Thursday, July 28, 2016

நான் கம்பனுமல்ல‌... நீங்கள் சடையப்பனுமல்ல




நண்பர்கள் என சொல்லிகொண்டவர்களின் ஜாதி வெறி அப்பட்டமாக தெரியும் நேரமிது, எனக்கு ஜாதி பற்றி பெரும் பிம்பமெல்லாம் இல்லை, நானும் அடக்கபட்ட சூத்திர சாதியே, அடக்குதல் என்றால் விரட்டி விரட்டி அடக்குதல் எனும் ஒருவகை வன்மத்தால் அந்நாளில் விரட்டபட்ட சாதி

ஆனால் அன்றைய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் ஏக மாறுதல் உண்டு, உலகமயமாக்கம் எனும் இக்கால கட்டத்தில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்கின்றது, வாழ நினைத்தால் வாழலாம் எனும் கனவு கனியும் காலம்

யாரும் யாரையும் நம்பி இருக்கவேண்டிய நிலை இல்லை, இப்படி எல்லாம் சாதி பேசுபவர்கள், வெளிமாநிலம் சென்றால் தமிழன் எனவும் அதே வெளிநாடு சென்றால் இந்தியன் எனவும், இன்னும் தாண்டி ஐரோப்பா சென்றால் ஆசிய கருப்பன் எனவும்தான் அழைக்கபடுவார்கள், நானை செவ்வாய் சென்றால் பூமிக்காரன் என்பார்கள்

ஆக மிக உயர்ந்த சிந்தனையும், பரந்த மனமுமே ஒருவனுக்கு வேண்டுமே தவிர, குறுகிய சுயநல சாதி வெறி அல்ல, அதனால் ஒன்றையும் கிழித்துவிட முடியாது.

இது உழைக்க வாய்ப்புள்ள காலம், இன்னொன்று நாம் எல்லோருமே வளரும் வர்க்கம், அதனால்தான் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கின்றோம், உலகம் அப்படி ஆகிவிட்டது,

காலத்திற்கேற்ப வாழவேண்டும் அதனை விட்டு பழங்கதைகளை பெசினால், உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கு பேச விஷயம் இல்லையா? புரட்சி, விடுதலலை, அடக்கப்ட்டோர் முன்னேற்றம் என சொல்ல தெரியாதா?

வேண்டாம்

காரணம் அது தேவை இல்லா காலம், வீணாண சர்ச்சைகளையும் அர்த்தமில்லா குழப்பங்களையும் அது கொண்டுவரும், அதனை வைத்து அரசியல் செய்யலாமே தவிர வேறு ஒன்றும் அல்ல‌

என்னை சாதி வெறியன், குழப்பவாதி என நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள், ஈழம் பற்றி மட்டும் எழுத நான் என்ன கதிர்காமத்திற்கு நேர்ந்துவிட பட்டவனா?

பிடிக்கவில்லை என்றால் நகர்ந்துவிடலாம் அல்லவா? உங்களை போலவே நானும் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எப்படி?

இதோ என் தாத்தா செருப்பினை கையிலேந்தி நடந்த அக்கிரகாரத்துல் என்னால் ஷூ போட்டு நடக்க முடிகின்றது, அங்கே வீடும் வாங்கி நடுத்தெருவில் கருவாடும் காயவைக்க முடிகின்றது என்றால் காலம் மாறி இருக்கின்றது என்றுதான் பொருள், இதில் நான் ஷூ போட்டது அரசியல் என சொல்லமுடியுமா?

திறமை உள்ளவர்கள் ஒருநாளும் சாதிய போர்வையில் , சிறுபான்மை போர்வையில் தன்னை அடைத்துகொள்ள மாட்டார்கள், திறமை அவர்களை உயர்த்தும்

தலித் மக்களின் வலியினை பாரதி கண்ணம்மா படம் அழுதமாக சொன்னது என்றால் அதிலென்ன தவறு கண்டீர்கள்?

எல்லாவற்றையும் சாதிய கண்ணோட்டத்ததோடு பார்த்தால் உங்களுக்கு கிளிண்டன் பிராமணனாகவும், சதாம் உசேன் தேவராகவும்தான் தெரிவார், பில்கேட்ஸ் நாடாராக தெரியலாம்

லெனின், மாவோ போன்றார் தாழ்த்தபட்டவராக தெரியலாம்.

என்ன பைத்தியக்ரமான சிந்தனை இது

சிவாஜி கணேசன் பெரும் உச்சம் பெற சாதி உதவிற்றா? இவ்வளவிற்கும் அவர் சொந்த சாதிகாரனன தேவர் பிலிம்ஸ் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை?

இப்படி சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்

திறமையுள்ள யாருடைய முன்னேற்றதை இங்கு சாதி தடுத்தது? சொல்லுங்கள், நாங்களும் திரையுலகம் அறிவோம்

ஒடுக்கபட்ட இனத்தின் அவருக்கும், மேட்டுகுடியான சுஜாதாவிற்கும் பெரும் நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள், யாழ் தாழ்திருக்கின்றார் அல்லது தாழ்த்தப்ட்டிருக்கின்றார்?

நேற்று அப்துல் கலாம் நினைவுநாள், தாழ்த்தபட்ட மீணவ குப்பத்துக்காரரான அவருக்கும் மேட்டுகுடி சுஜாதாவிற்கும் நல்ல நட்பு இருந்திருக்கின்றது, இருவருமே உச்சம் தொட்டிருக்கின்றார்கள்

பாரதியாரின் இறுதி நாட்களில் அவருக்கு துணை யார்?, காமராஜர் ஜாதி வைத்தா அகில இந்திய காங்கிரசினை ஆட்டி வைத்தார்?

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே , அதாவது நல்லவர்கள் எல்லா ஜாதியிலும் உண்டு

மனதை விசாலமாக்கிகொண்டு, பர்ந்த சிந்தனையோடு பதில் எழுதுங்கள், இல்லாவிட்டால் சென்றுவிடலாம்.

உங்கள் மகிழ்ச்சிக்காக எழுத நீங்கள் எட்டயபுரம் ஜமீனும் அல்ல, நான் பாரதியும் அல்ல,

நீங்கள் சடையப்பனுமல்ல நான் கம்பனுமல்ல‌




No comments:

Post a Comment