Tuesday, July 26, 2016

கபாலி : ரஜினி படம் பெரும் வாய்ப்பு.. ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம்

ரஜினி எனும் பெரும் பிம்பம் மூலம் சொன்னால் வெளிநாட்டு தமிழரின் வலி தெரியும், சமூக அக்கறையினால் ரஞ்சித் அப்படி படம் எடுத்தார், அவர் தலித் போராளி, அவர் பெரும் புரட்சியாளர், ரஜினி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தும் வெளிநாட்டு மக்கள் வலியினை சொல்கிறார்,

ஆனால் நீ எப்படி அவரை விமர்சிக்கலாம்?, நீ பார்ப்பணன் சந்தேகமே இல்லை, சாதி வெறியன் என்றெல்லாம் சொல்கின்றார்கள்

ரஜினி படம் பெரும் வாய்ப்பு, ஒரே வாய்ப்பாக கூட இருக்கலாம், அதிலும் வெளிநாட்டு தமிழர் பிரச்சினையினை பேசவந்தது நல்லது

ஆனால் பேசவேண்டிய மகா முக்கியமான மலையக மக்கள் பிரச்சினை இருக்க, தமிழக அமைதியினை குலைத்துகொண்டிருக்கும் ஈழ பிரச்சினையின் மறைக்கடிக்கபட்ட அல்லது தலித் என்பதால் ஒதுக்கபட்ட மலையக மக்களை பற்றி பேசி இருக்கலாம் அல்லவா?

மொத்த தமிழகமும் இந்நேரம் கொண்டாடிகொண்டிருக்காதா? இப்படி எல்லாம் தமிழக தலித் வம்சம் இலங்கையில் அடக்கபட்டது என உண்மை தெரிந்திருக்காதா?

உண்மையில் கபாலி வசனங்கள் அம்மலையக தமிழருக்கு உரித்தானவவை, கோட் சூட் போன்ற சமாச்சாரங்கள் அவர்களுக்கும் ஈழ தமிழருக்கும் உரியவை, கடைசியில் சீனன் பேசும் பேச்சு கூட ஈழ சாயலே

ரஜினி மட்டும் மலையக மக்கள் தலித் பிரதிநிதியாக "சிங்களனும் எங்கள வாழ விடல, ஈழ தமிழனும் வாழ விடல, சொந்த தமிழ்நாடும் எங்களுக்காக குரல் எழுப்பல‌

வாழ்வும் விடாம, சாகவும் விடாம நாங்க ஏன் இந்தபாடு படணும், தலித்தா பொறந்து இலங்கை வந்தது தப்பாடா..நாங்களும் தமிழன்டா..எங்கள ஒதுக்கி வச்சிட்டு என்னடா ஈழம் தனிநாடுண்ணு எப்படிடா பேசுறீங்க.." என கேட்டிருந்தால் அது பெரும் மாற்றம் பேசும் படமாக அமைந்திருக்கும், கொண்டாட பட்டிருக்கும்

ஆனால் ஈழ தமிழரரிடமிருந்து கண்டனம் வரும், அது சாதி எதிர்ப்பு கண்டனமாக மட்டுமே இருக்கும், அந்த ஆண்ட பரம்பரை வசனங்கள் நிச்சயம் அவர்களுக்கே பொருந்தும்

நாய்கள் அடிபட்டால் கூட குரல் கேட்கும் தமிழகத்தில் அவர்களுக்கான குரல் கேட்காது, கேட்டால் யாழ்பாண ஆண்ட பரம்பரை குரல் அதனை அடக்கும், அதாவது அந்த முணகலை விட பெரும் குரல் எழுப்பும், அந்த ஒப்பாரியில் சிலர் இந்தியா, ஈழம், தமிழ, தொப்புள்கொடி என முழங்க அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே தெரியாது

ஆனால் இருக்கின்றது, பெரும் துயரம் அங்கே உறங்குகின்றது. கத்தி கத்தி ஓய்ந்துவிட்ட துயரம் அது, இனி வடிக்க கண்ணீர் இல்லா கண்கள் அவர்களது.

ஆக மலையக தமிழன் படமெடுத்தால் லாபம் இல்லை என்றேதான் மறைத்துவிட்டு பணமிருக்கும் மலேசிய தமிழன் பிரச்சினைபற்றி படமெடுத்திருக்கின்றார்.

இந்த வணிக நோக்கில் படம் வந்தபின் மலேசிய தமிழர் என்னை வாழ்த்துகின்றனர் என சிரிப்பு வேறு

பணம் இருக்கும் தமிழனின் பிரச்சினை உலகெல்லாம் தெரிய வேண்டும், பணமில்லா ஏழை மலையக தலித் தமிழனின் பிரச்சினை மலையிலே மடிய வேண்டும் என்பதுதான் தலித் கொள்கை போராட்டமா?

இதனைத்தான் நான் சொல்லவந்தேன், அவர் போராளி, தலித் எல்லாம் அல்ல‌

மாறாக அம்பேத்கர், சே குவேராவினை இடம் பார்த்து விற்க தெரிந்த ஒரு வியாபாரி, சரியாக குறி வைத்திருக்கின்றார், ஆனால் ஓவர் புரட்சியும் ஆர்வகோளாறும் பிசக வைத்துவிட்டன‌

உண்மையில் அம்பேத்ர், சே பற்றி பேசும் மனிதநேயமுள்ள கலைஞனாக இருப்பவனுக்கு மலையக தலித் தமிழர்தான் முன் வருவர்.

வாக்கு அரசியலுக்கு தமிழக தலித் மக்கள் நினைவுக்கு வருவது போல, ரஞ்சித்திற்கு படமெடுக்கவும் கருத்து புரட்சி பேசவும் மலேசிய எஸ்டேட் தொழிலாளர்கள் கிடைத்திருக்கின்றார்கள்,

பிடிக்க அம்பேத்கர் படம் கிடைத்திருக்கின்றது

குறுகிய பார்வையும், முதலாளித்துவ லாப வெறியுமே அவரிடம் ஓங்கி தெரிகின்றன‌

த‌லித் பிரச்சினை சிக்கலானது, நிச்ச்யமாக தமிழக கதைகளை எடுத்தால் சிக்கல் சரி, மலையக தமிழரை தொட்டாலுமா சிக்கல்?

அந்த வணிக நோக்கத்தில்தான் இவர் தலித் போராளி முகம் காட்டுகிறார் அன்றி வேற‌ல்ல

தமிழக தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, இந்திய தலித் பிரச்சினையும் சொல்லவில்லை, உண்மையில் அடக்க பட்டிருக்கும் மலையக தலித் தமிழரின் துயரமும் சொல்லபடவில்லை,

ஆனால் வியாபார வாய்ப்புள்ள மலேசிய கதை மட்டும் சொல்லபட்டிருக்கிறதென்றால் இதனை நீங்களாகவே புரிந்துகொள்ளவேண்டுமே தவிர சொல்லி அல்ல‌

உண்மையான தலித் மக்கள் போராளியாக, வெளிநாட்டு தமிழரின் துயரினை பதிவு செய்பவர் இப்படியா செய்வார்? செய்துவிட்டு ஏதோ பெரும் சாதனை செய்தது போல பேச்சு வேறு, உண்மையில் இவரின் பார்வை மகா குறுகியது.

அவ்வளவுதான், இனி நடப்பதை காலம் சொல்லும்.

அதனை விட்டுவிட்டு ரஞ்சித் உண்மையான தமிழிய தலித்திய போராளி என நீங்கள் நம்புவதும் ஒன்றுதான், திராவிட கட்சிகள் எல்லாம் பெரியாரிய கொள்கைகளை பின்பற்றுகின்றன என நம்புவதும் ஒன்றுதான்

எல்லாம் வியாபாரம், அம்பேத்கரையும் அதில் கொண்டு வந்துவிட்டார்கள் அவ்வளவுதான்.




Soman Raja : மலையக மக்கள்ன்னா யார் ப்ரோ?

அடடா, மலைக்கு மேல் உள்ள மக்கள் எல்லாம் மலையகத்தார் என சிலர் சொல்வார்கள் .

கேட்டுகொள்ளுங்கள், எனக்கு தெரிந்து இலங்கை மலையகம் எனும் மலைபகுதி தோட்ட தொழிலாளர்கள்.




 

No comments:

Post a Comment