Friday, July 15, 2016

இலங்கையில் இட ஒதுக்கீடு





ஈழ பிரச்சினைபற்றி பேசாதே, எல்லாவற்றையும் பொறுத்துகொண்டோம், ஆனால் தரபடுத்துதல் எனும் சட்டத்தை மட்டும் பொறுத்துகொள்ளமுடியவில்லை

அதாவது சிங்கள மாணவன் 200 புள்ளிகள் எடுத்தால் நாங்கள் 285 புள்ளிகள் எடுக்கவேண்டும், அரசு பணிகளிளிலும் சிங்களருக்கு அதிக வாய்ப்பு 60% மேல் கொடுக்கின்றார்கள், திறமைக்குத்தானே மதிப்புகொடுக்கவேண்டும்?, இது நியாயமா? தர்மமா? சொல்

இதனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கபட்டதாக கருதித்தான் ஈழ மாணவர்கள் ஆயுதம் தூக்கி எல்லாம் நாசமாயிற்று, இப்படி ஓரவஞ்சனை செய்யும் சிங்களனிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கமுடியும் சொல்?


நான் சொன்னேன், அங்கே தரபடுத்துதல் என்றால் எங்கள் நாட்டில் இடஒதுக்கீடு, கல்வியில் தாழ்ந்துகிடக்கும் மக்களை இதனைவிட்டால் தூக்கிவிட என்ன வழி இருக்கின்றது?

எங்கள் நாட்டில் கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ஆதரித்துவிட்டு , உங்கள் நாட்டில் கண்டிக்க எமக்கு என்ன உரிமை இருக்கின்றது,
சரி மலையக தமிழர் ஈழத்தோடு இணைந்த தனிஈழம் ஒருவேளை உருவாக்கபட்டிருந்தால் அம்மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பீர்களா

காரணம் அவர்கள் வறியவர்கள், பின் தங்கியவர்கள். சபிக்கபட்ட வாழ்வு அவர்களுடையது. , அவர்கள் சக உதிரம் , அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கபட்டிருக்குமா? சம்மதித்திருப்பீர்களா என்றேன்

நீ துரோகி, தமிழின துரோகி . நீ எல்லாம் சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு என சொல்லும் வந்தேறி பெரியார் கும்பலை சார்ந்தவன், உனக்கு ஒன்றும் புரியாது, தமிழன் வலி புரியாது என சொல்லி ஓடிவிட்டது

இதே தான் இங்குள்ள உணர்வாளர்களும், இந்திய இட ஒதுக்கீடு மிக சரி, மதிப்பெண் எல்லாம் மண்ணாங்கட்டி, தாழ கிடப்பவன் எத்தனை மதிப்பெண் எடுத்தால் என்ன? அவனுக்கு மேற்கல்வி வேண்டும், வேலை வேண்டும்.

ஆனால் சிங்கள இட ஒதுக்கீடு பெரும் தவறு, மதிப்பெண்தான் முக்கியம் இல்லாவிட்டால் ஓர‌வஞ்சனை, இனதுரோகம்.







No comments:

Post a Comment