Tuesday, July 5, 2016

இந்திய பொது சிவில் சட்டம்

இந்திய நதிகளில் எல்லா மாநிலங்களுக்கும் சம உரிமை என சொல்லிவிட்டு, அப்படி ஒரு சட்டம் இயற்றிவிட்டு அதன் பின் சிவில் சட்டம் பற்றி பேசலாம்

ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியனை கொன்றாலும், கிறிஸ்தவன் கிறிஸ்தவனுக்கு பாதகம் செய்தாலும் இந்நாட்டில் இந்நாட்டு சட்டபடிதான் தண்டிக்கபட்டுகொண்டிருக்கின்றான்

அடிப்படை சட்டங்கள் எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன, மாறாக மத பழக்கவழக்கங்களுக்காக சில சட்டவிலக்குகள் உண்டு அது அவர்களின் நம்பிக்கை

பொதுசிவில் சட்டம் என்றால், அம்மணமாக திரிவது பெரும் குற்றம், அதோ அந்த கும்பமேளா ஞானிகளை சிறைபிடிப்பீர்கள? ஜைன மத துறவிகளை கைது செய்ய தயாரா?

சில குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருக்கும் இந்து அல்லது இஸ்லாமிய நண்பர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட உண்ணாவிரதம் என பிடித்து மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றுவீர்களா?

ஞானஸநானம் எடுக்கும் சிறுவன் நீரில் மூழ்கடிக்கபட்டால் அதனை கொலைமுயற்சி என்பீர்களா?

சீக்கியன் இடையில் கட்டியிருக்கும் அந்த கத்தியினை தடை செய்யமுடியுமா? கை வைத்தால் விடுவானா? இந்திரா உயிரே அப்படித்தான் போயிற்று

இப்பொழுது மத சுதந்திரங்களால் என்ன ஆயிற்று? என்ன கெடுதல் வந்தது? குற்றவாளி என்றால் இந்திய சட்டபடிதானே தண்டித்துகொண்டிருக்கின்றோம்?

முதலில் காஷ்மீரில் போய் பொது சிவில் சட்டம், சிறப்பு பிரிவு ரத்து என ஒரு வார்த்தை பேசமுடியும்?

யூனியன் பிரதேசம் கலைக்கபடுகின்றது எல்லாம் இனி சமம் என சொல்லிவிடமுடியும்?

மும்பையில் இது இந்தியா, எவண்டா அது மராட்டியம் மராட்டியருக்கே என சொல்வது என கேட்டுவிடமுடியும்?

காவேரியில் சரிபங்கு தண்ணீரை கொடு என சொல்லமுடியாத மத்திய அரசுதான் பொதுசிவில் சட்டம்பற்றி வாய்கிழிய பேசுமாம், எங்கே அணைகள் அனைத்தும் பொது முல்லை பெரியாறு நாட்டின் சொத்து, கேரள அரசுக்கு உரிமை இல்லை என சொல்லட்டும்

எதற்கு பொதுவான சட்டம் வேண்டுமோ அதனை செய்யமாட்டார்களாம், எது பெரும் சர்ச்சையாகுமோ அதனை மட்டும் உடனே செய்வார்களாம்.

தூங்கும் பிரச்சினைகள் தூங்கட்டும்

இந்நாடு செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ உண்டு அதனை விட்டுவிட்டு மதம், மண்ணாங்கட்டி என நோண்டிகொண்டே இருப்பீர்களானால் இத்தேசம் விரைவில் ஆப்ரிக்காவினை தாண்டி பின்னோக்கி சென்று சமஸ்கிருதம் பேசி யோகா செய்துகொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment