Monday, July 18, 2016

இவ்வளவுதான் காஷ்மீரிய அறிவா?



அங்கிள் சைமன் சத்தமிட்டுவிட்டு பிரியாணி சாப்பிட சென்றுவிட்டார், இந்த பங்குனி 17 எனும் கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

அதாவது காஷ்மீர் மக்களை இந்தியா கொல்கிறதாம், தமிழராகிய இவர்கள் அவர்களுக்கு துணை நிற்கின்றார்களாம். இவர்கள் சொல்வதை கேட்டு இந்திய ராணுவம் காஷ்மீரை விட்டு ஓடிவிடவேண்டுமாம். காஷ்மீரை சுதந்திரமாக விடவேண்டுமாம், அது போராட்டமாம்.

அட பதர்களா, இவ்வளவுதான் காஷ்மீரிய அறிவா?

அது மூன்று நாடுகளால் பகிரபட்டுள்ளது, ஒரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது, ஒரு பக்கம் சீனா, ஒரு பக்கம் இந்தியா.

உங்கள் வாதப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என்றாலே, காஷ்மீரை விட்டு பாகிஸ்தானும், சீனாவும், இந்தியாவும் வெளியேறிய பின்னர் தான் நடத்தமுடியும், பாகிஸ்தான் வெளியேறுமா? வாக்கெடுப்பிற்கு சம்பதிக்குமா?

உள்நாட்டில் வாக்கெடுப்பு வைத்தாலே இஸ்லாபாத் கூட மிஞ்சாது, அவர்கள் ஆட்சி அப்படி. சீனாவிற்கு தேர்தலே தெரியாது. அதன் அதிகார பீடம் அப்படி.

13770309_10206783612124010_6669107745104352184_n

ஆக உங்கள் கண்ணிற்கு தெரிவதெல்லாம் போராடும் உரிமை கொடுத்து, வாக்குரிமை கொடுத்து ஜனநாயக முறையில் தன் மாநிலமாக காஷ்மீரை ஆளும் இந்தியாதான் தெரியுமே அன்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோ, சீன காஷ்மீரோ தெரியாது

குறைந்தபட்சம் காஷ்மீர் மக்கள் வீதிக்கு வரலாம், போராடலாம், கல் எறியலாம், ராணுவத்தை விலக்கு என கோரிக்கை வைக்கலாம், அதாவது தீவிரவாதியினை கொன்றால் கூட அவர்களால் குரலெழுப்ப முடிகிறது, அவ்வுரிமை இந்தியா கொடுத்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மாநில அரசு உள்ளது, முதல்வர் உள்ளார், சட்டம் ஒழுங்கு எல்லாம் உள்ளது. எல்லையோரம் என்பதால் சில பாதுகாப்பு நடவடிக்கை உச்சமாக இருக்கும் அவ்வளவுதான்.

இப்படி ஜனநாயகம் பேசும் இந்திய காஷ்மீரை பார்க்கும் நீங்கள், மக்கள் குரல்வளையினை பிடித்துவைத்திருக்கும் ஆசாத் காஷ்மீர் பற்றி, சீன காஷ்மீர் மக்கள்பற்றி துளியும் யோசிப்பீர்களா?

நல்லவர்கள் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை கண்டித்துவிட்டு, அவர்களை
வெளியேற சொல்ல்விட்டல்லவா இந்திய காஷ்மீர் பற்றி கவலைபடவேண்டும்?

காஷ்மீரில் 3ல் ஒரு பங்கு மக்கள் விடுதலை பெறவேண்டும், மீதி 2 பங்கு மக்களும் எக்கேடும் கெட்டுபோகட்டும் என்பதுதான் உங்கள் காஷ்மீரிய பாசமா?

தயவு செய்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அறிக்கை ஏதும் விட்டு தொலைத்துவிடாதீர்கள். தகறாறு நடக்கும் காசவினை தனிநாடு என சொல்லிவிட்டு மேற்கு கரையினை மறந்துவிடுவீர்கள், உங்கள் விலாசமான அறிவு அப்படி

இதனை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் தீவிரவாதிகள் சொல்லமாட்டார்கள், காரணம் காஷ்மீர் தனிநாடு என்பதனை பாகிஸ்தானே ஒப்புகொள்ளாது, விடாது .

அப்படி நினைத்திருந்தால் ஆசாத் காஷ்மீரை என்றோ தனிநாடாக அறிவித்து இந்தியாவிற்கு சிக்கல் கொடுக்கும்.

உண்மையான காஷ்மீரிய போராளிகளுக்கு அது தெரியும், அதனால் அமைதி காப்பார்கள். பாகிஸ்தான் இருக்கும் காலம் வரை காஷ்மீரிய விடுதலை சாத்தியமில்லை.

அதனால் அங்கு போராட வருவதில் பெரும்பாலானோர் ஆபாகானிய கூலிபடையினர், பாகிஸ்தானிய தயாரிப்பு என்பதுதான் நிஜம். இந்தியா காஷ்மீரிகளை அடக்குகின்றது என்பதுதான் பாடமே தவிர, பாகிஸ்தானிய காஷ்மீர் பற்றி மூச்...

ஆக காஷ்மீர் என்பது அவர்களுக்கு ஒரு அரசியலே அன்றி வேறல்ல, அவர்களால்தான் இவ்வளவு அழிவும். தன் பகுதி காஷ்மீரை 1960களில் பொதுவாக்கெடுப்பு நடத்தவிடாமல் ஐநாவில் தடுத்த பாகிஸ்தானின் விளையாட்டு கொஞ்சமல்ல, அவ்வளவு பயம், யாருக்கு பிடிக்கும் அந்நாடு?

தன் பகுதி காஷ்மீரை விடுவிக்காத பாகிஸ்தான், இந்திய காஷ்மீர் மக்களுக்காக கவலைபடுகின்றதாம், சீன பகுதி காஷ்மீர் பகுதி பற்றி கவலைபடா பாகிஸ்தான், இந்திய காஷ்மீர் விடுதலைக்கு உதவுமாம்

எல்லாமே கள்ள ஆட்டம், இதி கள்ளர் திருமுருகனின் கும்பலும் புகுந்துகொண்டு ஆடுகின்றது. சீமானும் ஏதாவது வழக்கம்போல் காமெடி செய்வார்.சீமானும் ஏதாவது வழக்கம்போல் காமெடி செய்வார்.

வழக்கமாக காங்கிரஸ் சோனியா, கலைஞர் என சொல்லும் இவர்கள் இம்முறை இந்திய அரசு என கவனமாக சொல்வார்கள், மோடி என்பதெல்லாம் நினைவு வராது.

அடேய் அல்லக்கைஸ், இப்படித்தான் இலங்கையில் மலையக தமிழரினை சேர்க்காமல் ஈழதமிழருக்கு மட்டும் தனிநாடு கேட்டு ஒரு பச்சிலையும் பிடுங்காமல் எல்லாம் அழியவிட்டீர்கள்

இன்று காஷ்மீருக்கு வந்துவிட்டீர்களா?

பாகிஸ்தான் அரசையும், சீன அரசையும் கண்டித்துவிட்டு இந்த பங்குணி 17 படம் பிடியுங்கள் மங்குணிகளா

எப்படி அய்யா அது? இப்பொழுது ஈழவிடுதலை என்றால் யாழ்பாணம் மட்டும் தனிநாடு, அல்லது கச்சதீவு மட்டும் தனிநாடு என்றால் ஏற்றுகொள்ளமுடியுமா?

அப்படி நீங்கள் சொன்னால் உலகம் உங்கள் மனநிலையினை பரிசோதித்து கீழ்பாக்கம் அனுப்பாதா?

அப்படி மற்ற இரு பகுதிகளையும் விட்டு விட்டு இந்திய காஷ்மீரை மட்டும் கவலைபடுவீர்களால் உங்களை எல்லாம் மார்கழி மாத காஷ்மீரிய டால் ஏரியில் கோவணத்தோடு மூழ்கடிக்கவேண்டாமா?

ஒரு பிரச்சினை என்றால் என்ன காரணம், எது மூலம் என தெரியாதா? உங்கள் குருட்டு சிந்தாந்தபடி ஒருவேளை இந்தியா அம்மாநிலத்திலிருந்து விலகினால் என்ன நடக்கும்?

பாகிஸ்தானும் சீனாவும் விடுமா? அமுக்கி கொல்லும். நாம் எவ்வளவோ சமாளித்து ஒரு வானியினை கொன்றோம், அவர்களோ காஷ்மீரையே சிவப்பாக்கிவிட்டு சத்தமில்லை என்பார்கள்.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? இந்தியா காஷ்மீரில் தலையிட்டு அப்பாவிகளை காப்பாற்றவேண்டும் என வீதிக்கு வருவீர்கள்.

அதனைத்தான் என் தேசம் இன்றே செய்துகொண்டிருக்கின்றது.

இனி மீட்பு, விடுதலை, என கொடி பிடிப்பதாக இருந்தால் கடலுள் மூழ்கிய பூம்புகார் மீட்பு என சென்று பிடியுங்கள், உலக தொல்பொருள் அமைப்பாவது பதிலளிக்கும்.

 


No comments:

Post a Comment