Thursday, July 28, 2016

கபாலியை ஏன் விமர்சித்தோம்?

கபாலியினை ஏன் விமர்சித்தோம் என்றால், ரஞ்சித் மீதுள்ள வன்மம் அல்ல, மாறாக அவர் மறைத்த விஷயங்கள் ஏராளம்

மலேசியா அற்புதமான நாடு, மூன்று இனங்களும் கலந்து வாழும் நாடு, வரலாற்றினை கவனியுங்கள் சிங்கப்பூர் தனிநாடாகும் போது ஒரு சொட்டு ரத்தம் சிந்தி இருக்கும்? உலகில் எங்காவது அப்படி பிரிவினை உண்டா?

அந்த பெரும் மனதிற்கு சொந்தக்காரர்கள் அவர்கள், அப்படி ஒரு மனம் எந்த இனத்திற்கு வரும்? சிங்கள்ன், யூதன், வெள்ளையன், ம்ம் ஹூம்.. யாருக்கும் வராது

இன்றும் இரு நாடுகளும் பகை அல்ல, ராணுவ குவிப்புகள் அல்ல, ஏவுகனைகள், அணுகுண்டுகள் இம்சைகள் இல்லை, எப்படி அமைதியாக வாழ்கின்றார்கள்

காரணம் பரந்த மனமும், விட்டுகொடுக்கும் பண்பும், உழைத்தால் வாழலாம் எனும் வாழ்க்கை தத்துவமும் அப்படி வாழ வைக்கின்றன. மலாய் மக்களின் பெரும் பரந்த மனம் அவர்களின் புன்னகை போலவே அழகானது, விசாலமானது

இட ஒதுக்கீடு முறை கொண்டுவந்தார்கள், காரணம் வறுமையும் அறியாமையும் அவர்களிலும் உண்டு , மக்களாட்சியில் பெரும்பான்மை இன ஆதரவு இல்லாமல் ஆட்சி சாத்தியமில்லை

அப்படி வந்ததில்தான் 7% மக்கள் தொகை கொண்ட இந்தியருக்கு குறிப்பிட விகிதமே கொடுக்க முடியும், அதிலும் பஞ்சாபியர், தெலுங்கர், மலையாளி என எல்லா இனமும் உண்டு ஆக தமிழர் என்பவர்கள் இவர்களோடு சேர்ந்த இந்தியரே

இதில் கல்வி கற்ற தமிழர் நல்ல பணிகளில் உண்டு, உழைத்து மேல் எழும்பிய தமிழர் உண்டு. சீன இனம் கேட்கவே வேண்டாம் அசாத்திய உழைப்பில் பிரமாண்டமாக எழும்பி இருக்கும் இனம அது.

இப்படி பல வாய்ப்புள்ள அழகிய தேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையினை படமாக்குவேன், அதிலும் பல உண்மைகளை மறைத்து தலித்தியம் பேசுவேன், மக்கள் புறக்கணிக்கபட்டதை போலத்தான் காட்டுவேன் என்றால் விமர்சனம் செய்யமாட்ட்டார்களா?

எல்லா விஷயத்தையும் காட்டிவிட்டல்லவா இன்னொரு முகத்தை காட்டவேண்டும்?

இந்நாட்டில் வரதட்சனை இல்லை, அரசு கல்வி கடனுக்கு ரெடி இன்னும் ஏராளமான வசதிகள் உண்டு, ஒரே விஷயம் பெற்றோற் பிள்ளைகளின் வாழ்வினை நிர்மானிக்க முடியாது

அதாவது அவர்களின் தலைவிதியினை அவர்களே முடிவுசெய்கின்றார்கள், இதுதான் யதார்த்தம்

இவ்வளவிற்கும் போதை பொருள் இருந்தால் கடும் தண்டனை என வைத்திருக்கும் நாடு இது, அந்நாடு அதில் கடுமையாக இருக்கின்றது

இதனை எல்லாம் எப்பக்கமாவது நீங்கள் அப்படத்தில் காண முடிந்ததா?

அம்பேத்கர் என்றால் யார் என இவர்களுக்கு தெரியுமா? அவ்வளவாக தெரியாது, ஆக கோட் வசனம், ஆண்ட பரம்பரை எல்லாம் வலிந்து திணிக்கபட்ட வசனங்களே

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் எல்லா விஷயங்களையும் தொட்டு செல்வார் மணிரத்னம், கொழும்பில் தமிழ் இலக்கிய கூட்டம் நடக்கும், அதாவது இப்படியும் சில தமிழர்கள் அமைதியாக வாழ்கின்றார்கள், ஆனால் வடக்கே ஒரு தமிழ் குழந்தையின் தாய் என்ன பாடுபடுகின்றாள்

அக்குழந்தை போராளிகளில் ஒன்றாய் வாழவேண்டிய பெண் சென்னையில் வளர்ந்ததால் எப்படி ஒப்பிட்டு பேசுகின்றாள் என்பதில் தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தில் மொத்த வலியும் புரியும். அகதி முகாம் ரணம் புரியும் இன்னும் என்னவெல்லாமோ புரியும்

ஆனால் ரஞ்சித் அப்படி பரந்து பார்க்காமல், மிக மிக குறுகிய வட்டத்தில் காட்டிய படம் அது. எல்லா விஷயங்களையும் காட்டிவிட்டு இப்பக்கம் வந்தால் எப்படி இருந்திருக்கும்?

சீனர், பஞ்சாபியர், வங்கத்தவர், மலையாளி, தெலுங்கள் என எத்தனை இனங்கள் உண்டு, அவர்கள் வாழவிலையா? அடிமைகள் நாங்கள் என ஓலமிட்டார்களா? கேட்டதுண்டா? இதனை எல்லாம் சொல்லி இருக்கவேண்டாமா?

ஆக தமிழன் மட்டும் அடிமையா என்ற வசனம் எல்லாம் வியாபாரம் அல்லவா?

அதனைத்தான் சொன்னேன், அதற்கு எனக்கு கிடைத்தது சாதி வெறியன், பிராமண அடிவருடி, தலித் வளர பிடிக்காதவன் இன்னும் ஏராளம்

கொடுமையாக சீன பெருஞ்சுவர் அளவிற்கு நீண்ட கடிதங்கள்

No comments:

Post a Comment