Tuesday, July 26, 2016

சிதறல்கள்

வைரமுத்து சொன்னது அப்படி ஒன்றும் பெரிய தவறு அல்ல, உலகம் சொன்னதை அவரும் சொன்னார் அவ்வளவுதான்

கபாலி மிகபெரும் வெற்றி என சொன்ன ரஜினியினை விடவா நெஞ்சார பொய் சொல்லிவிட்டார் வைரமுத்து?

கபாலி வெற்றி என ரஜினி சிரித்துகொண்டே சொல்லும்போது மறைந்த மனோரமாவின் நினைவு வந்து தொலைக்கின்றது




அப்துல் கலாம் என்ன பிராமணரா? அவர் எல்லாம் உச்சம் தொடவில்லையா? இதுபோன்ற எத்தனை அடையாளங்கள் தமிழகத்தில் உண்டு, அவர்கள் எல்லாம் சாதியால் முன்னேறினார்களா?

சிவநாடார் தொட்டிருக்கும் உயரம் என்ன? இன்னும் உழைப்பால் பலர் உயர்ந்த நாடு இது, அம்பானி முதல் திநகர் சரவணா ஸ்டோர் வரை சாதியால் உயர்ந்தார்களா?

எத்தனை பெரும் இயக்குநர்கள் உள்ள தமிழகம் இது, இவர்கள் எல்லாம் ஜாதியால் உயர்ந்தார்களா? இளையராஜாவும், ரகுமானும் ஜாதியால் உயர்ந்தார்களா, சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் ஜாதிதான் கூட வந்ததா?


இதோ விகடன் டிவியில் ஜாதி இல்லாமல் நான் இந்த நாட்டில் என்ன கிழிக்க முடியும்? எங்கு சென்றாலும் ஜாதி வரும் என பெரிய சர்ச்சையின கிளப்பிகொண்டிருக்கின்றார் ரஞ்சித்.

அப்படி சாதி பார்த்து இயங்குவதல்ல இந்திய யதார்த்தம், அப்படி பார்த்தால் பல அடையாளம் முத்திரை பதித்திருக்கமுடியாது, காமராஜர் எல்லாம் வெளிவந்தே இருக்கமுடியாது. உண்மையும் கூட‌,

ஒன்று மட்டும் புரிகின்றது, மனிதர் போட்டுகொண்டிருக்கும் வட்டம் மிக சிறிது, மிக மிக குறுகிய பார்வை. இந்த உலகினையே சாதிய பார்வையினால் பார்க்கும் ஒரு வகை வன்மம்

பாருங்கள் மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார், யார் மைக்கினை பிடுங்கி கொண்டு ஓடுகின்றார்கள் என தெரியவில்லை

ரஜினி இனி வாயினை திறந்து ஜாதி பார்த்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என வாயினை திறந்து சொல்லாதவரை இவர் நிறுத்தமாட்டார்.

ரஜினி என்ன‌ ஜாதி பார்த்தா வாய்ப்பு கொடுத்தார்?






தாயிடம் கோபித்துக் கொண்டு செல்லும் பிள்ளையைப் போல, நானும் 15 ஆண்டுகள் வனவாசம் சென்றேன், திரும்பி விட்டேன் : அதிமுகவில் இணைந்த‌ கருப்புசாமி பாண்டியன்

கருப்பு ஆடுகளுக்கு அடைக்கலம் கொடுத்த திமுக ஒரு பசுமையான வனமாகவே இருக்கட்டும், ஆனால் அந்த வனத்தில் இருந்த சுதந்திரம் அம்மா கண்பார்வையில் கிடைக்குமா? என்பது வேறு விஷயம்

ஒரு வழியாக கலைஞருக்கு நெல்லையில் தொல்லை தீர்ந்தது, ஆனால் அதிமுகவிற்கு இனிதான் தொடங்குகின்றது, சும்மாவே நெல்லை அதிமுக அரசியல் புரியாது, இனி எப்படியோ??




 

No comments:

Post a Comment