Monday, September 11, 2017

எண்டம்மையேட ஜிமிக்கி கம்மல்....

https://youtu.be/Och5LmLGQjI


ஓணம் வந்தாலும் வந்தது, எங்கு திரும்பினாலும் இந்த "ஜிமிக்கி கம்மல்" பாடல் இம்சை.


ஒருவகை கேரள கானா பாடல்தான் இது, "எங்கம்மா ஜிமிக்கி கம்மலை எங்கப்பன் வித்துட்டான், எங்கப்பன் குவார்ட்டர் பாட்டிலை என் அம்மா குடித்துவிட்டாள்" என தமிழில் வரிகள் வரும்.


பாடல் யாருக்கு வேண்டும்? கேரள பாரம்பரிய இசையினை மேம்படுத்தி மெட்டு போட்டிருக்க்கின்றார்கள் பிய்த்துவிட்டது




ஏதோ மோகன்லால் படத்து பாடலாம், ஒரிஜினலை விட அதனை ஆடிய மாணவிகளின் ஓண பண்டிகை ஆட்டம் பிய்த்துகொண்டு ஹிட் அடித்துவிட்டது


சும்மா சொல்ல கூடாது நன்றாகத்தான் ஆடுகின்றார்கள், ஆனால் இப்பாடலில் குஷ்பூ ஆடியிருந்தால் மிக மிக நன்றாயிருந்திருக்கும்


இந்த ஷெரில் என்பவர் அழகாகத்தான் இருக்கின்றார், சில சாயல்களில் குஷ்பூ போலத்தான் தோன்றுகின்றார், ஆனால் 30/100 மதிப்பெண் மட்டும் குஷ்பூ இடத்தினை நிரப்ப முயன்று தோல்வி அடைகின்றார் என்பது சங்கத்தின் முடிவு.


குஷ்பூவிற்கான இந்த பாடல், யாராலோ ஆடபட்டு அதன் 100% வெற்றியினை அடையவில்லை என்பதுதான் உண்மை,


குஷ்பூ மட்டும் இந்த மெல்லிய நடனத்தில் ஆடியிருந்தால் 300% வெற்றியினை அப்பாடல் அடைந்திருக்கும்.


இந்த ஜிமிக்கி கம்மல் ஆட்டம் பரவாயில்லை, ஆனால் குஷ்பூ ஆடிய "பாலக்காட்டு பொண்ணு, பம்பரம் போல கண்ணு" பாடல் முன் இதெல்லாம் ஒன்றுமேயில்லை.











https://youtu.be/FXiaIH49oAU




K79375

No comments:

Post a Comment