Friday, September 22, 2017

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்




Image may contain: 1 person, close-upஇது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம். 


திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது.


இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம்





அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது.

கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை.

இதில் கமலஹாசன் என்ன? சாருஹாசன் கூட வரலாம். வந்து எப்படி மக்கள் வரவேற்பினை பெருகின்றார்கள் என்பதுதான் விஷயம்.

ஆனால் கமல் கட்சி நடத்துவதும் சாமான்ய விஷயம் அல்ல, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக கட்சி வளர்க்க முனைந்த வைகோ, மூப்பனார், விஜயகாந்த் எல்லாம் பட்டபாடு கொஞ்சம் அல்ல.

அதுவும் மூப்பனாருக்கு பின்னபட்ட சதிவலைகள் கொஞ்சமல்ல, இன்றுவரை ரஜினி தயங்கி நிற்பதற்கு மூப்பானாருக்கு ஏற்பட்ட அந்த நிலையே காரணம். அதனை கண்ணால் கண்டவர் அவர்.

எனினும் ஒரு விஷயம் கவனிக்கதக்கது.

எம்ஜிஆர் ஆட்சிக்கு வர டெல்லி உதவி இருந்தது, மூப்பனாருக்கும் தொடக்கத்தில் இருந்தது, பின் அவர் தனிகட்சி அடைந்து போராடியபொழுது சிக்கல் வந்தது.

வைகோ எதிலுமே வராத ரகம், அவர் அரசியல் கச்சதீவுக்கு அப்பால் இருந்தது.

ஆனால் விஜயகாந்திற்கு ஒரு உதவியும் இல்லை. திரையுலகமோ தமிழக நிலவரமோ, டெல்லியோ ஒரு ஆதரவுமின்றி களம் கண்டவர் அவர், பின் துரோகத்தில் வீழ்த்தபட்டார்

இப்போது அசுர பலத்தோடு டெல்லி தமிழகத்தில் அடிக்கும் வேளையில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவர் நிச்சயம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கலாம், இப்பொழுது அவரும் தளர்ந்துவிட்டார்.

காற்று கமலஹாசன் பக்கம் அடிக்க ஆரம்பித்திருக்கின்றது.

அவர் எப்படி அதில் தன் பாய்மர கப்பலை செலுத்தபோகின்றார் என்பது இனிதான் தெரியும்.

எனினும் முன்பொரு காலத்தில் இந்திரா தமிழகத்திற்கு வந்தபொழுது விரட்டியதும், அவர் மகன் தமிழகத்தில் கட்சி வளர்க்க துடித்தபொழுது கொன்றே போட்டதும் தமிழ்நாடு.

இங்குள்ள அரசியல் அப்படித்தான். தேசிய கட்சியோ அல்லது இன்னொரு கட்சியோ தலையெடுப்பதில் பல சிக்கல்களும், மிரட்டல்களும் உண்டு.

இதில் கமலஹாசன் நிச்சயம் நெருப்பாற்றை தாண்டியே தீரவேண்டும். அதனை தாண்டுவாரா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

பார்க்கலாம்

ஆனானபட்ட அலெக்ஸாண்டரின் பேரரசு 200 ஆண்டில் சரிந்தது, ரோமானியரின் பேரரசு அழிந்தது, நெப்போலியனோ, முகலாயரோ, பிரிட்டனோ யார் அமைத்த சாம்ராஜ்யங்களும் காலம் காலத்திற்கு நிலைப்பதில்லை

காலமே அமைக்கின்றது, காலமே சரிகின்றது

அப்படிபட்ட உலகில் திமுகவும், அதிமுகவும் கால காலத்திற்கும் நிலைத்துநிற்கும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாதவை.













 


No comments:

Post a Comment