Tuesday, July 5, 2016

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

அன்பான இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

வல்ல இறைவனின் அன்பும், அருளும் எல்லோர் மேலும் தொடர்ந்து பொழியட்டும்.

சகோதரத்துவமும், மனிதநேயமும் செழிக்கட்டும்




என்னதான் பூலோகத்திற்கு இறை அவதாரங்களும், மகான்களும் வந்து நல்வழிகளை பல வழிகளில் போதித்தாலும் இவ்வுலகம் கொஞ்சமும் திருந்தியபாடில்லை, திருந்தவும் திருந்தாது

பல வழிகளில், இறைவன் அவதாரங்களும், அவரின் அருள் பெற்றவர்களாலும் இவ்வுலகம் அடைந்திருக்கும் பெரும் நன்மைகளில் ஒன்று விடுமுறைகள்

அவ்வகையில் இயேசு, முகமது நபி, புத்தர், மகாவீரர் என சகலரும் வணங்கதக்கவர்கள், போதனைகளுக்காக கூடவே விடுமுறை பெற்றுகொடுத்தற்காக‌

ஆனாலும் கடவுள் மகா கொடுமைக்காரர், இன்னும் கூட அதிகம் அவதாரங்களை இவ்வுலகிற்கு அனுப்பியிருந்தால் இன்னும் எத்தனை விடுமுறை தினங்கள் கூட கிடைத்திருக்கும்

இரக்கமில்லாத கடவுள் என சில நேரங்களில் பலர் சொல்வதிலும் அர்த்தம் இருக்கின்றது.

வாழ்க மதங்கள், தொடர்க விடுமுறைகள்.

No comments:

Post a Comment