Tuesday, July 12, 2016

சிதறல்கள்....


பூலோகத்தின் சகலகுடிகளிடமும் இந்தியாவில் முதலீடு செய்ய திரட்டபட்டாயிற்று, அமேசான் காட்டு பழங்குடியினர் முதல் அண்டார்டிக்கா எஸ்கிமோக்கள் வரை அழைத்தாகிவிட்டது, இனி செல்ல கண்டமும் இல்லை, அழைக்க நாடுகளுமில்லை அதற்காக சும்மா இருக்கமுடியுமா?

செவ்வாய் கிரகத்தில் அந்நிய முதலீடு கவர பிரதமர் பயணம், கச்சகஸ்தானின் பைகானூர் தளத்திலிருந்து ரஷ்ய ராக்கெட்டில் கிளம்பினார் எனும் செய்தி விரைவில் வரலாம்.

வேற்றுகிரகவாசிகளின் பறக்கும்தட்டு இப்பொழுதெல்லாம் இந்தியாவில் தென்படாத காரணம் இதுதான், சிக்கிவிட்டால் அந்நிய கிரக முதலீடு செய்யுங்கள் பிடித்துகொள்வார்கள் எனும் அச்சம் அவர்களுக்கு இருக்கலாம்.




மதிமுகவின் புதிய சேனல் மதிமுகம் டிவி- வைகோ தொடங்குகிறார்



# ஏதோ 1500 கோடி என்றார்கள், அசைன்மெண்ட் என்றார்கள், அப்பொழுதே மருமகன் பெரும் கோடிகளில் டெக்ஸ்டைல் வாங்கிய சர்ச்சை வந்தது, அவர் வேறு என் ராஜதந்திரம் எப்படி என தனக்குதானே தட்டிகொண்டார்,

# இதோ வைகோ டிவிவேறு தொடங்க போகின்றாராம், கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக வரலாம்.


# எனினும் "மதிமுகம்" எனும் பெயருக்கு பதிலாக "சதிமுகம்" என வைத்தால் மிகசரியாக இருக்கும் என்று தேமுதிக நண்பர்கள் சொல்லிகொள்கின்றார்களாம்.

# அது என்னவோ தெரியவில்லை, தற்பொழுது விஜயகாந்தினை பார்க்கும்பொழுதெல்லாம் பருத்தி வீரனில் சீட்டுவிளையாடி தோற்றுவிட்டு கயிரோடு அலையும் டக்ளஸ் அண்ணன் நினைவுதான் வருகின்றது.




ஏதோ எவிடன்ஸ் குழுவாம், உண்மை கண்டறிவார்களாம், இதுவரை என்ன கண்டறிந்தார்கள் என்பது தெரியவில்லை, ஆனால் ஸ்வாதி கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து பொதுமக்கள் முன்னிலையில் அறிக்கை சமர்பிப்பார்களாம்






# அப்படியே ராமஜெயம் கொலைவழக்கினையும் இக்குழு கண்டறிந்து சொல்லும், சேலம் விஷ்ணுபிரியா போன்ற சிக்கலான வழக்குகளையும் இக்குழு இனி விசாரிக்க கோரலாம், எம்ஜிஆர் சுடபட்ட வழக்கினையும் விசாரிக்க கோருவோம்.

# ஆனால் தா.கிருட்டின வழக்கு, 3 பேர் தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் எரித்த வழக்கு, பொட்டு சுரேஷ் வழக்கு, போன்ற சிக்கலான வழக்குகளில் எல்லாம் இவர்கள் வாய்திறக்க மாட்டார்கள், எவிடன்ஸ்வாவது மண்ணாங்கட்டியாவது?


# வேலை வாய்ப்பில் தட்டுபாடான நாடுதான் இந்தியா, அதற்காக வேலை இல்லாதவர்கள் எல்லாம் காவல்துறை, நீதிமன்றதுறையின் வேலைகளை எல்லாம் எடுத்துகொண்டால் எப்படி? அது பல குழப்பங்களை விளைவிக்காதா? தடயங்களை குழப்பாதா?

# இதெல்லாம் அரசு துறையான காவல் துறை குறுக்கீட்டில், அதாவது அரசு பணியாளரை வேலைசெய்யவிடாமல் தடுத்தல், குழப்புதல் போன்ற பிரிவுகளில் வரும் குற்றமல்லவா?

# சும்மா இருப்பவர்கள் எல்லாம் கொலை குற்றங்களை விசாரிக்க கிளம்பிவிட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தானே அர்த்தம்? பின் அரசு துறைகள் எதற்கு? இப்படியே ஆளாளுக்கு நாங்கள் விசாரிக்கின்றோம், நீதிவழங்குகின்றோம் என கிளம்பினால் இத்தேசம் என்ன ஆகும்?




 






பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மீது நிலஅபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

# எப்படி மருத்துவர் அய்யா? இந்த வழக்கிற்கும் உங்கள் வழக்கமான அறிக்கைபடி சிபிஐ விசாரணை கோரலாமா?



No comments:

Post a Comment