Thursday, September 21, 2017

"ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே..."




Image may contain: 2 people, people smiling, people standingஇயேசுநாதர் காலத்தில் இஸ்ரேல் நாடு ரோமர் ஆளுகையில் இருந்தது, அதனை எதிர்த்து பல கலகம் நடந்தது


அதாவது கடவுளின் நேரடி மக்களான யூதர்களுக்கு கடவுளே அரசன், அவர் ஒருவருக்குத்தான் அவர்கள் வரி செலுத்தி வணங்கவேண்டும், அதனால் பலர் ரோமரை ஏற்க தயங்கினார்கள், பல கலவரம் நடந்தது.


அப்பொழுது இயேசு போதித்துகொண்டிருக்க அவரிடம் கேட்டார்கள், "நாம் ரோமருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?"





அது அவரை சிக்கவைக்கும் கேள்வி, வரி செலுத்துங்கள் என்றால் அவர் கடவுளை அவமதித்ததாகும், இயேசு போலிச்சாமி ஆகிவிடுவார்

வரி செலுத்தாதீர்கள் என்றால் அப்படியே கட்டி தூக்கி ரோமரிடம் உங்களுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துகின்றான் கொல்லுங்கள் என கொடுத்துவிடலாம்

இயேசு அமைதியாக சொன்னார், "கடவுளையதை கடவுளுக்கும், அரசனுடையதை அரசனுக்கும் செலுத்துங்கள்"

அதாவது அரசை பற்றி ஏன் கவலைபடுகின்றீர்கள்? அவன் ஜஸ்ட் காவல்காரன், அவனுக்குள்ளதை கொடுத்துவிடுங்கள், நாம் பரலோக கடவுளின் மக்கள் என்பதால் அதற்கேற்ப வாழுங்கள் என்பது பொருள்

எந்த அரசன் ஆண்டால் என்ன? அரசியல் நமக்கு தேவையில்லா விஷயம், நம்முடைய பணியும் வாழ்வும் வேறு என அன்றே சொன்னார் இயேசு, அதுவும் தன் சொந்த பூமியில் சொன்னார்.

இங்கோ திருச்சி பாதிரிகளுக்கு, இந்தியாவினை ஆளும் கட்சியினை கண்டு கவலை வந்திருக்கின்றது. அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கட்சி சேர்க்கின்றார்களாம்

ஒரு பெரும் பிரிவினைவாதியினை, குழப்பக்காரனை அழைத்து வந்து பேசசொல்லி அருகிலிருந்து ரசிக்கின்றார்கள்.

இது கிறிஸ்துவுக்கே பொறுக்காத, பிடிக்காத விஷயம். ஆனானபட்ட இயேசுவே ரோமருக்கு எதிராக அரசியல் செய்தவர் அல்ல.

இந்த வெள்ளையுடை சாமிகள் அதனை செய்கின்றார்கள்

முன்பு வெள்ளை ஆடை புனிதமானதாக கருதபட்டது, அரசியல் முதல் ஆன்மீகம் வரை அது சீருடையானது

முதலில் அரசியலால் வெள்ளை ஆடை அசிங்கபட்டது, இப்பொழுது இந்த போலிசாமிகளால் அசிங்கபடுகின்றது

இயேசுவின் வார்த்தைதான் இது, இவர்களுக்கு பொருந்தும்.

"ஏ வெள்ளையடிக்கபட்ட கல்லறைகளே, உங்களுக்கு அய்யோ கேடு"













 

No comments:

Post a Comment