Monday, July 11, 2016

பிரபாகரன் - கட்ட பஞ்சாயத்து தலைவன்

ராஜிவ் காந்தியுடனான சந்திப்பின் பொழுது முதலில் தமிழீழம் அல்லாத முடிவிற்கு வரமாட்டேன் என சீன் காட்டினான் பிரபாகரன், முடிந்தால் அடைந்துகொள் அது உன் திறமை,
ஆனால் எங்களின் முடிவு இது என ராஜிவ் சொல்ல,

பின் சட்டென்று என்னை நம்பிய போராளிகளை கைவிடமாட்டேன், அவர்களை பராமரிக்க மாதம் 50 லட்சம் வேண்டுமென்றான், இல்லை என்றால் இப்போதே சயனைடு கடிப்பேன் என்றான், தன்னை நம்பிய போராளிகளை விடுவதை விட சயனடை கடித்து சாவது மேல் என்றான், கோயபல்ஸ் வைகோவும் இதனை சொல்லி இருக்கின்றார்.


பணம் கொடுக்க சம்மதித்து முதலில் கொடுத்துபார்த்த இந்தியா, அவன் டிமாண்ட் இன்னும் அதிகரிக்கவும், மற்ற குழுக்களிடம் பேச கூடாது, நான் மட்டுமே ஈழதமிழர் பிரதிநிதி எனக்கு இந்தியா கப்பம் கட்டவேண்டும் என மிரட்ட, இந்தியா பணியவில்லை

அதன் பின்னர் தான், அமைதிபடையினை எதிர்த்தான், ராஜிவினை கொன்றான் பிரபாகரன்,

என்னை நம்பிய போராளிகளை காக்கவே அமைதிபடை எதிர்த்தேன், ராஜிவினை கொன்றேன் என்றெல்லாம் பேசிய பிரபாகரன் 2009ல் என்ன செய்தான்

எல்லா போராளிகளையும் அம்போ.. என விட்டுவிட்டு பெருங்காட்டிற்குள் தப்பி ஓட திட்டமிட்டான். அவன் சயனைடு கடிக்கவுமில்லை, நம்பி வந்த எந்தபோராளியினை காக்கவும் இல்லை, இதனை தமிழினி தன் வாக்குமூலத்தில் அழுத்தமாக பதிந்திருக்கின்றார்.

இதுதான் பிரபாகரன், அவனுக்கு தேவை பணமும் கொஞ்சம் ஆயுதமும் அவனுக்கொரு அடியாள் கூட்டமும். ஒரு கட்டபஞ்சாயத்து கும்பல் தலைவன் தான் அவன்.

No comments:

Post a Comment