ஜி.எஸ்.எல்.வி தாண்டி அடுத்த கட்டம் நம்மால் செல்லமுடியவில்லை, இன்னும் நமது விண்வெளி ராக்கெட்டுகளுக்கு முழு சக்தி காணாது, சொந்த முயற்சியில் ஏதோ மங்கள்யான் வரை சாதிக்கின்றோம்.

அதனால் தான் அப்துல்கலாமை அவர்களுக்கு பிடிப்பதில்லை, சொந்த ஏர்போர்ட்டில் அவரை ஏளனபடுத்தினாலும் "அப்படியா? அப்படி ஒருவரை எமக்கு தெரியாதே" என கிண்டலாய் சொல்வார்கள், அதாவது அவர்களை தவிர வேறு யார் ஆயுதம் செய்தாலும் பொறுக்காது,

ஒய்வு பெற்றபின் அல்ல, அவர் நினைத்திருந்தால் உலகில் எந்த நாட்டிற்கும் சென்று கோடிமேல் கோடி குவித்திருக்கலாம், அந்த துறை அப்படி.(ஐ.டி.ஐ படித்து விட்டு சில நாடுகளில் சென்றுபணியாற்றி சிலர் அடிக்கும் அலப்பறையே தாளவில்லை), அவர் கல்வி அப்படி, அனுபவம் அப்படி,

எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மாபெரும் தேசத்தின் ராணுவத்தையே உயர்த்திய சாதுர்யம், இதற்கு மேல் என்ன வேண்டும்?

எல்லா நாடுகளும் ரத்தின கம்பளம் குவித்து வரவேற்றிருக்கும். அது கூட வேண்டாம் தனியாக ஒரு ஆயுதகம்பெனி தொடங்கியிருந்தாலும் அவர் உலகின் முண்ணனி வியாபாரியாக மாறி இருப்பார்,

அட வியாபாரம் வேண்டாம் ஆலோசகராக இருந்தாலும் "அள்ளி அள்ளி" எடுத்திருப்பார், அவர்களும் தங்க வீட்டிலே வைத்து தாங்கியிருப்பர். கிட்டதட்ட அரபு அரசர்கள் அல்லது ஐரோப்பிய தொழிலதிபர்களின் அளவிற்கு வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம்,

ஆயுத வியாபாரம் என்றென்றும் உலகில் நம்பர் 1 லாபகரமான தொழில்

உண்மையில் அவர் அதற்கெல்லாம் ஆசைபடவில்லை, நாடு உயரவேண்டும், சுபிட்சமாக வாழ பாதுகாப்பு அவசியம், அதற்காகத்தான் உழைத்தார். குடியரசு தலைவர் பதவி அவரை தேடிவந்தது, அங்கு உரை நிகழ்த்தும் பொழுதெல்லாம் "திருகுறளை" மேற்கோள் காட்டி தமிழராக நின்றார்.

உலகமெல்லாம் கொண்டாடிய அந்த படித்த விஞ்ஞான தமிழன், தமிழகத்தின் சில இடங்களிலும் சில அரசியல் காட்சிகளிலும், 5ம்வகுப்பு கூட தாண்டாத தமிழக அரசியல்வாதிகளால் மட்டம் தட்டபட்டு அவமானபடுத்தபட்டார், ஆனால் அப்துல்கலாம் ஒரு வார்த்தை கூட பதில்பேசாது தனது பெருந்தன்மையை காட்டிய நிகழ்வுகளும் உண்டு.

இரண்டாம் முறை அவர் ஜனாதிபதியாகும் வாய்ப்பும் இருந்தது, அவ்வாறு நடந்தும் இருக்கலாம், ஆனால் சில வஞ்சக திட்டங்களால் வீழ்த்தபட்டார். இந்த உலக விஞ்ஞானி அவர்களை மதிக்கவில்லையாம் பொங்கிவிட்டார்கள், ஜனநாயக நாட்டில் எதுவும் சாத்தியம்.

நிச்சயமாக அவர்கள் வட இந்தியர்கள் அல்ல, திராவிடர்கள் தான். இன்னும் கொஞ்சநேரத்தில் சோக கீதம் வடித்து அலறுவார்கள் பாருங்கள்.

கலாம் .ராமேஸ்வரத்து மண்ணை சேர்ந்தவர், அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, என இன்னும் ஏராளமான சர்ச்சைகள் அவர்மேல் உண்டு, அணுசக்தியை ஆதரித்தார் என்ற பழியும் உண்டு, நிச்சயமாக அவர் அணுவிஞ்ஞானி அல்ல ஆனால் மூத்த விஞ்ஞானி எனும் பதவியில் இந்திய அணுசக்தி குறித்த அனுபவம் அவருக்கு அத்துப்படி.

இன்னொன்று அணுஆலை என்பது சர்வதேச அரசியல், பல மர்மங்களை கொண்டது, அந்த அரசியல் அவருக்கு தெரியாது, ஆனால் ஒரு இந்திய தலமை விஞ்ஞானியாக ஒரு பதிலை கொடுக்கவேண்டிய கட்டாயம், ஆனால் கவனித்து பாருங்கள் அவர் சொல்வது எல்லாம் ஆறுகள் இணைப்பு, சூரிய ஓளி மின்சாரம், இயற்கையோடு இணைந்த அறிவியல்.

சிலர் சொல்வார்கள் கலாம் ராமேஸ்வரம் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, கூடங்குளம் அணுவுலையினை நிறுத்தவில்லை, அவர் தமிழுக்கு என்ன செய்தார்? ஈழ மக்கள் விடுதலைக்கு என்ன செய்தார்? சிலர் ஒருபடி மேலே சென்று சொல்வார்கள், நல்ல தமிழர் என்றால் கலாம் ராக்கெட் நுட்பத்தை புலிகளுக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டமா?

அவர் இந்திய குடிமகனாக வாழ்ந்தார், அதனால் சிலர் அவரை ஒரு வகை ஆர்எஸ்எஸ் என்றார்கள். அப்படியானால் காமராஜரும் ஆர் எஸ்எஸ் , காந்தி என சகலரும் அப்படியே

கலாமினை குறை கூறுபவர்களுக்கு ஒன்று மனசாட்சி இல்லாமல் இருக்கவேண்டும், அல்லது நாட்டுபற்றில்லா குறுகிய மனப்பான்மை இருக்கவேண்டும்

அழிவு ஆயுதங்களை உருவாக்கிய கலாம் நல்ல மனிதராக இருக்கமுடியுமா? என்று சில வாதங்கள். அணுகுண்டை உருவாக்கிய ஐன்ஸ்டீனை விடவா மனிதநேயம் பேசிவிட முடியும்?

இது பாதுகாப்பு, தேச பாதுகாப்பு இத்தனை ஏவுகனைகளை வைத்திருக்கின்றோமே தவிர யார் மீது வீசினோம், மீணவனை காப்பாற்ற நாட்டிற்கு ஏவுகனை எதற்கு என்பதெல்லாம் அலட்டல். அது தேசபிரச்சினை என்றால் என்றோ கடற்படை புகுந்துவிடும், இது வேறு அரசியல் விட்டுவிடலாம்

.
காந்தி,காமராஜர் (அவரும் விருதுநகருக்கு என்ன செய்தார்? :) )வரிசையில் ஒரு சலசல்ப்புமே இல்லாமல் கலாமையும் வைக்கலாம். இந்தியா அவருக்கு பாரத ரத்னா கொடுத்து கௌரவ படுத்தியது, அது என்ன பாரத ரத்னா, இப்பொழுதெல்லாம் அது யாருக்கெல்லாமோ வழங்கபட்டத்து, வழங்கபடுகிறது இன்னும் வழங்குவார்கள்.

ஆனால் மோடியின் அரசு புதிய ஏவுகனை திட்டங்களுக்கு கலாம் சீரியஸ் என பெயரிட்டிருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் உண்மையான‌ மரியாதை.

அதைவிட இன்னொரு உச்சபெருமை வேண்டுமென்றால், விரைவில் குலசேகரபட்டனத்தில் ஸ்ரிகரிஹோட்டா போல ஒரு தளம் அமைக்கும் திட்டத்தில் இஸ்ரோ இருக்கின்றது, காரணம் அதன் அமைவிடம் மற்றும் கண்ணாணிக்கும் வசதிகள் மிக மிக பொருத்தமானது, அப்படி அமையும் பட்சத்தில் அதற்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டினால் அது பெரும் பாராட்டக அமையும்.

ஏவுகனைகளின் பிதாமகன் மிக உறுதியாக திப்புசுல்தான். அவர்தான் அந்த நுட்பத்தை உலகிற்கு சொன்னார், 15,000 அடி பாயும் ஏவுகனையை உருவாக்கினார் (இன்றும் அதன் மாதிரி அமெரிக்க ஏவுகனை திட்ட அலுவலகத்தில் உண்டு )அதன்பின் அதனை செயல்படுத்தியது ஜெர்மன்.

நவீன ஏவுகனைகளின் தந்தை என "வார்ண் பிரவுன்" ணை கொண்டாடும் உலகம், ஹிட்லரிடம் பணியாற்றியவர் பின்னாளில் அமெரிக்காவிற்கு யுத்த கைதியாக கொண்டு செல்லபட்டார், அதன்பின் செயற்கை கோள் ராக்கெட் மற்றும் ஏவுகனைகளை தயாரித்து அமெரிக்காவை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு சென்றார், அந்த தலைமுறைக்கு ஐன்ஸ்டீனுக்கு அடுத்து அவர்தான் ஹீரோ.

இந்தியாவிற்கு ஏவுகனைகளை கொடுத்து பலமான நாடாகியதில் இந்த எளிய தமிழனின் சாதனை மிக பலமானது, அதனினும் மேல் இன்னும் இந்த நாட்டையும் அதன் தூண்களாகிய மாணவர்களையும் நேசித்த‌ அவரின் மனமும் மிக விலாசமானது.
மாணவர்களை மிகவும் நேசித்த அவர், தனது பிற்கால வாழ்க்கை எல்லாம் அவர்களுடனே செலவிட்டார்,

அப்படித்தான் நேஷில்லாங்கில் மாணவர்களிடம் உரையாற்றிகொண்டிருந்த பொழுதே மரணம் அடைந்திருக்கின்றார், 84 வயதில் இந்த நாட்டிற்காய் உழைத்துகொண்டே காலமாகி இருக்கின்றார்.

மொழி,இனம்,மதம் என சகலமும் கடந்து ஓரு இந்தியனாக தன்னை முன்னிலைபடுத்திய தமிழர்களின் வரிசையில் காமராஜருக்கு பின் இடம்பிடித்துகொண்டவர் கலாம், இருவருக்கும் குடும்பமில்லை, இருவருமே சொந்தபந்தங்களுக்கோ அல்லது சொந்தமக்களுக்கோ ஏதும் செய்ததுமில்லை.

கலாம் காலமாகி இருக்கலாம், ஆனால் அவரது முத்திரை இந்தியாவில் அழிந்துவிடகூடியது அல்ல. இந்திய ராணுவம் இருக்கும் வரைக்கும் என்றல்ல, இந்திய கல்விநிலையங்கள் இருக்கும் வரை, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
பலநூறு ஆண்டுகள் செய்யவேண்டிய சேவையை 60 ஆண்டுகள் உழைப்பினில் இந்தியாவிற்கு செய்திருக்கும் விஞ்ஞான மகான் அவர்.

ஒன்று மட்டும் நினைவில் வையுங்கள், இந்நாடு விசாலமான மனதுடையது, நாட்டிற்காய் நீங்கள் உழைத்தால், நல்ல கல்வியோடு பெரும் சிந்தனையோடு உழைத்தால்

எந்த சாதியில் பிறந்தாலும், எந்த மதத்தில் பிறந்தாலும், எந்த குலத்தில் பிறந்தாலும் இந்நாடு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போகாது

கலாம், அம்பேத்கர் எல்லாம் அப்படி கல்வியாலும் நாட்டு சிந்தனையாலும் முத்திரை பதித்தவர்கள், தங்கள் சாதியாலோ மதத்தாலோ அல்ல, மாறாக கல்வியால், பரந்த சிந்தனையால்

சிந்தனை பெரிதாகவும் பரந்த மனத்தோடும் இருந்துவிட்டால் அவனுக்கு சாதி, மத, இன அடையாளம் தேவைபடாது, இந்தியன் எனும் ஒற்றை அடையாளம் போதும்

அப்படித்தான் தமிழக மீணவ தீவில் பிறந்த ஏழை இஸ்லாமிய தமிழனை இந்ந்தியா இன்று நாடெங்கும் வணங்கிகொண்டிருக்கின்றது, அவனை அறியா இந்தியரில்லை அவர் படமில்லா பள்ளிகளில்லை.

நவீன சீனாவினை உருவாக்கியவர் டிங் ஜியோ பெங், அவர் காலத்தில்தான் சீன பொருளாதாரம் டிராகனாய் சீறியது, அவர் சொன்னார் "நான் இறந்தால் நீங்கள் வேலை செய்துகொண்டே என்னை வழியனுப்பவேண்டும்" அதுதான் நீங்கள் எனக்கு கொடுக்கும் உச்சகட்ட மரியாதை. சிங்கப்பூரின் லீ குவான் யூ அதனைத்தான் சொன்னார்

அப்படித்தான் இன்று இந்தியாவில் கலாமிற்கும் செய்யவேண்டும், மாணவர்கள் புரட்டும் புத்தகத்தில் அவர்களின் கண்ணீர் அப்துல் கலாமிற்காக விழுட்டும்

இந்தியனாய் , இந்த கணிணியில் எனது கண்ணீர் சொட்டு சொட்டாய் விழுவதனை போல..


Tuesday, July 26, 2016

சிதறல்கள்

வைரமுத்து சொன்னது அப்படி ஒன்றும் பெரிய தவறு அல்ல, உலகம் சொன்னதை அவரும் சொன்னார் அவ்வளவுதான்

கபாலி மிகபெரும் வெற்றி என சொன்ன ரஜினியினை விடவா நெஞ்சார பொய் சொல்லிவிட்டார் வைரமுத்து?

கபாலி வெற்றி என ரஜினி சிரித்துகொண்டே சொல்லும்போது மறைந்த மனோரமாவின் நினைவு வந்து தொலைக்கின்றது




அப்துல் கலாம் என்ன பிராமணரா? அவர் எல்லாம் உச்சம் தொடவில்லையா? இதுபோன்ற எத்தனை அடையாளங்கள் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சாதியால் முன்னேறினார்களா?

சிவநாடார் தொட்டிருக்கும் உயரம் என்ன? இன்னும் உழைப்பால் பலர் உயர்ந்த நாடு இது, அம்பானி முதல் திநகர் சரவணா ஸ்டோர் வரை சாதியால் உயர்ந்தார்களா?

எத்தனை பெரும் இயக்குநர்கள் உள்ள தமிழகம் இது, இவர்கள் எல்லாம் ஜாதியால் உயர்ந்தார்களா? இளையராஜாவும், ரகுமானும் ஜாதியால் உயர்ந்தார்களா, சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் ஜாதிதான் கூட வந்ததா?


இதோ விகடன் டிவியில் ஜாதி இல்லாமல் நான் இந்த நாட்டில் என்ன கிழிக்க முடியும்? எங்கு சென்றாலும் ஜாதி வரும் என பெரிய சர்ச்சையின கிளப்பிகொண்டிருக்கின்றார் ரஞ்சித்.

அப்படி சாதி பார்த்து இயங்குவதல்ல இந்திய யதார்த்தம், அப்படி பார்த்தால் பல அடையாளம் முத்திரை பதித்திருக்கமுடியாது, காமராஜர் எல்லாம் வெளிவந்தே இருக்கமுடியாது. உண்மையும் கூட‌,

ஒன்று மட்டும் புரிகின்றது, மனிதர் போட்டுகொண்டிருக்கும் வட்டம் மிக சிறிது, மிக மிக குறுகிய பார்வை. இந்த உலகினையே சாதிய பார்வையினால் பார்க்கும் ஒரு வகை வன்மம்

பாருங்கள் மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார், யார் மைக்கினை பிடுங்கி கொண்டு ஓடுகின்றார்கள் என தெரியவில்லை

ரஜினி இனி வாயினை திறந்து ஜாதி பார்த்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என வாயினை திறந்து சொல்லாதவரை இவர் நிறுத்தமாட்டார்.

ரஜினி என்ன‌ ஜாதி பார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?






தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல, நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன், திரும்பி விட்டேன் : அதிமுகவில் இணைந்த‌ கருப்புசாமி பாண்டியன்

கருப்பு ஆடுகளுக்கு அடைக்கலம் கொடுத்த திமுக ஒரு பசுமையான வனமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த வனத்தில் இருந்த சுதந்திரம் அம்மா கண்பார்வையில் கிடைக்குமா? என்பது வேறு விஷயம்

ஒரு வழியாக கலைஞருக்கு நெல்லையில் தொல்லை தீர்ந்தது, ஆனால் அதிமுகவிற்கு இனிதான் தொடங்குகின்றது, சும்மாவே நெல்லை அதிமுக அரசியல் புரியாது, இனி எப்படியோ??




 

கார்கில் வெற்றி தினம் : கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்





போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று

அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் ராணுவம் அதன் பின் அப்பக்கம் செல்ல கூடாதாம், செல்லாவிட்டால் என்ன ஆகும் அதேதான் அதே ஊடுருவல் ஆக்கிரமிப்பு, அதே சண்டை.

Stanley Rajan's photo.

இப்படி காஷ்மீரை இந்திய ராணுவம் காப்பதன் பெயர்தான் ராணுவ ஆக்கிரமிப்பாம், இதனை சொல்ல கூட்டமும், பேரணிகளும் வேறு


இதனை எல்லாம் இங்குள்ள மனித நேய போராளிகளுக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னர் ஏன் சாடுகின்றார்கள் என்றால் அப்படி காஷ்மீரிலிருந்து பின் இந்தியாவிலிருந்தே இந்திய ராணுவத்தை விரட்டிவிட்டால் இத்தேசம் உடையுமாம், ஈழநாடு, திராவிட நாடு, தனி தமிழ்நாடு எல்லாம் கிடைக்குமாம்

சரி அந்த எல்லைகளை எப்படி காப்பீர்கள், ராணுவம் அமைத்துதானே ஆகவேண்டும் என்றால் சத்தமே இருக்காது, அவர்கள் அப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் பேசுவார்கள்

கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்

வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்

வந்தே மாதரம்...ஜெய் ஹிந்த்















கபாலி : ரஜினி படம் பெரும் வாய்ப்பு.. ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம்

ரஜினி எனும் பெரும் பிம்பம் மூலம் சொன்னால் வெளிநாட்டு தமிழரின் வலி தெரியும், சமூக அக்கறையினால் ரஞ்சித் அப்படி படம் எடுத்தார், அவர் தலித் போராளி, அவர் பெரும் புரட்சியாளர், ரஜினி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தும் வெளிநாட்டு மக்கள் வலியினை சொல்கிறார்,

ஆனால் நீ எப்படி அவரை விமர்சிக்கலாம்?, நீ பார்ப்பணன் சந்தேகமே இல்லை, சாதி வெறியன் என்றெல்லாம் சொல்கின்றார்கள்

ரஜினி படம் பெரும் வாய்ப்பு, ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம், அதிலும் வெளிநாட்டு தமிழர் பிரச்சினையினை பேசவந்தது நல்லது

ஆனால் பேசவேண்டிய மகா முக்கியமான மலையக மக்கள் பிரச்சினை இருக்க, தமிழக அமைதியினை குலைத்துகொண்டிருக்கும் ஈழ பிரச்சினையின் மறைக்கடிக்கபட்ட அல்லது தலித் என்பதால் ஒதுக்கபட்ட மலையக மக்களை பற்றி பேசி இருக்கலாம் அல்லவா?

மொத்த தமிழகமும் இந்நேரம் கொண்டாடிகொண்டிருக்காதா? இப்படி எல்லாம் தமிழக தலித் வம்சம் இலங்கையில் அடக்கபட்டது என உண்மை தெரிந்திருக்காதா?

உண்மையில் கபாலி வசனங்கள் அம்மலையக தமிழருக்கு உரித்தானவவை, கோட் சூட் போன்ற சமாச்சாரங்கள் அவர்களுக்கும் ஈழ தமிழருக்கும் உரியவை, கடைசியில் சீனன் பேசும் பேச்சு கூட ஈழ சாயலே

ரஜினி மட்டும் மலையக மக்கள் தலித் பிரதிநிதியாக "சிங்களனும் எங்கள வாழ விடல, ஈழ தமிழனும் வாழ விடல, சொந்த தமிழ்நாடும் எங்களுக்காக குரல் எழுப்பல‌

வாழ்வும் விடாம, சாகவும் விடாம நாங்க ஏன் இந்தபாடு படணும், தலித்தா பொறந்து இலங்கை வந்தது தப்பாடா..நாங்களும் தமிழன்டா..எங்கள ஒதுக்கி வச்சிட்டு என்னடா ஈழம் தனிநாடுண்ணு எப்படிடா பேசுறீங்க.." என கேட்டிருந்தால் அது பெரும் மாற்றம் பேசும் படமாக அமைந்திருக்கும், கொண்டாட பட்டிருக்கும்

ஆனால் ஈழ தமிழரரிடமிருந்து கண்டனம் வரும், அது சாதி எதிர்ப்பு கண்டனமாக மட்டுமே இருக்கும், அந்த ஆண்ட பரம்பரை வசனங்கள் நிச்சயம் அவர்களுக்கே பொருந்தும்

நாய்கள் அடிபட்டால் கூட குரல் கேட்கும் தமிழகத்தில் அவர்களுக்கான குரல் கேட்காது, கேட்டால் யாழ்பாண ஆண்ட பரம்பரை குரல் அதனை அடக்கும், அதாவது அந்த முணகலை விட பெரும் குரல் எழுப்பும், அந்த ஒப்பாரியில் சிலர் இந்தியா, ஈழம், தமிழ, தொப்புள்கொடி என முழங்க அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே தெரியாது

ஆனால் இருக்கின்றது, பெரும் துயரம் அங்கே உறங்குகின்றது. கத்தி கத்தி ஓய்ந்துவிட்ட துயரம் அது, இனி வடிக்க கண்ணீர் இல்லா கண்கள் அவர்களது.

ஆக மலையக தமிழன் படமெடுத்தால் லாபம் இல்லை என்றேதான் மறைத்துவிட்டு பணமிருக்கும் மலேசிய தமிழன் பிரச்சினைபற்றி படமெடுத்திருக்கின்றார்.

இந்த வணிக நோக்கில் படம் வந்தபின் மலேசிய தமிழர் என்னை வாழ்த்துகின்றனர் என சிரிப்பு வேறு

பணம் இருக்கும் தமிழனின் பிரச்சினை உலகெல்லாம் தெரிய வேண்டும், பணமில்லா ஏழை மலையக தலித் தமிழனின் பிரச்சினை மலையிலே மடிய வேண்டும் என்பதுதான் தலித் கொள்கை போராட்டமா?

இதனைத்தான் நான் சொல்லவந்தேன், அவர் போராளி, தலித் எல்லாம் அல்ல‌

மாறாக அம்பேத்கர், சே குவேராவினை இடம் பார்த்து விற்க தெரிந்த ஒரு வியாபாரி, சரியாக குறி வைத்திருக்கின்றார், ஆனால் ஓவர் புரட்சியும் ஆர்வகோளாறும் பிசக வைத்துவிட்டன‌

உண்மையில் அம்பேத்ர், சே பற்றி பேசும் மனிதநேயமுள்ள கலைஞனாக இருப்பவனுக்கு மலையக தலித் தமிழர்தான் முன் வருவர்.

வாக்கு அரசியலுக்கு தமிழக தலித் மக்கள் நினைவுக்கு வருவது போல, ரஞ்சித்திற்கு படமெடுக்கவும் கருத்து புரட்சி பேசவும் மலேசிய எஸ்டேட் தொழிலாளர்கள் கிடைத்திருக்கின்றார்கள்,

பிடிக்க அம்பேத்கர் படம் கிடைத்திருக்கின்றது

குறுகிய பார்வையும், முதலாளித்துவ லாப வெறியுமே அவரிடம் ஓங்கி தெரிகின்றன‌

த‌லித் பிரச்சினை சிக்கலானது, நிச்ச்யமாக தமிழக கதைகளை எடுத்தால் சிக்கல் சரி, மலையக தமிழரை தொட்டாலுமா சிக்கல்?

அந்த வணிக நோக்கத்தில்தான் இவர் தலித் போராளி முகம் காட்டுகிறார் அன்றி வேற‌ல்ல

தமிழக தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, இந்திய தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, உண்மையில் அடக்க பட்டிருக்கும் மலையக தலித் தமிழரின் துயரமும் சொல்லபடவில்லை,

ஆனால் வியாபார வாய்ப்புள்ள மலேசிய கதை மட்டும் சொல்லபட்டிருக்கிறதென்றால் இதனை நீங்களாகவே புரிந்துகொள்ளவேண்டுமே தவிர சொல்லி அல்ல‌

உண்மையான தலித் மக்கள் போராளியாக, வெளிநாட்டு தமிழரின் துயரினை பதிவு செய்பவர் இப்படியா செய்வார்? செய்துவிட்டு ஏதோ பெரும் சாதனை செய்தது போல பேச்சு வேறு, உண்மையில் இவரின் பார்வை மகா குறுகியது.

அவ்வளவுதான், இனி நடப்பதை காலம் சொல்லும்.

அதனை விட்டுவிட்டு ரஞ்சித் உண்மையான தமிழிய தலித்திய போராளி என நீங்கள் நம்புவதும் ஒன்றுதான், திராவிட கட்சிகள் எல்லாம் பெரியாரிய கொள்கைகளை பின்பற்றுகின்றன என நம்புவதும் ஒன்றுதான்

எல்லாம் வியாபாரம், அம்பேத்கரையும் அதில் கொண்டு வந்துவிட்டார்கள் அவ்வளவுதான்.




Soman Raja : மலையக மக்கள்ன்னா யார் ப்ரோ?

அடடா, மலைக்கு மேல் உள்ள மக்கள் எல்லாம் மலையகத்தார் என சிலர் சொல்வார்கள் .

கேட்டுகொள்ளுங்கள், எனக்கு தெரிந்து இலங்கை மலையகம் எனும் மலைபகுதி தோட்ட தொழிலாளர்கள்.




 

ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்




ஈழபோராட்டத்தில் மறக்கமுடியாத பெயர்கள் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்

முதன்முதலில் ஆயுதம் தூக்கியதும் இவர்களே, நீதிமன்றத்தில் ஒரே தீவில் இரு நாடு ஏன் சாத்தியமில்லை? என உலக அரசியல் பேசியதும் இவர்களே

வெலிக்கடை சிறையில் இவர்கள் இருக்கும் போது, அதுவும் அவர்களை மீட்க அதிரடி திட்டம் டெலோவால் வகுக்ககட்டபொழுது முந்திகொண்டு ராணுவத்தினரை தாக்கி பெரும் கலவரத்திற்கு வழிவகுத்தது பிரபாகரனின் ஆட்டம்.


Stanley Rajan's photo.

கொஞ்சம் தாமதித்திருக்கலாம் அவர்கள் வெளிவந்திருப்பார்கள் எனும் சொல்லுக்கு, அவர்கள் வெளிவந்தால் என்ன நடந்திருக்கும் என்பது இன்னொரு கேள்வியாகும்

காரணம் வங்கிகொள்ளையில் தேடபட்டு இந்தியா தப்ப முயலும்போது பிடிபட்டார்கள். காட்டிகொடுக்கபட்டார்கள் என்பது உண்மை

அந்த குழுவில் பிரபாகரனும் அன்று இருந்தார், சபாரத்தினமும் இருந்தார்

சபாரத்தினம் குட்டிமணியினை சிறை உடைத்து காப்பாற்ற முடியுமா என சிந்தித்துகொண்டிருந்த பொழுது, , பிரபாகரன் முந்திகொண்டு கலவரத்தை தொடங்கியது இன்றளவும் சந்தேகமே.

அன்றைய கொதிநிலை அப்படி இருந்தது, தங்க துரை சிங்களர்களின் பெரும் குறியாக இருந்தார். இனி ஒரு சிங்களன் கொல்லபட்டாலும் கொழும்பு தமிழர் பகுதி எரியும் என இனவாதிகள் கொக்கரித்த நேரமது, வாய்ப்பினை எதிர்பார்த்தே இருந்தார்கள்.

அந்த புலிகளின் தாக்குதலில் அது பகிரங்கமாக வெடித்தே கலவரம் தொடங்கியது, கொஞ்சம் தாமதித்திருக்கலாம் என்பார்கள்.

அந்த திருநெல்வேலி தாக்குதலில் செல்லகிளி கொல்லபட்டதும் சர்ச்சையே, காரணம் சிங்கள ராணுவ வீரர்கள் திருப்பி தாக்கவே இல்லை என்பார்கள்

உச்சமாக தான் வாசித்த 18 மாவீரர் உரையிலும் குட்டிமணி, தங்கதுரை பற்றி பிரபாகரன் ஒரு வார்த்த்தை சொன்னதுமில்லை, அவர்களை பற்றி எங்கும் பேசியதாகவும் தெரியவில்லை

ஆக ஈழபோராட்டம் என்றால் பிரபாகரனும், போராளிகள் என்றால் அவருக்காக செத்தவர்களும் எனும் அளவிற்கு மாற்றாபட்டிருக்கின்றது வரலாறு, இருக்கட்டும்

ஆனால் கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை ஆற்றிய முழக்கம், சே தென் அமெரிக்காவில் முழங்கிய பேச்சுக்களுக்கு சற்றும் குறைந்ததல்ல, அவரின் அந்த இறுதி பேச்சு அவ்வளவு அர்த்தமிக்கது

மார்ட்டின் லுத்தர் கிங், பகத்சிங் போன்ற புகழ்பெற்ற முழக்கம் அது,

எங்காவது அதனை நீங்கள் கேட்கமுடியுமா? முடியாது, என்ன பேசினார் என்றாவது தெரியுமா? ஒரு சீமானிய குஞ்சுகளுக்கும், ம்ம்ம்மேஏஏஏ 17 என கத்தும் செம்மறி கூட்டத்திற்கும் தெரியாது, இவர்கள் தான் இந்தியா, கலைஞர், சோனியா என பேசிகொண்டிருப்பார்கள்

இதுதான் ஈழபோராட்டம் ! , அதனை தமிழக உணர்வாளர்கள் தாங்கி பிடிக்கும் முறை!!

இன்று அவர்களின் நினைவு நாள், அந்த மாவீரர்களை நினைத்து கொள்ளலாம்

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதிவேண்டும் என கொடிபிடிப்போர் யாரும், 1983 ஜூலை கலவரங்களுக்கு நீதிவேண்டும் என்றோ, அன்று கொல்லபட்ட 10,0000 பேருக்கு மேலான தமிழருக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றோ கேட்கமாட்டார்கள்

இது ஒரு வகையான அரசியல், இதில்தான் சிங்களன் தப்பிகொண்டிருக்கின்றான். உண்மையில் சிங்கள அரசு செய்த பெரும் கொடூர இனபடுகொலை இதுதான். ஆனால் யாரும் கேட்கமாட்டார்கள்.

இதனை பற்றி எல்லாம் பேசினால் நான் துரோகி

உண்மையில் சிங்களனை தண்டிக்க விரும்பினால் இவர்களின் படுகொலையிலிருந்தே தான் தொடங்க வேண்டுமே தவிர, முடித்து வைத்த முள்ளி வாய்க்காலில் அல்ல.






 புலிவால் பிடிப்பவர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும், இப்படித்தான்







சிறை உடைப்பு சம்பவம் இலங்கையில் நடக்கவே இல்லையா?







ஆமாம் எத்தனையோ முறை சிங்கள படைகளை முடக்கி, சில இடங்களில் புலிகளுக்கு உதவியாக சிங்களனை தாக்கி திருப்பி அனுப்பிய அவன் முட்டாள்தான்

இந்தியா உதவியின்றி ஈழமக்கள் உரிமை பெறுவது சாத்தியமில்லை என் சொன்ன அவன் முட்டாள்தான்

அவனை போலவே இந்தியாவுடன் உறவாடிய எல்லோரும் முட்டாள்கள்தான். நீங்களும், பிரபாகரனும் சீமானும் மட்டுமே அறிவாளிகள்

ஒரு பெரும் கொலை நடக்கும் இடத்திலும் போட்டோகிரபர் சகிதம் போஸ் கொடுத்து மொத்தமாக மாட்டிய அவர்களும் பெரும் அறிவாளிகள்.








"அரசியல் வசனங்களை அறிந்தே பேசினார் ரஜினி" : இயக்குநர் ரஞ்சித்

"அரசியல் வசனங்களை அறிந்தே பேசினார் ரஜினி" : இயக்குநர் ரஞ்சித்

இனி கிளம்பிவிடுவார்கள் ராமதாஸ், யுவராஜ் ,வாண்டையார் வகையராக்கள். அவர்களுக்கும் ஏதாவது செய்து தங்களை நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

சில நாட்களில் கிளம்புவார்கள், அல்லது மிக சரியாக ரோபோ 2 வரும்பொழுது எங்களுக்கும் காட்டவேண்டும், நாங்களும் அனுமதித்தால் தான் வெளிவரவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வார்கள்


இது இப்போதைக்கு ஓயாது போல் இருக்கின்றது, சந்தடி சாக்கில் அரசு 1000 மதுகடைகளை கூடுதலாக திறந்தாலும் சத்தம் வராது

இந்த களபேரங்களில் சினிமா துறையிலிருந்து ஒரு சத்தம் அல்லது கருத்து, அட ரஞ்சித்த வளர்த்துவிட்ட வெங்கட் பிரவுவின் தரப்பிலிருந்து ஒரு ஆதரவு அல்லது எதிர்ப்பு அல்லது ஒரு வார்த்தை வந்திருக்கும்?

வராது, ஒருகாலமும் வராது, அதுதான் தமிழ் திரையுலகம்

வடிவேலு எனும் பெரும் கலைஞனே ஓட விரட்டபட்டு இன்று மூலையில் வைக்கபட்டபின்பு, ரஞ்சித் எல்லாம் எம்மாத்திரம்?

எங்கோ, எதிலோ பெரும் அரசியல் ஒளிந்து கிடக்கின்றது, சிக்கி இருப்பவர் ரஜினி என்பது மட்டும் புரிகின்றது.

இம்மாதிரியான சர்ச்சைகளில் கமலஹாசனுக்கு பெரும் அனுபவம் இருக்கின்றது, இப்படி ஒரு சிக்கல் வந்தால் அவர் அனாசயமாக தாண்டுவார், அவர் கெத்து அப்படி

ரஜினி அதில் ஹிஹிஹிஹிஹிஹி........

பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்




அற்புதமான பாடல்களை எழுதிய வாலியிடம் ஒரு மேடையில் கேட்டார்கள், இப்படி கவி மழை கொட்டும் நீங்கள் "எப்படி சமைஞ்சது எப்படி" என மகா ஆபாசமாக எழுதியது ஏன்?

அவர் அவருக்கே உரித்தான பாணியில் சொன்னார்

"இங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
அங்கே எலும்புக்கு வாலாட்டும் நாய்"

பாய்ஸ் படத்தில் சர்ச்சையான வசனத்திற்காக சுஜாதா எனும் யானையினையே மண்டியிட வைத்த திரையுலகம் அது, ரஞ்சித் எல்லாம் அதன் முன் தூசு

அதுதான் சினிமா, அங்கு எல்லாமே வர்த்தகம், எல்லா பிரச்சினைகளையும் அப்படி இப்படி காட்டி சம்பாதிப்பார்களே தவிர, வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. புரட்சி, எழுச்சி எல்லாம் சினிமாவால் சாத்தியமில்லை

காரணம் பெரும் பணம் கொட்டபடும் இடம் எது, எடுத்தே தீரவேண்டும் என்ற சூதாட்ட எண்ணம் இருக்கும் அவ்வளவுதான், இயக்குநர் எனும் குதிரையினை நம்பி பந்தயம் கட்டுவார்கள்

அந்த குதிரை நன்றாக ஓடவேண்டும் என்பதுதான் சினிமா எதார்த்தமே தவிர , கடிவாளம் அணியமாட்டேன், ஜாக்கி சுமக்க மாடேன், கிரவுண்டுக்குள் நான் விருப்பபட்ட இடத்திற்கத்தான் ஓடுவேன் என்றால் யார் பணம் கொட்ட தயாராவார்கள்?

அடுத்தவன் பணத்தில் செய்வதல்ல புரட்சி

பெரியார் சொந்த பணத்தில் செய்தார், அம்பேத்கர் தன் கல்வியால் செய்தார், இன்னும் பலர் கால் நடையாய் நடந்து செய்தனர்

அம்பேத்கர் மேட்டுகுடியில் பிறக்கவேண்டும் எனும் ரஞ்சித்தின் பேட்டி வாய்விட்டு சிரிக்கும் நகைச்சுவை

பாரதியார் யார்? அம்பேத்கரை உருவாக்கிய பிராமண ஆசிரியர் யார்? பரோடா மன்னர் யார்? ராஜராம் மோகன்ராய் யார்? இந்திய சாதிமுறையினை சாடிய அன்னிபெசன்ட் வெளிநாட்டு மேட்டுகுடிதான், சாதி முறைகளை சாடி தனிமதம் சமைத்த புத்தனும் மேட்டுகுடி, மகாவீரர் மேட்டுகுடி

நிலமை மிஞ்சும் போது காலம் தோறும் காக்க‌ அவதாரம் வருவார்கள்,பைபிளின் மோசஸ், பகவான் கிருஷ்ணனும், தென்னகத்து வைகுண்டரும் அப்படியே,

ஆக தாழ்த்தபட்ட மக்களை கைதூக்கிவிட பல மேட்டுகுடிகளில் பலர் ஏற்கனவே பிறந்துவிட்டார்கள், இன்னும் பிறப்பார்கள் , அதுதான் உண்மை அதுதான் யதார்த்தம்

100 வருடத்திற்கு இருந்த நிலை என்ன? இன்றிருக்கும் நிலை என்ன? எவ்வளவு முன்னேற்றம்?, உண்டா இல்லையா?

இளையராஜா தொட்டிருக்கும் உயரம் என்ன? மறுக்க முடியுமா? அவர் என்ன தலித் இசை மட்டும் கொடுத்தாரா?

சினிமா என்பது வேறு மாதிரியானது, பணம் சம்பாதித்து கொடுக்கா எந்த கலைஞனும் புறக்கணிக்கபடுவான், கொள்கை புரட்சி எல்லாம் அங்கே சாத்தியமில்லை

எம்ஜிஆர் சில திராவிட கொள்கைகளை கொண்டிருப்பதாக சொல்லிகொள்வாரே அன்றி, அவர் படத்தில் நாயகி கோவிலுக்கு செல்வதோ, தாய் பக்தியில் உருகுவதோ அனுப்பபட்டிருக்கும், அவரே இஸ்லாமியராக, கிறிஸ்தவராக, புத்த குருவாக பாடிகொண்டிருப்பார்

காரணம் சினிமாவில் சில அனுசரிப்புகள் தேவை

அதனையன்றி, நான் இப்படித்தான் என் படம் இப்படித்தான் என்றால் தாரளமாக சொல்லிகொள்ளலாம்

ஆனால் நம்பி பணம் கொடுக்க யார் வருவார்கள், கோடிகளை கொட்டி புரட்சி செய்யவா படம் எடுக்க வருவார்கள்?

பாரதிராஜா தன் படங்களில் பிரச்சினையினை தன் சமூகத்திற்கு இடைபட்டதாகத்தான் வைத்திருப்பார், நாயகன், வில்லன், ஊர் என சகலமும் ஒரே ஜாதியாக காட்டி இருப்பார், கமல ஹாசனின் தேவர் மகன், விருமாண்டியும் அப்படியே

அதாவது என் சாதியிலும் மகா அயோக்கியன் உண்டு என சொல்லபடும் கதை அது, ஒப்புகொள்கின்றார்கள். புரட்சி கருத்துக்களோ , உரையாடலோ, ஆண்ட அடிமை வசனமோ அதில் இருக்காது, அப்படங்கள் ஜெயித்தன.

வைத்திருக்கின்றார் வசனம், "பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்"

என்ன இது பசுமாட்டினை காட்டில் சென்று விட்டுவிடுவோமா? பிராய்லர் கோழிகளை காட்டில் மேய விடலாமா? வீட்டின் எருமை மாடுகளை களக்காடு மலையில் சென்று விட்டுவிடலாமா?

வண்டலூர் சாலையினை மூடிவிட்டு , குழந்தைகளை வீரப்பன் காட்டிற்கா அழைத்து செல்லமுடியும்? ஒரு யதார்த்த வசனம் வேண்டாமா?

கொஞ்சம் தீவிரமான கோளாறு அன்றி இப்படி எழுத முடியாது. என்ன தலித்துக்களுக்கு உரிமை இல்லை, எல்லா துறையிலும் அவர்கள் இருக்கின்றார்கள், முன்னேறுகின்றார்கள், இதோ இவரும் படமெடுக்கும் அளவிற்கு வந்திருக்கின்றார்

என்ன பெரிய அடக்குமுறையினை கண்டுவிட்டார்கள்?, காலம் மாறிவிட்டாலும் பழம் காலத்தையே நினைத்து கொண்டிருந்தால் எப்படி?

உழைப்பு சமூகத்தை மாற்றும், சில சாதிகள் அப்படித்தான் வியாபாரத்திலும், கல்வியிலும், உற்பத்தியிலும் கால்பதித்து எங்கோ செல்கின்றன, கடுமையான உழைப்பால் வந்தவை அவை

அதனை விட்டு ஒரு காலத்தில் எங்களை அடித்தார்கள் தெரியுமா? என அடிபட்ட காலத்திலே நின்று புரட்சி, எழுச்சி, என பேசிகொண்டிருந்தால் ஒரு மண்ணும் நகர்ந்திருக்காது

இது சினிமா, சர்ச்சைகுள்ளான நடிகரையே நடிக்க வைக்க ஆயிரம் முறை யோசிப்பார்கள்

சந்திரபாபு போன்ற மாமேதைகள் சரிந்தது அப்படித்தான், வடிவேலு அப்படித்தான்

நடிகன் நிலையே அப்படி என்றால் லகானை பிடிக்கும் இயக்குநரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

இவர் புரட்சி, தலித் எழுச்சி எல்லாம் தனியாக இயக்கம் கட்டி செய்தால் சரி, அவர் விருப்பம். ஆனால் அடுத்தவன் காசில் செய்ய தயாரிப்பாளர் அனுமதிக்க மாட்டார்.

அட கபாலி ஏன்? கொடியன்குளம் கலவரம், வாச்சாத்தி சம்பவம், மேலவளவு படுகொலை, தமிழ்நாட்டு தர்மபுரி இளவரசன் கதையோ, உடுமலை பேட்டை சங்கள் கதையோ வைத்து தலித் அரசியல் படம் எடுக்க தெரியாதா? முடியுமா என்றால் முடியும்? ஆனால் சிக்கல் ஆகும் என்பது அவருக்கு தெரியும்

அதனால் மலேசிய கதையினை சொல்லி ,அதில் புரட்சி சொல்லி ரஜினியினை குப்புற தள்ளியாயிற்று, இனி பிஜி, மொரிஷியஸ், வெஸ்ட் இண்டீஸ் என உலகெல்லாம் செல்லமுடியுமே தவிர, தமிழக சாதி பிரச்சினைகளை அன்னார் பேசுவாரா என்றால் பேசமாட்டார்

இதனால்தான் இவரை சாடவேண்டி இருக்கின்றதே அன்றி வேறல்ல, அதாவது இவர் தலித் பிரச்சினைகளை வைத்து உலகெல்லாம் சம்பாதிக்க நினைக்கிராரே அன்றி அதற்கான போராளி அல்ல, அப்படி நினைத்திருந்தால் சினிமாவிற்குள் வரமாட்டார்

சினிமா ஊடகம்தான், ஆனால் பல சிக்கல் உள்ள ஊடகம்.

ரஞ்சித்தின் அடுத்த கட்டம் மீது உனக்கு பொறாமையா என்கின்றார்கள், எதற்கு? அடுத்த கட்டம் என ஒன்று சினிமாவில் இருந்தால்தானே அவருக்கு?

இவர் கபாலியில் செய்ததே தவறு, அதனை நியாபடுத்தி பேட்டிகொடுத்தது இன்னும் தவறு

இனி இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, கொஞ்சநாளில் அவராகவே காணாமல் போய்விடுவார், அல்லது தன்னை மாற்றிகொள்வார்

சினிமா என்பது விஞ்ஞான அரசியல் , அதில் கலைஞரை போல அரசியல் செய்யலாமே தவிர,

பெரியார் போல புரட்சி எல்லாம் செய்ய முடியாது.அதற்குத்தான் பெரியார் அரசியலுக்கு வரவே இல்லை





Stanley Rajan's photo.





Monday, July 25, 2016

சிதறல்கள்














அவ்வப்போது மலேசியாவில் வரும் சத்தம்தான், தமிழ் இளைஞர்களிடம் வன்முறை அதிகரிக்க தமிழ் படங்களை மலேசியாவில் அனுமதிப்பதுதான் காரணம் என்றொரு பேச்சு இருந்தது, கூடவே சின்னதிரை சீரியல் குடும்ப நேரத்தை சீரழிக்கின்றது என்ற முணுமுணுப்பும் இருந்தது

இந்த நிலையில் கபாலி வேறு வந்துவிட்டு ரத்த களறியினை காட்டிவிட்டதா? அது போதாதா?, மொத்தமாக தமிழ் படங்களை தடுக்கவேண்டும் என்றும், மொத்தமாக‌ வேண்டாம் வன்முறை ஆபாச படங்களை மட்டும் தடுப்போம் என்றும் மாறி மாறி பேசுகின்றனர்

முன்பு போல நல்ல தமிழ்படங்கள் மட்டும் இனி திரையிடபடவேண்டும் என சொல்லிகொள்கிறார்கள்


நல்ல படங்கள் என்றால், அவரின் படங்களை விட்டால் என்ன இருக்கின்றது? யார் அவர் எம்ஜிஆர் தான்

இனி மலேசிய தியேட்டர்களில் எம்ஜிஆரின் பிண்ணணியில் கேசுதாசின் குரல் ஒலிக்கலாம்

"ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போன்றுவோம்"





இந்திய தலையெழுத்து எப்படி மாறிவிட்டது?

எல்லா சுதந்திரமுள்ள‌ நாடாக இது மலரவேண்டும் என்றார் காந்தி

பாகிஸ்தான் இல்லா இந்தியாவாக மலர்ந்தால் போதும் என்றார் ஜின்னா


பஞ்சமில்லா இந்தியா மலரவைக்க போகின்றேன் என்றார் நேரு

வலுவான இந்தியா என்றார் இந்திரா

அறிவியில் இந்தியா என்றார் ராஜிவ்,

மண்டல் கமிஷன் இந்தியா என்றார் விபி சிங்

ஒளிரும் இந்தியா என்றார் வாஜ்பாய்

வேலைவாய்ப்புள்ள இந்தியா என்றார் மன்மோகன்

அதன் பின் இந்துக்கள் இந்தியா என்றது பிஜேபி

இப்போது தலித் இந்தியா என்கின்றார்கள்












 கைபர் வழியாக வந்த பிராமணர்கள் உயர்சாதியில் இருந்தவர்களுடன் சம்பந்தம் வைத்துதான் இங்கு அரசியல் உச்சம் அடைந்தார்கள்

சொல்பவர்கள் திமுக பக்தர்கள், கலைஞரினை கொண்டாடுபவர்கள்

கலைஞர் கூடத்தான் எல்லா சாதிகளிலும் சம்பந்தம் வைத்திருக்கின்றார், அவர் வீட்டுக்குள்ளே சமத்துவபுரம் உண்டு என்பது மட்டும் மறந்துவிடும் போலும்.


அடேய் சிந்தித்துவிட்டு பேசுங்கள், ஆண்ட பரம்பரை என்பது எப்படி பிராமணனுக்கு பொருந்தும்?,

இந்தியாவில் ஒரு பார்ப்பண மன்னனை , அவன் ஆண்ட நாட்டை காட்ட முடியுமா? (புராண கதைகளை தவிர)

இவர்கள் போகிற போக்கினை பார்த்தால் ராஜராஜ சோழன் எங்கள் சாதி என இதுவரை சொல்லாத ஒரே ஜாதியான பிராமணனையும் விரைவில் அந்த கோதாவில் இறக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது












 இன்று தினமணி நாளேட்டினை வறுத்தெடுக்கின்றார்கள், அவர்கள் எழுதியது தவறாக இருக்கட்டும், அல்லது தவறான விதமாக எடுத்துகொள்ளபட்டதாக இருக்கட்டும், விட்டுவிடலாம்

ஆனால் முன்பு மெட்ராஸ் பட விமர்சனத்திற்கு மதனுடன் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் எப்படி பதிலளித்தார், அம்முகத்தில் ஒரு புன்னகையுமில்லை, மதனை நேருக்கு நேர் பார்க்ககூட அவர் விரும்பவில்லை, முகத்தை ஒரு மாதிரி வைத்துகொண்டு டக் கென்று மறித்து , மறுத்து அவர் பேசிய விதங்களும் சில வெறுப்பினை அப்பட்டமாக காட்டின‌

மதனின் சாதி தேவையில்லை, ஆனால் மனிதரின் அனுபவமும் அறிவும் சால சிறந்தது என்பதில் சற்றும் சந்தேகமில்லை, அவரின் பரந்த சகல உலகதுறை அனுபவ அறிவின் முன்னால் நிச்சயம் ரஞ்சித் கத்துகுட்டி.


அந்த மதனை ஒரு மாதிரி, பிடிக்காதவர் போல‌ ரஞ்சித் அந்த பேட்டியில் புறக்கணிக்க காரணம் என்ன? இருவருக்கும் தனிபட்ட பகை சாத்தியமே இல்லை

மதன் நெடுங்கால ஊடக வாசி, அவரின் சென்னை அனுபவமும், அவர் பார்க்கும் பரந்த பார்வையும் வேறுமாதிரியானது, கொண்டாடபடவேண்டிய ஒரு தமிழர் மதன், மாற்றுகருத்தே இல்லை,

பின்னர் ஏன் அப்படி? அன்று சில அபத்தமான ரஞ்சித்தின் கருத்துக்களை கடந்து சென்றது நிச்சயம் மதனின் பெருந்தன்மை

அதனை எல்லாம் பற்றி பேசமாட்டார்கள், தினமணி அய்யரை மட்டும் பொளந்து கட்டுவார்கள்.













பாகுபலி 2 எப்போது ரிலீஸ் என கிளம்பிவிட்டது ஒரு கூட்டம், அப்படித்தான் கிளம்புவார்கள், கட்டப்பா ஏன் பாகுபலியினை கொன்றான் என விடைகாண போகின்றார்களாம்

அப்படியே இந்த ரணகளத்திலும் மலேசிய போலிசிடம் சரண்டரான கபாலி ரஜினி, 2ம் பாகத்தில் வெளிவருவார் என நம்பிகொண்டிருக்கின்றார்கள் சிலர்

இதனை ரஜினியிடம் சொல்லி பார்த்தால் தலைதெறிக்க ஓடுவாரா மாட்டாரா?




"சினிமாக்காரர்கள் என்பவர்கள் வர்த்தக சூதாடிகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி, அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாத்தனப்படுத்தி, பொய்மையில் மூழ்கடித்தே சம்பாதிப்பவர்கள்

தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து, இந்தப் பண வேட்டைக்காரர்களுக்கு, கொஞ்சமும் உறுத்தல் இல்லை.

அப்படிப்பட்ட உள் உறுத்தல், அவர்களறியாமல், அவர்களுக்குள் ஏற்படும் போது தான், புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம் மற்றும் கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தைகளை, லாப வேட்டை கருதி, பொய்யாக பிதற்றி, அந்த கேவலத்திலேயே மக்களை சிந்திக்கவும் வைக்கின்றனர்,


இது மகா ஆபத்தானது " : ஜெயகாந்தன்

(இதில் இப்பொழுது பெண்ணடிமை, சாதி பிரச்சினை, அரசியல் என சில விஷயங்களை சேர்த்துகொள்ளலாம் )

முகநூலில் மல்லுகட்டி நிறபவர்களை கண்டால் ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது

வர்த்தக சூதாடிகள் இப்படி மக்களின் அடிப்படை உணர்வுகளில்தான் சம்பாதிக்கின்றார்கள்.

நிச்சயமாக ஜெயகாந்தன் ஒரு ஞானி.













இதோ 29 ராணுவ வீரர்களுடன் விமானம் காணாமல் போயிருக்கின்றது, தீவிரமாக தேடுகின்றார்கள். அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் பரிதவிக்கின்றனர்

செயற்கை கோளினால் தேடியும் பயனில்லை, 3 நாளாக தேடுகின்றார்கள், அச்சம் மேலோங்குகின்றது, சதி வேலையா? அல்லது ஏதும் காரணமா என தேசம் அஞ்சுகின்றது

ஆனால் இதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் கபாலி, ரஞ்சித் என பேசிகொண்டிருக்கின்றான் அல்லவா அவன் தான் தமிழன்,





நிச்சயம் தமிழன். இந்தியன் அல்ல, இவர்களுக்காக அந்தமான அருகில் ஒரு தீவில் தனி நாடு அமைத்து கொடுத்தே தீரவேண்டும்

அங்கு ராணுவம் கட்டுவானோ, சட்டமன்றம் கட்டுவானோ இல்லையோ நிச்சயம் தியேட்டர்கட்டி ரசிப்பான், ரசிக்கட்டும்









காஷ்மீர் இளைஞர்களை வன்முறையில் தூண்டி விடுகிறது பாகிஸ்தான்: மெஹபூபா குற்றச்சாட்டு

ம்ம்ம்மே..... 17 எனும் ஆட்டுமந்தை கூட்டமும், அங்கிள் சைமனின் அடிப்பொடிகளும் இதனை கவனிப்பது நல்லது

காரணம் சொல்வது காஷ்மீரிய மாநில முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், அவர் பாகிஸ்தானை சாடுகிறார் என்றால், இந்திய ராணுவத்தை ஆதரிக்கின்றார் என பொருள்,


அதாவது பாகிஸ்தானிய தலையீடு இல்லை என்றால் இந்திய ராணுவம் ஏன் நிற்கவேண்டும் என மறைமுக பொருள்.

உங்களுக்கு இதெல்லாம் புரியாது எனினும், இனியாவது புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்

தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து

உலகெல்லாம் தமிழருக்கு பெரும் அவமானம் நிலவுவது போலவும், உலகெல்லாம் அவன் அடிபட்டுகொண்டிருப்பது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றனர், உண்மையில் நிலை என்ன?

வெள்ளையன் காலத்தில் உலகெல்லாம் கொண்டுசெல்லபட்டனர் தமிழர், அதுவும் பெரும்பாலும் அடித்தட்டு தமிழர் கொஞ்சம் மேல்தட்டு + யாழ்பாண படித்த தமிழர்

வெள்ளையன் காலம் வரை சிக்கல் இல்லை, ஏன்? அன்று தேர்தல் இல்லை, அரசியல் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, வெள்ளையன் வைத்ததே நீதி, சட்டம் எல்லாம். அவனும் படிப்பிற்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தான், அவது அதிகார அரசியலுக்கும் அது அவசியம்.

அவனும் சில விஷயங்களில் விஷ வித்துக்களை விதைத்தே வைத்திருந்தான்.

சுதந்திரம் கொடுத்து அவன் மூட்டை கட்டிய பின்னரே, இம்மாதிரியான சிக்கல்கள் தொடங்கின, எதில் தொடங்கின? நிச்சயமாக தேர்தலில், அதுவும் வாக்கு அரசியலில்

காரணம் பெருவாரி மக்கள் வாக்கு இல்லாமல் ஒரு மக்களாட்சி அமைய முடியாது, வாக்கு முக்கியம் அதற்கு பெரும்பான்மை மக்களை பகைக்க முடியாது, அதனால் என்ன செய்தாகள்? மக்கள் தொகை அடிப்படையில் நலதிட்டங்களை பகிர்ந்தளித்தார்கள்

இலங்கையில் ஈழதமிழர் வெறும் 13%, மலேசியாவில் தமிழர் வெறும் 8% அப்படியானால் மற்ற இனத்தவர் எண்ணிக்கையினை நீங்களே கணித்துகொள்ளுங்கள், இப்போது பிரச்சினை எப்படி வரும்?

நூறு வேலைகளில் இலங்கையில் 13 வேலை ஈழமக்களுக்கு செல்லும், மலேசியாவில் 8 வேலை செல்லும் அப்படித்தானே? அப்பொழுதுதானே சிக்கல் வராது, 65% மலாய் மக்கள் எனின் அவர்களை அரசு சமாளிக்கவேண்டாமா? இருக்கும் வேலைகளை எல்லாம் இவர்களுக்கே கொடுத்துவிட்டு சும்மா இருக்குமா? பின்னர் எந்த பெரும்பான்மை இனம் வாக்களிக்கும்?

மலேசியாவில் சீன சமுகம் 20% மேல் உண்டு, 1% ஐரோப்பிய வம்சமும் உண்டு, அவர்கள் எல்லாம் உழைப்பில் வாழ்பவர்கள், ஒரு நாளும் ஒரு குரலும் அவர்கள் எழுப்பியதில்லை, வய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறிகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வளவிற்கும் சீன நாட்டின் சீனர்களின் தொப்புள்கொடி உறவோ, அந்த பிண்ணிபாதுகாப்போ அவர்களுக்கு இல்லை, உழைப்பு, அயராத உழைப்பு அவர்களை பாதுகாக்கின்றது.

இம்மாதிரியான மக்களாட்சியில் அப்படி உழைத்தும் வாழலாம், வீணாக அரசினை ஏன் எதிர்பார்த்துகொண்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் சிந்தாந்தம், இருக்கும் வாய்ப்புக்கள் அப்படி.

மக்களாட்சியில், வோட்டு அரசியல் ஏற்படும் சிக்கல்கள் இவைகளே தவிர தமிழனை திட்டமிட்டு ஏமாற்றும் செயல்கள் அல்ல, வெள்ளையன் ஆண்டுவிட்டு சென்ற எல்லா நாடுகளிலும் இருக்கும் சிக்கல், எல்லா பெருவாரி சிறுபான்மை இனங்களுக்கும் இருக்கும் சிக்கல்.

அமெரிக்காவில், தென்னாப்ரிக்காவில் இன்னும் உலகின் பலநாடுகளில் இது உண்டு.

ஒரே மொழிபேசும் நாடுகள் கூட இப்பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றன, மொழி ஒரு தேசத்தை ஒருங்கிணைக்கும் என்றால் சீனா, தைவான். வடகொரியா தென் கொரியா , சூடான் தென் சூடான் என ஏராளமான நாடுகள் ஒரே மொழி பேசி பிரிந்துகிடக்கும் நாடுகள் உண்டு, மொழி தேசியம் ஒருங்கிணைப்பினை உருவாக்கும் என்பதெல்லாம் மாயை

தெலுங்கான ஆந்திரா பிரியவில்லையா?

ஆக தமிழ்தான் பிரச்சினை, தமிழன் என்பவந்தான் அடிமை என்பதெல்லாம் வீண் சர்ச்சையும், இயலாமையினை அதன் மீது மறைத்துகொள்ளும் வேடமே அன்றி வேறல்ல.

இதே மலேசியாவின் நீதிபதிகளாக, பெரும் அரசு அதிகாரிகளாக தமிழர்கள் இல்லையா? அரசு கொள்கைகளுக்கு ஏற்ப தமிழருக்கு மக்கள் தொகை விகிதாச்சர அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கபட்டுகொண்டே இருக்கின்றது,

அது அல்லாது உழைத்து உருவான நம்பர் 1 பணக்காரன் தமிழன், ஏர் ஏசியா நிறுவணர் ஒரு மலையாளி இவர்கள் எல்லாம் இந்நாட்டில் சாதிக்கவில்லையா? தமிழன் என்றவுடன் விரட்டினார்களா?

கல்வியும், உழைப்பும் எல்லா இனத்தையும் வாழ வைக்கும்பொழுது தமிழனை மட்டும் கைவிட்டு விடுமா?

உச்சமாக வறுமையுற்ற இனத்தை முன்னேற்ற இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையா? எதற்காக? நாம் செய்யலாம், அந்த நாடுகள் செய்ய கூடாதா?

நாம் என்ன திறமை பார்த்தா மக்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றோம், இந்தியாவில் அதுவா நடக்கின்றது? கோட்டா முறை இல்லை என சொல்லுங்கள், மனசாட்சி இருந்தால் சொல்லுங்கள்

இந்தியா செய்தால் புரட்சி, அவர்கள் செய்தால் தமிழர் முடக்கமா? உரிமை பறிப்பா?

நமது தாழ்த்தபட்ட சாதிகளை போலவே அறியாமையிலும், ஏழ்மையிலும் இருந்தவை, இருப்பவவை அந்நாட்டு பெரும்பான்மை இனம். வறுமையும் போராட்டமும் அவர்களுக்கும் உண்டு, சிங்களனில் உண்டு, மலாய் இனத்தவரில் உண்டு.

வறுமை எல்லா இனங்களிலும் உண்டு, தமிழரிடம் மட்டுமில்லை. அவர்களிடமும் உண்டு.

ஆக சில சர்ச்சைகள் எல்லாம் வாக்கு வங்கி அரசியலால் வந்த சிக்கலே அன்றி, தமிழன் மட்டும் திட்டமிட்டு முடக்கபடுகின்றான், தமிழனுக்கொரு நாடில்லாமல் இதற்கு தீர்வில்லை என எவனாவது சொலவானால் அது சரியான தீர்வே அல்ல‌

அப்படி தமிழருக்காக தனிநாடு அமைந்தாலும் என்ன நடக்கும்? கொஞ்சநாளில் இதே இட ஒதுக்கீடு மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என கிளம்பிவிட மாட்டார்களா?

அப்பொழுது இதே போல தமிழர் எல்லா நாட்டிற்கும் ஓடி செல்லத்தான் செய்வார்கள், இவர்களால் அவர்களை வைத்து அரசியல் செய்யமுடியுமே தவிர காப்பாற்ற முடியுமா?

ஈழ அகதிகளும், போரில் வாழ்வினை தொலைது வறுமையில் அங்ககீனர்களாக வாழும் முன்னாள் போராளிகளுமே அதற்கு பெரும் சாட்சி.

அல்லது என்ன செய்வார்கள்? ஒரு உரிமையும் கொடுக்காமல் காட்டாட்சி நடத்தியதே பர்மீய ராணுவம், அப்படி ஆக்கி வைப்பார்கள். முன்பு ஈழத்தை புலிகள் அடக்கி வைத்ததை போல‌

இதுதான் இவர்கள் சொல்லும் தமிழ் தேசியம் எனும் பெயரில் கட்ட பஞ்சாயத்து.

இலங்கையின் முதல் குடிமகள் தமிழச்சி





இலங்கை அதிபர் மைத்ரி சிரிசேனாவின் மனைவி யாழ்பாண தமிழ்பெண். அதாவது இலங்கை தேசத்தின் முதல் குடிமகள் ஒரு தமிழச்சி, அதுவும் ஈழ தமிழ்பெண்

எங்கிருந்தாவது அவர் ஒரு தமிழின துரோகி, சிங்களவனை மணந்தவள் மானமிக்க தமிழச்சியாக இருக்கமுடியாது என சத்தம் வருகின்றதா? வராது.

அங்கிளின் பாய்ஸ், ம்ம்மேஏஏஏஏஏ ..  17 எனும் ஆட்டு மந்தை இயக்கம் போன்றவர்களுக்கெல்லாம் இன்னும் சரியாக தெரியாது போல (அவர்களுக்கு எதுதான் ஒழுங்காக தெரியும்), தெரியும் பட்சத்தில் இவர்கள் முழக்கம் எப்படி இருக்கும்?


Stanley Rajan's photo.

குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவது போல இருக், தமிழருக்கு தனி உரிமை கொடுக்கா மைத்ரிபாலாவிற்கு தமிழ்பெண் மட்டும் வேண்டுமா? நல்ல மானமுள்ள சிங்களன் என்றால்......  என பலவாறு முழ்ங்குவார்கள்.

மைத்ரிபாலாவின் மனைவி ஜெயந்தி கம்யூனிஸ் கோட்பாடில் ஈடுபாடு கொண்டவர், அதில் ஈர்க்கபட்ட மைத்ரிக்கும் அவருக்கும் காதல் மலர்ந்திருக்கின்றது, இருவருமே மார்க்ஸ்,லெனின், சே குவேரா போன்றோரை நேசிப்பவர்கள்

நமக்கு கவலை என்னவென்றால், அங்கிள் சைமன் மட்டும் 2005ல் இருந்தது போல மார்க்ஸ் பேரனாகவோ, சே வின் டிசர்ட் போட்ட தம்பியாகவோ இருந்திருந்தால் இந்நேரம் மைத்ரிபாலா தம்பதியரின் பாடி கார்டாக மாறி இருப்பார், ஆனால் என்ன செய்ய அதன் பின் பிரபாகரனின் தம்பியாக மாறி, அதனையும் துறந்து இன்று நம்மாழ்வாரின் தற்காலிக சீடராகிவிட்டார்.

ஆனாலும் மைத்ரி பெருந்தன்மையானவர், இந்நாளளவும் யாழ்பாண தமிழச்சியினை மணந்த தமிழன்நான் என எங்கும் வோட்டுக்காக ஒருவார்த்தை சொன்னதாக தெரியவில்லை, அங்கு நிற்கிறார் மனிதர்















Sunday, July 24, 2016

முடிஞ்சுடா‬.................

இனி கபாலி கதை பற்றி எழுத‌ வேண்டாம் என முடிவெடுத்தபொழுது, மலேசிய அமைச்சரின் அறிக்கை வானொலியில் வந்தது, அதாவது கபாலி எனும் சினிமாவினை சினிமாவாக மட்டுமே பார்க்கவேண்டும் என்றும், நிஜம் அதற்கு வெகு தூரம் என்றும், இதுமாதிரியான படங்கள் வந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் சொல்லி இருக்கின்றார்

பலஇன மக்கள் கலந்துவாழும் நாட்டில் இம்மாதிரியான படங்கள் தவறான சர்ச்சைகளை உருவாக்கிட கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

அமைச்சர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடதக்கது.


இது எம்மை பின்பற்றுபவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான், நாம் ஏற்கனவே சொன்னதுதான். நாட்டின் நற்பெயர் அவர்களுக்கு முக்கியம்

கொஞ்சம் ஆழசென்று நோக்கினால் ரஜினியின் இமேஜூக்கு பெரும் சோதனையான காலம், இப்படி அவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை என அதிருப்தியான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன‌

எப்படியோ ரஜினியின் மலேசிய அரசின் டத்தோ விருது கனவின் மீது பெரும் வெட்டரிவாளை வீசியிருக்கின்றது கபாலி, இனி அது கொஞ்சநாளைக்கு சாத்தியமில்லை.

எனக்கே கபாலி கதை சொல்லி போரடித்துவிட்டதால், இத்தோடு தலைமுழுகலாம்.

‪#‎முடிஞ்சுடா‬.................