Thursday, July 14, 2016

வரலாற்று கொடும் மத திரிபுகள்




அடிக்கடி ஒருவித வரலாற்று கொடும் திரிபுகள் வரும், இப்பக்கம் இயேசு இந்தியாவில் பிறந்தார் என்பார்கள், இயேசு புத்தமத விசுவாசி என்பார்கள், விடுவார்களா கிறிஸ்தவர்கள்? இந்தியாவே ஒருகாலத்தில் கிறிஸ்தவநாடு தெரியுமா? என போட்டு தாக்குவார்கள், எப்படி என கேட்டால் அலெக்ஸாண்டர் வந்தபொழுது அப்படித்தான் இருந்தது என்பார்கள்

அலெக்ஸாண்டர் காலத்தில் இயேசுவே பிறக்கவில்லை என்றால், நீ மட்டும் பிறந்தாயோ போடா என்பார்கள், மகா விசித்திரமானவர்கள்.

நெடும் காலமாகவே தாமஸ் என்ற இயேசுவின் சீடர் இந்தியா வந்தார் அல்லது வரவில்லை என சர்ர்சை உண்டு, எப்படியோ சென்னையில் அவர் கொல்லபட்டார், அவர் உடல் சாந்தோமில் உள்ளது என தற்போது ஒரு நம்பிக்கை

ஆனால் ஒரு நண்பர் திருவள்ளுவர்தான் அந்த தாமஸ் என்ற தொமையார் என அதிரடி காட்டுகின்றார், அய்ய்யோ கொடுமை, இன்னுமா இந்த பூமி சுற்றவேண்டும்???

இயேசுவிற்கு பின்னான காலத்தில் பரிசுத்த ஆவி இயேசுவின் சீடர்களை மேற்கு நோக்கித்தான் செல்ல பணித்தது என்பது பைபிள் வரி, இன்னொன்று தாமஸ் எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு, பல சர்சைகளும் அதிலுண்டு, அதனால் அதனையும் அதோடு அவரைபற்றிய தகவலையும் பைபிளிலிருந்து எடுத்துவிட்டார்கள்.

[caption id="" align="aligncenter" width="453"]Stanley Rajan's photo. திருவள்ளுவர்[/caption]

[caption id="" align="aligncenter" width="237"]Stanley Rajan's photo. புனித தோமைய்யர்[/caption]

இயேசுவின் காலத்திற்கு பின் அவர் எங்கு சென்றார் என பைபிள் ஒன்றும் சொல்வதுமில்லை, அவர் எந்த கடிதமும் யாருக்கும் அதாவது சபைக்கோ மற்ற சீடர்களுக்கோ எழுதியதாக தகவலுமில்லை.

இன்று நேற்று அல்ல, அரேபிய கேரள தொடர்புகள் நெடுங்கால தொன்மை வாய்ந்தவை, சாலமோன் அரசர் காலத்திலே அது பிரசித்தி பெற்றது, ரோமையர் ஆட்சியில் பாலஸ்தீன் பந்தாடபட்டபொழுது பெரும் யூதர்கள் கொச்சிக்கு வந்தார்கள் என்றால் எப்படிபட்ட தொடர்பு இருந்திருக்கவேண்டும்?

கேரள கொச்சிவாழ் யூதர்களுக்கும் பாலஸ்தீன யூதர்களுக்கும் போக்குவரத்தும் அன்றே இருந்தது, உண்மையில் என்ன நடந்திருக்கலாம்?,

முதலில் கிறிஸ்தவம் யூதர்களுக்குத்தான் போதிக்கபட்டது, அப்படி கொச்சி யூதர்களை தேடி வந்த தாமஸின் சீடர்கள் பரப்பிய கிறிஸ்தவம் தாமஸ் கிறிஸ்தவம் என அறியபட்டிருக்கலாம், காரணம் இன்றும் கேரளாவில் சிரியன் கிறிஸ்தவம் என பல பிரிவுகள் உண்டு, அதனால் இவர் சீடர்கள் அறிவித்த கிறிஸ்தவம் தாமஸ் கிறிஸ்தவம் என அறியபட்டிருக்கலாம்

இன்னொன்று தாமஸ் ஆப்கனில் பிரசிங்கித்ததாகவும், அவர் இறந்தபின் அவரின் சீடர்கள் அவர் எலும்பினை எடுத்துசென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

ஆக தாமஸ் இந்தியா வந்தாரா? என்பதே பெரும் சர்ச்சை, அவரின் சீடர் யாரும் வந்திருக்கலாம். இதில் அவர் திருவள்ளுவர் என்பது எப்படி பொருந்தும்?

"இந்திரனே சாலுங் கரி" "மாலடி சேர்ந்தார்" "எழுபிறப்பும் ஏமாப்புடைத்து" போன்ற திருக்குறள் வரிகள் சொல்வதென்ன? இன்னும் ஏராளமான இந்துமத அடையாளங்கள் அதில் உண்டு. சமண தாக்கமும் உண்டு எனினும் அது சொல்லும் போதனைகளில் அது இந்து மத நூலே.

பைபிளின் சீரக் ஆகமம், இன்னும் உலகின் பல ஞான நூல்களும், திருகுறளும் ஒரே வகையிலான ஞான ஓசைகளை ஒலிப்பதை கேட்கலாம், இவை எல்லாம் ஒரு பெரும் உயர்ந்த ஞான வெளிப்பாடே அன்றி வேறு அல்ல.

இப்படி திருவள்ளுவர்தான் தாமஸ் என்றால், வாசுகி யார்? தாமஸ் திருமணம் செய்தவரா? அட பதர்களா, வள்ளுவன் வரலாரே இன்னும் சரியாக தெரியாதே, அவன் தெற்கே கன்னியாகுமரி பக்கம் வசித்தவன் எனும் வாதம் வேறு உண்டே, இதில் அவன் எப்படி மயிலாப்பூர் வாசிஆனார், அவன் எப்படி தோமையார் ஆனார்?

தாமஸ் என்பவன் யார்? அங்கே பாலஸ்தீனத்தில் கடற்கரையில் மீன் பிடித்துகொண்டும், அவ்வப்போது ரோமையரை எதிர்த்து கலகம் செய்த ஒரு கலகக்காரன், யேசுவினை சந்தித்தபின் அவன் மாறினான்.

அவன் எப்படி பூனூல் சூடும் தமிழ் பிராமணாக மாற முடியும்?

அங்கிள் சைமனை போல பலர் கிளம்புவார்கள், முன்பு தேவகலா என்பவர் இப்படித்தான் இந்தியா தோமா வழி கிறிஸ்தவநாடு என ஒன்றை எழுதி வாங்கிகட்டினார், அது சாத்தியமே இல்லை என்பது தெளிவாகிவிட்டது

இடையில் மயிலாப்பூரில் கண்டெடுக்கபட்ட செப்பு கிறிஸ்தவ ஏடுகள் மிக தொன்மையானவை என பரபரப்பினை ஏற்படுத்தின, ஆனால் அது போலி என்றபொழுது மொத்த கிறிஸ்துவ துறவிகளும் மகா அமைதி ஆனார்கள்.

இது இவர்களாக கிளப்பிவிடும் அபத்தங்கள், கொஞ்சமேனும் யோசிக்காத தன்மையின் வெளிப்பாடுகள்

எப்பொழுதும் ஞானிகள் ஒரேபோல் யோசிப்பார்கள், இயேசு சொன்னார் "குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழமாட்டார்களா?" அதாவது நல்ல குரு இல்லாதவன் எப்படி நல்வழி அடையமுடியும் என்பதன் உவமை அது.

அதனை நம் திருமூலர் இப்படி சொன்னார்

”குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே"

பாடலின் அர்த்தம் புரிகின்றதா? இல்லாவிட்டால் தமிழ்படித்துவிட்டு வரலாம், புரியும்.

இயேசுவும், திருமூலரும் ஒரே உவமையினை கையாண்டிருக்கின்றார்கள், திருமூலரின் சிவபக்தி சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆனால் இந்த விளம்பர கிறிஸ்தவர்களிடம் இதனை சொல்லுங்கள், அப்படியா? ஒருவேளை திருமூலர் இயேசுவின் சீடர் அருளப்பராக இருக்கலாம் அல்லவா என கண்ணை சிமிட்டுவார்கள்.

கிறிஸ்தவம் வேறு பாதை, இந்துமதம் வேறுபாதை, திருகுறள் இந்துமதமும், சமண தாக்கமும் நிறைந்த ஒரு ஞான நூல்

அதனை விட்டுவிட்டு இந்தியா வராத தாமஸை திருவள்ளுவர் என் சொல்வீர்களாயின், கொஞ்சநாளில் வள்ளுவர் கோட்டமும், குமரி கடற்கரையும் "எழுப்புதல் கூட்டம்". "ஆவியில் அவிய வைத்தல் கூட்டம்" என பெரும் அழிச்சாட்டியத்தில் சிக்கும், பின்பு கடலுக்கு கூட பொறுக்காது ஜாக்கிரதை

நானும் கிறிஸ்தவன் தான், அதற்காக இம்மாதிரியான பெரும் பொய்களை அங்கீரித்துதான் நான் கிறிஸ்தவ "ஊழியம்" செய்யமுடியுமென்றால் நான் கிறிஸ்தவனாகவே இருக்கவே முடியாது, கிறிஸ்து யேசு அதனை விரும்புவதே இல்லை.

இந்த அட்டகாசங்களை ஒரு கிறிஸ்தவனாக கண்டிக்கின்றேன், பெருமகன் யேசு பாணியில் சொல்வதென்றால் "இப்படி எல்லாம் கிளப்பிவிடுபவர்களே உங்களுக்கு அய்யோ கேடு












No comments:

Post a Comment