Monday, July 25, 2016

சிதறல்கள்














அவ்வப்போது மலேசியாவில் வரும் சத்தம்தான், தமிழ் இளைஞர்களிடம் வன்முறை அதிகரிக்க தமிழ் படங்களை மலேசியாவில் அனுமதிப்பதுதான் காரணம் என்றொரு பேச்சு இருந்தது, கூடவே சின்னதிரை சீரியல் குடும்ப நேரத்தை சீரழிக்கின்றது என்ற முணுமுணுப்பும் இருந்தது

இந்த நிலையில் கபாலி வேறு வந்துவிட்டு ரத்த களறியினை காட்டிவிட்டதா? அது போதாதா?, மொத்தமாக தமிழ் படங்களை தடுக்கவேண்டும் என்றும், மொத்தமாக‌ வேண்டாம் வன்முறை ஆபாச படங்களை மட்டும் தடுப்போம் என்றும் மாறி மாறி பேசுகின்றனர்

முன்பு போல நல்ல தமிழ்படங்கள் மட்டும் இனி திரையிடபடவேண்டும் என சொல்லிகொள்கிறார்கள்


நல்ல படங்கள் என்றால், அவரின் படங்களை விட்டால் என்ன இருக்கின்றது? யார் அவர் எம்ஜிஆர் தான்

இனி மலேசிய தியேட்டர்களில் எம்ஜிஆரின் பிண்ணணியில் கேசுதாசின் குரல் ஒலிக்கலாம்

"ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவன் என்று போன்றுவோம்"





இந்திய தலையெழுத்து எப்படி மாறிவிட்டது?

எல்லா சுதந்திரமுள்ள‌ நாடாக இது மலரவேண்டும் என்றார் காந்தி

பாகிஸ்தான் இல்லா இந்தியாவாக மலர்ந்தால் போதும் என்றார் ஜின்னா


பஞ்சமில்லா இந்தியா மலரவைக்க போகின்றேன் என்றார் நேரு

வலுவான இந்தியா என்றார் இந்திரா

அறிவியில் இந்தியா என்றார் ராஜிவ்,

மண்டல் கமிஷன் இந்தியா என்றார் விபி சிங்

ஒளிரும் இந்தியா என்றார் வாஜ்பாய்

வேலைவாய்ப்புள்ள இந்தியா என்றார் மன்மோகன்

அதன் பின் இந்துக்கள் இந்தியா என்றது பிஜேபி

இப்போது தலித் இந்தியா என்கின்றார்கள்












 கைபர் வழியாக வந்த பிராமணர்கள் உயர்சாதியில் இருந்தவர்களுடன் சம்பந்தம் வைத்துதான் இங்கு அரசியல் உச்சம் அடைந்தார்கள்

சொல்பவர்கள் திமுக பக்தர்கள், கலைஞரினை கொண்டாடுபவர்கள்

கலைஞர் கூடத்தான் எல்லா சாதிகளிலும் சம்பந்தம் வைத்திருக்கின்றார், அவர் வீட்டுக்குள்ளே சமத்துவபுரம் உண்டு என்பது மட்டும் மறந்துவிடும் போலும்.


அடேய் சிந்தித்துவிட்டு பேசுங்கள், ஆண்ட பரம்பரை என்பது எப்படி பிராமணனுக்கு பொருந்தும்?,

இந்தியாவில் ஒரு பார்ப்பண மன்னனை , அவன் ஆண்ட நாட்டை காட்ட முடியுமா? (புராண கதைகளை தவிர)

இவர்கள் போகிற போக்கினை பார்த்தால் ராஜராஜ சோழன் எங்கள் சாதி என இதுவரை சொல்லாத ஒரே ஜாதியான பிராமணனையும் விரைவில் அந்த கோதாவில் இறக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது












 இன்று தினமணி நாளேட்டினை வறுத்தெடுக்கின்றார்கள், அவர்கள் எழுதியது தவறாக இருக்கட்டும், அல்லது தவறான விதமாக எடுத்துகொள்ளபட்டதாக இருக்கட்டும், விட்டுவிடலாம்

ஆனால் முன்பு மெட்ராஸ் பட விமர்சனத்திற்கு மதனுடன் ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் எப்படி பதிலளித்தார், அம்முகத்தில் ஒரு புன்னகையுமில்லை, மதனை நேருக்கு நேர் பார்க்ககூட அவர் விரும்பவில்லை, முகத்தை ஒரு மாதிரி வைத்துகொண்டு டக் கென்று மறித்து , மறுத்து அவர் பேசிய விதங்களும் சில வெறுப்பினை அப்பட்டமாக காட்டின‌

மதனின் சாதி தேவையில்லை, ஆனால் மனிதரின் அனுபவமும் அறிவும் சால சிறந்தது என்பதில் சற்றும் சந்தேகமில்லை, அவரின் பரந்த சகல உலகதுறை அனுபவ அறிவின் முன்னால் நிச்சயம் ரஞ்சித் கத்துகுட்டி.


அந்த மதனை ஒரு மாதிரி, பிடிக்காதவர் போல‌ ரஞ்சித் அந்த பேட்டியில் புறக்கணிக்க காரணம் என்ன? இருவருக்கும் தனிபட்ட பகை சாத்தியமே இல்லை

மதன் நெடுங்கால ஊடக வாசி, அவரின் சென்னை அனுபவமும், அவர் பார்க்கும் பரந்த பார்வையும் வேறுமாதிரியானது, கொண்டாடபடவேண்டிய ஒரு தமிழர் மதன், மாற்றுகருத்தே இல்லை,

பின்னர் ஏன் அப்படி? அன்று சில அபத்தமான ரஞ்சித்தின் கருத்துக்களை கடந்து சென்றது நிச்சயம் மதனின் பெருந்தன்மை

அதனை எல்லாம் பற்றி பேசமாட்டார்கள், தினமணி அய்யரை மட்டும் பொளந்து கட்டுவார்கள்.













பாகுபலி 2 எப்போது ரிலீஸ் என கிளம்பிவிட்டது ஒரு கூட்டம், அப்படித்தான் கிளம்புவார்கள், கட்டப்பா ஏன் பாகுபலியினை கொன்றான் என விடைகாண போகின்றார்களாம்

அப்படியே இந்த ரணகளத்திலும் மலேசிய போலிசிடம் சரண்டரான கபாலி ரஜினி, 2ம் பாகத்தில் வெளிவருவார் என நம்பிகொண்டிருக்கின்றார்கள் சிலர்

இதனை ரஜினியிடம் சொல்லி பார்த்தால் தலைதெறிக்க ஓடுவாரா மாட்டாரா?




"சினிமாக்காரர்கள் என்பவர்கள் வர்த்தக சூதாடிகள், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி, அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாத்தனப்படுத்தி, பொய்மையில் மூழ்கடித்தே சம்பாதிப்பவர்கள்

தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து, இந்தப் பண வேட்டைக்காரர்களுக்கு, கொஞ்சமும் உறுத்தல் இல்லை.

அப்படிப்பட்ட உள் உறுத்தல், அவர்களறியாமல், அவர்களுக்குள் ஏற்படும் போது தான், புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம் மற்றும் கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தைகளை, லாப வேட்டை கருதி, பொய்யாக பிதற்றி, அந்த கேவலத்திலேயே மக்களை சிந்திக்கவும் வைக்கின்றனர்,


இது மகா ஆபத்தானது " : ஜெயகாந்தன்

(இதில் இப்பொழுது பெண்ணடிமை, சாதி பிரச்சினை, அரசியல் என சில விஷயங்களை சேர்த்துகொள்ளலாம் )

முகநூலில் மல்லுகட்டி நிறபவர்களை கண்டால் ஜெயகாந்தனின் இந்த வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது

வர்த்தக சூதாடிகள் இப்படி மக்களின் அடிப்படை உணர்வுகளில்தான் சம்பாதிக்கின்றார்கள்.

நிச்சயமாக ஜெயகாந்தன் ஒரு ஞானி.













இதோ 29 ராணுவ வீரர்களுடன் விமானம் காணாமல் போயிருக்கின்றது, தீவிரமாக தேடுகின்றார்கள். அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் பரிதவிக்கின்றனர்

செயற்கை கோளினால் தேடியும் பயனில்லை, 3 நாளாக தேடுகின்றார்கள், அச்சம் மேலோங்குகின்றது, சதி வேலையா? அல்லது ஏதும் காரணமா என தேசம் அஞ்சுகின்றது

ஆனால் இதனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் கபாலி, ரஞ்சித் என பேசிகொண்டிருக்கின்றான் அல்லவா அவன் தான் தமிழன்,





நிச்சயம் தமிழன். இந்தியன் அல்ல, இவர்களுக்காக அந்தமான அருகில் ஒரு தீவில் தனி நாடு அமைத்து கொடுத்தே தீரவேண்டும்

அங்கு ராணுவம் கட்டுவானோ, சட்டமன்றம் கட்டுவானோ இல்லையோ நிச்சயம் தியேட்டர்கட்டி ரசிப்பான், ரசிக்கட்டும்









காஷ்மீர் இளைஞர்களை வன்முறையில் தூண்டி விடுகிறது பாகிஸ்தான்: மெஹபூபா குற்றச்சாட்டு

ம்ம்ம்மே..... 17 எனும் ஆட்டுமந்தை கூட்டமும், அங்கிள் சைமனின் அடிப்பொடிகளும் இதனை கவனிப்பது நல்லது

காரணம் சொல்வது காஷ்மீரிய மாநில முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், அவர் பாகிஸ்தானை சாடுகிறார் என்றால், இந்திய ராணுவத்தை ஆதரிக்கின்றார் என பொருள்,


அதாவது பாகிஸ்தானிய தலையீடு இல்லை என்றால் இந்திய ராணுவம் ஏன் நிற்கவேண்டும் என மறைமுக பொருள்.

உங்களுக்கு இதெல்லாம் புரியாது எனினும், இனியாவது புரிந்துகொள்ள முயற்சிசெய்யுங்கள்

No comments:

Post a Comment