Monday, July 11, 2016

உமா மகேஸ்வரன்....



ஆண்டு முழுவதும் யாருக்காவது படுகொலை அஞ்சலி செலுத்திகொண்டிருப்பவர்கள் யாரென்றால் உலகில் ஈழ தமிழர்கள் மட்டும்தான். பெரும்பாலும் செத்தவர்களில் பலபேர் புலிகளால் கொல்லபட்டிருப்பார்கள்.

அதே நேரம் புலிகள் அவர்கள் உறுப்பினர்களுக்காக அஞ்சலி செலுத்துவார்கள், அவர்கள் சிங்களனால் கொல்லபட்டிருப்பார்கள்.

ஏதும் புரியுமா என்றால் புரியாது, இதுதான் ஈழம்.

இதோ நாளை மறுநாள் உமா மகேஸ்வரன் நினைவுநாளாம், மனிதர் பெரும் திறமைசாலி, வெளிநாட்டு பயிற்சி நிரம்ப உண்டு, பிரபாகரனை ஒரு வகையில் பழக்கியவர் இவர், விடுதலை புலிகள் எனும் அமைப்பின் முதல் தலைவர் இவர்தான்

கொழும்பினில் ஒருவரை (அவரும் தமிழர்தான்) கொல்ல இருவரும் சென்றனர், சுட்டனர், அரை உயிரில் அவர் சொன்னார் உயரமாக ஒருவரும், குள்ளமாக ஒருவரும் சுட்டனர்.

அதாவது அபூர்வ சகோதரர்கள் கமலஹாசன் போல இருவரும் அலைந்தனர், உமா மகேஸ்வரன் உயரம் அப்படி.

[caption id="" align="aligncenter" width="375"]Stanley Rajan's photo. உமாமேஸ்வரன்[/caption]


 


ஆரம்பத்தில் இவரின் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தான் கமாண்டர், ஒரே உறையில் இரு கத்தி இருக்கமுடியாதல்லவா, பிரிந்துவிட்டார்கள். உள்ளூர பல காரணம் இருந்தாலும் பிரபாகரன் சொன்னது உமாவின் ஊர்மிளா காதல். (பின்னாளில் பிரபாகரனுக்கும் காதல் திருமணமே)சென்னை பாண்டி பஜாரில் இருவரும் சுட தெரியாமல் சுட்டி விளையாடியதெல்லாம் இன்னொரு வகை.

உமா மகேஸ்வரனின் அதிரடிகள் பிரசித்தி பெற்றவை, சென்னை விமான நிலைய சிங்கள விமான குண்டுவெடிப்பு கூட அவர் கைங்கரியம் என்பார்கள்.

இந்திரா இறுதிவரை ஏன் ஈழபிரச்சினையினை மிக கடுமையாக தயக்கமாக யோசித்துகொண்டே இருந்தார் என்றால் இவர் மாதிரியான ஆட்களின் போக்குத்தான். இவர்களால் ஒரு காலமும் ஈழம் நிம்மதியாக இருக்காது, இவர்களை நம்பி ஒரு நாட்டினை எப்படி உருவாக்கி கொடுக்கமுடியும் என்பதுதான் அவரின் தயக்கத்திற்கு காரணம்.

இந்திரா காலத்திற்கு பின் இவரின் போக்கு மாறியது, மாலத்தீவு முற்றுகை சர்ச்சைக்கு பின் இந்தியா எதிரியானார், மாலத்தீவின் எதிர்கோஷ்டியோடு இணைந்து அந்நாட்டின் ஆட்சியினை துப்பாக்கி முனையில் பிடிக்குமளவிற்கு தீவிர திட்டம் தீட்டினார். புலிகள் கூட சிந்திக்கா கோணம் அது.

அண்டை நாடு எனும் வகையில் இந்தியா தான் மாலத்தீவிற்கு உதவ முடியும், முன்னர் கொழும்பிலும் ஜேவிபி கலவரத்தை இந்தியாதான் அடக்கியது, அதனால்தான் இந்தியாவினை பெரும் எதிரியாக வரிந்து கட்டினார் உமா, இன்னொன்று இவரின் சம்மதம் கேட்டுத்தான் மாலத்தீவிற்கு உதவவேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை.

வங்கம் தந்த பாடம் என சம்பந்தம் இல்லாமல் சொல்லிகொண்டிருந்தார். எப்படியும் இந்தியா ஒரு கட்டத்தில் தீவிரமாக களமிறங்கும் என எதிர்பார்த்தார், அதனால் வங்கத்தில் நடந்த போரில் இந்திய ராணுவம் வங்கத்தை சீரழித்ததாக புத்தகம் எழுதினார், இன்னும் என்னவெல்லாமோ எழுதினார்

அப்புத்தகத்தின் தழுவல்தான் பின் பேரரிவாளன், நளினியின் சகோதரனும் சென்னையில் அமைதிபடை காலத்தில் புலிகளுக்காக அச்சிட்ட சாத்தானின் படைகள் எனும் இந்திய எதிர்ப்பு புத்தகம்.

அதாவது இந்தியா ஈழத்தின் எதிரி என்பது அவர் கொள்கை, இந்திய தலையீட்டினை அவர் எதிர்த்தார், தனியாக புளோட் இயக்கம் என ஒன்றை நடத்தியபோதும் இந்தியாவோடு எந்த பேச்சும் அவர் நடத்தவில்லை.

மாலத்தீவில் இந்திய படை அனுப்பபட்டு, அது மீட்கபட்ட பின் ராஜிவ் மீது இவருக்கு பெரும் வன்மம் இருந்தது என்பார்கள், ராஜிவின் குழந்தைகளை இவர் கடத்த திட்டமிருந்தார் என்பது வரை பகீர் செய்திகள் உண்டு, ராஜிவிற்கு முதல் அச்சுறுத்தல் இவர்தான்.

1989ல் மட்டும் இவர் சாகவில்லை என்றால், நிச்சயம் ராஜிவ் கொலைபழி இவர் மீதுதான் விழுந்திருக்கும். இந்தியா நமக்கு எதிரி என்ற இந்த முன்னாள் புலிதலைவரின் தாக்கமே பிரபாகரனிடம் இறுதிவரை இருந்தது

ஆனால் புலிகளின் தடையில் இவரும் சிக்கினார். கொல்லபட்டார், ஆனால் யார் கொன்றார்கள் என்று இன்றுவரை சர்ச்சை உண்டு, பொதுவாக இம்மாதிரியான கொலைகளுக்கு புலிகள் வாய்திறப்பதில்லை.

பிரபாகரனுக்கு இவர் தான் எல்லா விஷயங்களிலும் முன்னோடி, இந்திய எதிர்ப்பு உட்பட. அந்த எதிர்ப்பில் இறுதிவரை இருவரும் ஒன்றும் சாதிக்கவில்லை

ஈழமக்களிடம் இந்தியா பற்றி தவறான அபிப்பிராயங்களை முதலில் இவர்தான் பரப்பினார், அதுதான் பின்னாளில் அமைதிபடைக்கு எதிரான யுத்தமாக வெடித்தது

இந்தியாவினை எதிர்த்த முதல் ஈழதீவிரவாதிதான் இவர், பின்னாளில் அவர் வளர்த்தவர்களாலே கொல்லவும்பட்டார்.

பிரபாகரனுக்கும் இவருக்கும் உயரம் மட்டுமே வித்தியாசம், வேறு ஒன்றும் சொல்லமுடியாது.










No comments:

Post a Comment