Saturday, July 30, 2016

இன்று உலக நண்பர்கள் தினம்

இன்று உலக நண்பர்கள் தினமாம்

முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறோம், இந்த விஞ்ஞா வீதியான‌ முகநூலில் மில்லியன் கணக்கான நபர்கள் உண்டு எனினும் நமக்கு நண்பர்கள் என வாய்த்தவர்கள் வித்தியாசமானவர்கள்

பெரும்பாலும் நாட்டுபற்றுள்ளவர்ர்கள், சாதி கடந்தவர்கள், ஓரளவிற்கு எது தர்மம் என அறிந்தவர்கள் , குறுகிய வட்டத்தில் தன்னை அடைத்துகொள்ளா பெரும் மனதிற்கு சொந்தகாரர்கள் எனது முகநூல் நண்பர்கள் எனும்பொழுது மனம் மகிழ்கின்றது.


சர்ச்சை செய்வார்கள், வாதம் செய்வார்கள், கடுமையாக விமர்சனம் செய்வார்கள். மறுநொடி அப்புறம்... என சகஜநிலைக்கு வந்துவிடுவார்கள்

பெரும் ஆச்சரியமாக இதில் 90% நண்பர்களை நான் நேரில் பார்த்ததே இல்லை, அதனால் என்ன?

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பின் ஆண்ராய்ட் வெர்ஷன் என சொல்லிவிடலாம்

அதுபோலவே நட்பில் உறுதி என்பது மட்டும் உண்மை

குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

பொருள்:
ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

முகநூலில் எனக்கு கிடைத்திருக்கும் நண்பர்கள் இப்படியானவர்கள், ஒன்றுபட்ட எண்ணங்களே நம்மை எல்லாம் நட்பாக நிறுத்தியிருக்கின்றன.

நட்பு நாளின் வாழ்த்துக்கள் நண்பர்களே, கொண்டாடுவோம்

No comments:

Post a Comment