Saturday, July 16, 2016

காஷ்மீர் பிரச்சினை..

காஷ்மீர் கலவரங்களை கண்டித்து பாகிஸ்தானில் பேரணி : நவாஸ் ஷெரீப் அறிவிப்பு

கிழிந்த கந்தலான அரை நிர்வாண உடை அணிந்த ஒருவன், சிறிய மை கறைபட்ட கோர்ட் சூர்ட் அணிந்தவனை கண்டு "சீ.. உன் உடையில் கறை, அசிங்கமாக இருக்கின்றது, உவ்வே.." என‌ பரிகசித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கின்றது நாவஸின் செயல்பாடு.

பெரும் சீரழிவில் சிக்கி இருக்கின்றது பாகிஸ்தான்.

தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்கா நாளில்லை, சுடாத துப்பாக்கி இல்லை, கண்டிக்காத நாடு இல்லை, இந்நிலையில் இவர் இந்தியாவினை கண்டிக்கின்றாராம்.

இன்னும் வர்சிஸ்தான் தன்னை தனிநாடு என்றுதான் சொல்லுகின்றது, அங்கு பாகிஸ்தானின் சட்டம் எதுவும் செல்லுபடியாகாது, இதுதான் இவர்கள் லட்சணம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்தான் உலகின் ஆபத்தான தீவிரவாதிகளின் சொர்க்கம் என்கிறது ஆய்வு, இவர் இந்தியாவினை க0ண்டிக்கின்றாராம், ஒருவேளை அவர்கள் காஷ்மீர் போல நமது காஷ்மீரும் முழு தீவிரவாத மாநிலமாக மாறவில்லை எனும் கோபம் இருக்கலாம்.

# சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் வாழமுடியாமல், அரபு உலகமெல்லாம்ய் ஓடி, சவுதியிலும், துபாயிலும் தலைமறைவாக வாழ்ந்தவர் எல்லாம் எமது நாட்டினை கண்டித்து அறிக்கை விட்டு, பேரணி நடத்துவதுதான் காலக்கொடுமை.

வேறு ஒன்றுமில்லை, முன்பெல்லாம் காஷ்மீரில் மூன்றாம் நாட்டு தலையீடுவேண்டும் (வேறு யாருமல்ல அவர்கள்தான்) என சொல்லிவந்த அமெரிக்கா, இப்பொழுதெல்லாம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என சொல்லதொடங்கி இருப்பதன் விளைவு.

இது, அப்படி உலகம் பார்க்கவிட மாட்டாராம் இவர், சரி உன் கையில் ஒரு காஷ்மீர் உண்டே என்றால் இவர் அங்கிள் ஸ்டைலில் சிரிக்கலாம்

மோடி உலகமெல்லாம் சுற்றுகின்றார், அடிக்கடி அமெரிக்கா பறக்கின்றார் என ஆயிரம் கிண்டல்கள் இருந்தாலும், காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்காவின் பார்வை மாறி இருப்பதை கவனித்துதான் ஆகவேண்டும்.

நல்ல விஷயங்களை மறைக்ககூடாது, வாழ்த்துக்கள் மோடி. நவாஸ் தலையினை பிய்க்க இதுதான் காரணம்,

இந்திய எதிர்ப்பு இன்றி அங்கு அரசியல் சாத்தியமே இல்லை.

இதனை எல்லாம் அவர்களும் சொல்லமாட்டார்கள், தமிழக தமிழிசையும் பொன்னாரும் கூட சொல்லமாட்டார்கள்.

காங்கிரஸ்காரன் என முத்திரை குத்தபடும் நாம் சொல்லிகொள்ளும் நிலையில் இருக்கின்றது நிலை

யார் ஆண்டால் என்ன அயோத்தி (ஆமாம் அதேதான்) நன்றாக இருக்கவேண்டும் என்பார்கள். அப்படி இந்நாடும் நன்றாக இருக்கட்டும்.

No comments:

Post a Comment