Image may contain: 1 person, smilingஈழ விவகாரம் பேச போகின்றேன் என ஐ.நா சென்ற இயக்குநர் கவுதமன் என்ன பேசியிருக்கின்றார்?


தமிழ்நாடு நிம்மதியாக இல்லை, பிரிட்டன் எங்களை அடிமைபடுத்தி இந்தியோடு இணைத்தது.


இங்கு பெரும் போராட்டம் இந்தியாவிற்கு எதிராக காஷ்மீருக்கு நிகராக நடக்கின்றதாம், உலகம் கண்டுகொள்ளவில்லையாம்


தமிழில் உச்சநீதிமன்றத்தில் வாதாட முடியவில்லையாம் (மலையாளம், கன்னடம் இன்னும் மற்ற மாநிலம் எல்லாம் எப்படி என அன்னார் சொல்லவில்லை), இப்படி தமிழரை கொடுமைபடுத்துகின்றார்களாம்,


தமிழக மாணவர்களுக்கு கல்வி மறுக்கபட்டதாம், அப்துல் கலாம் பேசிய அதே ஐ.நா சபையில் அன்னார் சொல்வதுதான் பரிதாபம்


தமிழகத்தில் மற்ற மாநிலத்தோர் படிக்கின்றார்களாம், தமிழன் எங்கெல்லாம் படிக்கின்றான் என சொல்லவில்லை


காவேரியில் கொடுமையாம், ஆனால் பெங்களூரில் வாழும் தமிழர் பற்றி ஒரு வார்த்தையில்லை


காவேரியில் நீர் விடவில்லையாம், ஆனால் பவானி, நொய்யல், அமராவதியில் கட்டபட்டிருக்கும் அணை பற்றி மூச் இல்லை.


செம்மரம் கடத்தலில் தமிழரை மட்டும் பிடிக்கின்றார்களாம், ஆனால் சமீபத்தில் செத்த கல்கத்தா நடிகை பற்றி சத்தமே இல்லை


தமிழக விவசாயி தற்கொலை செய்கின்றானாம், ஆனால் பழனிச்சாமி அரசு பற்றி சத்தமேயில்லை


ராஜிவ் கொலையில் 7 தமிழரை விடவில்லையாம், அதில் 4 பேர் இலங்கையர் என்பதை சொல்லவில்லை


முள்ளிவாய்க்கால் கொடுமை என சொல்பவர், அங்கு முன்பு செய்த விஷயம் பற்றியோ, இந்திய ராணுவம் கொல்லபட்டதையோ சொல்லவில்லை


ஆக ஈழ விஷயத்தை பேசபோகின்றேன் என ஐநா சென்ற கவுதமன், தமிழகத்தில் பெரும் கொடுமை நடப்பது போல பேசிகொண்டிருக்கின்றார்


அதாவது ஜனநாயக முறையில் தமிழக அரசு அமைந்திருக்கும்பொழுதும் இங்கு பேச வேண்டிய விஷயங்களை வியன்னாவில் போய் சொல்லிகொண்டிருக்கின்றனர்


தலையில் அடித்துகொண்டு பரிதாபமாக கவுதமனை பார்க்கின்றது உலகம்


எல்லோரும் பேச ஆரம்பித்தால் நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும், இந்த கவுதமன் போன்ற பித்தலாட்டக்காரரை முதலிலே கிள்ளுவது நன்று


ஆனாலும் அங்கிள் சைமனுக்கு போட்டியாக இன்னொரு காமேடியனை திரையுலகம் கொடுத்துவிட்டது மட்டும் புரிகின்றது.


எனினும் பைத்தியகாரதனமாய் தமிழகம் காஷ்மீர் போன்றது என உலகெல்லாம் உளறிதிரியும் இந்த கவுதமன் மீது அரசு செய்யவேண்டியதை செய்யவேண்டும்.


அன்னார் ஈழம் பற்றி என்ன பேசினார் என்றால் ஒன்றுமில்லை


மாறாக ரொஹிங்கியா முஸ்லீம்களை விட கடும் சிக்கலில் இருப்பவர்கள் இந்திய தமிழர்கள் என பேசிவிட்டு வந்திருக்கின்றார்


எல்லா ஐரோப்பிய நாட்டு தூதரகமும் சென்னையில் உண்டு, அவர்கள் விமானம் தினமும் வந்து செல்கின்றது


அவர்களுக்கு இவர் சொல்லி கொடுக்கின்றாராம்.


ஒருவேளை ஐரோப்பாவில் அகதி அட்டை கிடைக்க பேசியிருப்பாரோ? ஐரோப்பியர்கள் என்ன விவரமில்லாதவர்களா?


ஏம்பா கவுதமா?


பிரிட்டனா தமிழகத்தை இந்தியாவோடு இணைத்தது? சேர சோழ, பாண்டிய‌ காலத்திலும் அவர்களுக்கு கன்னடரோடு தெலுங்கரோடு, சிங்களரோடு மணவுறவு இருந்திருக்கின்றது


தமிழ்நாட்டின் எல்லை காலத்திற்கேற்ற வகையில் பெரிதாகி, சுருங்கி, பெரிதாகி சுருங்கியே வந்திருக்கின்றது.


நிரந்தர தமிழக எல்லை எது என காட்ட முடியுமா? முடியாது.


அகண்ட தமிழகம் என கங்கை வரை காட்டினால், கடாரம் வரை காட்டினால், சுருங்கிய தமிழகம் என மதுரைக்கு தேற்கே என காட்ட மற்ற மக்களிடமும் வரைபடம் உண்டு.


காலத்திற்கு ஒரு வரைபடம் காட்டமுடியுமே தவிர, நிரந்தர தமிழகம் எது என காட்ட முடியுமா?


அப்படி காட்டினாலும் அது சேர, சோழ, பாண்டி, கடையேழு வள்ளல் நாடாக துண்டு துண்டாக இருக்குமே தவிர ஒரே தமிழகமாக என்று இருந்தது?


ஆக இந்த வரைபடம் காட்டும் வேலை எல்லாம் எடுபடாது.


மாலிக்காபூர் வந்து மதுரையில் ஆடும்பொழுது தமிழக வரைபடமே சின்னாபின்னமாகியிருந்தது .


பின் நாயக்கர் ஆட்சியில் அது எப்படியோ பிரிக்கபட்டது, பின் ஆற்காடு நவாபின் ஆட்சியில் தமிழகம் சிக்கியிருந்தது.


இது எந்நாடு, நீ வரிபிரித்துகொள் என தமிழகத்தை பிரிட்டிசாரிடம் கொடுத்தது சாட்சாத் ஆற்காடு நவாப்


ஆக வெள்ளையன் வருமுன்னே இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடே, அசோகர் முதல் ஆற்காடுநாவாபின் ஒரு பகுதியாகவே பலமுறை விளங்கியிருக்கின்றது,


ஆக பிரிட்டிசார் வலுகட்டாயமாக இணைத்தனர் என்ற கட்டுகதை எல்லாம் செல்லாது, வேறு கதை இருந்தால் எழுது.