Wednesday, July 13, 2016

பாலஸ்தீன் வழியில் ஈழம் அமையும் : திருமுருகன் காந்தி

பாலஸ்தீனத்தை குதறி வைத்திருக்கின்றது இஸ்ரேல், தனி பாலஸ்தீனம் சாத்தியமில்லை என்றுதான் அராபத் சுயாட்சிக்கே ஒப்புகொண்டு எல்லைகோடு வகுத்தார்.

அவருக்கு உலகவோட்டம் தெரிந்தது, எல்லைகளையாவது இஸ்ரேலை ஒப்புகொள்ளவைத்தது அவரின் பெரும் வெற்றி.

இந்த திருமுருகன் காந்தி இதோ சொல்கின்றார், பாலஸ்தீன் வழியில் ஈழம் அமையும். எப்படிபட்ட ஏமாற்றுவேலை இது.

பாலஸ்தீனத்தில் எல்லை பெற்று தந்தவர் அராபத், தொடர்ந்து போராட ஹமாஸினை விட்டுசென்றவரும் அவரே, அடிக்கடி அமெரிக்கா வரை பேச்சுவார்த்தைக்கு சென்று பாலஸ்தீன போராட்டம் அழித்தொழிக்கபடாமல் பார்த்துகொண்டது அவரின் சாமர்த்தியம்.

தனிநாடு அவர் பெறாமல் மறைந்திருக்கலாம், ஆனால் உலகநாடுகளில் பாலஸ்தீனத்திற்கு ஒரு அபிமானம் உருவாக்கினார், போராளி குழுக்களை எல்லாம் ஒருங்கிணைத்தார், குறிப்பாக மக்களை திரட்டி அவர் காட்டிய இண்டிபாதா எழுச்சி குறிப்பிடதக்கது.

அமெரிக்க அதிபருக்கு தற்கொலை குண்டு அனுப்பினார் இல்லை, இஸ்ரேலிய அதிபர்களை கொன்றார் இல்லை, அரபுலகில் துரோகங்களுகு இடையேயும் நட்பை உருவாக்கினார், இன்றளவும் காலித் மிஷல் போன்றவர்கள் இஸ்ரேலை மிரட்ட அந்த தொலைநோக்குதான் காரணம்

ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது?

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என ஜெயவர்த்தனே ஒப்புகொண்ட எல்லையினை புலிகள் கிழித்தாயிற்று, எல்லோரையும் பகைத்தாயிற்று , எல்லா மாற்றுபோராளிகளையும் ஒழித்துகட்டியாகிவிட்டது

போதாகுறைக்கு புலிகளும் மொத்தமாக பரலோகம் சென்றாயிற்று, இனி போராட யார் உண்டு? எங்கே இருக்கின்றது எல்லை கோடு?

அரபாத்தின் இண்டிபாதா எங்கே, பங்கருக்குள் ஒளிந்திருந்த இந்த தலமை எங்கே?, இது என்று மக்களை திரட்டி போராடிற்று? என்று மொத்த இலங்கை தமிழர்களையும் ஒரே கோட்டில் நிறுத்திற்று, ஒருகாலமுமில்லை. பின் எப்படி?

பாலஸ்தீனம் அமைய இன்று குரல்கொடுக்கும் நாடுகள் எத்தனை? அரசதந்திரிகள் எத்தனை?

ஈழம் அமைய சீமான், திருமுருகன் தவிர குரல் எழுப்புவது யார்? இவர்களால் இந்தியா தாண்டமுடியுமா? எம்மா ஏமாற்றுவேலை. எந்த நாடு உதவ தயாராக இருக்கின்றது?

பாலஸ்தீன வழியில் ஈழவிடுதலை சாத்தியம் என எவனாவது சொல்வான் என்றால அதனைவிட பெரும் மோசடி ஒன்றும் இருக்காது

எத்தனை ஒப்பந்தங்களை கடந்து வந்தது அது, ஈழ ஒப்பந்தம் என ஏதாவது ஒன்றை கண்டிருப்பீர்களா?

நார்வே அராபத்தின் மனிதநேயத்தை பாராட்டி அவருக்கு நோபல் வரை கொடுத்து மகிழ்ந்தது, பிரபாகரனை கண்ட நார்வே குழு தலைதப்பினால் போதும் என ஓடியது உலகறிந்தது.

இப்படி சம்பந்தமே இல்லாமல் பாலஸ்தீனத்தையும், ஈழத்தையும் ஒப்பிடுவார் என்றால் இவன் எவ்வளவு பெரும் மோசடியாளராக இருப்பார்?

இவர் சொல்வதற்கும் ஆம், அப்படித்தான், அதேதான் என சொல்கிறார்கள் பார்த்தீர்களா? அவர்களை சொல்லவேண்டும்.

அவர்களிடம் பாலஸ்தீனம் எங்கிருக்கிறது என கேளுங்கள், கொழும்பிற்கு தேற்கே என்பார்கள். இஸ்ரேலிய தந்திரமும் தெரியாது, பாலஸ்தீன பொறுமையான அணுகுமுறையும் தெரியாது, ஆனால் சொல்வது மட்டும் ராஜதந்திரி போல‌

திடீரென பவர்ஸ்டார் வந்து, எனது அடுத்த படம் ரஜினியின் கபாலியினை விட பெரும் வசூல் செய்யும் என்றால் என்ன செய்வோம், அப்படித்தான் திருமுருகன் காந்தியின் பதிவுகளையும் பார்த்து நகரவேண்டி இருக்கின்றது

பாலஸ்தீனத்தை பற்றி பேசினால், தோற்றதாக கருதபட்ட அராபத்தின் பெருவெற்றி பற்றி பேசவேண்டிவரும், அவர் அமைத்திருக்கும் அஸ்திவாரம் அப்படி. அராபத் இல்லாமல் பாலஸ்தீனம் இல்லை.

அப்படியே ஈழம் பற்றி பேசினால் புலிகளும், பிரபாகரனும் பற்றி பேசவேண்டும், இவர்கள் சீரழித்தவிஷயம் ஏராளம், தமிழீழமே நாடுகடந்துவிட்டது.

ஆக ஒப்பிட்டு பேசவேண்டியது அராபத்தையும், பிரபாகரனையும், ஆனால் அதனை செய்தால் பிரபாகரனை கழுத்தை பிடித்துகொல்லுவது போல எல்லோருக்கும் கோபம் வரும், அவ்வளவு காரியம் உண்டு, அராபதி எதிலெல்லாம் நுட்பமாக சாதித்தாரோ அதிலெல்லாம் தலைகீழாக கிடந்தார் பிரபாகரன்.

அதனால்தான் அன்னார் அதனை மறைத்துவிட்டு சும்மா பாலஸ்தீன், ஈழம், ஐ.நா எதனையாவது மேம்போக்காக சொல்லிகொண்டிருப்பார். யாராவது ஏமாந்துகொண்டும் இருப்பார்கள், அவர்கள் தலைவிதி அப்படி.

No comments:

Post a Comment