Friday, July 29, 2016

பெண் உரிமை

சவுதியில் பெண் உரிமை எப்படி உள்ளது என சொல்லி தெரியவேண்டியதில்லை, கார் வோட்டவோ தனிமையில் நடக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை,

அந்நாட்டு பெண்கள் குரலெழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்

தாலிபான்கள் மலைலாவினை கல்விக்காக கொல்லமுயன்றது உலகறிந்தது, இன்றோ அவர் பெரும் உதாரணமாக வளர்ந்து நிற்கின்றாள்.

இதோ ஈரானில் பெண்களுக்கு கட்டாய பர்தா அணியவைக்க கூடாது என ஆண்களும் போராடுகின்றனர், ஆண்கள் பர்தா அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

எங்களுக்கு கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும் என ஆப்கானிய பெண்கள் கல்விசாலையில் குவிகின்றார்கள்

இந்து மதத்திலும் பெண்ணடிமை தனம் உண்டு, அடக்குமுறை உண்டு

அவற்றை எல்லாம் மதங்களை கடந்து கண்டித்து போராடிய , பெண் உரிமையும், பெண் கல்வியும் வேண்டுமென்று சொன்ன பெரியாரின் சிலையினை, ஷிர்க் ஒழிப்பு என்று சிலர் உடைத்து அவமானபடுத்தியிருக்கின்றார்களாம்

அன்பர்களே

மதங்களை விட மனிதநேயம் எவ்வளவு உயர்ந்தது, பெண்விடுதலை உயர்ந்தது என அவர்கள் உணர்ந்து அரேபியர்கள், ஆப்கானியர்கள் மாறி கொண்டிருக்கின்றார்கள்.

இங்கோ நிலை கற்காலம் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது

இனி ஒரு காலத்தில் பெரியார் ஈரான், ஆப்கானிய எல்லையில் கொண்டாடபடலாம், அவரின் முக்கியத்துவம் அந்நாடுகளில் தெரியலாம்

இங்கோ ஷிர்க் என சொல்லி பெரியாரின் சிலையினை உடைத்து கொண்டே இருங்கள், அதனை மட்டும்தான் உங்களால் செய்யமுடியும்,

மாறாக பெரியாரின் கொள்கைகளை அல்ல ,

மத அடக்குமுறை உள்ள எல்லா இடங்களிலும் அவர் கொள்கை என்றும் தேவைபடும், வரும் காலத்தில் உங்கள் சந்ததிகளே உணரலாம், அவர் ஒருபோதும் தோற்பதில்லை.

பெரியாரின் சிலை ஷிர்க் ஒழிப்பு என அவமானபடுத்தபட்டது என‌ அங்கே போராடும் ஈரானிய இஸ்லாமியருக்கு , மலைலாவிற்கு தெரிந்தால் ஓடிவந்து அந்த சிலையினை கண்ணீரால் கழுவி சுத்தபடுத்துவார்கள்.

பெரியாரின் மதிப்புமதிப்பும், அவர் கொள்கைகளின் தேவையும் அந்த கண்ணியமிக்க‌ இஸ்லாமியருக்கு நன்றாகவே விளங்கி இருக்கின்றது.

No comments:

Post a Comment