Monday, July 18, 2016

"இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு": பொய்யான தகவல் தரும் நூல்




"இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு", இப்படி ஒரு மகா பொய்யான நூலை எழுதியிருக்கின்றார் ஒருவர், இப்படி மகா அபத்தமாக எழுதிவிட்டு கொஞ்சமேனும் வெட்கமே இல்லாமல் விடியோ வேறு வெளியிட்டு முகநூலில் விட்டிருக்கின்றார்.

விவரம் தெரிந்தவர்கள் வெறுப்புடன் அவர் முகம் பார்க்க அவரே வழிசெய்கிறார். அவ்வளவும் உளறல், புலி, நெடுமாறன், வைகோ, சீமான் எல்லோரையும் தமிழகம் கைவிட்ட கோபம் அந்த முகத்தில் தெரிகின்றது.

அப்படி இந்தியா என்ன ஆக்கிரமித்தது என்றால்? எல்லா இலங்கை சந்தை, விவசாயம்,மீன்பிடி, மூக்குபொடி வரை இந்தியா ஆக்கிரமித்துவிட்டதாம். இன்னும் விடாமல் பிடித்துகொண்டும் இருக்கின்றதாம்.

விளக்கவேண்டுமானால் ஏராளம் விளக்கலாம், ஆனால் ஒரே ஒரு விஷயம் போதும் அன்னாரின் பொய் பலூனை உடைக்க.

1950களில் மலையக தமிழரை யாழ்பாணர்+சிங்களர் விரட்டும்பொழுது இந்த தேசம் என்ன இலங்கையினை மிரட்டியதா? 1974ல் கச்சதீவினை கொடுத்தது யார்? தன் நாட்டு நிலத்தை விட்டுகொடுத்ததுதான் ஆக்கிரமிப்பா?

தமிழர் மீதான கலவரம் கட்டுகடங்காமல் போக, ஓடிவந்து அன்னை இந்திரா உதவியதன் பெயர் ஆக்கிரமிப்பா?. போராளிகளுக்கு எல்லாம் பயிற்சியும் உணவும் கொடுத்தன் பெயர்தான் ஆக்கிரமிப்பா?

போரில் கடந்த 30 வருடமாக வந்த ஈழமக்களை, சொந்த மக்கள்போல அரவணைத்து வைத்திருப்பதன் பெயர் ஆக்கிரமிப்பா?

ஆக்கிரமிப்பு என்றால் என்னவென்று தெரியுமா?. அன்னார் சொல்லிவிட்டார், திரிகோணமலையில் 100 ஏக்கர் பரப்பில் இந்திய எண்ணெய்குடோன் உள்ளது, பெரும் ஆக்கிரமிப்பு. அட பதரே, எல்லா நாடுகளும் இன்னொரு நாட்டில் அப்படி பாதுகாப்பு குடோன் வைக்குமே. ஈரானுக்கு இந்தியாவில் கூட குடோன் உண்டே, அது என்ன ஆக்கிரமிப்பா?

அந்த திரிகோணமலை குடோனுக்கு இந்தியா கொடுக்கும் விலை என்ன? இலங்கையின் வருமானம் என்ன? சும்மாவா கொடுக்கின்றது இலங்கை?

இந்திய முதலாளிகள் இலங்கையில் தொழில்நடத்துகின்றார்களாம், அன்னார் கொதிக்கின்றார். அட நாதாரிபயலே மகின் விமானமும், ஏர் லங்கா விமானமும் இலங்கை பயணிகள் கப்பலும் இந்தியா வரவில்லையா? இலங்கை தேயிலை தோட்டம் என்ன இந்திய முதலாளி கையிலா உள்ளது.
அங்கிள் சைமனே எப்படி பகிரங்கமாக சொன்னார், "தமிழகத்தில் தொழில்நடத்தும் சிங்களன் பற்றி எனக்கு தெரியும், குறி வைத்திருக்கின்றேன்.."

சரி இலங்கை குடிமக்களான ஈழதமிழர் இந்தியாவில் தொழில் செய்யவில்லையா? அது யார் லைக்கா சுபாஷ்கரன்? அவர் என்ன மதுரைக்காரரா? அவர் எடுக்கும் தமிழ்படம் என்ன? ஐங்கரன் நிறுவணம் யாருடையது? சென்னையில் படமெடுக்கவில்லையா? இது என்ன ஆக்கிரமிப்பா?

மலையக தமிழரான முத்தையா முரளிதரன் எனும் இலங்கை கிரிக்கெட் வீரர் சென்னையில் முதலீடு செய்யவில்லையா? சரி, இலங்கை எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் வீடு சென்னையில் இல்லையா? இதுதான் ஆக்கிரமிப்பா

இறுதியில் ஒன்று சொன்னார் பாருங்கள், சப்தநாடியும் அடங்கிவிட்டது. அதாவது அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் கூட வியாபார ஒப்பந்தம் இல்லையாம்.

அட பொய்யரே, இலங்கையில் பெப்சி,கோக், மெக்டொனால்ட் , கேஎப்சி என அமெரிக்க உற்பத்தி இல்லையா? அது கிடைக்கவில்லையா?. அமெரிக்க ஆயுதம் சிங்கள ராணுவத்திடம் இல்லையா? ஒப்பந்தம் இல்லாமல் அவை எப்படி இலங்கையில் நுழையும்?

காக்கா தூக்கிகொண்டு போட்டதா?

அரேபியாவில் சுற்றுசூழல் பாதிப்பு என எண்ணெய் எடுக்காமல் விட்டுவிட்டார்களா? ஆப்ரிகாவில் சுரங்கதொழில் நின்றுவிட்டதா? ஒரு நாடு தன்நாட்டின் கனிம வளங்களை விற்காதா? இந்தியாதான் காரணமா? இதெல்லாம் பெரும் பொய் இல்லையா?

ஆக உலகநாடுகள் எல்லாம் செய்தால் அது வியாபாரம், ஆனால் இந்தியா செய்தால் ஆக்கிரமிப்பா

ஐஎஸ் இயக்க கொடூர தாக்குதல்களை விட, எபோலா காய்ச்சலை விட மகா பயங்கரமானவர் இந்த புத்தகத்தை எழுதி இருப்பவர்.

சொல்வதெல்லாம் பொய்.




 18-07-2016




ஜேர்மன் அரசாங்கத்தின் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

# இது இலங்கையில் ஜெர்மன் ஆக்கிரமிப்பாக இருக்குமோ?




 19-07-2016

ஹம்பாந்தோட்ட துறைமுக மேம்பாட்டு பணியினை சீனா தொடரும் , சவுதி அரசுடன் இலங்கை பணியாளர்கள் தொடர்பாக ஒப்பந்தம். பிரிட்டனின் புதிய அதிபர் தெரசே மேயினை சந்திக்க சிரிசேனா திட்டம்.

அட என்னய்யா இது?, ஜெர்மன், சிங்கப்பூர், சீனா, சவுதி , பிரிட்டன் என‌ தொடர்ந்து இலங்க்கையினை ஆக்கிரமித்தால் என்ன அர்த்தம், அந்த தோழர் பாலனை எங்கே?

"உலக ஆக்கிரமிப்பில் இலங்கை" என ஒரு புத்தகம் எழுத வேண்டாமா? கூப்பிடுங்கள் அவரை

இந்தியா மட்டும் ஆக்கிரமிக்கும் இலங்கையினை, மற்ற நாடுகள் எப்படி ஆக்கிரமிக்கலாம் ,

எங்கே அந்த இலங்கை தேச பக்தர்?




சிங்கப்பூர் இலங்கை இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. வர்த்தகம், கலாச்சாரம் உட்பட பல விஷயங்கள் தொடர்பானாது

# இது இலங்கையில் சிங்கப்பூர் ஆக்கிரமிப்பாக இருக்கலாம்


No comments:

Post a Comment