Friday, July 29, 2016

ரியோ 2016 ஒலிம்பிக்ஸ் ஆரம்பம்

FB_IMG_1469765034155

அடுத்த வாரம் தொடங்க உள்ளது ஒலிம்பிக் போட்டி, உலகமெல்லாம் கடும் பரபரப்பு, எல்லா நாட்டு அணிகளும் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிரமாக உள்ளன‌

அமெரிக்காவோ மீண்டும் முதலிடம் பிடிக்கும் வேட்கை, சீனாவிற்கு தக்க வைத்துகொள்ளும் வெறி, குட்டி நாடுகளான ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கு முதல் 10 இடங்களுக்குள் வந்தே விடவேண்டும் என்ற கடும் பதைபதைப்பு

ஜிம்னாஸ்டிக்கிலும், போல் வாட் போன்ற போட்டிகளின் பதக்கங்களை குத்தகைக்கு எடுத்திருக்கும் ரஷ்யாவிற்கு ஊக்க மருந்து தடை, மிக சில வீரர்களே பங்கு பெறலமாம், பொறுமிகொண்டிருக்கின்றார் புடின்

இப்படி உலகமே எதிர்நோக்கி இருக்க, இங்கு எவனும் தீபாவளி கொண்டாட்ட வருவானோ என எல்லா உளவு அமைப்புகளும் களமிறங்கவிட்டன,

வளரும் நாடான பிரேசில் இப்போட்டியினை சிறப்பாக‌ நடத்தி தன்னை உலகிற்கு நிரூபிக்க கடும் பிரயத்தனத்தில் உள்ளது, அதன் விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன‌

(நமக்கோ சென்னை விமான நிலையம் 66வது முறை நொறுங்கி இருக்கின்றது.)

இப்படி உலகமே பிரேசில் பக்கம் திரும்பி நிற்க, எல்லா நாட்டு மீடியாவும் அதில் குவிந்திருக்க, தமிழக மீடியாக்களின் தலைப்பு செய்தி என்ன தெரியுமா?

"விஜய் அமலா பால் ஏன் பிரிந்தார்கள்?" "விவாகரத்தின் காரணம் என்ன விளக்குகின்றார் விஜய்", என ஏக அழிச்சாட்டியங்கள், வாழ்க தமிழ் ஊடகம்

இனி போட்டி தொடங்கும், ஐரோப்பியர்களும் கிழக்காசியர்களும் பின்னி எடுப்பார்கள், நாம் வழக்கம் போல பார்த்துகொண்டே இருப்போம்.

முன்பே சிக்கல்தான், இப்பொழுது மாட்டுகறி உண்ண கூடாது என பல அழிச்சாட்டியம் செய்யும் இந்த தேசத்திலிருந்து எப்படி பலமான வீரர்கள் வருவார்கள்?

இந்திய துணைகண்டம் என்பது மிக சரியான வார்த்தை, உலகத்தில் ஒருபோதும் ஒட்டாத, அதனைபற்றி கவலைபடாத நாடு இது

இப்பொழுதும் பாருங்கள், சில நாட்டுபற்றாளர்களின் கவனம் பாகிஸ்தான் எத்தனை பதக்கம் எடுத்தது என்பதிலே தான் இருக்கும, அதனை தாண்டி யோசிக்க மாட்டார்கள். அவர்கள் கவலை அது.

No comments:

Post a Comment