Thursday, September 28, 2017

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முரசொலிமாறனுக்கு சிகிச்சை என்றால் அமெரிக்காவிலும், தனக்கு சிகிச்சை என்றால் லண்டனிலும்,
தன் தந்தைக்கு சிகிச்சை என்றால் காவேரியிலும் என சென்று கொண்டிருந்த ஸ்டாலின், டெங்கு புண்ணியத்தில் அரசு மருத்துவ மனைக்கு வந்துவிட்டார்
டெங்கு விவகாரம் தொடர்பாக அரசின் சிகிச்சை நடவடிக்கைகளை கண்டறிய தானே நேரில் ஆய்வு செய்துவிட்டார் மு.க ஸ்டாலின்
இது இனி ஒவ்வொரு துறையாக நடக்கலாம். ரேஷன் கடைகள் முதல் பல இடங்களின் இனி ஸ்டாலின் ஆய்வு நடத்துவார்
இதற்கு பெயர் "நமக்கு நாமே ஆராயும் திட்டம்"
அப்படியே பள்ளிகளில் புகுந்து தமிழை ஒழுங்காக தமிழக்ப கல்வி கூடங்கள் யிற்றுவிக்கின்றார்களா? என அவர் சோதிப்பாரா என கேட்டுவிட கூடாது.
காரணம் அவர் அரசு பள்ளியில் புகுந்தால், அவர் பள்ளியில் அரசு புகுந்துவிடாதா?

புதிய தலைமுறை டிவி..

ஜெயா சாவு தொடர்பாக விசாரணை நடக்கின்றது.
ஒரு விசாரணை நடக்கும்பொழுது தகவல்கள் கண்டிப்பாக அந்த கமிஷனிடம் மட்டுமே கொடுக்கபட வேண்டும், அப்படி செய்யாமல் தனியாக தகவல்களை வெளியிடுவது தண்டனைகுரிய குற்றம்.
விசாரணையோ வழக்கோ நடக்கும்பொழுது அதுபற்றி கருத்து கூற கூடாது என்பதுதான் பொதுசட்டம். அதிலும் உறுதிபடுத்தபடாத தகவல்களை அள்ளிவிடுவது கண்டிக்கதக்கது.
அந்த மிக பெரும் குழப்பத்திற்குரிய , கண்டிக்க கூடிய காரியத்தினை புதிய தலைமுறை டிவி செய்கின்றது.
இது நிச்சயம் கண்டிக்கதக்கது. தன்னிடம் இருக்கும் தகவலை கமிஷன் முன் சொல்லலாம், அல்லது நீதிபதிகள் முன் சொல்லலாம்
மாறாக மகா முக்கிய விசாரணையில் இப்படி செய்தி வாசிப்பது திசை திருப்பும் விவகாரம்.
இந்த செய்தியினை புதிய தலைமுறைக்கு கொடுத்தது யார்? அவர்களை ஒளிபரப்ப சொன்ன சக்தி எது?
இவ்வளவு நாளும் இது ஏன் மர்மமாக வைக்கபட்டது?
இப்பொழுது கமிஷனினிடம் சொல்லாமல் இவர்களாக சொல்வது ஏன்?
புதிய தலைமுறை என்பது அரசாங்க ஊடகமா? இப்பொழுது அந்த செய்தி எப்படி கிடைத்தது? விசாரணை அதிகாரிகள் செய்தியினை கடத்தினார்களா?
ஜெயா மரண விவகாரத்தை வெளியிட புதிய தலைமுறை போதுமென்றால் ஆறுமுகசாமி தலமையினாலான கமிஷன் எதற்கு?
தமிழச்சி என்பவர் முகநூல் பதிவிற்கும், புதிய தலைமுறைக்கும் என்ன வித்தியாசம்? தமிழச்சி மீது 70 வழக்குகள் என்றால், புதிய தலைமுறை மீது நடவடிக்கையே இல்லையா?
முகநூலில் கூட ஆதாரம் இல்லாமல் பதிந்தால் நடவடிக்கை என்றார்கள், புதிய தலைமுறைக்கு ஒன்றுமே இல்லையா?
முகநூலுக்கு ஒரு நியாயம், டிவிக்களுக்கு ஒரு நியாயமா?
இது நீதிதுறைக்கு பெரும் அவமானம். அந்த விசாரணை கமிஷன் முகத்தில் கரி பூசும் செயல்.
இவர்களாக சொல்லிகொண்டிருந்தால் கமிஷன் எதற்கு? விசாரணை அமைப்புகள் எதற்கு? இந்த உரிமையினை அவர்களுக்கு யார் கொடுத்தது?
விசாரணை நீதிபதி தலமையில் நடக்கின்றது, அவர்கள் விசாரித்து அறிக்கை தரும்வரை அமைதிகாப்பதே நல்லது அல்லது காத்தே தீரவேண்டும்.
பொறுப்பானாவர்கள் அதிகார பூர்வமாக அறிவித்த பின்பே ஊடகங்கள் வாய் திறக்க வேண்டும்.
இதற்கு தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மிக மிக தவறான முன்னுதாரணமாக சென்றுவிடும். பின் எதிலுமே உண்மை வராது, குழப்பமே மிஞ்சும்.
பெரும் குழப்பம் பல மோசமான விளைவுகளை கொண்டு வரும்.
இது மிக மிக அதிர்ச்சிகரமான, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.

Wednesday, September 27, 2017

ஜெ. சிகிச்சை முந்தைய

ஜெ. சிகிச்சை முந்தைய தினம்வரை நலமுடன் இருந்தார் - தமிழிசை சவுந்தரராஜன்

இவர் ஏன் இப்பொழுது வாண்டடாக வண்டியில் ஏறுகின்றார்.

ஏதாவது சொல்லிகொண்டே இருப்பது தமிழிசைக்கு விதிக்கபட்டது, இனி அடுத்து அம்மணி இப்படி சொன்னாலும் சொல்வார்,

"ஜெயா சாகும் வரை உயிரோடுதான் இருந்தார்".

"மன்மத" அஞ்சலி

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்
அன்னார் இந்த உலகிற்கு ஆற்றிய பணி கொஞ்சமல்ல, மர்லின் மன்றோ முதல் நமது நாட்டு ஷெர்லின் சோப்ரா வரை அவர்தான் உலகிற்க்கு உணர்த்தினார்.
அந்த வரிசை சொல்லி மாளாது, உலகின் கவர்ச்சி கன்னிகளை எல்லாம் தேடி பிடித்து படமெடுத்து, தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர்.
வீர அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி எல்லாம் அவருக்கு சரிவராது, "மன்மத" அஞ்சலிதான் செலுத்த முடியும்

வுளை திட்டினதால் தான் மூத்திரப்பை

பெரியாரும் கலைஞரும் கடவுளை திட்டினதால் தான் மூத்திரப்பையோட இருக்கிறார்கள் , அண்ணாவிற்கு புற்றுநோய் வந்தது என பல ஆன்மீகவாதிகள் வாய்வலிக்க சொல்லி திருப்தியடைகின்றார்கள்
ஆன்மீகம் பேசிய ரமணருக்கு கூடத்தான் புற்றுநோய் வந்தது, இன்னும் ஏராளமான சந்நியாசிகள் இளவயது நோயிலே இறந்தார்கள்.
விவேகானந்தர் சாகும்பொழுது என்ன வயது? அவர் ஆத்தீகம் பேசி செத்தாரா?
சங்கரரும், திருஞான சம்பந்தரும் கூடத்தான் சிறுவயதிலே மரித்தார்கள்.
முத்துராமலிங்க தேவரை விட பெரும் முருக பக்தனை காட்டிவிட முடியுமா? அவர் என்ன நூறாண்டு வாழ்ந்தாரா?
ஒவ்வொருவனும் ஒரு நோக்கத்திற்காக இறைவனால் படைக்கபடுகின்றான், அந்த நோக்கம் நிறைவேறியதும் அவன் வாழ்வு முடிகின்றது.
அந்த தத்துவத்தில்தான் உலகம் இயங்கி கொண்டிருக்கின்றது
இதில் ஆன்மீகம் பேசியதால் வாழ்ந்தான் என்றோ, நாத்திகம் பேசியதால் செத்தான் என்றோ சொல்வதற்கொன்றுமில்லை
விருப்பு, வெறுப்புக்களை கடந்தவர் கடவுள், அவரை புரிந்துகொள்ள மிகசிறிய மானிட மூளைக்கு ஒருநாளும் சக்தி வராது.

உயர்ந்தது உன் பாதங்கள்

வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது உன்
பாதங்கள் இவை என்னின்,
படிவங்கள் எப்படியோ "
என்பது கம்பனின் வரிகள். அதாவது மந்திரங்கள் முழங்கும் மூவுலகிலும் மிக உயர்ந்தது இந்த கால்களே. கால்களே இப்படி என்றால் முழு வடிவம் எப்படி இருக்கும் என பாடலை தொடங்குகின்றான் கம்பன்.
நாம் திரையில் குஷ்பூவினை காணும்பொழுது அவன் வரிகளே நினைவுக்கு வருகின்றது.
தலைவி காலை மறைத்து, விரல் மட்டுமே தெரியும் படம் இது, அட அட என்ன அழகு?
கம்பன் இருந்திருந்தால் "உலகங்கள் யாவிலும் உயர்ந்தது இந்த பாத விரல்களே" என தொடங்கியிருப்பான். அவன் இல்லாததால் நாம் தொடங்கலாம்
இந்த அழகிய பாதங்கள் பூமியினை தொட்டு 47 வருடங்கள் ஆகின்றன‌.
ஆம் தங்க தலைவிக்கு, தங்க கோபுரத்திற்கு, குங்குமபூ குவியலுக்கு நாளை பிறந்த நாள்..
அந்த கொண்டாட்டம் உலகெல்லாம் இந்த வரிகளுடன் உற்சாகமாக தொடங்கிவிட்டது,
"வேதங்கள் அறைகின்ற உலகங்கள்
யாவிலும் உயர்ந்தது இந்த பாதங்களே"

குறவர்களை பற்றி அங்கிள் சைமன்

குறவர்களை பற்றி ஏதோ அங்கிள் சைமன் சொல்லியிருக்கின்றார் என சர்ச்சைகள் வருகின்றன.
தமிழை கேவலம் குறவர் தமிழாக மாற்றிவிட்டார்கள் என அங்கிள் குறைபட்டுகொண்டாராம்.
குறவர்கள் என்பவர்கள் யார்? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறவர்கள் என அழைக்கபட்டனர். அவர்கள் பேசியதும் தமிழே.
இன்று அவர்கள் பேசுவதும் தமிழின் திரிபே, ஆதிகால தமிழ் அந்த சாயலில்தான் இருந்தது..
அவர்களும் நிச்சயமாக தமிழர்களே.
குற்றால குறவஞ்சி எனும் காவியமே தமிழில் உண்டு.
அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகனே வள்ளி எனும் குறத்தி தமிழச்சியினைத்தான் மணந்தார்.
வேல் எடுத்து ஆடும் அங்கிள் சைமன், முப்பாட்டனை வணங்கும் பொழுது முருகனின் அருகில் இருந்து அருள்பாலிப்பது ஒரு குறத்தி.
இவ்வளவு இருந்தும் அங்கிள் சைமன் குறவர்களை ஏளனம் செய்கின்றாராம்.
தமிழும் சரியாக தெரியாது, தமிழர் வரலாறும் தெரியாது. சும்மா கிடந்து கத்தவேண்டியது. கேட்டால் அவருக்கு மட்டும் தமிழுணர்வு இருக்கின்றதாம்.
முப்பாட்டி வள்ளியே தமிழ் குறத்தியாக இருக்கும்பொழுது குறவர்களை சீண்ட என்ன தைரியம்?
அந்த முப்பாட்டன் வேல் எடுத்து சீமான் கண்களில் குத்தட்டும்.

தீபா மீண்டும் திருமணமா?

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: மாதவனுடன் தீபா மீண்டும் திருமணமா? : செய்தி
அதாவது தமிழகத்திற்கு கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் உழைத்துவிட்டு, பல தியாகங்கள் செய்த தீபா என்பவர் நான் ஏன் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை என்ற விரக்தியில் ஜோதிடரை அணுகினாராம்
அந்த ஜோதிடரோ, உங்கள் மக்கட் பணியில் ஒரு குறைவுமில்லை, மணாளனை பிரிந்த ஜாதக தோஷமே காரணம். அதனால் ஜெயா சமாதி முன் திருமணம் மட்டும் செய்தால் தோஷம் தீரும். நீர் நிச்ச்சயம் முதல்வராவாய் என சொல்லிவிட்டாராம்.
அப்படியே ஜெயா சமாதி முன் இருவரும் திருமணம் செய்ததாக செய்திகள் வருகின்றன.
( சாந்தி முகூர்த்தமும் அந்த சமாதி முன் நடந்ததா என்பது பற்றி ஒரு செய்தியுமில்லை..)
இன்னும் என்னென்ன கூத்துக்களை இந்த தியாக தம்பதிகள் செய்யுமோ தெரியாது.
இந்த‌ தீபா, அந்த சசிகலா குடும்பத்தில் யாரையாவது வேலைக்காரியாக அமர்த்தினால் கூட பிரயோசனம் உண்டு, அத்தை கண்ட வித்தை அதுதான்.
ஏம்மா தீபா, ஜெயா எப்படி செத்தார் என எல்லோரும் விசாரித்துகொண்டிருக்க, ஜெயா போல எப்படி ஆட்சியினை பிடிப்பது நீங்கள் ஜோசியம் பார்த்துகொண்டிருக்கின்றீரா?
இதுதான் அத்தை எப்பொழுது சாவாள், சாவிகொத்து எப்பொழுது கைக்கு வரும் என்பதோ?

பணமதிப்பு இழப்பு

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா
சொல்லியிருப்பவர் யார்? பாஜகவின் மூத்த தலைவர்.
ஒரு பக்கம் புதிய "இந்தியா பிறந்திருக்கின்றது" என மோடி சொல்ல, இன்னொரு பக்கம் இவரோ, நன்றாக‌ இருந்த "இந்தியா செத்து கொண்டிருக்கின்றது" என சொல்லிகொண்டிருக்கின்றார்.
பாஜகவின் மூத்த தலைவரே தங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதை ஒப்புகொள்கின்றார்.
எல்லா அரசும் தேர்தல் நெருங்கும்
நேரத்தில், "இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்" என கேட்பார்கள்,
யஷ்வந்த் சின்ஹாவோ "இது எங்கள் வேதனை, இனி எங்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.." என்பதனை சொல்லிகொண்டிருக்கின்றார், நல்ல மனிதர்.

தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்

அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள்.
ராஜிவ் கொலையினையொட்டி திமுக தடை செய்யபடும் அளவிற்கு சென்றதும் , எப்படியோ தப்பி பிழைத்ததும் வரலாறு.
திமுகவின் மறுபிறப்பு அது. அன்று திமுக சுமந்த பழியும் , அந்த கலவரத்தில் திமுகவினரின் சொத்துக்கள் கொழுத்தபட்டதெல்லாம் கண்ணீர் நினைவுகள்.
ராஜிவ் கொலைநடந்த காலங்களில் திமுக நெருப்பாற்றினை கடந்துகொண்டிருந்தது.
அப்பொழுது ஒன்றுமே தெரியாத கன்னிபோல சென்னையில் சுற்றிகொண்டிருந்தவர் அந்த பேரரிவாளன்.
வாக்கு அரசியலுக்காக எவ்வளவு தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்?
அப்படியே இனி பாஜகவினை மகிழ்விக்க அவர் கோட்சே குடும்பத்தையும் சந்திக்கும் வாய்ப்பு நெருங்கிகொண்டிருக்கின்றது.

3 மாதத்தில் விசாரணை அறிக்கை

ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு!
பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில்
ஜெயலலிதா மரணத்தை தமிழக அரசே விசாரிக்கும் எனபதும் ஒன்று.

ஜெயலலிதா எப்படி இறந்தார்

இந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது.
ஆளாளுக்கு ஒன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பார்த்தேன் என்கின்றார், இன்னொருவர் பார்த்தவனை பார்த்தேன் என்கின்றார்
ஜெயாவின் காலை காணவில்லை, இன்னும் எதனை எல்லாமோ காணவில்லை என்றொரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது.
ஜெயா உடல்நிலை ஒன்றும் அதற்கு முன்பு அவ்வளவு நன்றாக இல்லை
2015களிலே அவர் நடக்கும்பொழுதே தடுமாறினார். பல கூட்டங்களை வீடியோ கான்பெரன்ஸ் முறையில்தான் நடத்தினார்
அவர் நெடுநாள்கள் காணாமல் போக, கலைஞரே ஜெயாவிற்கு என்ன ஆயிற்று என கேட்ட காட்சிகளும் உண்டு.
அந்த அளவிற்கு அவர் உடல்நிலை அன்றே கெட்டுபோய் இருந்திருக்கலாம்.
அவருக்கு சர்க்கரை நோய், உடல்பருமன் உட்பட ஏராளமான நோய்கள் இருந்திருக்கின்றன, மூட்டு பிரச்சினையிலும் சிக்கியிருக்கின்றார் , அவரின் BMI அளவு ஆபத்தானது என அன்றே எச்சரித்தார்கள்.
75 வயதிற்கு மேல் வரவேண்டிய நோய்கள் எல்லாம் 60 வயதிலே வந்திருக்கின்றன.
ஒன்று உறுதியாக சொல்லலாம்
சசிகலாவினை மீறி அவரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியாதபடி சிக்கியிருந்தார். சசிகலா அனுமதியின்றி அவர் செய்யகூடிய ஒரே விஷயம் சாப்பாடு
ஆக இனிப்புகளை அள்ளி அள்ளி விழுங்கியிருக்கலாம், ஜெயா இனிப்பு விருப்பமுள்ளவர் என்பது முன்பே வந்த செய்தி.
சசிகலா ஒப்புதலின்றி அவர் வாழ்வில் அவருக்கு இருந்த ஒரே சந்தோஷம் அதுவாக இருந்திருக்கலாம்
கட்சி, அரசு என எல்லாவற்றிலும் ஜெயாவிற்கு கடிவாளமிட்ட சசி, அவரின் உணவிலும் மருந்திலும் கட்டுபாடை விதித்திருந்தால் இன்று இப்பிரச்சினை வந்திருக்காது.
கட்சிமேலும், ஆட்சி மேலும் காட்டிய அதீத அக்கறையினை அவர் ஜெயலலிதா உடல்நலம் மேல் காட்டவில்லை.
தனக்கு இருந்த ஒரே சுதந்திரமான சந்தோஷத்தை ஜெயா தவறவிடவுமில்லை. அதுவே அவருக்கு வினையாயிற்று.

எச்.ராஜா மணி விழா

எச்.ராஜா மணி விழா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
டெங்கு உட்பட பல பிரச்சினைகளில் தமிழகம் சிக்கி தவிக்கும்பொழுது பொறுப்பான பதவியிலிருக்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எல்லாம் எங்கு அணிவகுத்திருக்கின்றார்கள்?
ஸ்டாலினை பார்த்து பன்னீர் சிரித்தார் என்பதையே தாங்க முடியாத சசிகலா, இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து சிரிப்பதை கண்டால் எப்படி மயங்கிவிழுவாரோ?
ஆக எச்.ராசா மணிவிழாவிற்கு வந்தாயிற்று, அடுத்து எங்கே?
அது சங்கராச்சாரி விழாவாக இருந்தால் கூட இனி ஆச்சரியம் ஏதுமில்லை.
பெரியாரை தாறுமாறாக விமர்சிக்கும், திராவிட வெறுப்பு ராசாவின் வாசலுக்கே திராவிட கட்சிகளின் தலைவர்கள் சென்றபின் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.

ஜெ., சிகிச்சை பெற்ற போது

ஜெ., சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார் என்பதை தெளிபடுத்த வேண்டும்: தமிழிசை
வெங்கையா நாயுடுவும் ஆளுநரும்தான் அடிக்கடி சென்று பார்த்தார்கள் மேடம். இரண்டுமே உங்கள் கட்சிதான்.
அவர்கள்தான் விளக்க வேண்டும், அதனைத்தானே கேட்கின்றீர்கள், நல்லது.
என்ன இருதாலும் துணை ஜனாதிபதி, ஆளுநர் மீதே நெற்றிகண்ணை திறக்கும் தமிழிசையின் துணிச்சல் யாருக்கு வரும்?
என்ன இருந்தாலும் தமிழச்சி அல்லவா? அந்த வீரம் இருக்குமல்லவா?

சிவாஜிகணேசன் தனிக்கட்சி

சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியவில்லை : ஜெயக்குமார்
எங்கே? தைரியம் இருந்தால் டி.ராஜேந்தர் கட்சி தொடங்கி முதல்வராக முடியவில்லை, அமைச்சராக முடியவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்
சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? விடுவாரா டி.ஆர்.
அது இருக்கட்டும் அமைச்சரே, விஜயகாந்த் கட்சி தொடங்கி இருமுறையும் அவரால்தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதாவது நினைவிருக்கின்றதா?

வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம்

"நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாடுகளில் ஒவ்வொருவருக்கும் ரூ.15லட்சம் போடும் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது அதனை மீட்டு வருவோம் என்றே பிரதமர் மோடி கூறினார்" : தமிழிசை
அப்படியே இருக்கட்டும் அக்கா, அந்த மொத்த கருப்பு பணத்தையும் மீட்டாரா இல்லையா?
மக்கள் அவர் சொன்னதை நம்பி வாக்களித்தார்கள்? அவர் செய்திருக்க வேண்டுமா இல்லையா? இவ்வளவிற்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருக்கின்றார், பணம் தான் வரவில்லை.
வெளிநாட்டு பணத்தை மீட்பேன் என சொல்லிவிட்டு, உள்நாட்டில் கலர் கலராக, தினுசு தினுசாக நோட்டடித்து விளையாடி கொண்டிருந்தால் எப்படி?
அம்மணி நீங்கள் ஒரு மருத்துவர், உங்களிடம் நோயாளி வந்தால் உயிர் காப்பது உங்கள் கடமை, ஆனால் உடலில் ஊசி குத்தாமல் கலர் கலராக கோலம் போட்டு விளையாடினால் நோயாளியின் சொந்த பந்தங்கள் சும்மா விடுமா?

உச்சத்தில் தெரியும் கலைஞன்

தமிழகம் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கண்டிருந்தாலும் என்றும் மகா உச்சத்தில் தெரியும் கலைஞன் அவன்.
அந்த சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட நடிகர் அவர்.
நாடகங்களில்தான் நடித்துகொண்டிருந்தார், அப்பொழுது ஒரு நாடகத்திற்கு தலமைதாங்க எம்ஜி ராமசந்திரனை அழைத்தார்கள், நாடகத்தில் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தில் சில நொடிகள் வந்தார் அந்த குண்டுராவ், ஆனால் அந்த வயிற்றுவலி நோயாளி வேடத்தில் பின்னி எடுத்தார்
அதனை ரசித்த ராமசந்திரன், பின்பு மேடைக்கே அழைத்து ஒரு கோப்பை வழங்கினார், அங்கேயே கேட்டார் குண்டு ராவ் " அண்ணே எல்லார் முன்னாடியும் கோப்பை குடுக்குறீங்க, அப்புறமா புடுங்கிற மாட்டீங்களே , ஏன்னா நான் அவ்வளவா ஒன்ணும் நடிக்கல"
சிரித்து வாழ்த்தினார் ராமசந்திரன், தமிழகத்திற்கு ராமசந்திரன் செய்த ஒரே நல்ல விஷயம் அந்த குண்டுராவின் நாகேஸ்வரன் எனும் பாத்திரத்தை பாராட்டி , நாகேஸ் எனும் கலைஞனை அடையாளம் காட்டியது.
நெஞ்சில் ஓர் ஆலயம் படம் அவருக்கு பெரும் பெயரினை பெற்றுகொடுத்தது, அதிலிருந்து அவருக்கு ஏறுமுகமே
அந்த இயல்பான குணமே அவரை உச்சத்திற்கு அழைத்து சென்றது. அவரின் முதல் வாய்ப்பு பெற்றதே அப்படித்தான்
வாய்ப்புக்காக படகம்பெனி அலுவலக வாசலில் காத்திருக்கின்றார் நாகேஷ், அந்த கம்பெனி முதலாளி ஒல்லியான தேகம் கொண்டவர். காரில் இறந்து இறங்கி கூன் போட்ட முதுகுடன் கையில் சிகரெட் பெட்டியுடன் நடக்க்கின்றார்.
அவர் முதலாளி என்பதை அறியாத நாகேஷ் அவர் பக்கம் சென்றார், சிகரெட் பெட்டியினை பார்த்து சொன்னார் "ரொம்ப வெயிட்டா இருக்கா, பரவாயில்ல நான் வேணா சுமந்துட்டு வரட்டுமா"
அந்த முதலாளிக்கு சிரிப்பு பொத்துகொண்டு வந்தது, முதுகில் தட்டி கொடுத்து சிரித்தார், நாகேஷூம் சிரித்தார்.
பின் அலுவலக அறையில் அவரை கண்டதும், காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார், அந்த முதலாளி சொன்னார், உனக்கு நல்ல திறமை இருக்கு, யாருக்கும் பயப்படாம மனதில் பட்டதை இப்படியே பேசு , முன்னேறி விடுவாய்"
அப்படித்தான் முன்னேறினார் நாகேஷ்
கலைவாணருக்கு பின்னரான‌ பாலையா, சோ ராமசாமி, தங்கவேலு என அக்கால நகைச்சுவையாளர் வரிசையில் தனித்து நின்றவர் நாகேஷ்.
இதில் எம்.ஆர் ராதா என்பவர் ஆல்ரவுண்டர். நிச்சயம் வேறுவகை
இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் நாகேஷ், அவரின் அலட்டிகொள்ளாத முகபாவங்களுக்கும், நொடியில் சீறிவரும் காமெடி வரிகளுக்கும், உடல் மொழிகளுக்கும் அவருக்கு முன்னாலும் பின்னாலும் யாருமில்லை.
அவர் பல ஆண்டுகள் நகைசுவை நடிகராகவே அறியபட்டார், ஆனால் அவருக்குள் மிகபெரிய குணசித்திர நடிகன் இருந்தான் என்பது பாலசந்தரின் எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் தெரிந்தது.
எந்த மகா நடிகனுக்கும் தன் நடிப்பு குறைந்தது அல்ல, என அந்த படங்களில் தன்னை நிரூபித்து நின்றார் நாகேஷ். அவரின் அற்புத நடிப்பினை பாலசந்தர்தான் வெளிகொண்ர்ந்தார்.
பாலசந்தரை தவிர நாகேஷ முழுக்க பயன்படுத்திய இயக்குநர் யாருமில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் மிக சிறந்த நடன கலைஞனும் கூட, அவரின் பல நடனங்கள் அற்புதமானவை.
பல திறன் கொண்ட நடிகர் அவர். நடிப்பில் தன் முன்னால் நிற்கும் நடிகர்கள் யாராயினும் அசால்ட்டாக தூக்கி எறிவார். ராமசந்திரனை பல இடங்களில் அவர் தூக்கி சாப்பிட்டதை பார்த்திருக்கலாம்
எம்.ஆர் ராதா, சிவாஜி கணேசன் வரிசையில் நாகேஷூக்கும் இடமுண்டு.
நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை ஒஹோ புரொடக்ஷன், பட்டணத்தில் பூதம், அன்பே வா, திருவிளையாடல் தருமி.. என நீண்ட வரிசையில் அவரின் அற்புதமான நடிப்புகள் உண்டு.
கிட்டதட்ட 4 தலைமுறை நடிகர்களோடு நெடிய பயணம் செய்தவர் அவர்.
ஒரு விஷயம் மகா உண்மை
சந்திரபாபு நடனம், நடிப்பு, நகைச்சுவை என பின்னி எடுப்பவர், அவர் நாகேஷை நெருங்க முடியவில்லை
சோ ராமசாமி பெரும் அறிவாளி. அவரின் ஒரு வார்த்தையே நீண்ட நேரம் சிரிக்க வைக்கும், அவராலும் நாகேஷை அசைக்க முடியவில்லை
வடிவேலுவிற்கு சீனியரான தங்கவேலு நாகேஷ் பக்கமே வரமுடியவில்லை
காரணம் நாகேஷூக்கு பிறவி திறமை இருந்தது. அவருக்கும் முன்பும் பின்பும் வந்த எந்த நகைச்சுவை நடிகரும் அவர் இடத்தை நெருங்கவே முடியாமல் இருப்பது அதனால்தான்.
அவரின் ஏகபட்ட வசனங்களை இன்று நினைத்தாலும் சிரித்துகொண்டே இருக்கலாம்.
சோகங்களும் அவருக்கு ஏராளம் இருந்தது, ஆனால் ஒன்றையும் வெளிகாட்டவில்லை. உதாரணம் தன் முகத்தில் கொட்டிகிடக்கும் அம்மை தழும்புகள் பற்றி அவர் இப்படி சொன்னார்
"அம்மி நல்லா அரைக்கணும்ணா கொத்துவாங்க, ஆண்டவன் நல்லா நடிடாண்ணு என் முகத்துல நல்லா கொத்திட்டான்"
தன் குறைகளை கூட அப்படி நகைச்சுவையாக சொன்ன நடிகன் அவன், பிறவி கலைஞன்
மிகசிறந்த நடிகனான அவருக்கு, தமிழகம் அவருக்குரிய இடத்தினை கொடுக்கவில்லை. அவரின் நடிப்பில் 100ல் ஒரு பங்கை கூட நடிக்க தெரியாத, எதற்கெடுத்தாலும் அம்மா.. அண்ணா என ஆந்தை போல முழித்து அலறிய ராமசந்திரன் பெற்ற வரவேற்பினை நாகேஷ் பெறவில்லை
தமிழக யதார்த்தம் அப்படி.
அவரே இதனை தனக்குரிய பாணியில் சொன்னார், வீடு கட்ட சாரமாகும் சவுக்கு மரம், வீடு கட்டபட்ட பின் மூலையில் கிடக்கும் அல்லது அடுத்த வீடு கட்ட சென்றுவிடும்
ஒரு வேலையும் செய்யாத வாழைமரத்தினைத்தான் அந்த கிரக பிரவேசத்திற்கு கட்டுவார்கள், நான் சவுக்கு மர சாதி"
எப்படிபட்ட வார்த்தைகள்?
அபூர்வ சகோதரர்களில் அவர்தான் வில்லன், அந்த குட்டை கமலை தூக்கிவர சொல்வார்கள், அவரை கண்டவுடன் கேட்பார்
"பாதிதான் வந்திருக்கு மீதி எங்கே?"
வசனகர்த்தா எழுதாத வசனமது, அவரே அந்த நொடியில் சொல்லிகொண்டது. அந்த வசனத்திற்கு சிரிக்காதவர்களே இல்லை.
சோகமாக நாகேஷை பார்த்தும் அதே கேள்வியினைத்தான் கேட்க முடியும்.
நாம் பார்த்தது பாதி நாகேஷ்தான், மீதி பாதி பல விஷயங்களால் வெளிதெரியாமலே போய்விட்டது.
நாகேஷின் இடத்தினை இன்னொரு நாகேஷால் மட்டுமே நிரப்ப முடியும்.
"நான் மழையில்தான் அழுவேன் அப்பொழுதுதான் என் கண்ணீர் யாருக்கும் தெரியாது" என சொல்லி சோகங்களை தன்னோடு புதைத்துகொண்டு எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த சார்லி சாப்ளினின் தமிழக சாயல் நாகேஷ்.
அந்த தமிழகத்து சார்லி சாப்ளினுக்கு இன்று பிறந்தநாள். Long Long ago, So Long ago முன்னால் அவர் பிறந்தது இதே நாள்.
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை அந்த கலைஞனின் ஆன்மா மன்னிக்காது
அவருக்கு கண்ணீரை மறைத்துகொண்டு புன்னகையுடன் அஞ்சலி செலுத்தலாம், அதைத்தான் அவரும் விரும்புவார்.

Friday, September 22, 2017

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்




Image may contain: 1 person, close-upஇது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம். 


திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது.


இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம்





அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது.

கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை.

இதில் கமலஹாசன் என்ன? சாருஹாசன் கூட வரலாம். வந்து எப்படி மக்கள் வரவேற்பினை பெருகின்றார்கள் என்பதுதான் விஷயம்.

ஆனால் கமல் கட்சி நடத்துவதும் சாமான்ய விஷயம் அல்ல, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக கட்சி வளர்க்க முனைந்த வைகோ, மூப்பனார், விஜயகாந்த் எல்லாம் பட்டபாடு கொஞ்சம் அல்ல.

அதுவும் மூப்பனாருக்கு பின்னபட்ட சதிவலைகள் கொஞ்சமல்ல, இன்றுவரை ரஜினி தயங்கி நிற்பதற்கு மூப்பானாருக்கு ஏற்பட்ட அந்த நிலையே காரணம். அதனை கண்ணால் கண்டவர் அவர்.

எனினும் ஒரு விஷயம் கவனிக்கதக்கது.

எம்ஜிஆர் ஆட்சிக்கு வர டெல்லி உதவி இருந்தது, மூப்பனாருக்கும் தொடக்கத்தில் இருந்தது, பின் அவர் தனிகட்சி அடைந்து போராடியபொழுது சிக்கல் வந்தது.

வைகோ எதிலுமே வராத ரகம், அவர் அரசியல் கச்சதீவுக்கு அப்பால் இருந்தது.

ஆனால் விஜயகாந்திற்கு ஒரு உதவியும் இல்லை. திரையுலகமோ தமிழக நிலவரமோ, டெல்லியோ ஒரு ஆதரவுமின்றி களம் கண்டவர் அவர், பின் துரோகத்தில் வீழ்த்தபட்டார்

இப்போது அசுர பலத்தோடு டெல்லி தமிழகத்தில் அடிக்கும் வேளையில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவர் நிச்சயம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கலாம், இப்பொழுது அவரும் தளர்ந்துவிட்டார்.

காற்று கமலஹாசன் பக்கம் அடிக்க ஆரம்பித்திருக்கின்றது.

அவர் எப்படி அதில் தன் பாய்மர கப்பலை செலுத்தபோகின்றார் என்பது இனிதான் தெரியும்.

எனினும் முன்பொரு காலத்தில் இந்திரா தமிழகத்திற்கு வந்தபொழுது விரட்டியதும், அவர் மகன் தமிழகத்தில் கட்சி வளர்க்க துடித்தபொழுது கொன்றே போட்டதும் தமிழ்நாடு.

இங்குள்ள அரசியல் அப்படித்தான். தேசிய கட்சியோ அல்லது இன்னொரு கட்சியோ தலையெடுப்பதில் பல சிக்கல்களும், மிரட்டல்களும் உண்டு.

இதில் கமலஹாசன் நிச்சயம் நெருப்பாற்றை தாண்டியே தீரவேண்டும். அதனை தாண்டுவாரா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

பார்க்கலாம்

ஆனானபட்ட அலெக்ஸாண்டரின் பேரரசு 200 ஆண்டில் சரிந்தது, ரோமானியரின் பேரரசு அழிந்தது, நெப்போலியனோ, முகலாயரோ, பிரிட்டனோ யார் அமைத்த சாம்ராஜ்யங்களும் காலம் காலத்திற்கு நிலைப்பதில்லை

காலமே அமைக்கின்றது, காலமே சரிகின்றது

அப்படிபட்ட உலகில் திமுகவும், அதிமுகவும் கால காலத்திற்கும் நிலைத்துநிற்கும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாதவை.













 


செப்டம்பர் 22, 2016

download-1.jpgகாமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன்.


இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி


இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும்




ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை அவர்கள் சமையல்காரரும் சொல்லவில்லை, அருகிலே இருந்த சசிகலாவு முழு பேட்டி கொடுக்கவுமில்லை


இப்படி இன்னும் வெளிவராத ஆரம்ப தகவல்களே வராத நிலையில் வருடம் 1 ஆகின்றதாம்.


கோடான கோடி செல்வங்களையும், அரண்மனைகளையும் குவித்த ஜெயலலிதா, தனக்கு உண்மையாக அழ ஒருவரை கூட சம்பாதிக்காமல் போனதுதான் சோகம்



சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே



Image may contain: sky, ocean, outdoor and waterஅது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது.


முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும்.


சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும்.


போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது.


உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது.


Image may contain: textசென்பகராமன் யார் என்றால் இனி ராமராஜன் படத்து ரசிகரா? என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம்?, இனி இந்திய வரலாறு என்றால் கோட்சே,சாவர்கர் அப்படியே இன்னும் பலர் வருவர். மற்றவர் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் வெள்ளையரிடம் செத்தவர்கள்.


பெரும் பதிவாக எழுதவேண்டியவர் சென்பகராமன், இன்னொருவனுக்கு அந்த வரலாறு சாத்தியமே இல்லை. பின்னர் பார்க்கலாம். இப்பொழுது கப்பலில் ஏறுவோம்.


அப்படியாக அந்த கப்பல் ஆசிய கடலுக்குள் நுழைந்தது, அதுவரைக்கும் அதுவரை என்ன, பின்னாளில் ஜப்பான் தாக்கும் வரைக்கும் ஐரோப்பிய நவீன போர்க்கப்பல்களுக்கு ஆசியாவில் வேலை இல்லை, இன்னொரு வகையில் சொல்வதென்றால் இந்தியாவில் நடைபெற்ற ஒரே கப்பல்படை தாக்கம் அல்லது உலகப்போர் தாக்குதல் என்றால் அது இன்றுவரை செனையில் நடந்த எம்டன் தாக்குதல் மட்டுமே.


(இன்று மாறிவிட்ட காலங்கள், இன்னொரு உலகப்போர் வந்தால் பாகிஸ்தான்,சீனாவின் ஏவுகனைகள் நிச்சயம் சென்னையினை குறிவைக்கும், அவ்வளவு இல்லை என்றால் இலங்கையின் நாட்டுவெடிகுண்டாவது நிச்சய்ம் வீசபடும்.)


அது 1914 செப்டம்பர் 22, நவராத்திரி கொண்டாங்களில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்க தொடங்கியது எம்டன்.


ஆடிபோனது சென்னை, இலக்குகளை மிக துல்லியமாக தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின, துறைமுக பணியாளார் 10 பேர் செத்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்க தொடங்கியது.


விளக்கையா அணைக்கிறாய், இதோ பார் தீபம் என பர்மா ஆயில் கம்பெனி குடோனை குண்டு வீசி அழித்தது எம்டன், பெரும் தீ, சென்னைக்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன்.


முதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை காலியானது, கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் காலிசெய்து ஊர் திரும்பினர், இன்றைய நீதிமன்ற, துறைமுக, சென்னை கோட்டை பகுதிகள் எல்லாம் வெடித்த ஷெல்கள் கிடந்தது.
முதல்முறையாக தனது ஆசியபகுதிக்குள் ஜெர்மன் தாக்கியதை கண்டு அலறிய பிரிட்டன் எம்டனை தீவிரமாக தேடியது, இன்றைய காலம் என்றால் செயற்கை கோளின் உதவியில் நொடியில் தீர்த்துவிடுவார்கள், அல்லது நீர்மூழ்கி மூலம் முடிவு கட்டுவார்கள்.


அக்காலம் அப்படியல்ல தேடவேண்டும் அதுவும் கடலில். எம்டனும் கலக்கியது, ஏதாவது ஒரு நாட்டின் துறைமுகத்தில் வேறுநாட்டு கொடிபறக்க, யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிகொண்டு பொருட்களை நிரப்பி கொண்டு பயணித்தது.


திடீரென மலேசியாவின் பினாங்கினை தாக்கியது, கிழக்காசிய பிரிட்டன் காலணிகளை தாக்கியது. அப்படியாக 31 பிரிட்டன் கப்பல்களை மூழ்கடித்தது. அவமானத்தில் சிவந்தது பிரிட்டன்.


காரணம் எங்கள் சாம்ராஜ்யத்தில் இந்துமாக்கடல் "பிரிட்டனின் ஏரி", எம்மை மீறி யாரும் புகமுடியாது என்ற கர்வத்தில் அறிக்கையிட்ட பிரிட்டனுக்கு எம்டன் மகா அவமானத்தை கொடுத்தது.


இனி எம்டனை அழிக்காவிட்டால், ஆசியாவில் பிரிட்டன் வர்த்தகம் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அச்சுறுத்தியது எம்டன் கப்பல்.


வழக்கம் போல மாறுவேடம், அவ்வப்போது அந்நியன் அவதாரம் என சென்றுகொண்டிருந்த எம்டன் கப்பல், ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அருகே ஒரு கப்பலை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, வியாபார கப்பல்போல அச்சிறிய கப்பலின் அருகில் வந்த எம்டன், திடீரென விஸ்வரூபமெடுத்து அக்கப்பலை தாக்கியது, ஆஸ்திரேலியர்கள் கண்டுகொண்டனர், ஓ இவர்தான் எம்டன். இங்குதான் இருக்கின்றார்.


சொல்லபோனால் ஒரு வலை, காரணம் அந்த கப்பலை தூரத்தில் கண்காணித்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் சிட்னி போர்கப்பல்.


சிட்னி கப்பல் மகா நவீனமானது, எம்டனை அழிப்பதற்காகவே கடலில் விடபட்டது, இந்த வலையில் சிக்கியது எம்டன்.


கடும் யுத்தத்தில் கடல் யுத்த வியூகபடி, எம்டனின் அடிபாகத்தை சிட்னியால் உடைக்கமுடியவில்லை, திகைத்தார்கள். ஆனால் கப்பல் தொடர்ந்து இயங்கமுடியாதவாறு எம்டனின் பாய்லர்களை ஆஸ்திரேலியாவின் சிட்னி முந்திகொண்டு உடைத்தது, இன்னொன்று தனியாக சிக்கிகொண்ட எம்டனுக்கு உதவிக்கும் யாருமில்லை.


ஆஸ்திரேலிய படையினரோ குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இருந்தனர், அவ்வளவு பெரும் சாதனையாக அது கருதபட்டது.


முதல் உலகப்போரில் தனி முத்திரை பதித்து, இங்கிலாந்தே அக்கப்பல் "கிழக்கின் அன்னப்பறவை" என ஒப்புகொண்ட எம்டன், சுமார் 200 வீரர்களோடு அழிக்கபட்டது..
அதன்பின்னரே பிரிட்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டது.


சுருக்கமாக சொன்னால் இன்றைய நவீன போர்கப்பல்களுக்கு அதுதான் முன்னோடி, 1972 வங்கபோரில் இந்தியாவின் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானில் எம்டன் என்றே அழைக்கபட்டு, அதனை அழிக்கவந்த பாகிஸ்தானின் நீர்மூழ்கி(அவர்கள் என்று உருப்படியாக செய்தார்கள்? எல்லாம் அமெரிக்க அன்பளிப்பு) விசாகபட்டினம் அருகே மூழ்கடிக்கபட்டதும் பின்னாளைய வரலாறுகள்..


எப்படியோ இன்றுவரை சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே, அந்த பெருமை எம்டனுக்கு மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்பதுதான் சென்னை விரும்பிகளின் பிரார்த்தனை.


குஷ்பூ வேறு சென்னையில் இருப்பதால் சற்று கூடுதலாகவே பிரார்திக்க வேண்டியிருக்கின்றது.














 














Thursday, September 21, 2017

பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்...




Image may contain: 1 person, smilingஇந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன்.


அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன்


எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது.





ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக பார்கின்றார்கள். இது சீனர்களுக்கு பேய் மாதமாம், அவர்கள் வேறு பயந்துவிட்டார்கள்.

மனிதர் இப்படியா பெரும் சிக்கலை ஒருவனுக்கு உருவாக்குவார்?, சத்தியமாக ஜெயலலிதா ஆன்மா இவரை சும்மா விட கூடாது

அப்படி என்ன சொல்லி விட்டார்?, அலுவலகத்தில் அல்லது முக்கியமான கூட்டத்தில் , துக்க வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்

அவர் சொன்னது இதுதான்

...
...
..

"என்னை போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது"













 














வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4



Image may contain: 1 personசிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை


தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும்


என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது.


அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும் முடியவில்லை, மொத்த ஐரோப்பா சேர்ந்தாலும் நடக்கவில்லை


அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள், அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி


அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன, அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு அனுப்பினார்கள், ஏதோ கிளர்க் வேலை போல பார்த்துகொண்டிருந்தான்


அது ஒப்புக்கு சப்பான வேலை, அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான்


உண்மையில் அவன் மிக மிக ரசனைக்காரன், நிறைய வாசித்ததால் அவனுக்கு எழுத்து கலையும் அட்டகாசமாக வந்தது. ஊரில் வேறு ஒரு பெண்ணை ஒருதலையாக சுற்றிகொண்டிருந்தான். அதனை பின்புலமாக கொண்டு காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிமுடித்தான்.


ஒரு போர்வீரனுக்கும் அவன் காதலிக்கும் நடக்கும் காதல் கதை அது, ஆச்சரியமாக அது பின்னாளில் அவனுக்கே நடந்தது


தன் வாழ்வின் பின்னாளைய சம்பவத்தை அன்றே கனவாக கொண்டிருந்தான் போலும்.


துருக்கியின் கான்ஸ்டாண்டி நோபிளில் அவன் பணி செவ்வனே முடிந்து பாரீஸ் திரும்பினான்.


ஆனால் அந்த அதிகாரிகளின் கோபம் அப்படியே இருந்தது, வெண்டி செல்ல மறுத்த காரணத்தால் அவனை சஸ்பெண்ட் செய்தார்கள்.


வேலை போன விரக்க்திக்கு உள்ளானான், அவன் மனநெருக்கடி அதிகரித்தது.


பிரான்ஸுக்காய் யுத்தம் நடத்தினேன், பிரென்ஞ் மக்களை கூட்டு சேர்த்தேன் அதற்கு ஏன் என்னை குறிவைத்து அடிக்க்கின்றார்கள் என நொந்துகொண்டான்.


பிரான்சில் கலவரங்கள் அதிகரிக்க தொடங்கின, பாரீஸ் வரை வன்முறை பரவிற்று. அடக்க முடியாமல் அதிகார வர்க்கம் தவித்தது.


அந்த அதிகாரிகளில் பால் பேரஸ் என்றொருவர் இருந்தார், நெப்போலியனின் தீரமிகு யுத்தத்தை நேரில் பார்த்தவர், அவன் அனாசயமாக கலவரங்களை கட்டுபடுத்துவதை கண்ணார கண்டவர்.


அவர் தன் அதிகாரிகளுக்கு யோசனை சொன்னார், பாரீஸ் எரிந்துகொண்டிருக்கின்றது, ஈகோ பார்க்க நேரமில்லை. நெப்போலியனால் இக்கலவரங்களை எளிதில் அடக்க முடியும், அவனால் முடியாவிட்டால் எவனாலும் முடியாது.


அதிகாரிகளும் யோசித்தனர், நெப்போலியனுக்கு அழைப்பு விடுக்கபட்டது, வந்து நின்றான்


"உன் திறமை மீது எப்பொழுதுமே எங்களுக்கு நம்பிக்கை உண்டு, ஏற்கனவே புரட்சியாளர்களுடன் சேர்ந்தாய் என்ற கருப்பு புள்ளியில்தான் உன் தகுதி குறைந்தது.


இதோ உனக்கான வாய்ப்பு, அந்த புரட்சியாளர்களே பாரீஸ் தெருக்களில் அட்டகாசம் செய்கின்றார்கள், இவர்களை அடக்க உன்னை அனுப்புகின்றோம், அடக்கினால் நீ குற்றமற்றவன் என்பதை ஒப்புகொள்கின்றோம்"


நிமிர்ந்து பார்த்தான் நெப்போலியன், என் பதவியில் என்னை அமர்த்தினால் செல்வேன் என்றான்


அது என்ன பதவி? அதனை விட பெரும் பதவியாக இந்த கலவர தடுப்பு படைக்கு உன்னை தளபதியாக நியமிக்கின்றோம் என்றார்கள்.


கிளம்பினான் நெப்போலியன், படைகளை தயார் செய்தான். தன் குதிரையில் தாவி ஏறினான்


பாரீஸ் தெருக்களை படிபடியாக கைபற்றினான், அவன் பக்கமும் இழப்பு இருந்தது ஆனால் அசரவில்லை


நெப்போலியன் வந்தபின் அரசபடைகளின் கை ஓங்கியது. அட்டகாசமாக முன்னேறினான். அவனது வியூகத்தில் எதிரிபடை திணறியது.


அந்த யுத்தத்தை 2 நாட்களில் முடித்து கலவரத்தை அடக்கினான். வெற்றி வீரனானான்


பெரும் ரத்த ஆறுடன் பிரான்சின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தவன் அவனே. அந்த பெருமிததத்துடன் அரசு இயக்கும் டைரக்டர் குழு முன் நின்றான்


அக்குழு அவனை பிரென்ஞ் படையின் தளபதியாக உயர்த்தியது. 24 வயதில் பிரெஞ்ச் தளபதியாக அவன் பொறுப்பேற்றபொழுது பிரான்சே அவனை வித்தியாசமாக நோக்கியது, இந்த சிறுவயதில் எப்படி அவனால் முடிந்தது?


பதவிக்கு வந்ததும் யார் தனக்கு உதவினார்கள் என விசாரித்தான், பால் பேரசின் பெயர் அடிபட்டது.


ஆனால் பால் பேரஸ் யுத்ததில் கொல்லபட்டிருந்தார், எனினும் அவர் வீட்டை பார்க்க கிளம்பினான்


அந்த வீட்டில்தான் நெப்போலியனின் எதிர்காலம் இருக்கின்றது, அவன் வாழ்வு அங்குதான் மறுஜென்மம் எடுக்க போகின்றது என்பது அவனுக்கு தெரியாது.


வீட்டிற்கு சென்ற நெப்போலியன் அந்த பால் பேரஸ் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்த்தான்


இரு குழந்தைகளோடு அவள் நின்றுகொண்டிருந்தாள்.


அவள் தான் ஜோசபைன். பால் பேரஸின் மனைவி.


அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே உறைந்து போய் நின்றான் நெப்போலியன். அந்த பெரு வீரனின் மனம் அவளை கண்டதும் காதலில் விழுந்தது.


அவள் ஒன்றும் அப்படி பிரமாதமான அழகி அல்ல, ஆப்ரிக்க வம்ச கலப்பு, பல்வரிசை வேறு கோணல். அழகு என்றெல்லாம் சொல்லமுடியாது.


குஷ்பூ வீட்டு வாசல் திருஷ்டி பொம்மைக்கு கூட அவளை வைக்க முடியாது, ஆனால் குஷ்பூ இல்லா அக்காலத்தில் அவளே நெப்போலியனுக்கு அழகியாக தெரிந்தாள்


இந்த யழவு காதல் அப்படித்தான், அவரவர் கண்ணிற்கு அவரவர் அழகு. அது முன் ஜென்ம தொடர்போ, ஜாதக அம்சமோ, மன்மத பாணமோ எதுவொ ஒன்று.


அழகில்லாத ஒருவர் இன்னொருவர் கண்ணுக்கு பெரும் அழகியாக தெரிவதெல்லாம் விதிப்பயன்.


ஜோசப்பின் பூர்வீகம் ஆப்ரிக்கா, அவளின் பாட்டி மாந்தீரிகம் மற்றும் ஜாதகத்தில் பி.எச்டி முடித்த நிபுணர்


ஜோசபினுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார், நீ ஒரு நாளில் நாட்டிற்கே மகா ராணியாவாவாய். நிச்சயம் நடக்கும்


ஆனால் ஒரு ராணுவ அதிகாரி மனைவியாய் வாழ்ந்தவள் ஜோசபின், இனி அவரும் இல்லை. விதவை வாழ்வு


இனி அந்த ஜாதகம் எல்லாம் பலிக்குமா? எல்லாம் சும்மா. 4 வீடுகளில் பாத்திரம் தேய்த்து இந்த பிள்ளைகளை வளர்க்க வேண்டியதுதான் என நினைத்துகொண்டு நெப்போலியன் முன்னால் நின்றாள்.


விதி தள்ளி இருந்து புன்னகைத்தது, அது ஜாதக பிரகாரம் வழி போட்டு கொடுத்தது


கண்களால் பேசினான் நெப்போலியன், அவனின் குறிப்பறிந்தாள் ஜோசப்பின்


வீடு திரும்பிய நெப்போலியன் செய்த முதல் காரியம் தனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை வேண்டாம் என சொன்னது


அவன் நினைவெல்லாம் ஜோசபின் நிறைந்திருந்தாள், அவனுக்கு வயது24 அவளுக்கு வயது ஏறகுறைய 30.


காதலுக்கு ஜாதி, மதம், இனம் மட்டுமல்ல, வயதுமில்லை என சொல்லிகொண்டிருந்தான் நெப்போலியன்.


அவன் ஏகபத்தினி விரதன் எல்லாம் அல்ல, தீராத விளையாட்டு பிள்ளை அதில் சந்தேகமே இல்லை. அவன் குதிரையில் யுத்தகாலம் தவிர பெண்கள் அமர்ந்தே இருந்தார்கள்.


ஆனால் ஜோசபினை பார்த்த மாத்திரத்தில் கட்டுண்டு கிடந்தான்.


கடிதங்கள் எனும் பெயரில் அழியா காவியங்களை அவன் அவளுக்கு எழுத தொடங்கினான். ஒவ்வொரு கடிதமும் ஒரு ரோஜாவுடன் அவள் வீட்டுக்கு வர தொடங்கியது.


வாமணன் வருவான் ...













 

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்

"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்


ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா?


அது வரலாறென்றால், இந்த‌ வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு.




மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?



இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...

அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்?


ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்,


என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம்.




ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.


தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்?


மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன?


அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள்


மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை.


மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது.


பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம்.


அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவது அதற்கு சற்று தள்ளி இருக்கும் ராஜிவ் நினைவிடத்தை அப்படியே மறந்துவிடுவது. இதன் பெயர்தான் நினைவேந்தல், இதனை செய்யும் திருமுருகன் ஒரு போராளி.


முதலில் இலங்கையில் புலிகளால் கொல்லபட்ட 1500 இந்திய வீர்களுக்கு மெரீனாவில் ஒரு நினைவு தூண் கட்டபடவேண்டும்


அதன் பின் எவன் மே 17 என மெழுகு பிடிக்கின்றான் என பார்க்கலாம்


மெழுகுவர்த்தி பிடித்தவன் எல்லாம் தமிழின தியாகி எனும் அளவிற்கு தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கின்றது.


இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...



ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?

விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான்


இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது.


அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான்.




அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன்.


வைகுண்டராஜனை விஜயகாந்த் குற்றம்சாட்டிய பொழுதெல்லாம், அவர் வீட்டு புல்டாக் நாயாக கத்தியது இந்த சீமானே.


விஜயகாந்தினை எப்படி எல்லாம் திட்டினார் என்பதற்கு அவரின் முன்னாள் பேச்சுகளே சாட்சி


இப்பொழுது அவர் விஜயகாந்தினை மிக மதிக்கின்றாராம், அவரை பாராட்டுகின்றாராம்.
அதாவது ஜெயலலிதா இல்லை, நடராஜன் கும்பல் அரண்டு போயிற்று, தாதுமணல் சிக்கலில் வைகுண்டராஜனுக்கும் தலைவலி.


முன்பு போல அங்கிருந்து கொட்டபடவில்லை, இனி அவர்களுக்கும் எதிர்காலமில்லை.


அன்னார் அதனால் நைசாக விஜயகாந்த் பக்கம் நூல்விட்டு பார்க்கின்றாராம்..


ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?


இதெல்லாம்...................



காவேரியினை மீட்டதா? : தமிழிசை

காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை


அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள்


அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா?




சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை மீட்டு வந்தால் என்ன?


திமுக 18 ஆண்டுகள்இருந்தே முடியவில்லை, எங்களுக்கு 25 ஆண்டாவது அவகாசம் வேண்டும் , அப்பொழுதுதான் காவேரி வரும் என மட்டும் சொல்லிவிடாதீர்கள், பயங்கர கோபம் வரும் ஆமாம்.



18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள்.


கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள்.


அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள்.




ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள்.


ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து வருகின்றார்கள்?


அது அதிமுகவோ, திமுகவோ இரண்டும் அப்படித்தான்.


சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இதோ இந்த இந்த சுயநல வழக்கிற்கு அள்ளி செலவழிப்பவர்கள், நீட் காவேரி உட்பட தமிழக‌ பொதுநல வழக்கில் ஒரு பைசா செலவழிப்பதில்லை.


ஏன் நீட் தேர்வில் அனிதாவிற்காக இந்த கபில் சிபலை திமுக வைத்து வாதாட கூடாதா? பால் நரிமனை அமர்த்தியிருக்க முடியாதா?


அனிதா செத்தவுடன் அள்ளி கொடுப்பவர்கள், அவள் தரப்பு நியாயத்தை வைக்க நல்ல வழக்கறிஞரை அமர்த்தினார்களா என்றால் இல்லை, ஏன் என்றால் அப்படித்தான்


ஆனால் அனிதா செத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்ததும் இவர்களே..


இதோ காவேரி வழக்கு நடக்கின்றது, யாரோ ஒரு வண்டு முருகன் உளறிகொண்டிருக்கின்றார்.


ஆனால் கபில் சிபல் திமுக சார்பாக உள்ளூர் பிரச்சினைக்கு சென்னையில் ஆஜராகின்றார்.


இதனை சொன்னால் நீ பக்தாள், நீ ஆரிய அடிவருடி, நீ திராவிட எதிரி, தமிழின துரோகி என பல பட்டம் சூட்ட பொங்கிகொண்டு வருவார்கள்.



பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு


முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர்


அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி.




அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ தெரியாது.


ஆனால் நடக்க தொடங்கிவிட்டது.


இதோ தொடங்கிவிட்டார்கள், கொஞ்ச நாளில் இலங்கை பாராளுமன்றத்திலும் அவர் படம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.


ஆக சிங்களன் இலங்கைக்கு மகா விசுவாசமானவனாக பிரபாகரனை தூக்க ஆரம்பித்துவிட்டான். இந்திய தமிழர்களுகுத்தான் சொரணையே இல்லை


இனியாவது தமிழக தமிழர்களுக்கு சொரணை வரட்டும்.



முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை





Image may contain: 2 people, people standing


நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம்


இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? "தெய்வீக கொலு" பொம்மை இதுதான்.


இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது.





முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை,

சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான்.

இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.














 

நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது



Image may contain: indoor


நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும்.


ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு.


அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் தொடர்ந்து பிரார்த்தித்து பத்தாம் நாள் நிறைவு செய்யவேண்டும் என்பது சட்டம்.


அதனை ஆங்கிலத்திலும், லத்தீனிலும் "நவனா" என்றே அழைப்பார்கள், லத்தீனிலும் ஒன்பது என்பதற்கு நவம் என்றே பெயர். தமிழில் நவநாள்.


அதனடிப்படையில் அனைத்து கத்தோலிக்க திருவிழாக்களை பாருங்கள் 9 நாள் ஜெபம், பத்தாம் நாள் கிடா வெட்டி கொண்டாட்டம் + தேர் பவனி என நிறைவு செய்வது, என இதே நவராத்திரியை "நவநாள்" என கொண்டாடுவார்கள். (11ம் நாள் திருவிழா செலவு கணக்கு பார்பார்கள்)


பிரிவினை கிறிஸ்தவர்கள் வேறுமாதிரி, ஆளாளுக்கு ஒரு போதனை, ஆளாளுக்கு ஒரு கொள்கைகளும் பத்திரிகைகளும், இப்பொழுது ஆளாளுக்கு டி.விகள், அதிரடியான மிரட்டல்கள் கூடவே சாபங்கள், அவர்கள் வேறு மாதிரி, மாட்டிகொண்டால் அவ்வளவுதான்,, பிராண்டி எடுத்துவிடுவார்கள்.


இந்தியாவில் தீபாவளி போலவே ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடும் திருவிழா இந்த பூசை திருவிழா, வங்காளத்தில் துர்கா பூஜை, வட இந்தியாவில் காளி பூஜை கூடவே ராவண வதமான ராம்லீலா தென்னிந்தியாவில் தசரா, முத்தாய்ப்பாக ஆயுதபூஜை என கொண்டாடி மகிழும் வேளை இது.


ஒன்பது நாளும் விரதம் இருக்கவேண்டும், விரதம் இருக்கிறேன் என உண்ணாமல் இருக்கிறேன் அதனால் உறங்குகிறேன் என்றால் பராசக்திக்கே பனிமலை உருகும் அளவு கோபம் வருமல்லவா?


விரதம் என்றால் தியானிக்க வேண்டும், உணவை மறந்து இறைசக்தியை நோக்கி மனம் திருப்ப வேண்டும், ஒருவேளை கண்ணோ, மனமோ எங்காவது தறிகெட்டாலும் கூட அதனை கட்டுபடுத்தி இழுத்துவர சில காட்சிகள் வேண்டும், விரத காலம் எனும் நினைவு மனதில் இருந்துகொண்டே இருக்கேவேண்டும், அந்த உணர்வினை ஏற்படுத்தவே அமைக்கபட்டது தான் கொலு அலங்காரம்.


கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள், கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்,


முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம், 2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம், 3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.


4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம், 5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐஉயிர் வடிவங்களும், 6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து


7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும், 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும், 9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,


7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.


9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும், பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.


மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.


இதுதான் கொலுவின் தத்துவம், நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சக்தி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பிரதான பூசைகள் நடைபெறும், சர்க்கரை பொங்கல்,சுண்டல் என மாலைபொழுது களைகட்டும்.


மிக மிக சுகமான காலங்கள், மகிழ்வான தருணங்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இறை தத்துவங்கள், என இந்து நண்பர்கள் கடவுளை நினைத்து உருகும் காலமிது.
சில விஷயங்கள் மதம் சார்ந்தவை, விஜய தசமி பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தது, ஆனால் இன்னும் சில விஷயங்கள் மத எல்லைகளையும் தாண்டி எல்லா மக்களுக்கும் போதனைகளை கொடுப்பது.


அதன் சிறப்புகள் மிக உயரமானது, எல்லா வகையிலும் இறைவனை போற்றி நிற்பது, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனை காண்பது எப்படி என்பதை பாரதம் உலகிற்கு சொன்ன பெரும் போதனையின் அடையாளங்கள் அவை.













 

ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?



No automatic alt text available.உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன‌


அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன‌


அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம்.


அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, பர்மாவின் கடற்கரை பகுதி அது என்பதால் வங்கதேசத்துக்க்கும் அவர்களுக்கும் தொடர்பு அன்றே இருந்திருக்கின்றது.


பின்பு பிரிட்டன் வந்தபொழுதும் அவர்களை பர்மா குடிமக்களாக நடத்தியிருக்கின்றது. வங்கம், பர்மா, ரொகிங்யா எல்லாம் பிரிட்டனிடம் இருந்தவரை அவர்களுக்கு சிக்கல் இல்லை


Image may contain: 1 person, hatபின்பு சிக்கல் பர்மா சுதந்திரபோரில் தொடங்கியிருக்கின்றது, பர்மாவின் சுதந்திர தந்தை ஆங்சான். அவர் ஒரு கம்யூனிஸ்ட் போராளி.


பர்மா விடுதலையின் பொழுதே ரொகிங்கியா மக்கள் தனிநாடு கோரினர்.


பொதுவாக தான் ஆண்ட நாடுகளில் ஏதாவது கொளுத்திபோடுவது பிரிட்டன் ஸ்டைல். இந்தியா பாகிஸ்தான், ஈழம் சிங்களம் என பிரித்துபோட்டு ரசிப்பார்கள்


அப்படி ரொகிங்கியா சிக்கலை தூண்டிவிட்டார்கள், ஆனால் ஆங்சன் அதனை வேறுமாதிரி கையாண்டார்


நாமெல்லாம் பர்மியர்கள் , நீங்கள் இப்பொழுது தனிநாடு கேட்டால் பர்மா விடுதலை சிக்கலாகும் அதனால் முதலில் நாம் ஒற்றுமையாக விடுதலை கேட்கலாம், அதன் பின் உங்களை பர்மாவோடு இணைப்போம் என்று காய் நகர்த்தினார்


அப்படி மைனாரிட்டி ரொகிங்கியா அமைதியாக, பர்மா விடுதலையும் பெற்றது.


(இல்லாவிட்டால் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ரொகிங்யா மாறியிருக்கும்.)


இனி ரொஹிங்யா பர்மாவின் ஒரு பகுதி என்றார் ஆங்சன், ஆனால் அம்மக்களை முறையாக இணைத்து குடியுரிமை கொடுக்கும் முன் கொல்லபட்டார்.


ஆங்சனின் மரணமே ரொகிங்யா மக்களின் கண்ணீருக்கு முதல்படி


Image may contain: 1 person, smiling, close-upஅதன் பின் ஏகபட்ட குழப்பம், தமிரர்களை விரட்டுதல், 
அண்டை நாட்டு அரசுகள் கண்ணசைவில் ராணுவ ஆட்சி என ஏக சிக்கலுக்குள் பர்மா சிக்க ரொஹிங்க்யா மக்களை பற்றி கவலைபட பர்மா அரசுக்கு தெரியவில்லை


குடியுரிமை இல்லை, நாட்டு மக்கள் என்ற அடையாளமில்லை, எப்படி ரொகிங்க்யா மக்கள் வாழமுடியும்? கேட்டால் பதிலே இல்லை


ஒரு கட்டத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க, இத்தரப்பில் புத்த குருக்கள் இறங்க, நீங்கள் வங்கத்தில் இருந்து வந்தவர்கள் அங்கே போங்கள் நிலம் எங்களுடையது என மிரட்ட சிக்கல் வெடித்தது.


அது இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்கின்றது, கிட்டதட்ட 12 லட்சம் ரொகிங்கியாவினர் இன்று இருக்கலாம்.


அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து பர்மியர்கள் ஆக்கிவிட்டால் சிக்கல் இல்லை, ஆங்க்சன் அதனைத்தான் செய்வதாக சொன்னார், ஆனால் கொல்லபட்டுவிட்டார்


இன்று பர்மாவின் பெரும் தலைவியான சூகி அவரின் மகள். அவரின் அரசியல் வாரிசு


தந்தையின் பணியினை தொடர்ந்து , தந்தை வாக்களித்தபடி அம்மக்களை அரவணைக்கவேண்டிய அவரோ மகா அமைதி


நேற்று பேசிய 30 நிமிட உரையிலும் அவர் ரொகிங்ய சிக்கல் பற்றி சொல்லவே இல்லை


அம்மக்கள் உலகெல்லாம் அகதிகளாக அலையும் வேளையிலும் அம்மணி கண்டுகொள்ள தயங்குகின்றார்


காரணம் அம்மக்களுக்காக இறங்கிவந்தால் உள்நாட்டு எதிர்ப்பினை சந்திக்கவேண்டும்


அதே நேரம் காலம் காலமாக வாழ்ந்துவந்த மக்களுக்கு குடியுரிமை கொடுக்கமாட்டோம் என்பதும், நிலம் எங்களுக்கு ஆனால் மக்கள் எம்மக்கள் அல்ல என்பதும் பெரும் அநியாயம், அதனை உலகநாடுகள் கண்டிக்க தொடங்கியாயிற்று


அவரோ அசைவதாக தெரியவில்லை, சிக்கல் நீடிக்கின்றது. அகதிகள் வெளிநாட்டில் குவிவதால் அக்கம் பக்கம் நாடுகள் கண்களை உருட்டுகின்றன‌


தந்தையின் வாக்குறுதியினை அவர் நிறைவேற்றுவாரா அல்லது தந்தையின் ஆன்மா மன்னிக்காதபடி பெரும் தவறு புரியபோகின்றாரா? என ஏகபட்ட கேள்விகள் அவரை சுற்றி நிற்கின்றன‌


வாக்கு அரசியல் எவ்வளவு பெரும் தலைவனையும் அவமானபட வைக்கும் என்பதற்கு இன்று ஆங்சன் சூகிதான் உதாரணம்.


நீங்கள் நாடில்லாதவர்கள் என பல லட்சம் மக்கள் விரட்டபடுவது ஒன்றும் புதிதல்ல, 1965ல் இலங்கை மலையக மக்கள் அப்படித்தான் இந்தியாவிற்கு விரட்டபட்டனர்Image may contain: 3 people, people sitting and night


அதனை எந்த தொப்புள்கொடி உறவும் யாழ்பாணத்தில் கண்டிக்கவில்லை, தீ குளிக்கவில்லை, கத்தவில்லை


மாறாக சிங்களனோடு அமர்ந்து டீ குடித்துகொண்டிருந்தனர்.


ஆயினும் 1980களில் ஈழ மக்கள் அகதிகளாக வந்தபொழுது அகில உலகிலே அதனை கண்டித்து தலையிட்டு அம்மக்களுக்கு உரிமை கொடு என சொல்லி, போராளிகளுக்கு உதவி , பல நெருக்கடிகளை கொடுத்து சிங்களனை இறங்கிவர செய்தது இந்தியா


ஆனால் புலிகளின் அடாவடியில் இன்று அவர்களுக்கு ஒன்றுமேயில்லை, இந்தியாவும் ராஜிவ் கொலைக்குபின் ஒதுங்கி கொண்டது


ரொஜிங்யா முஸ்லீம்களுக்கு உதவ யாருமில்லை , ஆனால் கிடைத்த உதவிகளை எல்லாம் நாசமாக்க்கி ஒன்றுமில்லாமல் போன ஒரே இனம் ஈழதமிழினம், அதற்கு காரணம் யார்? என சொல்லி தெரியவேண்டியதில்லை.


இதோ ஆங்சனுக்கு பின் சூகி வந்து தடுமாறுகின்றார், ரொஜிங்க்யாவில் தலையிட்டால் உயிர் முதல் பதவி வரை ஆபத்து என்பதால் அஞ்சுகின்றார்


ஆனால் இந்திராவினை தொடர்ந்து வந்த ராஜிவ் அஞ்சாமல் ஈழத்தில் தலையிட்டார். தாய் தலையிட்டு அமிர்தலிங்கத்திடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரும்பாடுபட்டார்


அதில் உயிரையும் விட்டான் அந்த உன்னத தலைவன், இம்மாதிரி குழப்பங்கள் உலகில் வரும்பொழுதுதான் அம்மனிதனின் தியாகம் உலகிற்கு தெரியும்


ரொகிங்யா மக்களின் நிலையில், ஆங்க்சனின் வாக்குறுதியினை நிறைவேற்ற மகள் தயங்கும் நிலையில், ஈழ தமிழருக்காக, தன் அன்னையின் வாக்குறுதிக்காக‌ உயிர்விட்ட ராஜிவ் மகா உயரமாக தெரிந்துகொண்டே இருக்கின்றார்