Tuesday, July 5, 2016

சென்னைக்கு சோதனை காலம்

சென்னையில் வழிப்பறி கொள்ளையனிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது இளம்பெண் பலி, கொள்ளையன் தாக்கி முதியவர் பலி

1 வாரம் முன்புதான் கொள்ளைபணம் பங்கிடும் தகராறில் ரவுடிகள் சொந்த தகராறில் சாலையில் சென்ற பொதுமக்கள் 10 பேரை வெட்டினர் என்பது குறிப்பிடதக்கது

மொத்தத்தில் சென்னைக்கு சோதனையான காலம்,

# போலிசாரும் என்ன செய்வார்கள்? கொள்ளையன் மோட்டார் சைக்கிளில் தப்பும்பொழுது காவல்துறையினர் புதிதாக வழங்கபட்ட மிதிவண்டியில் எப்படி அவர்களை பிடித்து மிதிப்பது?? நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு இன்னோவா கார், ஆனால் காவலருக்கு மிதிவண்டி :)

# ஒரு கொள்ளையன் பிடிபட்டிருக்கானாம், நாளை அவன் இடியாப்பம் சாப்பிட்டான், வடகறியோடு இட்லி சாப்பிட்டான், இளநீர் குடித்தான், உடற்பயிற்சி செய்தான் என ஊடகம் ஒப்பாரி இடும், அவனை பற்றிய தகவல் வந்தவுடன் சிலரால் அவன் சாதி கண்டறியபட்டு அவனுக்கு ஆதரவாய் சில குரல்கள் வரும், இப்படியாக‌

# "அவன் செயினை அறுக்கும் நோக்கத்தில் கை வைக்கவில்லை, அவள் கழுத்தில் இருந்த கடிக்கும் எறும்பினைத்தான் தட்டிவிட்டான், ஆனால் இந்த சமூகம் எங்கள் சாதி என்பதால் எங்களை கொள்ளையன் ஆக்குகின்றது, அந்த எறும்புதான் குற்றவாளியே அன்றி எம் சாதிக்காரன் அல்ல.."

# கடும் தண்டனைகள் அன்றி ஏதும் இனி குற்றங்களை குறைக்கபோவதில்லை, காவல்துறை கரங்களை கொஞ்சம் சுதந்திரமாக்குவதே இனி தமிழகம் அமைதிபூங்காவாக மாற அவசர நடவடிக்கை

அவர்கள் கரங்கள் இலகுவானால், ஒரு மணிநேரத்தில் தமிழகத்தை அமைதிபூங்காவாக மாற்றும் திறன் அவர்களுக்கு உண்டு.

No comments:

Post a Comment