Monday, July 4, 2016

யாருடா நீ - "உங்களில் ஒருவன்" ?

தமிழ் அங்கு தான் பிறந்தது, உலகின் மிக தொன்மையான நாகரீகம் அங்குதான் ஆதிச்சநல்லூரில் உறங்கிகொண்டிருக்கின்றது

பாரதி முதல் வஉசி வரை கொடுத்தது அந்த மண்தான், வெள்ளையன் கோட்டை கட்டிய சென்னையினை விட, அவனை ஓட விரட்டிய பூலித்தேவனும், கட்டபொம்மனும் பிறந்த மண் இது

ஒரு காலத்தில் தமிழக இலக்கிய உலகமே அங்குதான் இருந்தது அகத்தியர் காலம் முதல் வையாபுரிபிள்ளை, இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்கள் காலம் வரை நெல்லையே தமிழின் இருப்பிடம், வசிப்பிடம்.

குற்றால குறவஞ்சி முதல் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் உருவான வரலாறு நெல்லைக்கு உண்டு,

பழக்க வழக்கங்களிலும், தனி தன்மையினை காப்பதிலும், பழமைகால தொடர்பிலும் அக்கால அறிவிற் சிறந்த யாழ்பாணத்துடன் பெரும் தொடர்பு கொண்டது எமது நெல்லை மண். தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டத்திற்கும் இல்லா சிறப்பு அது.

அதனால்தான் தமிழில், அறிவில், கல்வியில், தன்மான உணர்வில் யாழ்பாணமும் நெல்லையும் இன்றுவரை உலகில் தனித்து தெரிகின்றன.

கல்வியில், வீரத்தில், அறிவியலில், பக்தியில், பத்திரிகையில். சினிமாவில்
தொழில் வரிசையில், விவசாயத்தில் மிக சிறந்த இந்த நெல்லை மண்ணைவிட இன்னொரு மண்ணை தமிழகத்தில் காட்டிவிடுங்கள், காட்டிவிட்டு பேசுங்கள்

எவனோ எவளையோ எதற்காகவோ வெட்டிவிட்டான் என்றால் மொத்த நெல்லையரும் காட்டுமிராண்டிகள் என சொல்ல நீர் யார்?

சிங்கார சென்னையின் இன்றைய வளர்ச்சிக்கு அவர்களும் ஒரு காரணம், சென்னையில் நெல்லையர்களின் முத்திரை அப்படியானது,

[gallery ids="1205,1202" type="circle" columns="2" orderby="rand"]

இந்த மாபெரும் தேசத்திற்கும் அவர்களின் பங்களிப்பு சீக்கியர்களுக்கு அடுத்து குறிப்பிடதக்கது, மகேந்திரகிரி ராக்கெட் தளம், கூடங்குள அணுவுலை, விஜயநாராயண கடற்படை தளம் , தூத்துகுடி துறைமுகம்எ ன பல வகை கேந்திர முக்கியத்துவங்களை கடும் உயிர் ஆபத்துகளுக்கு இடையில் தாங்கி நிற்கும் பகுதி அது.

தூத்துகுடியால் இம்மாநிலம் அள்ளும் பணம் கொஞ்சமா?

மற்ற மாவட்டத்துக்காரர்கள் எல்லாம் கொலையே செய்யவில்லையா? சமீபத்தில் சென்னையில் 10 பொதுமக்களை வெட்டிய ரவுடிகளுக்காக, சரிகா ஷா கொலைக்காக இன்னும் பல மர்ம கொலைகளுக்காக நாங்கள் என்ன சென்னையினை தனியாக பிரிக்க சொன்னோமா?

நெல்லையும் தூத்துகுடியும் அதன் மக்களும் இந்த தேசத்திற்காக ஆற்றிவரும் பெரும் சேவைகள் கொஞ்சமல்ல,

எங்களை பிரித்துவிட சொல்ல நீர் யார்? காட்டுமிராண்டிகளிடம் வாழமுடியாது என ஓடிவந்த குமரி மக்களையே அணைத்துகொண்டு இன்றுவரை அமைதியாக வாழ்ந்து வருபவர்கள் நாங்கள்,

இவர் யாரென்று தெரியாது, மொத்த நெல்லை தூத்துகுடி மக்களை காட்டுமிராண்டி என முத்திரை குத்தும் இவரை மிக விரைவில் நண்பர்கள் கண்டுபிடிப்பார்கள்.

அன்று நெல்லையின் முக்கியத்துவம் பற்றி இவருக்கு கதற கதற காதில் கற்பிப்போம்.

உப்பு முதல் இவர் அணியும் ஜவுளி வரை நெல்லையர் பங்கில்லாமல் இவரால் தமிழகத்தில் வாழ முடியுமா?

என்னது "உங்களில் ஒருவனா" சீ சீ இருக்கவே முடியாது, எங்களில் ஒருவன் இப்படி பைத்தியகாரதனமாக உளரமாட்டான்.

நீர் கீழ்பாக்கம் சென்று இப்படி சொல்லலாம் மிக சரியாக பொருந்தும்.

No comments:

Post a Comment