Sunday, July 10, 2016

சுற்றுப்பயணமும் அந்நிய முதலீடும்

ஆப்ரிக்கா முதலீடுகளை கவர மோடி சூறாவளி பயணம், கட்காரி அமெரிக்காவில் முதலீடுகள கவர சுற்றுபயணம்

# இந்திய வங்கிகளில் வாராகடன் 8.5 லட்சம் கோடி, அதாவது இந்திய வங்கிகளில் சுருட்டபட்ட இந்த பணம் வெளிநாடுகளில் பதுக்கபட்டுள்ளது, அப்படி சென்ற கொள்ளைபணத்தினையாவது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என கெஞ்சி சுற்றுகின்றார்கள் இவர்கள்.

# அதாவது இந்தியாவில் சுருட்டிய பணத்தை இந்தியாவிலே முதலீடும் செய்யலாம், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நம்மிடம் பர்ஸ் கொள்ளை அடித்தவன், அந்த பணத்தை நம்மிடமே வட்டிக்கும் கொடுக்கலாம்.


# சரி இவர்களுக்கு என்ன தண்டனை? சுருட்டிகொண்டோடிய மல்லையா போன்றவர்களை அவர்களின் ரேசன் கார்டை முடக்கி இந்தியாவில் சீனியும் கோதுமையும் வாங்கமுடியாத அளவு பழிவாங்கிவிட்டது மோடி அரசு. எந்த அரசு இப்படி கடும் நடவடிக்கை எடுத்தது?

# இனி லலித்மோடி, மல்லையா எல்லாம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய், அரிசி வாங்கமுடியாமல் தவித்து உண்ண வழியில்லாமல் தவிக்கும்போது பிடித்துவிடுவார்கள், மற்ற குற்றவாளிகளுக்கு அரசு பேருந்தில் தடை, முடிவெட்ட தடை என சொல்லி மிக கடுமையாக தண்டிப்பார்கள், மோடியா கொக்கா..

No comments:

Post a Comment