Friday, July 15, 2016

வங்கக் கடலினிலே மீன்கள் பிடிப்போம்..

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் வாரமிருமுறை மீன் பிடித்து கொள்ளும் இலங்கை அரசின் திட்டத்திற்கு யாழ்பாண மீனவர்கள் கடும் எதிர்ப்பு போராட்டம் , வட இலங்கையில் பதற்றம்

அங்கிள் சைமன் வேர் ஆர் யூ, எங்கிருந்தாலும் உங்கள் முகத்தில் நீங்களே கரிபூசிகொள்வது நல்லது


இந்த திருமுருகன் காந்தி, வைகோ, நெடுமாறன் இன்னபிற தமிழ்தேசிய வியாதிகள் எல்லாம் எங்கே போய் தொலைந்தீர்கள்? இந்த ஈழத்தவருக்காய் இந்திய தேசியகொடியினை எரித்த அந்த துரோகி எங்கே? பிடியுங்கள்.

அடேய் பொய்யர்களா?, அங்கே நோக்குங்கள் எவனாவது தமிழக மீனவர் என சொல்கின்றானா? எல்லோரும் இந்திய மீனவர் என நம்மை குறிக்க, நீங்களோ தொப்புள் கொடி, இன உறவு, தமிழினம் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கின்றீர்கள்.

அவர்கள் இலங்கையார்களாக இருக்கின்றார்கள், அதனை போல இங்குள்ள தமிழர்களை இந்தியராக இருக்கவிடுங்கள்.

[gallery ids="1444,1443,1442" type="square"]

(படத்தை பாருங்கள், நமது மீனவர்களை கைது செய்ய சொல்லி இலங்கை அரசிற்கு கோரிக்கை வைக்கின்றார்கள் இவர்களுக்காகத்தான் இந்த தேசவிரோத கும்பல் கத்திகொண்டிருக்கின்றது )

தனி தமிழ்நாடு அமைந்தால் ராமேஸ்வர மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கலாம் என அளந்துவிட்டவன், இதோ பார் யார் தடுக்கின்றார்கள், உண்மை பிரச்சினை என்ன?

நமது மீன்பிடிக்கும் வளங்களுக்கு முன்னால் அவர்களால் நிற்கமுடியவில்லை, பெரும் எண்ணிக்கை நம்மவர்களது, அந்த அச்சமே அவர்களுக்கு காரணம், ஆழ்கடல் மீன்பிடிக்கு தாவாமல் இது தீராது, முன்பே சொன்னோம்

உண்மையில் இது மத்திய அரசின் பெருவெற்றி, ஜெயாவோ கலைஞரோ இதனை செய்யவில்லை, மோடி அரசின் அட்டகாசமான வெற்றி இது, இலங்கையினை பணிய வைத்திருக்கின்றார்கள். கொண்டாடபடவேண்டிய செய்தி, ஆனால் சத்தமில்லை.

டெல்லி எந்நாளும் தமிழருக்கு எதிரி என சொன்னவன் எல்லாம் எங்கே? இதெற்கெல்லாம் ஒருவனும் வாய்திறக்கமட்டான்.

காரணம் தமிழக ஊடகங்கள் அப்படி, தேசிய எண்ணங்களை வளரவிடாது அவை கிடக்கட்டும்

இந்த பொன்னார், தமிழிசையாவது இதனை தமிழகத்திற்கு எடுத்துசொல்லலாம் அல்லவா? அவர் குஷ்பூவினை கண்டித்து கொண்டிருக்கின்றார்,

தமிழகத்தில் பாஜக வளராமல் போவது இப்படித்தான். பின்னர் டெப்பாசிட் போகாமல் என்ன செய்யும்?

மிஸ்டர் தமிழ்தேசிய வியாதிஸ், ஒழுங்காக ஈழத்து யாழ்பாண தமிழ் மீனவர்களை கண்டிக்கின்றோம் என அறிக்கைவிட்டுவிட்டு ஓடிவிடுங்கள், சொல்லாமல் கூட ஓடலாம். அப்படி அறிக்கை விட்டால் ஈழதமிழருக்காய் உங்கள் பொய்யான ஓலம் கேட்டு செத்த முத்துகுமார் முதல் செங்கொடி வரை எல்லோர் ஆன்மாவிற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு அறிக்கை படியுங்கள்.

இல்லாவிட்டால் ராமேஸ்வர மீனவர்கள் பெரும் கூட்டம்போட்டு, தமிழனுக்கு கிடைக்கும் வாய்ப்பினை தடுக்கும் யாழ்பாணத்தானை நீங்கள் கண்டிக்காததை சந்தேக கண்ணோடு பார்ப்பார்கள்

அப்படி நீங்கள் தமிழக மீனவர் துரோகி ஆவீர்கள், பின் உங்கள் உண்மை சுயரூபமான தமிழின துரோக முகம் வெளிப்படும்

இப்போதைக்கு தமிழக‌ மீனவ துரோகிகள் பட்டம் உங்களுக்கு வழங்கபட காத்துகொண்டிருக்கின்றது.

எப்படியோ ராமேஸ்வரம் பகுதியில் மோடிக்கு ஒரு வாக்குவங்கி திறக்கபட வாய்பிருக்கின்றது,

பாரத பிரதமராக செயல்பட்ட மோடிக்கு வாழ்த்துக்கள்.

இதனை மட்டும் செயல்படுத்திவிட்டு ராமேஸ்வரம் வாருங்கள்அன்று மிகபெரும் மக்கள் திரள் உங்களுக்காக காத்திருக்கும், நன்றியோடு

வந்தே மாதரம்.

1 comment:

  1. கூடுதல் தகவல்

    வடக்கு மாகாண மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க உரிமை இல்லை.

    தரை நீர்த்தலங்களில் தான் மீன் பிடிக்க முடியும்.

    சிங்கள மீனவன் கடலில் மீன் பிடிக்கலாம்.

    போர் முடிந்த பின் விதித்த தடைகளில் இதுவும் ஒன்று.

    மறுபடி கடல் புலி தோன்றுவார்கள் என்பதால் இந்த தடை...

    இவர்கள் அந்த தடையை நீக்க கூட கோரிக்கை வைக்கவில்லை.

    இந்திய மீனவன் அங்கே மீன்பிடிக்க கூடாது. மீறினால் கைது செய்...

    தேசியம் மலர்கிறது இலங்கையில்....

    வாழ்க ஶ்ரீ லங்கா ஒருமைபாடு....

    ReplyDelete