Tuesday, July 5, 2016

மணிரத்தினம் இயக்கிய இருவர்

மணிரத்னம் இயக்கிய படங்களிலே ஆக சிறந்தது இருவர் திரைப்படம், கிட்டதட்ட 45 ஆண்டுகால தமிழக அரசியலை மிக சிறந்த முறையில் மிக மவுனமாக சொன்னபடம் அது,

நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் அதனை பார்ப்பது ஒருவகை சந்தோஷம், இப்படி எல்லாம் பரிதவித்த ஒரு நடிகனா பின்னாளில் சக்கரவர்த்தி அளவிற்கு கொடிகட்டி ஆண்டான்? எல்லாம் விஞ்ஞான வித்தை , அறிவியல் கண்கட்டு

இதோ ஆனந்தன் கெஞ்சிகொண்டிருக்கின்றான் தமிழ்செல்வனிடம், பிண்ணணியில் கண்ணதாசனின் வனவாச வசனங்கள்

"ஒரு மொழியால மக்களை மயக்கி கட்டிபோடுற ஜாலம், தமிழ்செல்வனை தவிர யாரால் முடியும், உங்க தமிழும் என் வாள்வீச்சும் சேர்ந்தால் ரொம்ப ஈஸியா மக்களை ஏமாத்திரலாம்"

ஒவ்வொரு பிரேமாக ரசித்து பார்த்தால் இதனை விட சிறந்தபடம் தமிழ்திரையுலகில் வராது, நாயகனை விட பலம்டங்கு சிறந்த படம், ஆனால் மொத்தமே 2 நாள்கள்தான் ஓடியதாம்.

நிஜக்கதை தமிழகத்தை 56 ஆண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கின்றது, ஆனால் திரைக்கதை 2 நாளில் தோற்றுவிடுகின்றது

வித்தியாசமான தமிழகம் இது, உலகில் எங்குமே சாத்தியமில்லை.

No comments:

Post a Comment