Thursday, July 14, 2016

நாங்க நெருப்புடா நெருங்குடா பாப்போம்...





புலிகளை ஒழித்த அமெரிக்காவில் இருந்துகொண்டு, தடை விதித்த ஐரோப்பாவில் இருந்துகொண்டு, அங்கிள் சைமனை விரட்டிய கனடாவில் இருந்துகொண்டு, ஈழ அகதிகளை விரட்டும் ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு

புலிகளை அழிக்க சொல்லி சிக்னல் காட்டிய நார்வேயில் இருந்துகொண்டும்

இன்னும் புலிபெயரை சொன்னாலே பிடித்து இலங்கையிடம் ஒப்படைக்கும் கிழக்காசியநாடுகளில் இருந்துகொண்டு கவனமாக இந்தியாவினை திட்டிகொண்டிருக்கின்றார்கள்.


அரேபிய நாடுகளும் சிங்கள அரசுக்கு செய்த உதவிகள் கொஞ்சமல்ல, அங்கிருந்தும் இந்தியாவினைத்தான் சீமானிய குஞ்சுகள் சாடுகின்றன‌.

அவ்வளவு தைரியம் இருந்தால் அவர்களை பார்த்து "ஏய் எமது எதிரிகளே..உங்கள் நாடு சிதறட்டும், உடையட்டும், ஈழம் மலருட்டும்" என தோள்தட்டலாம் அல்லவா?

செய்யமாட்டார்கள், செய்தால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும்

அட இலங்கையினையாவது பேசலாம் அல்லவா? ம்ஹூம் எதிர்காலத்தில் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கிவிட கூடாது எனும் முன் ஜாக்கிரதையும் இருக்கின்றது.

இந்தியாவினை சாடுகின்றார்கள். காஷ்மீரில் ஒன்று என்றால் கடும் மகிழ்ச்சி. காஷ்மீர் பிரியுமாம், அப்படியே வடகிழக்கு மாகாணம் பிரியுமாம், தமிழ்நாடு பிரியுமாம், ஈழம் மலருமாம்.

அதனையே அமெரிக்காவில் கருப்பின இளைஞன் சுட்டுகொல்லபட்டபொழுது, பிரான்சில் தீவிரவாதிகள் தாக்கும்பொழுது சொன்னால் என்ன?

தென்சீன கடலிலிருந்து விரட்டபட்ட சீனாவினை பார்த்து சொன்னால் என்ன? ஹாங்காங்கினை இன்னும் தன் முழுகட்டுபாட்டில் கொண்டுவர முடியாது தவிக்கும் சீனாவிடம் இப்படி ஈழமும் ஆகும் என சொன்னால் என்ன?

அடிக்கடி மோதிகொள்ளும் அரேபிய குழுக்களை பார்த்து சொன்னால் என்ன? சொல்ல முடியுமா?

உய்க்குர் தீவிரவாத தலைவர் போராளி என்றும், தலாய்லாமா போராளி என்றும் சீன தூதரகத்தில் ஒரு மனுகொடுங்கள் பார்க்கலாம்.

யாருக்குத்தான் கொள்கை இல்லை, இதோ ஐஎஸ் இயக்கத்திற்கும் உண்டு, துருக்கி அரசை கண்டித்து போராளி அல்பத்தாதி வாழ்க என சொல்லமுடியுமா?

முடியாதல்லவா? பின்னர் ஏன் இந்தியாவினை மட்டும் சாடுகின்றீர்கள்

அடேய் மங்கி பாய்ஸ். எத்தனை கலவரங்களை, களரிகளை தாண்டி சிலிர்த்துநிற்கும் தேசம் இந்த இந்தியா, உடையுமா? நடக்குமா?

# நாங்க நெருப்புடா நெருங்குடா பாப்போம்...

# போராளி கல்பனா அக்கா ஒப்புகொண்ட படி நீங்கள் பொசுங்குனா பொசுங்குற கூட்டம் , வரலாறு அதனைத்தான் சொல்கிறது.







No comments:

Post a Comment