Monday, July 18, 2016

துருக்கி - என்ன நடந்தது?

::இந்த உலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த நாடு துருக்கி, ஐரோப்பியர்களை சிலுவைபோரினில் விரட்டி, அவர்கள் ஆசியாவில் காலூன்றதவாறு 400 ஆண்டுகாலம் காத்த பெரும் வல்லரசு அது. ஐரோப்பியரை கடல்வழியே அலையவிட்டது, வாஸ்கொடகாமா கடலில் அல்லாடும்போது நிச்சயம் துருக்கியரை சபித்துகொண்டேதான் அலைந்திருப்பார்.

இன்று 65% மக்கள் இஸ்லாமியர் எனினும் சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள், ஐரோப்பியர் போன்ற மனநிலை அது. அதனால்தான் சிரிய அகதிகள் துருக்கிக்கி சென்றார்களே அன்றி சவுதி போன்ற பணக்கார அரபு நாடுகளுக்கு அல்ல


அதனால்தான் இஸ்லாமிய நாடுகளிலே பெரும் ராணுவபலம் கொண்ட துருக்கி ராணுவத்தை வீதிகளில் முடக்கி விரட்டி இருக்கின்றார்கள். மக்களாட்சியின் மகத்துவம் மக்களுக்கு தெரிந்திருக்கின்றது

அதே நேரம் எதனை செய்ய கூடாது என துருக்கி ராணுவத்தினருக்கும் தெரிந்திருக்கின்றது

மக்கள் மிக விழிப்பாய் இருக்குமிடத்தில் காட்டாட்சி சாத்தியமில்லை என்பதனை உலகிற்கு சொல்லி இருக்கின்றது துருக்கி

அடிபட்ட பாம்பாய் சீறும் துருக்கி அரசு, அமெரிக்காவில் வசிக்கும் அரச எதிர்ப்பாளர் ஒருவரை ஒப்படைக்க கேட்கின்றது, கீரிசில் வசிக்கும் ராணுவ ஆதரவாளர் 10 பேரை ஒப்படைக்க மிரட்டுகின்றது, அவர்களும் ஒப்படைக்கபடபோகின்றனர். தன் நாட்டுக்கு எதிரானவர்கள் எங்கும் வசிக்கமுடியாது என பகிரங்கமாக மிரட்டுகின்றது துருக்கி

இதே போலத்தான் 1984ல் சென்னையில் பிடிபட்ட பிரபாகரனை ஒப்படைக்க சிங்கள கேட்டது, இந்திராவின் இந்தியா அதனை மறுத்தது அப்படி ஒப்படைத்திருந்தால் இன்று அங்கிள் சைமன் கார் வாங்கமுடியாது, திருமுருகன் காந்தி உலக மானிட நேயராக மாறமுடியாது, வைகோவிற்கு டிவி கிடையாது எல்லாம் கியாஸ் தியரி.

அதன் பின் அடுத்த நாட்டில் இருந்துகொண்டு தன்நாட்டுக்கு எதிரானவர்களை, தன்நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்களை பற்றி இலங்கை கருத்து ஏதும் கூறாது, தனியாக அழும். ஆனால் ஐநாவில் பாகிஸ்தான் வளர்த்துவிடும் தீவிரவாதம் பற்றி, அந்நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை தாருங்கள் என இந்தியா கேட்கும் போதெலாம் இலங்கை வாய்பொத்தி சிரிக்கும்

துருக்கியின் நிலைப்பாடு இப்பொழுது இலங்கையில் எதிரொலிக்கின்றது

விரைவில் இந்தியாவில் இருக்கும் இலங்கை எதிர்ப்பாளர்களை தாருங்கள் என அவர்கள் குரலெழுப்பலாம், உலகோடு ஒழுக இந்தியாவும் யோசிக்கலாம். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேட்கும் உரிமையினை இந்தியா இழந்துவிடும்,

இலங்கை கேட்கலாம் அல்லவா? எவ்வளவு நேரமாகும்?

அதற்காகத்தான் வைகோ இப்பொழுது மகா அமைதி, சீமான் அமைதிபடை 2ல் அருவியில் குதித்ததுபோல் தலைமறைவு, திருமுருகன் காந்தியின் இந்திய எதிர்ப்பு, சர்வதேச திடீர் மனிதநேயம் போன்ற நிலைகள்.

ஆனாலும் துருக்கி மக்களும், அந்த ஜனநாயகத்தை மதித்த துருக்கிய வலிமை மிகு ராணுவமும் பெரும் மதிப்பிற்குரியவர்கள்.

No comments:

Post a Comment