Tuesday, July 5, 2016

ரம்லான் நோன்பு பெருநாள்

இது இஸ்லாமிய மக்களுக்கு மகா புனிதமான ரமலான் மாதம், நாளை அம்மக்கள் உலகெல்லாம் நோன்புபெருநாள் கொண்டாடபோகின்றார்கள், அவர்களின் மிகபெரும் கொண்டாட்டம் அது.

FB_IMG_1467790452171

ஆனால் துருக்கி, இராக், வங்கதேசம் நேற்று சவுதி என கிட்டதட்ட 250க்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் கொல்லபட்டிருக்கின்றார்கள், இந்த தேசங்கள் இஸ்லாமிய தேசங்கள்,

கொன்ற தீவிரவாதிகள் இஸ்லாமிற்காக போராடுபவர்கள் என சொல்லிகொள்பவர்கள், வங்கதேசத்தில் இறந்த ஜப்பானியர்களையும், இந்தியர்களையும் தவிர எல்லோருமே இஸ்லாமியர்கள்.

மிக புனிதமான இஸ்லாம் மதத்தினராக நிச்சயம் அந்த தீவிரவாதிகள் இருக்கவே முடியாது, எதற்காக சொந்த சகோதர மக்களை கொல்லவேண்டும்?, எதிரிகள் என அறியபட்டோர் மிக பாதுகாப்பாக இருக்கும்பொழுது சொந்த மக்களை கொல்வது போராட்டம் ஆகாது.

மக்களை நல்வழிபடுத்தும் மதங்களை தீவிரவாதம் மூலம் வளர்க்கவோ அல்லது காப்பதாகவோ நினைத்தால் அது மதமே அல்ல, வெறும் வன்முறை

நிச்சயம் கடவுள் இம்மாதிரி காரியங்களை அறவே விரும்புவதுமில்லை

மதீனாவில், இவ்வுலகிற்கு இறைவனின் பெரும் செய்திகளை எடுத்துசொன்ன நபிபெருமானின் நினைவகம் அருகே நடத்தபட்ட தாக்குதல்கடும் கண்டனத்திற்குரியது.

மனிதர்களை நல்வழிபடுத்தவே மதங்கள் வந்ததே தவிர, மதத்திற்காக மனிதர்கள் வரவே இல்லை, இந்த ஆனந்தமான உலகில் வாழ்வினை வாழ வந்தது இம்மானிடம், அதில் மதத்தின் பெயரால் மனிதனை கொல்ல யாருக்கு உரிமை?

வல்ல இறைவன் இப்புனிதமான மாதத்தில் மதத்தின் பெயரால் கொல்லபட்டவர்களுக்கு ஆன்ம இளைப்பாற்றி அருளட்டும், அக்குடும்பத்தாருக்கும் நல்வழி காட்டட்டும்

வேறு என்ன நாம் செய்யமுடியும்? இவ்வுலகினை அழகுற படைத்து , அதில் கொஞ்சகாலம் வாழ எல்லா மக்களுக்கும் வாய்ப்பளித்து வரும் இறைவனுக்கே அம்மக்களை பாதுகாக்கும் பொறுப்பும் உண்டும்

No comments:

Post a Comment