Tuesday, July 5, 2016

அதுதான் கலைஞர்

உள்ளாட்சி மன்ற கலைப்பு ஆபத்தையும், சிறுபான்மையினரை பாதிக்கும் பொதுசிவில் சட்டத்தையும் தமிழகத்தில் ஒரு குரல் முதலில் கண்டிக்கின்றது என்றால் அது கலைஞர்தான்.

வேறு எந்த குரலும் எழும்பியதாக தெரியவில்லை, அப்படி உருப்படியான எதிர்ப்பு வரவும் வராது,

கலைஞர் இதில்தான் தனித்து நிற்கின்றார், எப்பொழுது எதனை எப்படி பேசவேண்டும் என்பதில் அவர் வித்தகர், அது தான் அனுபவம்.

என்னமோ கங்கை கரையில் சில சாமியார்கள் திருவள்ளுவர் சிலைக்கு தகராறு செய்கின்றார்களாம், பழைய கலைஞராக இருந்தால் எப்படி சீறுவார் தெரியுமா?

"வங்கத்தில் பிறந்த விவேகானந்தருக்கு இந்த தமிழகத்தில் குமரி முனையிலும், பாம்பனிலும் நினைவு மண்டபங்கள் இருக்கும்போதும், மகாத்மா காந்திக்கு தமிழினன் தலைநகரான மதுரை மூதூரிலே நினைவகம் இருக்கும்பொழுது, இந்த வரிசைக்கெல்லாம் மூத்த அய்யன் திருவளளுவருக்கு கங்கை கரையிலே சிலை வைக்க கூடாதா?, இதுதான் ஒருமைப்பாடா?

இந்தியாவின் அறிவுசெல்வம் என வெள்ளையன் சொன்னது சாணக்கியனின் அர்த்த சாஸ்திரமும், திருகுறளுமே என்பது வரலாறு. அந்த பெருமைக்குரிய திருகுறளை எழுதிய, இந்தியாவின் ஒப்பற்ற நூலை எழுதிய அந்த வள்ளுவனுக்கு கங்கை கரையிலே சிலை என்பதில் என்ன தடை இருக்கமுடியும்?

ஆனால் ஆரியர்களின் சூழ்ச்சியில் திராவிட நாட்டின் தலைமகனுக்கு அங்கோர் சிலை அமைப்பதை ஆரிய சூது ஒரு போதும் அனுமதிக்காது எனும் நிலை வருமானால் எப்படி போராடவேண்டும் என்பதனை பெரியார் எமக்கெல்லாம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்.............."
அரசியல் வரலாற்றில் அவர் தனித்து நிற்கிறார் என்றால் இப்படித்தான் , அதுதான் கலைஞர்

No comments:

Post a Comment