Monday, July 18, 2016

திருமுருகனின் மறுமுகம் கிழிந்து கொண்டிருக்கின்றது

வினவு தளம் திருமுருகன் காந்தியினை தணலாக‌ புட்டு புட்டு வைக்கின்றது, உமர் நைனின் வாக்குமூலம் இன்னமும் பெட்ரோலை வீசுகின்றது.

லாட்டரி மார்ட்டின் எனும் பெரும் சர்ச்சகுரியர் உண்டு, ஏராளமான வழக்குகளும் அவர் மீது உண்டு. அட அவ்வளவு ஏன் அவருக்காக தமிழக அரசுகள் கொண்டுவந்த சட்டங்களே உண்டு (லாட்டரி ஒழிப்பு, நில மோசடி சட்டங்கள்) என்றால் அன்னாரின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும்.

ஆனால் கலைஞர் பாவம், இவரின் தயாரிப்பான இளைஞன் படத்திற்கு வசனம் எழுதி 45 லட்சம் பெற்றுகொண்டபின்புதான் இவர் பெரும் மோசடியாளார் என தெரிந்து ஒதுங்கிகொண்டார். பாவம் அவர் எல்லாமே பின்னர்தான் அவருக்கு புரியும், அப்பாவி,


மார்ட்டின் ஒரு பெரும் பொருளாதாரா குற்றவாளி என்பது சிக்கிம் அரசு முதல் எல்லா மாநில அரசுகளுக் சாட்டியிருக்கும் குற்றசாட்டு.

தமிழக கட்சிகளையம், அரசுகளையும் அவர் கட்டுபடுத்திய காலமும் இருந்தது,

ஆனால் தென்னகம் வாழ் மகாதேவன் அளவிற்கு அவருக்கு நுட்பமில்லை, அவ்வகையில் திருச்செந்தூரின் இரண்டாம் கடவுளின் சாமர்த்தியம் வேறு.

இரு கட்சிகளும் கைவிட்டபின் அன்னார் தேசிய கட்சியினை நெருங்கிபார்த்தார். காங்கிரஸ் உஷாரானது அனுமதிக்கவில்லை. அதனால் தமிழக பாரதிய ஜனதாவில் தன் மனைவி லீமா ரோசினை ஊடுருவவிட்டு பார்த்தார், அதுவும் நடக்கவில்லை, மதவாதம் ஒழிக என வந்துவிட்டார்.

அதன் பின் அவரே தன் மகன் டைசன் மூலம் தொடங்கியதுதான் தமிழர் விடியல் கட்சி. எல்லா மாநிலங்களும் நீதிமன்றத்தில் மார்ட்டின் மீது ஒப்பாரி வைக்க, அன்னாரோ தமிழர்களுக்காக கட்சி வைத்து ஒப்பாரி வைத்தார்.

அந்த ஒப்பாரியில்தான் நீனும் ஒலமிடு என சொல்லி திருமுருகனுக்கு 50 லட்சம் கொடுத்தாராம்.

மே 17 இயக்கத்திலிருந்து விலகி இருக்கும் உமர் நைனும் இதனையே சொன்னது குறிப்பிடதக்கது.

ஈழத்தில்தான் ரவுடிகளும், சமூக விரோதிகளும் போராளிகள் என கிளம்பினர், 1983களில் கிட்டதட்ட 30 குழுக்கள் தங்களை போராளிகள் என சொல்லிகொண்டனர் என்கிறது வரலாறு

போராட்டம் என்றால் அதன் பெயரில் மக்களிடம் பணம் பறிக்கவேண்டும், கொள்ளை இடவேண்டும் அதுவே போராட்டம் என கொள்கை வைத்திருந்தவை அவை.

நாங்கள் ஈழம் வாங்கி தருகிறோம் என அவை சம்பாதித்தது கொஞ்சமல்ல, பின்னாளில் ஈழப்போராளிகளை இந்தியா அணுகியபோதும் அதனைத்தான் சொன்னார்கள்,

பின் இந்தியா பொறுக்கி எடுத்து 4 குழுக்களுக்கு உதவியது.

அதுவும் 4 பேர் இந்திய பணத்தை பங்கிட்டுகொள்வதனால் தானே பணம் குறைகிறது, 3 பேரை அழித்துவிட்டால் மொத்த இந்திய பணமும் நமக்குதானே என சிந்திக்கவைத்து சர்வமும் நாசமாகவும் போய்விட்டது.

அப்படி பட்ட போராளிகள் தமிழகத்திலும் உருவாகி இருக்கின்றனர் என்பதுதான் மகா வேதனை.

திருமுருகனின் மறுமுகம் கிழிந்து கொண்டிருக்கின்றது.

இன்னும் யாரெல்லாம் வந்து அங்கிள் சைமன் பரவாயில்லை என சொல்லவைத்துவிடுவார்களோ என அச்சம் இருக்கின்றது.

No comments:

Post a Comment