Friday, September 15, 2017

இன்று திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.




Image may contain: 3 people, people sittingஇன்று திலீபன் என்பவர் இலங்கையில் அன்று உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.


அதனால் ஆரம்பித்தாயிற்று அங்கிள் கோஷ்டி. இந்தியா திலீபனை காப்பாற்ற தவறியது, இந்திய துரோகம், இந்தியா ஒழிக. ஹேய்ய்ய் இன்னபிற ஆட்டங்கள்.


திலீபனை காப்பாற்ற வாய்ப்பு இருந்தது, அவன் கேட்டது உடனே நிறைவேற்றபடும் கோரிக்கை அல்ல. அதற்கு சில அவகாசம் வேண்டும், அவனை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோரிக்கையினை புலிகள் கண்டுகொள்ளவே இல்லை





அன்று திலீபனின் சாவு அவர்களுக்கு வேண்டியிருந்தது, அதனை வைத்து மக்களை உணர்ச்சியூட்டும் அவசியம் இருந்தது, அதனால் அப்படி நகர்த்தினார்கள்.

இதோ வேலூர் சிறையிலும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார், மூன்றாம் நாளே நமது காவல்துறை தூக்கிபோட்டு மருத்துகொடுத்து காப்பாற்றவில்லையா? புலிகள் இதனை செய்திருக்கலாம்

காந்திய வழியிலோ, அஹிம்சையிலோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லாதவர்கள் புலிகள், பின்பு ஏன் இப்படியான காரியங்கள்

அப்படி காந்தி வழி என்றால், காந்தி தானே உண்ணாவிரதம் இருந்தார். தன் உயிரை கொடுக்க துணிந்தார். எவனையோ பிடித்து உண்ணாவிரதம் இருக்க வைத்துவிட்டு வெள்ளையனிடம் அவர் பேரம் பேசினாரா?

ஆனால் பிரபாகரன் அதனைத்தான் செய்தார், கேட்டால் காந்திவழி போராட்டமாம்.

தீலிபனை காக்கும் பொறுப்பு இந்தியாவினை விட புலிகளுக்கு இருந்தது, பிரபாகரன் ஒரு உத்தரவிட்டிருந்தால் திலீபன் எழும்பியிருப்பான்

ஆனால் அவனே தன்னை காப்பாற்ற கூடாது என எழுதியிருகின்றான் என சொல்லி, வந்த மருத்துவரை எல்லாம் திருப்பி அனுப்பினர் புலிகள்

திலீபனுக்கு நடந்தது திட்டமிட்ட கொலை, இந்தியாவிற்கு எதிராக அன்று ஏவப்பட்ட ஒரு தற்கொலைப் படை அவன்

இதே இலங்கையில் அன்று பல்கலைகழகத்தில் சிங்களனை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தனர் சில மாணவிகள், இதெல்லாம் போராட்டம் அல்ல துப்பாக்கி தூக்குவதுதான் போராட்டம் என சொல்லி அவர்களை தூக்கி வந்து காப்பாற்றினர் புலிகள்

அவர்களில் ஒருவர்தான் பிரபாகரன் மனைவி மதிவதனி

அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் , யார் சாக வேண்டும் என்பது பிரபாகரன் கையில்தான் இருந்திருக்கின்றது

அவர் நினைத்தால் திலீபனை காத்திருக்கலாம், ஆனால் சொன்னது என்ன?

" நீ முன்னால் போ, நான் பின்னால் வருகின்றேன்" என அவன் செத்தே தீரவேண்டும் என்ற முடிவோடு அனுப்பினார்

அதன்பின் கிட்டதட்ட 1 லட்சம் மக்களோடு பிரபாகரன் 22 வருடம் கழித்து திலீபன் சென்ற இடம் சென்றார், ஈழ தமிழருக்கு ஒரு தீர்வும் பெற்று தராமலே சென்றார்.

இதனை எல்லாம் மறைத்துவிட்டு சீமானின் தும்பிகள் தியாக தீபம் திலீபன் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

விகடன் போன்ற பத்திரிகையும் உண்ணா நோன்பின் மகத்துவத்தை உலகிற்கு சொன்னா திலீபன் என படுபயங்கர சதியினை சொல்கின்றன, பொறுப்பு என்பது கொஞ்சமும் இல்லை.

விகடனின் இந்த கபடம் பத்திரிகை துரோகம். தன் சொந்த நாட்டினை எதிர்த்து எங்கோ மோசடியாக உண்ணாவிரதம் என கொல்லபட்ட அந்நியநாட்டுக்காரன் ஒருவனை தியாகி என இந்திய பத்திரிகை எழுதுவதுதான் தேச துரோகம்.

பக்தாள் எல்லாம் இம்மாதிரியான தேசதுரோகங்களை எல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள், அதுவும் "அவாள்" பத்திரிகை என்றால் ம்ஹூம்.













 


No comments:

Post a Comment