Tuesday, July 5, 2016

இன்றைய இலங்கை

இந்திய அரசும் கலைஞரும், சோனியாவும் 2009ல் ஈழ தமிழரை அழித்தனர் என கூவி திரிபவர்களை நீ ஏன் விமர்சிக்கின்றாய், அப்படியானால் இவர்கள் உதவாமல் எப்படி இலங்கையால் யுத்தத்தில் திடீரென வெல்லமுடிந்தது என்கின்றார்கள்

FB_IMG_1467785562710

அதே யுத்தத்தில் உலகநாடுகள் ஒரணியில் திரண்டு இலங்கைக்கு உதவியதை சொன்னாலோ, அல்லது 1987, 1995ல் புலிகள் தோற்றோடியதை சொன்னாலோ புரியாது,

சரி இந்த சம்பவங்களாவது தெரிகிறதா என பார்க்கலாம்.

2001க்கு பின் உலகநிலைகள் மாற, நார்வே எனும் தன் முகமூடியினை அனுப்பி புலிகளை பல்ஸ் பார்த்தது அமெரிக்கா, புலிகள் என்ன சொன்னாலும் கேட்டுகொண்டு திரும்ப அவர்கள் என்ன தமிழக சினிமா டைரக்டர்களா? அல்லது திருமாவளவனா? வைகோவா? இனி புலிகள் முடிக்கபட வேண்டியவர்கள் என குறித்தார்கள்.

உண்மையில் அமெரிக்க கோரிக்கை என்ன? புலிகள் மறுத்தது என்ன? என இன்றுவரை தெரியாது. ஆனால் புலிகளின் ஒரே பயம் ஏதும் நாடு தலையிட்டால் நாம் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும், முடியாது. எனவே எந்த நாட்டுடனும் உறவுபாராட்ட புலிகள் தயாராக இல்லை, சகலமும் சந்தேகம்

பின்ஆ ண்டன் பாலசிங்கம் , கருணா வெளியேரினர் அதாவது சிக்னல் எங்கிருந்தோ கிடைத்தது

2004 சுனாமிதான் புலிகளின் முதல் அடி, பெரும் கடற்படை வளம் இருப்பதாக தொடை தட்டிய புலிகளுக்கு எல்லாம் அழிந்த நிலை. ஆனால் வெளிசொல்லமுடியா நிலை, புலிகளின் முதுகெலும்பு அங்குதான் முறிக்கபட்டது, விதி

மீட்புபணி என ஓடிவந்து குந்தவைத்துகொண்டது அமெரிக்கா

கவனியுங்கள், சுனாமியால் பெரிதும் பாதிக்கபட்ட இந்தோணேசியாவினை விட இலங்கைக்கு அமெரிக்க உதவிகள் குவிந்தன, கிளிண்டனும் ஜாண் கெரியும் ஓடி ஓடி வந்தனர் வந்தவர்கள் என்ன செய்தனர்?

நமது ஊர் தமிழருவி மணியன் போல ஒதுங்கி இருந்த ராஜபக்சேவினை ஒரு அமைப்பு தொடங்க சொன்னார்கள், அதன் பெயர் "ஹெல்பிங்க் ஹம்பந்தோட்டே", அந்த டிரஸ்டின் நிர்வாகி ராஜபக்சே, நமது ஊராக இருந்தால் 4 கல்லூரி கட்டி கல்விதந்தையாகி இருப்பார், ஆனால் அமெரிக்க திட்டம் அதுவல்ல‌

அதன்பின் ராஜபக்சே காட்டில் பண சுனாமி, பெரும் சக்தியாய் ஆட்சியினை கைபற்றுகின்றார், புலிகளும் அவர் ஆட்சிக்கு வர மறைமுகமாக ஒத்துழைத்தனர், அரியாசனம் ஏறினான் மகிந்த‌

அதன்பின் மகிந்த தம்பி கோத்தபாய, சரத்பொன்சேகா இருவரும் அமெரிக்க குடிமக்கள், அங்கு பெரும் பயிற்சிகள் பெற்றுவிட்டு சொல்லி வைத்தார் போல வந்து சேர்கிறார்கள்.

பெரும் யுத்தம் தொடங்கும் முன் இலங்கை அமெரிக்க தூதர் புலிகளை எச்சரிக்கின்றார், லட்சுமண் கதிர்காமரை புலிகள் போட்டு தள்ள, அமெரிக்கா புலிகளுக்கு உலகெல்லாம் தடை விதித்து யுத்தம் தொடங்க சிக்னல் கொடுக்கின்றது , அமெரிக்காவில் கூட புலி அபிமானிகள் சிறையில் பர்கர் உண்டனர்.

2009ல் புலிகள் அழிக்கபட ராஜபக்சே போக்கு மாறிற்று , ஆசியாவில் ஆசியர் ஆதிக்கம்சீ ன வலையில் விழ அதிர்கிறது அமெரிக்கா, பொன்சேகா கட்சி தொடங்கினார்,

அமெரிக்காவோ போர்குற்ற துருப்பு சீட்டு என ஒன்றை காட்டி ராஜபக்சேவினை கட்டுபடுத்துகின்றது, காரணம் எல்லா ஆதாரங்களும் அவர்களிடம் அத்துபடி

இந்த சேணல்4 எனும் தொலைகாட்சி இப்பொழுதெல்லாம் ஏதும் இசைபிரியா படத்திற்கு பின் வெளியிடுகின்றதா என்றால் இல்லை, காரணம் ராஜபக்சே பதவியில் இல்லை. ஆனால் அவர்களிடம் பிரபாகரன் கொல்லபட்டது வரை எல்லா விடியோவும் இருக்கலாம், தேவைபடும் காலத்தில் அதனை வெளியிடலாம்.

கலைஞர் ஆட்சியில் இல்லாதபோது சீமான் வாய்திறக்கமாட்டார், அதுபோல ராஜபக்சே அதிபராக இல்லா காலத்தில் சேனல்4 சமத்தாக மவுனமாக இருக்கும்

இன்று அமெரிக்கா இலங்கையுடன் நெருங்குகின்றது, பல தளங்களை அமைக்க பல்டி அடிக்கின்றது ஏன்?

மர்ம தீவான பிரிட்டனின் டீகோ கார்சியா ஒப்பந்தம் விரைவில் காலவதியாகின்றது, இன்னொரு தளம் தேடவேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு, அதனாலே இலங்கையில் தன் கால் பதிக்க கடும் பிரயத்னம் செய்கிறது

ஆனால் இந்தியா, திரிகோணமலையினில் இன்னும் தன் பிடியினை வைத்திருக்கும் இந்தியாவும் இலங்கையில் தன் பிடியினை இறுக்குகின்றது

இந்தியாவிற்கு நன்றாக தெரியும், புலிகள் இல்லா இலங்கையினை தான் கட்டுபடுத்தமுடியாது, அதற்காகத்தான் புலிகள் அழிவதை இந்தியா விரும்பாதிருந்தது என்பதுதான் மகா உண்மை.

புலிகள் அழிவதனை இந்தியா விரும்பாது என்பது பிரபாகரனுக்கும் தெரியும், அதுதான் அவரை இந்தியாவினை எதிர்க்க செய்தது, ராஜிவ் கொலைக்கு பின்னும் அவரை தில்லாக இயங்க செய்தது, காரணம் புலிகள் இல்லா இலங்கையில் இந்தியா என்ன செய்துவிடமுடியும்? அதனால் கடிநாய் என்றாலும் தன்னை இந்தியா அழிக்காது என அவர் நம்பிகொண்டிருந்தார், அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

ஆனாலும் இந்தியா ஏதோ செய்து ஓரளவேனும் தன் ஆதிக்கம் நிற்க வழிபார்க்கின்றது

இதோ அமெரிக்க போர்கப்பல் இலங்கையினை சுற்றி சுற்றி வருகின்றது, அது ஆப்கன், ஈராக் பகுதிகளில் ராணுவதளம் அமைக்கும்பொழுது சுற்றிய அதே கப்பல், இன்று பிலிப்பைன்சில் இருக்கும் அமெரிக்க தளத்தில் அடிக்கடி தரித்திருக்கும் கப்பல்.

கொழும்பில் அமெரிக்க முதலீடுகள் கொட்டபடுகின்றன‌

கொஞ்சம் கொஞ்சமாக புலிகள் அழிய காரணம் என்ன? என்ன நோக்கத்திற்காக அழிக்கபட்டார்கள்? யார் காரணம்? என்றெல்லாம் மெல்ல உலகம் விளங்கிகொள்ளும் காலம் இது

இலங்கை திரிகோணமலை துறைமுகத்தினை 1980களில் கைபற்றும் திட்டம் அமெரிக்காவிற்கு இருந்தது, (இன்றும் அதன் குறிப்பிட்ட பகுதி இந்திய கட்டுப்பாட்டில்தான் உண்டு),

ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் இந்திய அமைதிபடையும் அனுப்பபட்டது, அதாவது ஈழ மக்களுக்கும் பாதுகாப்பு, அந்நிய நாடுகளும் உள்நுழையமுடியாது

ஆனால் அமைதிபடை ஏன் விரட்டபட்டது, அதில் அந்நிய சக்திகள் எந்த அளவு சம்பந்தபட்டிருந்தது என்பதை இன்று கொழும்பினை சுற்றும் கப்பலை வைத்து நீங்களெ முடிவு செய்யுங்கள்

தேவை என்றால் கால்பிடிப்பார்கள், தேவை தீர்ந்துவிட்டால் தீர்த்துவிடுவார்கள். சதாம், ஜியா உல்கக், பின்லேடன் வரிசையில் பின்னாளில் புலிகள், அவ்வளவுதான் விஷயம்.

சந்தடி சாக்கில் இந்தியா ஈழமக்களுக்கு எதிரி என்பதுபோல ஒரு தோற்றம் ஏற்படுத்திகொடுத்துவிட்டால் இந்தியா நிம்மதி தமிழ்நாட்டில் போயிற்று, இலங்கையில் இந்தியா தலையிடுவதை ஈழ மக்களும் விரும்பமாட்டார்கள்

அதனை வைகோ, சீமான், திருட்டு காந்தி செய்துகொண்டிருக்கின்றார்கள்

ஆனால் அவர்களோ ஓசைபடாமல் இலங்கையினை ஆக்கிரமிக்கும் திட்டத்தின் அருகில் வந்துவிட்டார்கள்

இது உலக நடப்பு, நடந்த நடந்துகொண்டிருக்கும் விஷயம்.

ஆனால் இங்கு கேளுங்கள், ஈழத்தில் புலிகளை அழித்து தமிழீழ கனவினை துடைத்தது சோனியா, கலைஞர்

இவர்கள் இருவர் மட்டுமே, காரணம் இவர்கள் கண்ட உலகம் இவர்கள் மட்டும்தான், இவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

சேனல் 4, போர்குற்றம் இதெல்லாம் சிங்களனை மிரட்டும் அமெரிக்க துருப்புசீட்டே அன்றி தமிழர் மேல் உள்ள அபிமானம் அல்ல. அப்படி ஒன்றும் நடக்கபோவதுமில்லை

உலகில் ஈழதமிழர் மீது அபிமானமும் கொஞ்சமேனும் அக்கறையும் கொண்ட நாடு இந்தியா மட்டுமே, அது மட்டும்தான் அம்மக்களுக்கு உதவமுடியும், உதவும், வேறு எந்த நாடும் ஏறெடுத்தும் பார்க்காது

அந்த நல்லகாரியத்தை கெடுக்கும் திருப்பணியினைத்தான் சீமானிய, திருட்டு முருகன், புரோக்கரும் ராஜதந்திரியுமான வைகோ எல்லோரும் புலி பெயரால் செய்கின்றார்கள்.

No comments:

Post a Comment