Friday, June 5, 2015

வரதராஜ முதலியார்












1960களில் மும்பையில் இனவாதம் தொடங்கியது, மராட்டியம் மராட்டியருக்கே என கோஷங்கள் எழுந்தன, ஒரு கட்டத்தில் தமிழர்கள் 2 வாரத்தில் பம்பாயை காலிசெய்யவேண்டும் என பகிரங்க மிரட்டலும் பால்தாக்கரேவால் விடபட்டது


Stanley Rajan's photo.

ஒரே ஒரு தமிழன் பதிலுரைத்தான் 3 நாட்களுக்குள் "உங்கள் வார்த்தையை திரும்பெற்றுகொள்ளாவிட்டால் நடப்பதே வேறு, உழுபவனுக்கு நிலம்சொந்தமென்றால், ஊர் சொந்தமில்லையா" அன அவர் சீறியபின்புதான் மும்பையில் தமிழருக்கு ஆபத்து நீங்கியது


அவர் வரதராஜ முதலியார் (அப்பொழுது "வர்தா பாய்"), தமிழருக்கு மும்பையில் அரணாய் விளங்கியவர், மராட்டிய வெறியர்களுக்கு சிம்மசொப்பனம், 1980களில் இலங்கையில் முதன்முதலில் முண்ணனி புலிகளை (ஒரேமுறை) சிறைபிடித்த பஸ்தியாம் பிள்ளை (இவரும் தமிழர்) எனும் அதிகாரியை கொன்றுவிட்டு தப்பிய செல்லகிளிக்கும் அவரது குழுவிற்கும் மும்பையில் பாதுகாப்பு வழங்கியர்.

பின்னாளில் மணிரத்னம் அவர்சாயலில் எடுத்து வெற்றிகண்டதுதான் "நாயகன்", கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் கண்ட சிறந்தபடங்களில் பத்தில் ஒன்று.

இவரை பற்றியெல்லாம் "அவர்கள்" முழங்கமாட்டார்கள், அவர்கள் வாயில் வருவெதெல்லாம் "மராட்டிய பெருமகனார் பால்தாக்கரே".

# இதைபற்றி எல்லாம் நாம் பேசகூடாது, மராட்டியன் மராட்டியத்தை ஆளட்டும், தமிழன் தமிழகத்தை ஆளட்டும், புலிகள் ஈழத்தை ஆளட்டும்.

புலிகளின்‬ ஆட்சியில் மலையக தமிழர் புறக்கணிக்கட்டிருந்ததை பற்றி எல்லாம் இவர்கள் சிந்தித்தால்தானே வரதராஜ முதலியார் எல்லாம் நினைவுக்கு வருவார்? வழிகாட்டி பேனரில் இடம்பிடிப்பார்?. எங்கோ வாழ்ந்த செகுவாரோவும், காஸ்ட்றோவும், ஹிட்லரும் இருக்கும் படத்தில் உண்மையில் போராடிய தமிழனுக்கு இடமில்லை.