Wednesday, July 20, 2016

காந்தியினை கொன்றது யார் என உலகிற்கு தெரியாதா?

காந்தியினை கொன்றது யார் என உலகிற்கு தெரியாதா? பலர் விசாரிக்கபட்டும் எத்தனையோ ஆர் எஸ் எஸ் இயக்கத்தார் ரகசியமாக விசாரிக்கபட்டபின் அந்த இயக்கம் அன்று தடை செய்யபடவில்லையா?

இதனை சொன்னால் ராகுல்காந்தி என்ன தேச துரோகியா?

காந்தியினை கொன்றவன் வாக்குமூலம் வேண்டுமென்றால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை காப்பாறுவதாக இருக்கலாம், சாவர்க்கரை தப்ப வைப்பதாக இருக்கலாம், ஆனால் சாவர்க்கர் கோட்சே இடையே தொடர்பு இல்லை என சொல்லமுடியாது


சரி இதனை விட்டாலும், பாபர் மசூதி போன்ற இடிப்புகளுக்கு காரணம் யார் என்றுமா மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியாது?

காந்தி கொலை முயற்சி வெற்றிபெற்றது என்றால், காமராஜரின் மீதான கொலை முயற்சி தோல்வியில்மு டிந்ததும் கவனிக்கபடவேண்டியது

காந்தியும், காமராஜரும் இந்தியா மதசார்பற்ற நாடு என்பதில் உறுதியாக இருந்தவர்கள். ஆனால் அவர்களோ அப்பக்கம் பாகிஸ்தான் எனில் இப்பக்கம் இந்துஸ்தான் என்பதிலேதான் முழுகவனம் பெற்றிருந்தார்கள்,

இன்று ராகுலை சிக்கவைத்து விட்டால் காங்கிரஸ் அழிந்துவிடுமா? இல்லை ஆர் எஸ் எஸ் என்பது செஞ்சிலுவை சங்கம் என்றாகிவிடுமா?

நாட்டில் இருக்கும் சிக்கல் என்ன? பணவீக்கம் என்ன? பருவமழை பொய்த்துகொண்டிருக்கும் நேரத்தில் அடுத்த நடவடிக்கை என்ன? வியட்நாம் அருகே சீனா செய்யும் அழிச்சாட்டியத்தில் இந்திய நிலை என்ன?

காஷ்மீரில் அமைதி திரும்ப என்ன வழி?

இப்படி ஆயிரம் பிரச்சினை இருக்க ஆர் எஸ் எஸ் கொள்கை எல்லாம் காங்கிரசினை முடக்குவதிலே இருக்கின்றது, ஆனால் அதிலெல்லாம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கொடூர முகங்கள்தான் கிழிக்கபடுமே ஒழிய காங்கிரசுக்கு நஷ்டமில்லை

மறந்துபோன விஷயங்களை கிளறி தங்கள் முகத்திலே கரிபூசுகின்றார்கள்.

காந்தியில் தொடங்கிவிட்டார்கள் அல்லவா, இனி ஒவ்வொன்றாக வந்து தங்கள் உண்மை முகத்தை தானே காட்டிகொள்வார்கள்

பல இனங்கள் வாழும் இந்நாட்டில் மத ஒருமைபாடும், பன்முக விட்டுகொடுத்தலுமே அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமேயன்றி, மதம் பின்னால் செல்லுமாயின்

அடுத்த ஆபகனாகவே இந்தியா மாறும் அபாயம் உண்டு.

No comments:

Post a Comment