Saturday, July 23, 2016

கபாலி : திரை விமர்சனம்



ஊரில் பொதுவிருந்து நடக்கும்பொழுது சாப்பாடு எப்படி இருந்தாலும் பந்தியில் அமரவேண்டும் என்பார்கள், அப்படி கபாலி பார்த்தாகிவிட்டது

மலேசிய காப்பியில் பல இடங்களில் கத்தரி விளையாடி இருக்கின்றது, சகட்டு மேனிக்கு வெட்டி தள்ளி இருக்கின்றார்கள், காட்சிகளை பாதிக்கின்றது, அந்த காட்சிகளை அப்படித்தான் செய்வார்கள் எதிர்பார்த்ததுதான்.

ஆனால் எதிர்பாரா விஷயம் மலேசிய சீனர்களை சடையன் என கொச்சைபடுத்துவது( அந்நாளைய சீனர்கள் சடைமுடி வளர்ப்பார்களாம்) சர்ச்சை வருகின்றது, இனி சீன படங்களில் தமிழரை கோவணம் என சொல்வ்வார்கள், பக்கத்து வீட்டு சீன அங்கிள் அப்படி படம் வந்தால் நிச்சயம் சொல்வார், ஆனால் இனி வரும்.

Stanley Rajan's photo.

அந்த கபாலி பட விமானம் மீது யாரும் கலர் பாமாயில் அடிக்க்காத வரை ரஜினிக்கு அசிங்கமில்லை, அப்படியான சர்ச்சை அது. தவறு

படம் இயக்குநர் விருப்பபடி அமைந்திருக்கின்றது, ரஜினிக்கு வயதாகிவிட்டதால் மெதுவாக நடக்கிறார், மெதுவாக துப்பாக்கி தூக்குகின்றார் எல்லாமே மெதுவாக, அப்படியே நமக்கும் மெதுவாக தூக்கம்

சில விஷயங்களில் எரிச்சல் வருகின்றது, உதாரணம் கிஷோர் ரஜினியினை திடீரென நீ ஆண்ட பரம்பரையா, சொந்தமாக நிலம் உண்டா? சோற்றுக்கு அலைவன் தானேநீ என்கிறார்

கதைபடி இருவருமே இந்திய தமிழக வம்சாவளி, அப்படி இருவருமே அடித்தட்டு, இருவருமே வந்தேறிகள், இருவரின் வம்சமுமே தமிழக்த்தில் புறக்கணிக்கபட்டு மலேசியா வந்து உழைத்துகொடுத்த‌ அடிமை வர்க்கம், இதில் அவர் இவரை ஆண்ட வம்சமா என்கிறார் கொடுமை

மலேசியா ஒரு குடியேற்ற நாடு, ஆண்ட பரம்பரை எனும் தகுதி பிரிட்டன் மகாராணியினை போன்றவர்கள் சொல்லவேண்டியது, அந்த கதையில் ஒரு தமிழன் இன்னொரு தமிழனை சொல்கின்றானாம், கால கொடுமை அய்யா

சம்பந்தமில்லா வசனம் இது, நான் தமிழ்பற்றுள்ளவன் அதற்காக தென்கொரியாவில் போய் தமிழ் வாழ்க, தமிழ்தாய் போற்றுக, தொல்காப்பியம் தெரியுமா? மொழிப்போர் தெரியுமா என்றால் எப்படி?

அப்படித்தான் சம்பந்தமில்லாத தன் அடியாழத்தின் சொற்களை பேசிக்கொண்டிருக்கின்றார் இயக்குநர்

அப்படித்தான் இம்மாதிரியான ஆண்ட பரம்பரை அழிச்சாட்டிய வசன இம்சைகள், மலேசிய தமிழர்களை பல வகைகளாக பிரிக்கலாம், முதல் பணக்காரர் தமிழர், பன்னாட்டு நிறுவணங்களில் பெரும் பொறுப்பு தமிழர், தமிழ் நீதிபதி, தமிழ் காவல்துறை அதிகாரி, தமிழின அமைச்சர்கள் என பெரும் வாய்ப்பு கொடுக்கும் நாடு, உலகில் எந்தநாட்டில் இது சாத்தியம்? ஒரு நாட்டிலும் சாத்தியமே இல்லை.

அந்த பல வகையிலும், அதில் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து பேசுகின்றாராம், இம்மாதிரியான போதை குழப்பம் எல்லா வசதியான நாடுகளிலும் உண்டு, அமெரிக்காவில் தென் அமெரிக்க வம்சாவழி, ஐரொப்பாவில் சில குடியேறிய வம்சங்களிடமும் இந்த கொடுரம் உண்டு

ரஞ்சித் தலித் புரட்சி,போராளி என பல கொள்கை இருக்கலாம், ஆனால் பட கடைசியில் சில மாணவர்கள் ரஜினியிடம் கேட்கின்றார்கள், நல்ல மதிப்பெண் எடுத்த்தாலும் எதிர்காலமில்லை என மறைமுகமாக சிலவற்றை சொல்கின்றார்கள்,

தமிழகத்தில் என்ன அப்படியா நிலை? தாழ்த்தபட்ட மாணவன் கோட்டா அடிப்படையில் எளிதாக மேலே தாவ முடிகின்றது, வேலையினை பெற முடிகின்றது. இந்திய யதார்த்தம் அப்படி என்றால், உலகம் முழுக்க அப்படித்தான் இருக்கவேண்டுமென்றால் எப்படி?

ஆக ரஞ்சித் சொல்வது படி பார்த்தால் இந்தியாவில் ஒரு பிராமண மாணவ‌ன் தானே அப்படி அழவேண்டும், அப்படியானால் யார் புலம்பவேண்டும்? யார் போர்கொடி தூக்கி புரட்சி, ஒடுக்கபட்டொம், தாழ்த்தபடுகின்றொம் என பரணிபாட வேண்டும்? யாரை அடக்கிகொண்டிகொண்டிருக்கின்றோம்? அந்த பிராமண மாணவர்களுக்கு எந்த சுந்தரேசன் வருவான்?

மலேசியாவில் ஒரு நியாயம் தமிழகத்தில் ஒருநியாயமா?

மலேசியாவில் சிலை வைக்க அனுமதிக்கபட்ட இந்தியர்கள் காந்தியும், விவேகானந்தரும். ஆனால் படத்தில் அம்பேத்கர் தான் வருகின்றார், அதனையாவது கடக்கலாம், சே குவேரா படமும் வருகின்றது, கம்யூனிஸ்ட்களை ஒரு காலத்தில் விரட்டி ஒடுக்கிய மலேசியாவில் சே குவேரா படமாம், கொஞ்சம் நிதானம் வேண்டாமா?

காந்தி கோட்டினை கழற்றியதும், அம்பேத்கர் கோட் மாட்டியதும் அரசியலாம், இதனை விட என்ன அபத்தம் சொல்லமுடியும்

காந்தி கோட் மாட்டினார், வாதாடினார். இனி வெள்ளையன் கோட்டுக்கு போகமாட்டேன் எனும்பொழுது கழற்றினார், மதுரை மக்களை கண்டதும் மேலாடை அணியமாட்டேன் என்றார், இது ஒரு சுதந்திர மனப்பான்மையே அன்றி என்ன அரசியல்?

அம்பேத்கர் லண்டனுக்கு படிக்க சென்றவர், சட்டம் படித்தால் கோட் மாட்டித்தான் ஆகவேண்டும் அதிலென்ன அரசியல்? அப்படியானால் இன்று லட்சகணக்கான வக்கீல்கள் இருக்கின்றார்கள் எல்லாம் அரசியலா?

அப்படியானால் நேதாஜி கலெக்டர் கோட்டை கழற்றி ராணுவ யூனிபார்ம் மாட்டியது என்ன அரசியலா? வஉசி செக்கிழுத்தது என்ன வருமான வரிதுறையினை ஏமாற்றிய அரசியலா? அர்த்தம் வேண்டாமா?

கங்கை கரையிலே சாமியார் வளர்க்கும் தாடியும் , பெரியார் வளர்த்த தாடியும் பக்தி என்றால் விட்டுவிட முடியுமா? அப்படி ஏதொ புலம்பி இருக்கின்றார். குதிரைக்கு கடிவாளம் போல ஒரே பார்வை, என்ன கெட்டுவிட்ட்து தானு வீட்டு காசுதானே, அவருக்கென்ன? உலகெல்லாம் புரட்சி செய்யமுயன்றிருக்கின்றார்

அபத்தமான காட்சி உண்டென்றால் சீனனிடம் ரஜினி நான்கொட் போட்டால் உனக்கு பிடிக்கல இல்ல, போடுவேண்டா என கத்துவது

அடிப்படையில் தமிழரும் சீனரும் உழைக்க வந்தவர்கள், இருவருக்குமே கோட் சூட் தெரியாது, அதுவும் தமிழர்கள் செய்ய தயங்கிய அடிமட்ட தொழிலாலான் மலம் அள்ளும் தொழில் கூட அக்காலத்தில் செய்த இனம் அது, சுரங்க தொழில் முழுக்க அவர்கள்தான்

இன்று அந்த தலைமுறை உழைப்பில் உயர்ந்திருக்கலாம், கடும் உழைப்பாளிகள், உழைக்கின்றார்கள் வாழ்கின்றார்கள், ஆனால் ஆதிகாலத்தில் அவர்கள் நிலை மகா மோசம், தமிழரை விட மோசம்

அவர்களிடம்தான் சென்று நான் கோட் போட்டது உனக்கு பிடிக்கலல்ல என்றால் எப்படி இருக்கும்?

உதாரணத்திற்கு நமது ஊரில் மீசை முறுக்கும் ஒருவன் நரிகுறவன் முன்சென்று "நான் மீசை முறுக்குவது பொறுக்கல இல்ல, முறுக்குவேண்டா பொறுக்கலண்ணா சாவுடா..." என்றால் எப்படி இருக்கும்?

அதே காட்சிதான், விவரம் புரிந்தால் அதே காமெடிதான், இது போதாதா? பிறகு ஏன் வீணாக காமெடி காட்சிகள்

படத்தின் பெரும் கொடுமை பிண்ணணி இசைதான், இந்திய பெருந்தலைவர்கள் இறந்தால் ஆகாசவாணியில் ஒலிபரப்பாகும் அமரர் இசை போலவே பெரும் அழுகை ராகம்

அந்த இடத்தில் நாயகனை தூக்கி நிறுத்திய இளையராஜா நினைவுக்கு வந்தார், என்ன அந்த‌ பஞ்ச் படமோ, அந்த‌ அரசியல் படமோ ஆனாலும் அவர் ஏன் தவிர்க்கபட்டார் என சிந்தனை செல்லத்தான் செய்தது,

அது வேறு சினிமா அரசியலாக இருக்கலாம்

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, இயக்குநர் ரஜினிக்கு கொடுத்திருப்பது மிக சிறிய சுதந்திரம், அந்த சைக்கிள் கேப்பில் ஸ்டைலாக விஸ்வரூபமாக நிற்கிறார் ரஜினி
காந்த், படத்தின் எல்லா இம்சைகளும் அவர் ஸ்டைலிலே மறைந்துவிடுகின்றது, வியாபித்து நிற்கிறார் அவர்

அதுதான் ரஜினிகாந்த், நாள் என்ன ஆனாலும் தங்கம் ஜொலித்துகொண்டேதான் இருக்கும், ரஜினி அப்படித்தான்










No comments:

Post a Comment