Monday, July 25, 2016

தமிழ் தேசியம் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து

உலகெல்லாம் தமிழருக்கு பெரும் அவமானம் நிலவுவது போலவும், உலகெல்லாம் அவன் அடிபட்டுகொண்டிருப்பது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றனர், உண்மையில் நிலை என்ன?

வெள்ளையன் காலத்தில் உலகெல்லாம் கொண்டுசெல்லபட்டனர் தமிழர், அதுவும் பெரும்பாலும் அடித்தட்டு தமிழர் கொஞ்சம் மேல்தட்டு + யாழ்பாண படித்த தமிழர்

வெள்ளையன் காலம் வரை சிக்கல் இல்லை, ஏன்? அன்று தேர்தல் இல்லை, அரசியல் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, வெள்ளையன் வைத்ததே நீதி, சட்டம் எல்லாம். அவனும் படிப்பிற்கும் திறமைக்கும் முக்கியத்துவம் கொடுத்தான், அவது அதிகார அரசியலுக்கும் அது அவசியம்.

அவனும் சில விஷயங்களில் விஷ வித்துக்களை விதைத்தே வைத்திருந்தான்.

சுதந்திரம் கொடுத்து அவன் மூட்டை கட்டிய பின்னரே, இம்மாதிரியான சிக்கல்கள் தொடங்கின, எதில் தொடங்கின? நிச்சயமாக தேர்தலில், அதுவும் வாக்கு அரசியலில்

காரணம் பெருவாரி மக்கள் வாக்கு இல்லாமல் ஒரு மக்களாட்சி அமைய முடியாது, வாக்கு முக்கியம் அதற்கு பெரும்பான்மை மக்களை பகைக்க முடியாது, அதனால் என்ன செய்தாகள்? மக்கள் தொகை அடிப்படையில் நலதிட்டங்களை பகிர்ந்தளித்தார்கள்

இலங்கையில் ஈழதமிழர் வெறும் 13%, மலேசியாவில் தமிழர் வெறும் 8% அப்படியானால் மற்ற இனத்தவர் எண்ணிக்கையினை நீங்களே கணித்துகொள்ளுங்கள், இப்போது பிரச்சினை எப்படி வரும்?

நூறு வேலைகளில் இலங்கையில் 13 வேலை ஈழமக்களுக்கு செல்லும், மலேசியாவில் 8 வேலை செல்லும் அப்படித்தானே? அப்பொழுதுதானே சிக்கல் வராது, 65% மலாய் மக்கள் எனின் அவர்களை அரசு சமாளிக்கவேண்டாமா? இருக்கும் வேலைகளை எல்லாம் இவர்களுக்கே கொடுத்துவிட்டு சும்மா இருக்குமா? பின்னர் எந்த பெரும்பான்மை இனம் வாக்களிக்கும்?

மலேசியாவில் சீன சமுகம் 20% மேல் உண்டு, 1% ஐரோப்பிய வம்சமும் உண்டு, அவர்கள் எல்லாம் உழைப்பில் வாழ்பவர்கள், ஒரு நாளும் ஒரு குரலும் அவர்கள் எழுப்பியதில்லை, வய்ப்புக்களை பயன்படுத்தி முன்னேறிகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வளவிற்கும் சீன நாட்டின் சீனர்களின் தொப்புள்கொடி உறவோ, அந்த பிண்ணிபாதுகாப்போ அவர்களுக்கு இல்லை, உழைப்பு, அயராத உழைப்பு அவர்களை பாதுகாக்கின்றது.

இம்மாதிரியான மக்களாட்சியில் அப்படி உழைத்தும் வாழலாம், வீணாக அரசினை ஏன் எதிர்பார்த்துகொண்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் சிந்தாந்தம், இருக்கும் வாய்ப்புக்கள் அப்படி.

மக்களாட்சியில், வோட்டு அரசியல் ஏற்படும் சிக்கல்கள் இவைகளே தவிர தமிழனை திட்டமிட்டு ஏமாற்றும் செயல்கள் அல்ல, வெள்ளையன் ஆண்டுவிட்டு சென்ற எல்லா நாடுகளிலும் இருக்கும் சிக்கல், எல்லா பெருவாரி சிறுபான்மை இனங்களுக்கும் இருக்கும் சிக்கல்.

அமெரிக்காவில், தென்னாப்ரிக்காவில் இன்னும் உலகின் பலநாடுகளில் இது உண்டு.

ஒரே மொழிபேசும் நாடுகள் கூட இப்பிரச்சினைகளால் பிரிந்து கிடக்கின்றன, மொழி ஒரு தேசத்தை ஒருங்கிணைக்கும் என்றால் சீனா, தைவான். வடகொரியா தென் கொரியா , சூடான் தென் சூடான் என ஏராளமான நாடுகள் ஒரே மொழி பேசி பிரிந்துகிடக்கும் நாடுகள் உண்டு, மொழி தேசியம் ஒருங்கிணைப்பினை உருவாக்கும் என்பதெல்லாம் மாயை

தெலுங்கான ஆந்திரா பிரியவில்லையா?

ஆக தமிழ்தான் பிரச்சினை, தமிழன் என்பவந்தான் அடிமை என்பதெல்லாம் வீண் சர்ச்சையும், இயலாமையினை அதன் மீது மறைத்துகொள்ளும் வேடமே அன்றி வேறல்ல.

இதே மலேசியாவின் நீதிபதிகளாக, பெரும் அரசு அதிகாரிகளாக தமிழர்கள் இல்லையா? அரசு கொள்கைகளுக்கு ஏற்ப தமிழருக்கு மக்கள் தொகை விகிதாச்சர அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கபட்டுகொண்டே இருக்கின்றது,

அது அல்லாது உழைத்து உருவான நம்பர் 1 பணக்காரன் தமிழன், ஏர் ஏசியா நிறுவணர் ஒரு மலையாளி இவர்கள் எல்லாம் இந்நாட்டில் சாதிக்கவில்லையா? தமிழன் என்றவுடன் விரட்டினார்களா?

கல்வியும், உழைப்பும் எல்லா இனத்தையும் வாழ வைக்கும்பொழுது தமிழனை மட்டும் கைவிட்டு விடுமா?

உச்சமாக வறுமையுற்ற இனத்தை முன்னேற்ற இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லையா? எதற்காக? நாம் செய்யலாம், அந்த நாடுகள் செய்ய கூடாதா?

நாம் என்ன திறமை பார்த்தா மக்களுக்கு வாய்ப்பு வழங்குகின்றோம், இந்தியாவில் அதுவா நடக்கின்றது? கோட்டா முறை இல்லை என சொல்லுங்கள், மனசாட்சி இருந்தால் சொல்லுங்கள்

இந்தியா செய்தால் புரட்சி, அவர்கள் செய்தால் தமிழர் முடக்கமா? உரிமை பறிப்பா?

நமது தாழ்த்தபட்ட சாதிகளை போலவே அறியாமையிலும், ஏழ்மையிலும் இருந்தவை, இருப்பவவை அந்நாட்டு பெரும்பான்மை இனம். வறுமையும் போராட்டமும் அவர்களுக்கும் உண்டு, சிங்களனில் உண்டு, மலாய் இனத்தவரில் உண்டு.

வறுமை எல்லா இனங்களிலும் உண்டு, தமிழரிடம் மட்டுமில்லை. அவர்களிடமும் உண்டு.

ஆக சில சர்ச்சைகள் எல்லாம் வாக்கு வங்கி அரசியலால் வந்த சிக்கலே அன்றி, தமிழன் மட்டும் திட்டமிட்டு முடக்கபடுகின்றான், தமிழனுக்கொரு நாடில்லாமல் இதற்கு தீர்வில்லை என எவனாவது சொலவானால் அது சரியான தீர்வே அல்ல‌

அப்படி தமிழருக்காக தனிநாடு அமைந்தாலும் என்ன நடக்கும்? கொஞ்சநாளில் இதே இட ஒதுக்கீடு மண்ணின் மைந்தருக்கு முன்னுரிமை என கிளம்பிவிட மாட்டார்களா?

அப்பொழுது இதே போல தமிழர் எல்லா நாட்டிற்கும் ஓடி செல்லத்தான் செய்வார்கள், இவர்களால் அவர்களை வைத்து அரசியல் செய்யமுடியுமே தவிர காப்பாற்ற முடியுமா?

ஈழ அகதிகளும், போரில் வாழ்வினை தொலைது வறுமையில் அங்ககீனர்களாக வாழும் முன்னாள் போராளிகளுமே அதற்கு பெரும் சாட்சி.

அல்லது என்ன செய்வார்கள்? ஒரு உரிமையும் கொடுக்காமல் காட்டாட்சி நடத்தியதே பர்மீய ராணுவம், அப்படி ஆக்கி வைப்பார்கள். முன்பு ஈழத்தை புலிகள் அடக்கி வைத்ததை போல‌

இதுதான் இவர்கள் சொல்லும் தமிழ் தேசியம் எனும் பெயரில் கட்ட பஞ்சாயத்து.

No comments:

Post a Comment