Sunday, July 24, 2016

ஹே ராம் ... கமல்

சீன ஜப்பானிய உறவுகள் மகா மோசமடைகின்றன, எந்நேரமும் யுத்தம் வெடிக்கும் நிலைதான், மெதுவாக வெடிக்கலாம்

காரணம் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் செய்திருக்கும் அட்டகாசம் அப்படி, சீனாவினை குதறியிருக்கின்றது. நான்சிங் கொடூரங்கள் எல்லாம் நினைத்தால் சப்தநாடியும் அடங்குகின்றது, இன்றுவரை அதற்கு ஜப்பான் மன்னிப்பும் கோரவில்லை, ஒரு நாளாவது அடிக்காமல் விடமாட்டோம் என்ற சீன சபதமும் அப்படியே இருக்கின்றது

ஜப்பானியர் கிழக்காசியாவில் செய்திருக்கும் அட்டகாசம் அப்படி, தாய்லாந்து பர்மா ரயில் பாதை அமைப்பில் எத்தனை ஆயிரம் தமிழர் கொடூரமாக அவர்களால் கொல்லபட்டிருக்கின்றனர் என்பதை படித்துகொண்டிருக்கின்றேன், மகா கொடூரமான ராணுவம் அது


இப்பொழுது என் சிந்தனையில் உதிப்பது ஒன்றுதான்

ஒருவேளை ஹிட்லர் வீழாமல், நேதாஜி திட்டபடி வென்று ஜப்பானிய படைகள் இந்தியாவில் நுழைந்தால் எப்படி இருக்கும்? ஒப்பந்தம் மீறி அமெரிக்க பேர்ல் ஹார்பரை நொறுக்கிய ஜப்பானியருக்கு, போஸை விரட்டிவிட்டு இந்தியாவில் ஒரு காட்டாட்சி நடத்த எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

நினைத்தாலே சித்தம் கலங்குகின்றது, செய்திருப்பார்கள். காந்தி அக்காரியத்தை விலக்கி வைத்ததிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது.

காந்தி நினைவுக்கு வருகின்றார், வன்முறை ஏன் வேண்டாம் என அவர் சொன்னார் என புரிகின்றது, ஜூலை கொழும்பு கலவரங்களை நினைக்கும்பொழுதும் அதுதான் புரிகின்றது

அவர் நிச்சயமாக நிறைய யோசித்திருக்கின்றார், புதுபாதையினை வகுத்திருக்கின்றார், அதனால்தான் அன்று பிரிட்டனின் எதிர்கட்சியே அவரை அங்கீகரித்திருக்கின்றது, இன்நாட்டை வன்முறையின் பிடியிலிருந்து நிச்சயம் காப்பாற்றி இருக்கின்றார்

அதனால் மகா நிச்சயமாக சொல்லலாம், ஆயிரம் பாஷா, ரோபோ இன்னபிற அழிச்சாட்டியம், வர்க்க போராட்டம், தலித் அரசியல் எனும் பெயரில் கபாலிகள் வரலாம்

ஆனால் காந்தி என்பவர் எப்படிபட்டவர் என்பதற்கு கமலஹாசனின் ஹேராம் படமே சால சிறந்தது, என்னை பொறுத்தவரை தமிழில் வந்த மிக சிறந்த படங்களில் அதுவும் ஒன்று

வணிகரீதியாக அப்படம் தோற்றிருக்கலாம், ஆனால் கமலஹாசனின் பெரும் முத்திரை அது, இன்று காந்தியின் அருமை தெரிவது போலவே பின்னாளில் கமலஹாசனின் அருமையினை வருங்கால சந்ததி அப்படம் மூலம் தெரிந்துகொள்ளும்.

அவனை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு.

No comments:

Post a Comment