Saturday, July 16, 2016

துருக்கியில் நடப்பது என்ன?




கொஞ்சம் ஆசியாவிலும் கொஞ்சம் ஐரோப்பாவிலும் கிடக்கும் நாடு துருக்கி, ரஜினிகாந்த் அழுவது போல அங்கும் ஏற்றுகொள்ள்மாட்டார்கள், இங்கும் ஏற்றுகொள்ளமாட்டார்கள், ஆனால் சும்மா சொல்லகூடாது வரலாற்றில் மிக முக்கியமான இடம் அதற்குண்டு, வரலாற்றில் துருக்கியின் பாதிப்பு முக்கியமானது

ஆனால் மனதளவில் தாங்கள் ஐரோப்பியராகவே உணர்வார்கள், மதம் தவிர‌

வரலாறினை விடுங்கள், தற்போதைய சிரிய யுத்தத்தை அடுத்து உலக நாடுகள் அதனை கொண்டாடின‌, அதன் அமைவிடம் அவ்வளவு முக்கியமானது, பிரிட்டன் வெளியேறிய பட்சத்தில் ஐரோப்பிய யூனியனில் அதனை இணைக்கும் முயற்சி நடந்தது.


ஆனால் இன்று ராணுவ புரட்சி, மறுப்பு, முறியடிப்பு, குழப்பம் என இன்று அவர்களுக்கு குழப்பமான நாள். இன்னும் முடிவு தெரியவில்லை

து.jpg

ஆனால் முதலில் ராணுவம் புரட்சி செய்ததாகவும், பின் அதிபரின் குரல்கேட்டும் மக்கள் தெருவிற்கு வந்ததால் ராணுவம் வாபஸ் ஆனதாகவும் குழப்பமான தகவல்கள் வருகின்றன.

இவ்வளவுநாளும் இல்லா இந்த குழப்பத்திற்கு காரணம், புதிதாக பலம் பெற்றிருக்கும் துருக்கி உளவுதுறையும் அது ஆடும் ஆட்டமும் என்கின்றனர் நிபுணர்கள்.

பார்க்கலாம், ஒருவேளை துருக்கி ராணுவம் ஆட்சி அமைத்தால் புரட்சி வாழ்க என தமிழகத்தில் சத்தம் வராது, ஆனால் ஒருவேளை மக்களுக்கு மரியாதை செலுத்தி 1989 ரஷ்ய ராணுவம் போல அது பின்வாங்கி இருந்தால் அவ்வளவுதான், எங்கே? இங்கே தமிழகத்தில்தான்

"புரட்சியில் வென்றிருக்கும் துருக்கி மகளை வாழ்த்துகிறோம், இதே போன்ற ஒரு பெரும் புரட்சி தமிழகத்திலும் வரும் என்பதனை தெரிவித்துகொள்கின்றோம்" என ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள்





No comments:

Post a Comment