Wednesday, July 13, 2016

பாதுகாப்பில்தானே இவரால் இப்படி எல்லாம் பேசமுடிகின்றது...




ஒருவழியாக அங்கிள் சைமன் சத்தமே இல்லை, சாந்தனை இலங்கை சிறையில் அடையுங்கள் என புலம்புமளவிற்கு அவரின் மண்டியிடா மானம் மல்லாக்க படுத்துவிட்டது , மக்கள் ஆதரவு இல்லையாம் அவரே சொல்லிவிட்டார்.

ஆனால் திருமுருகன் காந்தி என்பவர் வழக்கம்போல புளுகு மூட்டையினை அவிழ்த்துவிடுகின்றார், அதாவது இந்திய ராணுவம் கொடூரமானதாம், அது இடிந்தகரையில் பெரும் சித்திரவதை செய்ததாம், அன்னார் புலம்புகின்றார்.

முதலில் இடிந்தகரையில் களமிரங்கியது ராணுவமே அல்ல, அது கடலோர பாதுகாப்பு படையும், முக்கிய தொழிற்சாலைகளுக்கான‌ சிறப்பு பாதுகாப்பு படைதான் களமிறங்கிற்று.


அதுவும் தானாக களமிறங்கவில்லை, முடியவும் முடியாது.

Stanley Rajan's photo.

அரசு கொடுத்த உத்தரவின் பேரிலேதான் பாதுகாப்புபடை களமிறங்கியது

உத்தரவு கொடுத்தது யார்? அல்லது அனுமதித்தது யார்? மாநிலத்தில் அன்று ஜெயா அரசு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, இன்னொன்று அணுவுலைக்கு ஆதரவாகவே தமிழக அரசு நடந்துகொண்டதற்கு நீதிமன்ற வழக்குகளே சாட்சி.

உண்மை இப்படி இருக்க, ஒரு பெரும் புலம்பலை இந்திய ராணுவத்தின் மீது இறைக்கின்றார் திருமுருகன், இந்திய ராணுவம் அப்படி கடுமையானது, அது பிரிட்டிஷ் தயாரிப்பு, அதற்கு இரக்கமே இல்லை, அது பொல்லாதது என்றெல்லாம் அள்ளிவிடுகின்றார்

ராணுவம் என்பது கடுமையானதுதான், எல்லா நாட்டு ராணுவமும் அப்படித்தான் பழக்கபட்டிருக்கும், அது ஒன்றும் வந்து தடவி உணவூட்ட அன்னை தெரசா சபை அல்ல, மக்களை மகிழ்விக்க சினிமா சங்கமோ அல்லது கரகாட்ட கோஷ்டியோ அல்ல‌

அது மிக இறுக்கமான அமைப்பு, அப்பொழுதுதான் அதனால் உக்கிரமாக சண்டையிட்டு எதிரியினை விரட்டமுடியும், அமைதி நிலைநாட்ட இயலும்

ஆனால் நமது ராணுவம் பாகிஸ்தான், ஈரானை போல சொந்தமாக ஆட்சிக்கு வருவது அல்ல, மாறாக ஆட்சியாளர்களின் அங்குசத்திற்கு கட்டுபடும் யானை, எய்துவிட்டு அவர்கள் திரும்ப அழைத்தால் வரும் அர்ச்சுணனின் பிரம்மாஸ்திரம்

ஆக கட்டளை இட்டவர்களைத்தான் இவர் குற்றம் சொல்லவேண்டுமே தவிர பாதுகாப்பு படையினை அல்ல.

இவர் ஒருவேளை கொலை சம்பவத்தில் அரிவாளின் கூர்மை, வலிமை கண்டு அதனை பிடித்து சிறையில் அடைத்துவிட்டு குற்றவாளியினை விட்டுவிடுவார் போலும், இவர் இடிந்தகரை சம்பவத்தை அப்படித்தான் சொல்கிறார்.

என்ன மனிதர் இவர்?

தைரியமாக ஜெயலலிதா ஆட்சியில் கூடங்குளம் போராட்டகாரர்கள் மீது பாதுகாப்புதுறையினரை ஏவியது கண்டிக்கதக்கது என சொல்லி பார்கட்டும் பார்க்கலாம்

சொல்லமாட்டார் மாறாக வேறு ஏதோ பிரிட்டிஷ், அது இது என சம்பந்தம் இல்லாமல் உளறிகொண்டிருப்ப்பார்.

யாரும் இவர்மேல் கல் எறிந்தாலும் கல்லைத்தான் பிடித்து கடிப்பார் போலும், அப்படித்தான் இருக்கின்றது இவரின் செயல்பாடுகள்.

இதனை நம்பிகொண்டும், ஆமாம் ராணுவம் பொல்லாதது என சொல்ல ஒரு கூட்டம்.

ஒவ்வொரு நொடியும் எல்லையில் மரணத்தை எதிர்பார்த்துகொண்டு, ஒவ்வொரு நாளும் விடிந்தபின்புதான் தன் இருப்பினை உணர்ந்துகொண்டு இந்நாட்டு மக்களை பாதுகாக்கும் அவர்களை, பனியிலும் மழையிலும் சிக்கி மக்களை காக்கும் அவர்களை சொல்ல எப்படி மனம் வரும்?

அந்த பாதுகாப்பில்தானே இவரால் இப்படி எல்லாம் பேசமுடிகின்றது,

யார் உத்தரவிட்டது என சொல்ல தைரியமும் இல்லை, நாட்டை பாதுகாப்பவர் மீது நன்றியுமா இல்லை?

இவர் சொல்வது படி ஒரு வாதத்திற்கு சொன்னாலும், அந்த வெறிபிடித்த ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்திலா இந்நாட்டில் வாழ்ந்துகொண்டும், பேசிகொண்டும் இருக்கின்றார் இவர். சீ சீ....

அப்படி இந்த ராணுவம் கொடுக்கும் பாதுகாப்பான வாழ்கை வேண்டுமா? சல்மான் ருஷ்டி போலவோ, நஸ்ரிமா தஸ்ரின் போலவோ நாட்டைவிட்டு கிளம்பி சென்றுவிடவேண்டாமா? தயாரா?





 -----






1987ல் வடமாராட்சியில் இந்தியா தலையிட்டு புலிகளை காப்பாற்றி யுத்தம் நிறுத்தியதில் ஜெயவர்த்தனே கடும் அப்செட், கூடவே அறவே விருப்பமில்லா இந்தியா ஒப்பந்தத்தை ஏற்றும்கொள்ளும் போது வாய்விட்டு சொன்னார்

"இந்தியா செய்ததை மன்னிக்கின்றேன், ஆனால் மறக்கமாட்டேன்"

சிங்கள இனம் கொதிப்பின் உச்சத்தில் இருந்தது, ராஜிவ் கொழும்பில் இறங்கும்பொழுது இந்திய வலியுறுத்தலில் ஊரடங்கு சட்டத்தில்தான் ராணுவ மரியாதை கொடுக்கபட்டது

ஆத்திரத்தின் உச்சத்தில் விஜயதமனி எனும் கடற்படை வீரன் கொலைதிட்டமும் வைத்திருந்தான், அதாவது அவன் ராஜிவினை அடிக்க, மற்ற இரு வீரர்கள் துப்பாக்கி முனை கத்தியால் ராஜிவினை குத்தி கொல்லவேண்டும் , காரணம் அணிவகுப்பில் தோட்டா கொடுக்கபடாது.வெறும் துப்பாக்கி மட்டுமே

ஆனால் அடிபடாமல் ராஜிவ் தப்பியதும், அதனை தொடர்ந்து பாதுகாலர்கள் சூழ்ந்துகொண்டதும் உயிர்தப்பினார் ராஜிவ்

அப்படி யாரை எதிரி எவன் கருதினாரோ அவனிடம் இருந்து தப்பினார்,ஆனால் எவனை அந்த சிங்கள எதிரியிடமிருந்து காப்பாற்றினாரோ அந்த பிரபாகரனால் கொல்லபட்டார் ராஜிவ்

இதுதான் புலிகள், சிங்களனை விட மகா மோசமானவர்கள்





No comments:

Post a Comment