Thursday, September 14, 2017

நவோதயா பள்ளி வந்தாவது தாய்மொழியினை காக்கட்டும்




 நவோதயா பள்ளிகளில் இந்திக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


இவர் நடத்தும் பள்ளியில் முழுக்க முழுக்க ஆங்கிலம், இதனை எல்லாம் குற்றம்சாட்டுவது யார்?






கேரளா, கன்னடம், தெலுங்கானா எல்லாம் இந்தி திணிப்பு ஆபத்தை புரிந்துகொண்டன, கட்டாய தாய்மொழி விஷயத்தில் இறங்கிவிட்டன.


தாய்மொழி கற்பிக்காக கல்வி நிலையங்கள் இயங்கமுடியாது என்பது முதல் பெரும் நடவடிக்கையில் அவை இறங்குகின்றன. அவர்களின் மொழிபற்று வாழ்த்துகுரியது


இவ்வளவிற்கும் தெலுங்கானா தவிர (அதுவும் காங்கிரஸ் அடிமைதான்) மற்ற இரண்டும் தேசிய கட்சி ஆளும் மாநிலங்களே, ஆனாலும் தாய்மொழியினை காக்க , தங்கள் கலாச்சாரத்தை காக்க துணிந்துவிட்டன‌





இந்தியாவிலே முதன் முதலில் மொழிக்காக 100 பேரை பலிகொடுத்து , ஆட்சிக்கும் வந்த திராவிட கழகங்கள் ஆளும் தமிழகத்தில் தமிழின் நிலை என்னவென்று சொல்லி தெரியவேண்டியதில்லை

இதில் நவோதயா பள்ளி வந்தாவது தாய்மொழியினை காக்கட்டும் என்றால், அதுவும் ஆபத்தாம்.

சரி நீங்களாவது உரிய சட்டம் இயற்றி காத்துகொள்ளுங்கள் என்றால் அதுவும் செய்வதில்லை.

அதிமுக முதல் திமுகவினர், சில திகவினர் வரை எல்லோருக்கும் தமிழ் இல்லா ஆங்கிலபள்ளிகள் சொந்தமாக இருப்பது ஒன்றும் ரகசியமல்ல‌

அரசியலுக்காக இந்தியினை எதிர்த்து தமிழை ஆங்கிலத்திடம் பலிகொடுப்பது மொழியுணர்வு ஆகாது.

இனியாவது தமிழகம் திருந்தட்டும், மக்கள் விழித்துகொள்ளட்டும்

இந்த பழனிச்சாமி சதாகாலமும் கவர்ணரை, மோடியினை, பன்னீரை சந்திப்பதை விட்டுவிட்டு இந்த தெலுங்கானா, கேரள முதல்வர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது.









தமிழிசை நீட் தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் நீட்டுக்கு எதிரான போராட்டம் வாபஸ்: வேல்முருகன் பேச்சு

ஏம்பா வேல்முருகா, பிரபாகரன் கூடத்தான் பலமுறை சிங்களிடம் தோற்று இறுதியில் மொத்தமாக அழிந்தான். அவனை ஏன் மாவீரன் என சொல்லிகொண்டிருக்கின்றீர்.

அது என்ன 50%?


ஈழத்தில் இந்திய அரசு பல்லாயிரம் வீடுகளை கட்டியிருக்கின்றது, யுத்தத்தால் அழிந்த 50% இடங்களை சரி செய்திருக்கின்றது, இனி ஈழத்தை பற்றி பேசாமல் இருக்க நீர் தயாரா?

அது இருக்கட்டும் புளுவேல் முருகன், இந்த லைக்காவிற்கு எதிராக ஏன் திடீரென அமைதியாகிவிட்டீர்?





 


No comments:

Post a Comment