Thursday, July 14, 2016

யாருக்கும் நியாயமில்லை, காவிரியில் நீருமில்லை..





ஆனி மாதம் முடிந்து ஆடி தொடங்கபோகின்றது, இன்னும் மேட்டூர் அணை திறந்த செய்திவரவில்லை. கொஞ்ச வருடங்களாகவே அணை திறக்கபடவுமில்லை சத்தமுமில்லை.

அந்த வழக்கு அங்கே மாற்றபட்டபின் எல்லாம் அமைதி, எவனோ ஒருவர் காவேரியினை வைத்துகொள், அம்மாவினை விடுதலை செய் என வேலூர் பக்கம் பேனர் வைத்த காமெடி எல்லாம் நடந்தது, முதல் தமிழின துரோகி அவர்தான்.

இதே கலைஞர் அரசு என்றால் எல்லா விவசாய சங்கங்களும் கொடிபிடிக்கும், எதிர்கட்சிகள் எல்லாம் விசிலடிக்கும், வைகோ, ராமதாஸ், திருமா எல்லாம் காவேரி கரையில் நெல் பயிரிட்டிருக்கும் விவசாயிகளாக கதறிதுடிப்பார்கள்.


சீமானோ என் பாட்டன அருள்மொழிதேவன் காலத்தில்...என கதறி துடிப்பார்.

ஜெயலலிதா என் ஆட்சியின் நான் எடுத்த நடவடிக்கைகள் என பட்டியலிடுவார்

இவர்கள் இங்கு குதிக்க, அப்பக்கம் கன்னட சீமான் வாட்டாள் நாகராஜ் காவேரி அணைகளை சுற்றி குச்சிபுடி நடனமாடுவார், ஏக அழிச்சாட்டியம் நடக்கும். இன்றோ சத்தமில்லை

இந்த ஆனி,ஆடி மாதத்தில் காவேரி வறண்டு கிடக்க கூடாது, அப்படி கிடந்தாலும் இந்த அமைதி கூடாது.

ஆச்சரியமாக விவசாய சங்கங்களும் மகா அமைதி, முல்லை பெரியாற்று வழக்கின் வெற்றிக்கு அவைகள் பெரும் விவசாயிகளான அமைச்சர் பெருமக்களை வைத்து நடந்த்திய வெற்றிவிழாவிலிருந்து அவைகள் இன்னும் வெளிவரவில்லை

ஆக கட்சிகள் மட்டுமல்ல, பல சங்கங்கள், விவசாய அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், சூழியல் அமைப்புக்கள் எல்லாம் கூட அம்மா ஆட்சியில் ஒருவித அரசியலும், கலைஞர் ஆட்சியில் ஒருவித அரசியலும்தான் செய்கின்றன‌

யாருக்கும் நியாயமில்லை காவிரியில் நீருமில்லை..

எமது பயமெல்லாம் இனி காவேரி நீரும் தமிழக அஞ்சலகங்களில் கிடைக்கும் என்ற அறிவிப்பு வந்துவிட கூடாது என்பதுதான்,

வந்துகொண்டிருக்கும் அறிவிப்புகளை கண்டால் பயம் இன்னும் கூடுகின்றது







No comments:

Post a Comment