Tuesday, July 26, 2016

பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்




அற்புதமான பாடல்களை எழுதிய வாலியிடம் ஒரு மேடையில் கேட்டார்கள், இப்படி கவி மழை கொட்டும் நீங்கள் "எப்படி சமைஞ்சது எப்படி" என மகா ஆபாசமாக எழுதியது ஏன்?

அவர் அவருக்கே உரித்தான பாணியில் சொன்னார்

"இங்கு நான் தமிழை தாலாட்டும் தாய்
அங்கே எலும்புக்கு வாலாட்டும் நாய்"

பாய்ஸ் படத்தில் சர்ச்சையான வசனத்திற்காக சுஜாதா எனும் யானையினையே மண்டியிட வைத்த திரையுலகம் அது, ரஞ்சித் எல்லாம் அதன் முன் தூசு

அதுதான் சினிமா, அங்கு எல்லாமே வர்த்தகம், எல்லா பிரச்சினைகளையும் அப்படி இப்படி காட்டி சம்பாதிப்பார்களே தவிர, வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. புரட்சி, எழுச்சி எல்லாம் சினிமாவால் சாத்தியமில்லை

காரணம் பெரும் பணம் கொட்டபடும் இடம் எது, எடுத்தே தீரவேண்டும் என்ற சூதாட்ட எண்ணம் இருக்கும் அவ்வளவுதான், இயக்குநர் எனும் குதிரையினை நம்பி பந்தயம் கட்டுவார்கள்

அந்த குதிரை நன்றாக ஓடவேண்டும் என்பதுதான் சினிமா எதார்த்தமே தவிர , கடிவாளம் அணியமாட்டேன், ஜாக்கி சுமக்க மாடேன், கிரவுண்டுக்குள் நான் விருப்பபட்ட இடத்திற்கத்தான் ஓடுவேன் என்றால் யார் பணம் கொட்ட தயாராவார்கள்?

அடுத்தவன் பணத்தில் செய்வதல்ல புரட்சி

பெரியார் சொந்த பணத்தில் செய்தார், அம்பேத்கர் தன் கல்வியால் செய்தார், இன்னும் பலர் கால் நடையாய் நடந்து செய்தனர்

அம்பேத்கர் மேட்டுகுடியில் பிறக்கவேண்டும் எனும் ரஞ்சித்தின் பேட்டி வாய்விட்டு சிரிக்கும் நகைச்சுவை

பாரதியார் யார்? அம்பேத்கரை உருவாக்கிய பிராமண ஆசிரியர் யார்? பரோடா மன்னர் யார்? ராஜராம் மோகன்ராய் யார்? இந்திய சாதிமுறையினை சாடிய அன்னிபெசன்ட் வெளிநாட்டு மேட்டுகுடிதான், சாதி முறைகளை சாடி தனிமதம் சமைத்த புத்தனும் மேட்டுகுடி, மகாவீரர் மேட்டுகுடி

நிலமை மிஞ்சும் போது காலம் தோறும் காக்க‌ அவதாரம் வருவார்கள்,பைபிளின் மோசஸ், பகவான் கிருஷ்ணனும், தென்னகத்து வைகுண்டரும் அப்படியே,

ஆக தாழ்த்தபட்ட மக்களை கைதூக்கிவிட பல மேட்டுகுடிகளில் பலர் ஏற்கனவே பிறந்துவிட்டார்கள், இன்னும் பிறப்பார்கள் , அதுதான் உண்மை அதுதான் யதார்த்தம்

100 வருடத்திற்கு இருந்த நிலை என்ன? இன்றிருக்கும் நிலை என்ன? எவ்வளவு முன்னேற்றம்?, உண்டா இல்லையா?

இளையராஜா தொட்டிருக்கும் உயரம் என்ன? மறுக்க முடியுமா? அவர் என்ன தலித் இசை மட்டும் கொடுத்தாரா?

சினிமா என்பது வேறு மாதிரியானது, பணம் சம்பாதித்து கொடுக்கா எந்த கலைஞனும் புறக்கணிக்கபடுவான், கொள்கை புரட்சி எல்லாம் அங்கே சாத்தியமில்லை

எம்ஜிஆர் சில திராவிட கொள்கைகளை கொண்டிருப்பதாக சொல்லிகொள்வாரே அன்றி, அவர் படத்தில் நாயகி கோவிலுக்கு செல்வதோ, தாய் பக்தியில் உருகுவதோ அனுப்பபட்டிருக்கும், அவரே இஸ்லாமியராக, கிறிஸ்தவராக, புத்த குருவாக பாடிகொண்டிருப்பார்

காரணம் சினிமாவில் சில அனுசரிப்புகள் தேவை

அதனையன்றி, நான் இப்படித்தான் என் படம் இப்படித்தான் என்றால் தாரளமாக சொல்லிகொள்ளலாம்

ஆனால் நம்பி பணம் கொடுக்க யார் வருவார்கள், கோடிகளை கொட்டி புரட்சி செய்யவா படம் எடுக்க வருவார்கள்?

பாரதிராஜா தன் படங்களில் பிரச்சினையினை தன் சமூகத்திற்கு இடைபட்டதாகத்தான் வைத்திருப்பார், நாயகன், வில்லன், ஊர் என சகலமும் ஒரே ஜாதியாக காட்டி இருப்பார், கமல ஹாசனின் தேவர் மகன், விருமாண்டியும் அப்படியே

அதாவது என் சாதியிலும் மகா அயோக்கியன் உண்டு என சொல்லபடும் கதை அது, ஒப்புகொள்கின்றார்கள். புரட்சி கருத்துக்களோ , உரையாடலோ, ஆண்ட அடிமை வசனமோ அதில் இருக்காது, அப்படங்கள் ஜெயித்தன.

வைத்திருக்கின்றார் வசனம், "பறவையினை பறக்கவிடு, வாழ்வா சாவா என அது முடிவு செய்யட்டும்"

என்ன இது பசுமாட்டினை காட்டில் சென்று விட்டுவிடுவோமா? பிராய்லர் கோழிகளை காட்டில் மேய விடலாமா? வீட்டின் எருமை மாடுகளை களக்காடு மலையில் சென்று விட்டுவிடலாமா?

வண்டலூர் சாலையினை மூடிவிட்டு , குழந்தைகளை வீரப்பன் காட்டிற்கா அழைத்து செல்லமுடியும்? ஒரு யதார்த்த வசனம் வேண்டாமா?

கொஞ்சம் தீவிரமான கோளாறு அன்றி இப்படி எழுத முடியாது. என்ன தலித்துக்களுக்கு உரிமை இல்லை, எல்லா துறையிலும் அவர்கள் இருக்கின்றார்கள், முன்னேறுகின்றார்கள், இதோ இவரும் படமெடுக்கும் அளவிற்கு வந்திருக்கின்றார்

என்ன பெரிய அடக்குமுறையினை கண்டுவிட்டார்கள்?, காலம் மாறிவிட்டாலும் பழம் காலத்தையே நினைத்து கொண்டிருந்தால் எப்படி?

உழைப்பு சமூகத்தை மாற்றும், சில சாதிகள் அப்படித்தான் வியாபாரத்திலும், கல்வியிலும், உற்பத்தியிலும் கால்பதித்து எங்கோ செல்கின்றன, கடுமையான உழைப்பால் வந்தவை அவை

அதனை விட்டு ஒரு காலத்தில் எங்களை அடித்தார்கள் தெரியுமா? என அடிபட்ட காலத்திலே நின்று புரட்சி, எழுச்சி, என பேசிகொண்டிருந்தால் ஒரு மண்ணும் நகர்ந்திருக்காது

இது சினிமா, சர்ச்சைகுள்ளான நடிகரையே நடிக்க வைக்க ஆயிரம் முறை யோசிப்பார்கள்

சந்திரபாபு போன்ற மாமேதைகள் சரிந்தது அப்படித்தான், வடிவேலு அப்படித்தான்

நடிகன் நிலையே அப்படி என்றால் லகானை பிடிக்கும் இயக்குநரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்?

இவர் புரட்சி, தலித் எழுச்சி எல்லாம் தனியாக இயக்கம் கட்டி செய்தால் சரி, அவர் விருப்பம். ஆனால் அடுத்தவன் காசில் செய்ய தயாரிப்பாளர் அனுமதிக்க மாட்டார்.

அட கபாலி ஏன்? கொடியன்குளம் கலவரம், வாச்சாத்தி சம்பவம், மேலவளவு படுகொலை, தமிழ்நாட்டு தர்மபுரி இளவரசன் கதையோ, உடுமலை பேட்டை சங்கள் கதையோ வைத்து தலித் அரசியல் படம் எடுக்க தெரியாதா? முடியுமா என்றால் முடியும்? ஆனால் சிக்கல் ஆகும் என்பது அவருக்கு தெரியும்

அதனால் மலேசிய கதையினை சொல்லி ,அதில் புரட்சி சொல்லி ரஜினியினை குப்புற தள்ளியாயிற்று, இனி பிஜி, மொரிஷியஸ், வெஸ்ட் இண்டீஸ் என உலகெல்லாம் செல்லமுடியுமே தவிர, தமிழக சாதி பிரச்சினைகளை அன்னார் பேசுவாரா என்றால் பேசமாட்டார்

இதனால்தான் இவரை சாடவேண்டி இருக்கின்றதே அன்றி வேறல்ல, அதாவது இவர் தலித் பிரச்சினைகளை வைத்து உலகெல்லாம் சம்பாதிக்க நினைக்கிராரே அன்றி அதற்கான போராளி அல்ல, அப்படி நினைத்திருந்தால் சினிமாவிற்குள் வரமாட்டார்

சினிமா ஊடகம்தான், ஆனால் பல சிக்கல் உள்ள ஊடகம்.

ரஞ்சித்தின் அடுத்த கட்டம் மீது உனக்கு பொறாமையா என்கின்றார்கள், எதற்கு? அடுத்த கட்டம் என ஒன்று சினிமாவில் இருந்தால்தானே அவருக்கு?

இவர் கபாலியில் செய்ததே தவறு, அதனை நியாபடுத்தி பேட்டிகொடுத்தது இன்னும் தவறு

இனி இவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, கொஞ்சநாளில் அவராகவே காணாமல் போய்விடுவார், அல்லது தன்னை மாற்றிகொள்வார்

சினிமா என்பது விஞ்ஞான அரசியல் , அதில் கலைஞரை போல அரசியல் செய்யலாமே தவிர,

பெரியார் போல புரட்சி எல்லாம் செய்ய முடியாது.அதற்குத்தான் பெரியார் அரசியலுக்கு வரவே இல்லை





Stanley Rajan's photo.





No comments:

Post a Comment