Tuesday, January 24, 2017

முதல்வர் திரு பன்னீர் செல்வம்...

pa

 




கலைஞருக்கு பின் சகலத்தையும் பொறுத்துகொள்ளும் ஒரு முதல்வர் உண்டென்றால் அது சாட்சாத் நமது இன்றைய முதல்வர்தான்


எத்தனை வகையான கிண்டல்கள், எத்தனை வகையான மீம்ஸ்கள்


இனிப்புகடை பண்டங்களின் அத்தனை பெயர்களில் அழைக்கபட்டாலும் மனிதர் பொதுவாழ்க்கையில் அசாத்தியமாக இயங்குகின்றார்




ஆட்சி பற்றி ஏதும் சொன்னால் கடும் போக்கு எடுக்கும் கட்சிதான் அது, அக்கட்சியின் தலைவர்கள் வழி வந்திருந்தால் இந்நேரம் மிரட்டல், அவதூறு வழக்கு, பத்திரிகை விரட்டு என கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பார்


இவர் அக்கட்சி என்றாலும் அரசியலில் கலைஞரை பின்பற்றி நடப்பவர் என்பது புரிகின்றது


அதிமுகவில் இருந்து கொண்டே திமுக தலைவரை வழிகாட்டியாக கொண்டு வளர்ந்து இன்று ஆட்சியில் வந்திருக்கின்றார்


இல்லாவிட்டால் இவ்வளவு நிதானம் சாத்தியமில்லை.


அவர் சட்டைபையில் இருப்பதுதான் ஜெயாபடமே தவிர, மனதிற்குள் கலைஞருக்கு கோயிலே கட்டி அனுதினமும் வணங்கி கொண்டிருப்பார் போல தெரிகின்றது










உடன்பிறப்பே...



Image may contain: 1 person, sitting



உடன்பிறப்பே


நடந்து முடிந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியான தொடக்கமாகவும் , நோக்கம் நிறைவேறினாலும் விரும்பதகாத முடிவாகவும் நான் கண்டதை போலவே நீயும் கண்டிருப்பாய்


அன்று இந்திக்கு எதிராக நம் பகுத்தறிவு ஆசான் பெரியார் காட்டிய வழியில் தமிழகம் பூண்ட போர்கோலத்திற்கு கொஞ்சமும் குறையாத எழுச்சி அது.


என் இளமை காலத்தில் போராடிய அந்த ஊக்கமான போராட்டத்தை ஒவ்வொரு மாணவ கண்மணியிடமும், இன்று சக்கர நாற்காலியில் இருந்து என்னையே கண்ட வீரவரலாறு இது.


இதனை எண்ணி எண்ணி பேருவ‌கை கொள்கின்றேன், ஆனந்த கண்ணீர் சிந்துகின்றேன்


உரிமையினை மீட்ட இந்த நேரத்தில், வெற்றி முரசு கொட்டும் இந்த நேரத்திலும் சில உறுத்தல் கண்டாயா?, வெற்றி மாலையினை கரங்களில் எடுக்கும் பொழுது நம் கண்களில் விழுந்த சில மணலை பார்த்திருப்பாய்


அண்ணா இறந்தபொழுது, அருமை நண்பர் ராமசந்திரன் இறந்தபொழுது, சீரணி அரங்கம் இடிக்கபட்டபொழுது, தமிழ்மான கண்ணகி சிலை இடிக்கபட்டபொழுது எப்படி மெரினாவினை நினைத்து அழுதேனோ அப்படியே நேற்றும் அந்த மெரினாவினை கண்டு அழுதேன்


மாணவர் குழாம், படையாக மாறி. கடல் மணலா இல்லை கண்மணிகள் தலையா என ஒரு வார காலம் மிக அமைதியாக நடந்து, வெற்றி கனியினை ஈட்டிய போராட்டம் இறுதி நாளில் கசந்தது ஏன்?


வெற்றி மாலையில் இடம்பெற்ற அந்த மலர்கள், கசக்கி எறியபட்டது ஏன்?


அங்குதான் புல்லுறுவிகளின் அக்கிரமும், மான் கூட்டத்தில் புகுந்த நரிகளின் தந்திரமும், களிறுகள் மத்தியில் புகுந்த மலைபாம்பு கூட்டத்தின் வலைபின்னலும் தெரிகின்றது


வட்டமிட்ட கழுகுகள் தரையிரங்கிய நேரமது, வாய்பிளந்து நின்ற ஓயாய்கள் பாய்ந்த தருணமது.


உனக்கு நினைவிருக்கின்றதா?, யாரும் மறக்கமுடியாதது அது


இதே வங்க கடலுக்கு அப்பால், ஒரு தலைக்கணம் பிடித்த சிறுக்கன், கோடரிகாம்பு ஒருவனால் தமிழினம் சிக்குண்டிருந்தபொழுது நம்மை எப்படி எல்லாம் தூற்றினார்கள், இந்த கழக அரசு ஓயவேண்டும், கருணாநிதி சாகவேண்டும் என்றெல்லாம் நம்மேல் புழுதி வீசினார்கள்


யார் வீசினார்கள்?


கொடுமதியாளர்கள், குரங்கு மதியாளர்கள் இன்னபிற புல்லுருவிகள் எல்லாம், அதாவது தமிழனுக்காக் புல் கூட பிடுங்காதவன் எல்லாம் வாய்க்கும் ஆசனவாய்க்கும் வந்ததெல்லாம் பேசிய காலம் அது.


அவர்கள்தான் இன்றைய நிழல்முதல்வர் என பத்திரிகைகளில் சொல்லபடும் நண்பர் நடராசனுக்கு தளகர்த்தர்கள். முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் என ஒன்றை கருணாநிதி என்பவனை திட்டிகொண்டே தஞ்சையில் திறந்தவர்கள்,


அதன் பின் மறைந்த ஜெயலலிதா அம்மையார் அதனை இடித்தபொழுதும் கருணாநிதி ஒழிக என சொல்லிகொண்டே அழுதவர்கள்


அப்படிபட்ட அந்த குரங்கு கும்பலை, வானர சேனையினை இன்னும் பலரை அக்கரை தமிழன் தாக்கபட்டபோது அக்கறையாக பொங்கியவர்களை இக்கரை தமிழன் தாக்கபடும்பொழுது கண்டாயா?


இன்று அவர்கள் ஆட்சி, அன்றே மொழிப்போரில் பங்குபெற்று என் சீடனாகி என் கையால் தாலிகொடுத்து திருமணம் செய்துவித்த தில்லையாரின் ஆட்சி


மறைமுகமாக அது ஒருஆண்டாள் ஆட்சி, இன்னும் மறைமுகமாக அது தில்லையம்பல ஆட்சி. அபிஷேக "பன்னீர்" என்பது என்றுமே மூல தெய்வம் ஆகாது


அந்த "பன்னீர்" சிலையின் தலைவழியே ஊற்றபட்டு சிலையில் காலருகே வழிந்தோடும் அபிஷேக "பன்னீரே" அன்றி அது தெய்வம் ஆகாது.


அங்கு இப்பொழுது அம்மையார் இல்லை எனினும் ஆண்டாள் ஆட்சியே


நாம் என்ன கேட்கின்றோம்?


நேற்று மாணவர்கள் தாக்கபட்டபொழுது இதே வானரங்கள் இன்னபிற ஈழஆந்தைகள் எல்லாம் அந்த நடராசனை சூழ்ந்து அய்யா நம் மாணவ செல்வங்களை காப்பாற்றுங்கள் என சொன்னால் என்ன?


அந்த பன்னீரை சந்தித்தோ முடியாவிட்டால் கண்டித்தோ முழங்கினால் என்ன?


செய்ய மாட்டார்கள் உடன்பிறப்பே


அரசு தோல்வி, ராஜினாமா போன்ற வார்த்தைகளை காதினை தீட்டிவைத்தும் கேட்டாயா? எந்த காதுகளுக்கும் அப்படி ஒரு வார்த்தை வரவில்லையாம்


ஆனால் நமது அரசென்றால் காற்றேல்லாம் இதே வார்த்தைகள் அல்லவா வரும்?


இதே நம் அரசு என்றால், ஏய் கருணாநிதி உனக்கெதெற்கு டெல்லியில் எம்பிக்கள், உனக்கு எதற்கு அரசு, உனக்கெதற்கு கண்ணாடி, பதவி விலகினாலும் உன் பாவம் போகாது, நீ செத்தே தீரவேண்டும் என கொதிப்பார்கள்


இந்த திண்ணை வீரர்களின் சாகசத்தை, இப்படியும் இவர்கள் காட்டும் தந்திரத்தை, இந்த செந்ந்நாய் கூட்டத்தை, சிறுநரி மூளையினை நீ என்னைபோலவே புரிந்து கொள்வாய் என நம்புகின்றேன்


என் இன்மான தமிழினமே


பெரியாரும் அண்ணாவும் கற்பித்த எழுச்சியினை உங்களில் கண்டேன், நீங்கள் உரிமை மீட்டதையும் கண்டேன். இனி எம்மை போன்றவர்கள் இல்லை எனினும் இந்த தமிழகம் தன் உரிமையினை காக்கும் என்ற மகிழ்ச்சியில் என் காலம் கழிந்தாலும் நிம்மதியாக ஏற்றுகொள்வேன்


நாங்கள் பட்டபாடு வீண்போகவில்லை, நாங்கள் ஊட்டிய மான உணர்ச்சி பட்டுபோகவில்லை என்பதை உச்சம் தொட்டு காட்டிய உங்களை ஆரதழுவி நன்றி தெரிவிக்கின்றேன்


இனி நீங்கள் படியுங்கள், கூடவே திராவிட கொள்கைகளையும் படியுங்கள். கல்வி உங்கள் அறிவை கூர்மையாக்கும் ஆயுதம், திராவிட கொள்கைகள் இந்நாட்டில் அவ்வப்போது எழும் சில அடக்குமுறைகளை அடித்து நொறுக்கும் சம்மட்டி.


என் அருமை உடன்பிறப்பே


தமிழர் அமைப்புகள் என சொல்லிகொண்டு இன்று நடராஜனின் கூட்டாளியாக இருந்துகொண்டும் ஒன்றும் செய்யாமல் நீலிகண்ணீர் வடிக்கும் இந்த கோட்டான்கள்தான் நம்மை நோக்கி ஒரு காலத்தில் கத்திகொண்டிருந்தன‌


இன்று மெரினாவில் அவர்கள் வேடம் கலைந்ததில் அவர்கள் நாறி கொண்டிருக்கின்றார்கள்


சத்தியம் சாகாது, திராவிடம் தோற்காது என்பது உண்மையாகவிட்டது


வாழ்க திராவிடம், மீள்க அதன் உரிமைகள்


தொலையட்டும் புல்லுருவி, மெரினாஉருவி கூட்டம்..





























மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது


லாரன்ஸ் வந்தேறி, அந்த ஹிப்காப் (அது என்ன ஹிஹிஹிஹ் காப்?) தமிழன் வந்தேறி, பாலாஜி வந்தேறி, அவர்கள் துரோகம் செய்ததால் போராட்டம் கலைக்கபட்டது என ஓப்பாரி தொடங்கிவிட்டது


அடேய்




காவல்துறையினை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் பச்சை தமிழன், அவரின் ரிமோட்டை வைத்திருக்கும் சசிகலா தமிழச்சி, சசிகலாவினை ஆட்டிபடைக்கும் நடராஜன் பச்சை தமிழன்


நடராஜனின் தோழர்கள் நெடுமாறன், சீமான் எல்லாம் பச்சோந்தி தமிழர்கள்


ஆக காவல்துறையினை ஏவிவிட்டது தமிழர்கள், காவல்துறையின் கலவர தடுப்பு பிரிவாக வந்த துணை கமிஷணரும் தமிழர், அந்த காவலர்களும் தமிழர்கள்.


இத்தனை களபேரம் நடக்கும் பொழுதும் ஆட்சியின் நிழல் முதல்வரான நடராஜனின் பெரும் கூட்டாளிகளான நெடுமாறன், கொளத்தூர் மணி, சீமான் எல்லாம் ஏதும் அவரிடம் கோரிக்கை வைத்து பார்த்தீர்களா?


நடராஜன் நினைத்தால் நடக்காத காரியம் தமிழகத்தில் உண்டா?


நீங்கள் கண்டிப்பதாக இருந்தால் அடிக்க உத்தரவிட்ட, அடித்த அந்த "தமிழர்களை" கண்டிக்க வேண்டுமா?


அல்லது அமைதியாக போராட ஊக்கம் கொடுத்து, வெற்றி கிடைத்தபின் கலைந்து செல்ல சொன்ன, ஒரு உயிருக்கும் கேடின்றி போராட்டத்தை முடித்த இவர்களை கண்டிக்க வேண்டுமா? ஆனால் ஏன் ஒருவரும் செய்யவில்லை?


இதனை கண்டிக்காத உங்களை எல்லாம்.......


உங்களுக்கு தேவை என்ன? கலவரம், பிணம் அதனை வைத்து அரசியல்


அவ்வளவுதானே சிரியாவிற்கு செல்லுங்கள், ஈராக்கிற்கு செல்லுங்கள், கலிங்கப்போர் பிணமாக கிடக்கும் அந்த குவியலை கண்டு அலறுங்கள், அறற்றுங்கள்


இல்லை இல்லை, தமிழர் பிணம் தான் வேண்டுமென்றால் அது நிச்சயம் கிடைக்கும் ஆனால் அதனை காண நீங்கள் இருக்கமாட்டீர்கள்


எவனும் தன் பிணத்தை தன்னால் பார்க்க முடியாது அல்லவா? அந்த வகையில் நீங்களும் பார்க்கமுடியாது.



ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? இன்னும் பிற ...





ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்?


ராஜபக்சேயே மெரினா வந்து, கூட்டத்தில் நின்று "தமிலெருக்கு ஜொல்லிகொட்டு வோணும்" என பிரபாகரன் படத்தோடு நின்றிருக்கலாம்..


வாட்டாள் நாகராஜ் கூட ஒரு ஜல்லிகட்டு பேனருடன் மெரினா வந்து போயிருக்கலாம்,





யாருக்கு தெரியும்?

இதில் தீபா எல்லாம் எந்த மூலைக்கு...

சென்னையா? இல்லை பெங்களூருக்கே போய்விட்டாரா?











எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும்

கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் குண்டு கட்டி மருத்துவமனைக்குள் புகுந்தல், ராணுவ வீரன் உடையணிந்து அரச கட்டத்துக்குள் புகுந்து சுடுதல் போன்ற பெரும் வீர தந்திரங்கள் புலிகளிடம் உண்டு

அது புலிபடம் பிடித்தவர்களிடமும் இருக்காதா என்ன?


காவலர் உடையில், கேமரா முன் ஆட்டோ கொளுத்த எவ்வளவு நேரமாகும்?

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என கேட்டால்...
அங்கிள் சைமன் முன்பு ஈழம் செல்லும் பொழுது வியப்பும் திகைப்பும் நிறைந்த ஈழபயணம் செல்லும்பொழுது அவரையே மாறுவேடம் போட சொன்னதாக அவரே சொல்லியிருக்கின்றார்

இதனை விட பெரும் ஆதாரம் என்ன வேண்டும்?














டேய் இந்த இத்துப்போன பஸ்டாண்டுக்கு எல்லாம் என்னால வரமுடியாது, ஒரு சுத்தமான டீக்கடைக்கு கூட வழிய காணோம்.


டீக்கடைய விடு, பஸ்டாண்டு போர்டுக்கே பெயிண்ட் இல்லை. அது காந்திஜி பேருந்து நிலையமா? இல்ல சாந்தினி பேருந்து நிலையமாண்ணு கூட தெரியல..


நீ ஆம்பிளைனா லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வாடா, டேய் வாடா. நீ சுத்தமான நாடார் என்றால், உன் உடம்புல ஓடுறது சுத்தமான நாடார் ரத்தம் என்றால், சுத்தமான லண்டன் ஏர்போர்ட்டுக்கு வந்து என்ன பாருடா.





அந்த ஏர்போர்ட்ல தாண்டா பர்கர் சாப்பிட்டு கொண்டிருகின்றேன்

சாதி சண்டைய லண்டன் ஏர்போட்டிலோ அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலோ வைத்துகொள்ளலாம் வாடா..

நீ ஆம்பிளைனா வாடா, நான் லண்டன் ஏர்போர்ட்ல இருக்கேன் வாடா ....

 








Image may contain: outdoor




Image may contain: text










கர்நாடகாவில் எருது பந்தய வீரவிளையாட்டுக்கு அனுமதி வேண்டும் : சித்தராமையா


டேய் வாட்டாள் நாகராஜ், இந்த உரிமையினை கூட இழந்துவிட்டுத்தான் காவேரியில் குப்புற படுத்து அடம்பிடிக்கின்றீரா?


இதனை எல்லாம் மீட்கவேண்டும் என விருப்பம் இல்லையா? அல்லது முடியவில்லையா?





உங்கள் மாநிலத்தில் தடை என்றால் அந்த எருது விளையாட்டை தமிழகத்தில் வந்து நடத்துங்கள், எவனும் தடுக்கமுடியாது

ஒரே நிபந்தனை என்னவென்றால், வரும்பொழுது காவேரியோடு வாருங்கள்..






சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

தமிழக மாணவர்களின் பெருமை மிகு போராட்டம், பெரு மகிழ்வோடு முடியவேண்டிய நேரத்தில் சில விஷமிகளால், சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று


நிச்சயமாக மாணவர்களின் போராட்டம் கண்ணியமும், மிகுந்த கட்டுப்பாடோடும் நடந்தது, உலகமே உற்று கைதட்டிகொண்டிருந்தது எல்லாம் எதுவரை?


அரசுகள் ஜல்லிகட்டுவிளையாட தடையில்லை என சொல்லும் வரை


அதன் பின் தான் இந்த ஜல்லிகட்டினை வைத்து தமிழ்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடும் கொடூர சிந்தனையாளர்களின் மனதில் அச்சம் உதித்தது, போராட்டம் அவ்வளவுதானா? வெற்றியோடு முடிந்துவிடுமா? விட கூடாது என களமிறங்கினர்


அவர்களுக்கு இந்த போராட்டம் தொடக்கத்திலிருந்தே மகிழ்ச்சி அளிக்கவில்லை, பிரபாகரன் எனும் அந்நியநாட்டு தீவிரவாதிக்கு வராத கூட்டம், ராஜிவ் கொலைபாதகர்களுக்கு வராத கூட்டம், எப்படி ஜல்லிகட்டிற்கு மட்டும் குவியலாம் என அவர்கள் மனம் வெம்பிற்று


அதனால்தான் இந்த போராட்டம் அமைதியாக முடியகூடாது என திட்டமிட்டும், மாணவர்களை கேவலபடுத்தும் விதமாகவும் இறுதியில் குழப்ப தொடங்கினர்.


போராட்டம் எதற்கு நடந்தது? சுப்ரீம் கோர்ட் உத்தரவினை மீறி ஜல்லிகட்டு வேண்டும் என கேட்டு நடந்தது. அரசுகளும் அவசரசட்டம் எல்லாம் இயற்றி விளையாடவிட்டன‌


இனி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு எப்படிவந்தாலும் தமிழக எதிர்ப்பினை காட்டி மாற்றும் அளவிற்கு அரசின் கரங்களையும் வலுப்படுத்தியாயிற்று


பெரும் வெற்றியுடனும், உற்சாகத்துடனும் மாணவ செல்வங்கள் கரை ஏறும்பொழுதுதான் இந்த விஷமிகள் குழப்பிவிட்டனர்


தொடக்கம் முதல் நாம் தமிழர், மே 17 போன்ற ஈழமாட்டு அறிவு கொண்ட கும்பலை மாணவர்கள் விலக்கித்தான் வைத்திருந்தனர் , ஆனால் எப்படியோ அவை ஊடுருவிவிட்டன‌


இப்பொழுது போராட்டம் முடியும் நிலையில் கடும் குழப்பம்


யாரால்? இந்த தனிநாடு கேட்ட அழிச்சாட்டிய கும்பல்களால். அவர்ர்கள் நோக்கம் உண்மையில் தனிநாடும் அல்ல, தனி கழிப்பறையும் அல்ல. சும்மா இப்படி கூப்பாடு போட்டு ஒரு கொதிநிலையினை வைத்து குழப்புவதில அவர்களுக்கொரு ஆசை


10 பேர் சாகவேண்டும், 20 பேர் சாக கிடக்கவேண்டும், 30 பேர் ரத்த வெள்ளத்தில் அலையவேண்டும், 100 பேர் பெட்ரோல் ஊற்றிகொள்ளவேண்டும். அதாவது குறைந்தது 500 பேராவது சாகவேண்டும்


அந்த பிணத்தினை வைத்து பாரீர் இனி இந்தியாவில் வாழமுடியாது, தனிநாடு தேவை , கொடுக்கமாட்டான் அடிபட்டு சாவதை விட சயனைடு கடித்து சாவு என பலரை கொன்று கொண்டே இருக்கவேண்டும்


அதனை காட்டி அரசியல் செய்யவேண்டும், இப்படி ஒரு கேடுகெட்ட சிந்தாந்தம் அவர்களுடையது, நிச்சயம் அவர்கள் மனிதர்கள் அல்ல‌


அவர்கள் ஆசைக்கு பலிகடா ஆகாமல், ஈழம் அல்ல, ராஜிவ் கொலை அல்ல மாறாக எதற்கு? எப்படி? போராடவேண்டும் என மாணவர்கள் தனியாக சாதித்தை பொறுக்கமுடியாமல் குழப்பிவிட்டார்கள்


தங்களை மீறி மாணவர்கள் போராடி வெற்றியும் பெற்றுவிட்டதில் மகா அப்செட்டான தமிழக அரசியல் கட்சிகளும் இதனை ரசிக்கின்றன, உண்மை.


செத்த வீட்டில் பிணமாகவும், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், போராட்டம் என்றால் பிராதனாகவும் இருக்க ஆசைபடும் கட்சிகள் அவை, இவற்றை எல்லாம் எப்படி பொறுக்கும்?


அதனால்தான் அவை குறும்பு சிர்ப்புடன் இன்று வேடிக்கை பார்க்கின்றன‌


இந்த ஜல்லிகட்டு பிரச்சினையினை கொண்டு மோடி மீது ஒரு ஆட்டுபுழுக்கையாவது வீசமுடியாதா? என அலைந்து குழம்பிய கும்பல்கள் இன்னொருபக்கம்...


ஆக இதனை எல்லாம் மீறித்தான் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது, அந்த வெற்றியினை பெற்றுதந்த நல்ல சிந்தனை மாணவர்களுக்கு நன்றியும் வணக்கமும்


அரசியல்வாதிகள், சினிமாக்காரர்களின் பொய்முகங்களை நீங்கள்தான் உரித்துகாட்டினீர்கள்


போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள்தான் காட்டினீர்கள, உரிமையினை எப்படி மீட்க வேண்டும் என்பதையும்
நீங்கள்தான் காட்டினீர்கள்


அப்படியே இறுதிநேரத்தில் யார் புகுந்தார்கள்? என்ன நடந்தது? எப்படி குழப்பினார்கள்? என்பதும் உங்களுக்கு தெரியும்


அந்த தேசதுரோகிகளை, மதி கெட்ட தேவாங்குகளை, குதர்க்க புத்தி கொண்ட கூமுட்டைகளை மட்டும் அடையாளம் காட்டுங்கள்


அது நிச்சயம் இந்த திருட்டு முருகன் கும்பலும், இந்த அங்கிள் சைமனின் மங்கி கூட்டங்களாகத்தான் இருக்கும்


அவைகளை கைகாட்டிவிட்டு ஒரே ஒரு முறை சொல்லிவிட்டு படிப்பினை தொடருங்கள்


லட்சகணக்கான மாணவர்கள் மாநிலத்திற்காய் போராடினீர்கள், இந்த உறுதியினை கல்வியில் காட்டி பெரும் பதவிக்கு வந்து இந்த சமூகத்திற்கு நல்வழி காட்டுங்கள்


உங்களால் உரிமைகளை பெற்றுகொண்ட சமூகம் உங்களை கையெடுத்து கும்பிட்டு மறுபடியும் கல்லூரிக்கு செல்ல கேட்கின்றது


செல்லுமுன் உங்களின் பெரும் தியாகத்தை கொச்சைபடுத்த துணிந்த அந்த பைத்தியங்களை ரகசிய அடையாளம் காட்டும்படியும் கேட்டுகொள்கின்றது


மாணவ செல்வங்களே, உங்களை உச்சி முகர்ந்து பாராட்டி சொல்கின்றோம், உங்களால் புது நம்பிக்கை பிறந்திருக்கின்றது. உங்களால் பெருமை அடைகின்றோம், ஆனால் உங்கள் பெயரை பயன்படுத்தி குழப்பம் விளைவித்த அந்த கும்பல்களை தேடுகின்றோம்


கவலை வேண்டாம், நீங்கள் படிக்க செல்லுங்கள், அந்த பதர்களை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்


நெல்மணி எல்லாம் பிரிந்தபின் கற்கள் தான் கிடக்கும், அப்படித்தான் அவைகள் இன்று மிஞ்சி இருந்து கற்களை எறிந்து அழிச்சாட்டியம் செய்திருக்கின்றன‌


இனி தமிழகத்தின் உரிமைகள் எதனையும் அவ்வளவு எளிதில் பறிக்கமுடியாது எனும் உச்சகட்ட அடியினை கொடுத்தபின்னும் என்ன இருக்கின்றது?


இரு பெரும் அரசாங்கங்களை அலறவிட்ட பெரும் பணியினை செய்துவிட்ட நீங்கள், வருஙகாலத்தில் அந்த அராசங்கத்டின் பொறுப்புமிக்க அதிகாரிகளாக வாருங்கள்


வாழ்த்துகின்றோம்


நாம் அன்றே இந்த திருட்டு முருகனையும், இந்த நாம் குரங்குகளையும் பற்றி சொல்லிகொண்டே இருந்தோம். இவர்களால் ஒரு நாள் பெரும் குழப்பம் தமிழகத்தில் வரும் என்று


எதனையுமே ஒழுங்காக செய்ய தெரியாத பைத்தியங்கள் இதனையும் பெரிதாக செய்வதாக எண்ணி செய்து, பெரும் விவரம் உள்ளவர்கள் போல செய்து மாட்டிகொண்டது


நிச்சயம் விரைவில் சிக்கும், தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதன் பின் இருக்கின்றது அவர்களை எல்லாம் மாட்டு கொம்பில் கட்டி விடவேண்டும்


மாணவர்களே இம்மாதிரி ஆட்களை கூட அடையாளம் காட்டிவிட்டுத்தான் சென்றிருக்கின்றீர்கள், அவ்வகையில் இத்தேசத்திற்கு பெரும் தொண்டாற்றியிருக்கின்றீர்கள்


உங்களை வணங்கி வழியனுப்புகின்றொம், இந்த அரைபயித்தியங்களை நாங்கள் ஒரு வழி செய்ய கைகளை முறுக்குகின்ரோம்


திருட்டு முருகனுக்கும், திண்ணை வீரன் சைமனுக்கும் நாடுகடத்தபடும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது..


முன்பே அவர்களை அடிக்கடி குறிப்பிட்டு சொன்னவர்களும் நாமே


இப்போது அந்த கும்பலின் சுயநல அழிச்சாட்டியத்தை தமிழகம் பார்த்துகொண்டிருக்கின்றது


நிரந்தர தடை நீக்கம் என்பதனை விட இப்போதைக்கு மகா முக்கியமானது, இவர்களின் நிரந்தர சிறைவாசம்..

Monday, January 23, 2017

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு


பின்ன, மெரினாவில் அவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் பொழுது இவர்கள் எப்படி உள்ளே இருப்பார்கள், இப்பொழுது மெரீனா நோக்கி நடந்து போராடும் மாணவர்களை காக்க போகின்றார்கள். அதான் வெளிநடப்பு செய்து நடக்கின்றார்கள்.


இன்னும் ஸ்டாலின் தலமையிலான திமுக குழு மெரீனாவினை அடையவில்லை, இன்னும் 500 கிமீ தூரம் இருப்பதால் சென்று அடைய இன்று சில நாட்கள் கூட ஆகலாம்






அடிவாங்குங்கள் தமிழர்களே, வோட்டு போட்ட விரலை காட்டி அதனை நொறுக்க சொல்லி அடிவாங்குங்கள்.


அவர்களுக்கு மாலையும், அவர்களுக்கு சுவரொட்டியும் சுமந்த கைகளில் அடிவாங்குங்கள், அந்த அரசியல்வாதிகளுக்காக கால்கடுக்க நின்ற அந்த கால்களில் அடிவாங்குங்கள்


எந்த கட்சியினை தோளில் சுமந்தீர்களோ அந்த கட்சியின் அரசின் அடியினை அதே தோளில் வாங்குங்கள்




நம்மை ஆள அல்ல, அடித்துநொறுக்க நாமே ஒரு அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா. அந்த தவறுக்கு அடிவாங்குவோம்.


எந்த கட்சியின் தலைவி இறந்தார் என உண்ணாமல் உறங்காமல் அழுதீர்களோ அந்த கட்சி அரசுதான் அடிக்கின்றது, இப்பொழுதும் அழுங்கள்


ஒரு பாரம்பரிய உரிமைக்காக மக்களோடு மக்களாக இறங்கிவரமுடியாத அரசினை அமைத்திருக்கின்றோம் அல்லவா? அதற்காக அடிவாங்குங்கள்


என் பதவியே முக்கியம், அதற்கு இடைஞ்சலாக யார் வந்தாலும் கொல்ல துணியமாட்டோம் என இரங்கியிருக்கும் அரசின் கோரமுகத்தை பார்த்துகொண்ட ரத்தம் சிந்துங்கள்


பாழ்பட்ட நாட்டில் நம் உழைப்பினையும், உரிமையினையும்தான் உறிஞ்சினார்கள் என்றால், இன்று ரத்ததத்தையும் உறிஞ்சுவதையும் பார்த்துகொண்டே அடிவாங்குங்கள்.


காவல்துறை அடிக்கும் ஒவ்வொரு அடியும் அரசாங்கத்தின் அடி என்பதை உணர்ந்து கல்லை தேடாதீர்கள், கையில் இருக்கும் வோட்டினை தேடுங்கள்


உங்களிடம் வோட்டு கேட்க வந்தவர்கள்தான் இன்று அடிக்கவும் சொல்லியிருக்கின்றார்கள்


ஆளும் கட்சி அடிக்கின்றது, எதிர்கட்சிகள் அமைதிகாக்கின்றன என்றால் என்ன அர்த்தம் என்பதை எண்ணிகொள்ளுங்கள்


என்ன தவறு செய்தோம்? உரிமைக்காக கூடியது தவறா? ஒற்றுமையாக எழும்பியது தவறா?


அது தவறே அல்ல, மாறாக யாரிடம் ஆட்சியினை ஒப்படைத்திருக்கின்றோமோ அதுதான் பெரும் தவறு.


வலிக்கும்தான்,


நம்மை காக்கவேண்டிய காவல்துறையே நம்மை போட்டு அடிக்கும்பொழுது உடல்வலியினை விட மனவலி அதிகம்தான்


ஆனால் அந்த வலியினை தேர்தல் வரை தாங்குமளவு மனம் இறுகட்டும்


அடித்து இன்று விரட்டலாமே ஒழிய, அடித்து வோட்டினை நாளை வாங்கிவிட முடியுமா?
அடிபட்டு கங்கிநிற்கும் ஒவ்வொருவருக்காகவும் அழுகின்றோம்


நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்






சென்னை பேருந்து கண்ணாடி உடைப்பு


அரசு பேருந்துகளில் உருப்படியாக இருந்தது அது ஒன்றுதான், அதனையும் உடைக்க தொடங்கியாயிற்று








ஜல்லிக்கட்டு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேனகா மனு.... இன்னும் பிற ..


ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்


இந்திரா காந்தி ஏன் இவரை விலக்கி வைத்திருந்தார் என்பது இப்போது புரியும்


அம்மா தமிழிசை, அய்யா பொன்னார் இதோ உங்கள் கட்சிக்காரரே தடை வாங்க சென்றிருக்கின்றாரே, இதனை பற்றி உங்கள் கருத்து?





இது மேனகாவின் சொந்த விஷயம் என்றுமட்டும் வழக்கம் போல சொல்லிவிடாதீர்கள்..







மேனகா காந்தியினை அனுமதிக்கும் பாஜக , தமிழகத்தில் ரத்த களறி ஏற்பட மறைமுக சிக்னல் கொடுக்கின்றது


இது பச்சை குழந்தைக்கும் புரியும் அரசியல், தமிழ்நாட்டினை ஒரு வழியாக்க முடிவு செய்துவிட்டார்கள்.


நெருப்பு அணையும் நேரத்தில் பெட்ரோலை ஊற்றுவது நிச்சயம் ஏற்றுகொள்ளமுடியாதது, இதன் விளைவுகள் விபரீதமானவை






இந்திய குடியரசு நாளை கொண்டாட இந்தியர்களை தமிழகத்தில் ஓட ஓட அடிக்கின்றது இந்தியா என்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு எவ்வளவு பெருமையான விஷயம்?


இனி எந்த மூஞ்சினை வைத்து கொண்டு உலக நாடுகளிடம் ஜனநாயகம் பற்றி பேசுவீர்கள் மிஸ்டர் மோடி














இன்று ஜெயாடிவி எப்படி செய்திகள் வெளியிடுமோ தெரியாது, ஆனால் அவர்கள் இப்படி வாசித்தாலும் வாசிப்பார்கள்

"ஆளுநர் உரைக்கு சின்னம்மா நன்றி தெரிவித்தார் , பதிலுக்கு ஆளுநர் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

சட்டசபையும், முதல்வரும் எதற்கு?, சரி சின்னம்மா எந்த தொகுதி சமஉ?


சின்ன அம்மாவின் வெண்டுகோளுக்கு இணங்க காவல்துறை தடியடி நடத்தியது, மக்களும் சின்ன அம்மா கோரிக்கைக்கு இணங்க அடிவாங்கி சென்றனர்

அடிவாங்கியவர்கள் திரும்ப வந்து, எங்களை கொல்லாமல் விட்ட சின்னம்மா வாழ்க., அதனால் அவர் முதல்வராக வேண்டும் என சொல்லியவண்ணமே இருந்தனர்

இதன் மூலம் தமிழமெங்கும் சின்னம்மாவிற்கான ஆதரவு பலமடங்கு அதிகரித்துள்ளது, இன்னும் ஆதரவினை திரட்டும் விதமாக காவல்துறை கடுமையான அடிதடியில் இறங்கியுள்ளது

இப்படி தமிழகத்தில் அமைதியினை திருப்பிய சின்னம்மாவினை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்"

















போராட்டத்தில் தலைவனோ தலைமையோ உருவாகவில்லை...





இவ்வளவு பெரும் போராட்டம் நடந்திருக்கின்றது, இதிலிருந்து கூட ஒரு தலைவனோ தலைமையோ உருவாகவில்லை


இதே போன்றதொரு போராட்டங்கள் பலவற்றில்தான் பெரியார், கலைஞர் எல்லாம் தானொரு மிகபெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்பது வரலாறு.


ஆக ஆற்றல்மிக்க வருங்கால தலைமுறை தலைவனுக்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருத்தம் மிஞ்ச பார்க்க வேண்டியிருக்கின்றது





நிச்சயம் இப்போராட்டம் ஒரு நம்பிக்கை தலைவனை காட்டியிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனும்பொழுது நல்ல தலைவன் உருவாகவில்லை என்பது தெரிகின்றது

வருங்கால தமிழகத்தை வழிநடத்த ஒரு இளம் தலைவன் இல்லை என்பதைத்தான் இப்போராட்டம் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றது

அற்புதமான எழுச்சி, ஆனால் நெறிபடுத்தி செல்ல தலைவன் இல்லை. அவன் தான் இல்லை. ஒரு குழுவாவது உண்டாகியிருக்கலாம்

அடுத்த வருங்கால தலைமுறையினை நல்வழியில் நடத்த ஒரு தலைவன் இதில் தெரிவான் என்ற நம்பிக்கை இப்போது பொய்த்திருக்கலாம்.

ஆனால் இந்த எழுச்சியில் ஓசைபடாமல் உள்ளூர அப்படி ஒருவன் உருவாகிகொண்டிருக்கலாம், வருங்காலத்தில் அவன் வரலாம். வரவேண்டும்

வந்தால்தான் தமிழகம் புதுபாதையில் திரும்பும், எழுச்சியும் ஆற்றலும் புதிய சிந்தனையும் மிக்க ஒரு இளம் தலைவன் தமிழகத்திற்கு தேவை, வருங்காலத்தை அவனே நடத்தவேண்டும்

ஒருகாலத்தில் வந்து நடத்துவான்..

அக்காலம் வரும் வரை என்ன நடக்கும்?

சசிகலா கொண்டை முடியபடும்

பெரிய சாணக்கியனின் நீண்ட கொண்டை அல்லவா? ,

சபதம் வெல்லும் பொழுது அள்ளி முடியத்தான் வேண்டும்

சசிகலாவின் கொண்டை தமிழகத்திற்கு சிம்பாலிக்காக சொல்ல வருவது அதுவே...

30 வருட சபதத்தில் வென்று அள்ளி முடியபடும் கொண்டை அது..








மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்...






அம்மா இறந்த துக்கத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ரத்து செய்கின்றோம் என சொல்ல ஒருவனுமா அக்கட்சியிலோ அரசிலோ இல்லை?? :)

அப்படி சொல்லிவிடத்தான் முடியுமா?


ஆனாலும் கொஞ்சமேனும் துக்கம் இல்லையா? அது எப்படி இருக்கும், அவர் செத்து 50 நாட்களுக்குள் ராமசந்திரனுக்கு 100ஆண்டு என கொண்டாடிய கூட்டம்தானே அது.





ஜல்லிகட்டு போராட்டம் வெற்றியில்தான் முடிந்தது, போராடிய நோக்கம் நிறைவேறி விட்டது.

அந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்

ஒரு காரியத்திற்காக தமிழகம் அடித்த அடிதான், ஆனால் இனி ஓவ்வொரு காரியத்திலும் அது அரசின் சிந்தனையில் இருந்துகொண்டே இருக்கும்


ஆட்சியாளர்கள் கண்ணில் அந்த மரண பயம் தெரிந்துகொண்டே இருக்கும்

தங்களை தமிழகம் கண்காணிக்கின்றது எப்பொழுது வேண்டுமானாலும் அது திரளும் என்ற அந்த பயத்திலே அவர்கள் ஆளட்டும்






Sunday, January 22, 2017

சும்மாவே கலையாத கூட்டம் அது...




பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கும் மெரீனா போராட்டகளத்தில் காவல்துறை புகுந்தாகிவிட்டது


அரசு தன் இரும்புகரத்தினை காட்ட ஆரம்பித்தாயிற்று. காவல்துறைக்கு எதிரான பெரும் கோஷம் கிளம்புகின்றது


இது எளிதில் தீராது,





காரணம் திரண்ட கூட்டம் ஜல்லிகட்டிற்காக மட்டும் திரண்டது அல்ல. அது பல காரணங்களால் சேர்ந்த கூட்டம், ஜல்லிகட்டு ஒரு புள்ளி அவ்வளவுதான்

உரிய அவசாகம் கொடுக்காமல் இந்த கூட்டத்தை வலுகட்டாயமாக கலைக்க நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையானதாகவே அரசுக்கு இருக்கும்

அலங்காநல்லூருக்கு சென்னை பொங்கியபொழுது, இனி சென்னைக்காக மற்ற பகுதிகள் பொங்காதா?

மொத்த தமிழகத்தையும் கட்டுபடுத்தும் சக்தி யாருக்கு உண்டு?

பெரும் குழப்பத்தினை நோக்கி செல்ல தொடங்கியாயிற்று,

தேன் கூட்டில் கைவைக்கின்றது அரசு ..எதனை செய்ய கூடாதோ அதனை செய்கின்றது,

மாணவர்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல..

பன்னீர்செல்வத்திற்கு பெரும் சிக்கல் ஆரம்பமாகும் நேரம்....

மக்களின் பெரும் ஆதரவினை பெற்றுவிட்ட போராட்டத்தை இனி இப்படி அணுகுவது மாநிலத்திற்கு அமைதி கொடுக்காது.

மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் எனும் தீவிரத்தில் இறங்குகின்றனர், அக்கடலும் அந்த அலைகளும் மிக ஆபத்தானவை என்பதில்தான் அடிமனம் கலங்குகின்றது

ஏதும் வீபரீதம் நிகழுமுன் காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் வாய் திறப்பது நல்லது.





நடிகை நயன்தாரா சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.


சும்மாவே கலையாத கூட்டம் அது,


நயன் அடிக்கடி வர வாய்பிருக்கின்றது என் தெரிந்தபின் எப்படி கலையும்






 அது என்னவோ தெரியவில்லை, எந்த போராட்டம் என்றாலும் தமிழகத்தில் வரும் கோஷம் "முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்பது


அதுவும் கலைஞர் என்றால் அவர் பதவி விட்டு விலகி உடனே தற்கொலை செய்யவேண்டும் எனும் அளவிற்கு நிலமை கொந்தளிக்கும் , வைகோ போன்ற அல்லக்கைகள் எல்லாம் கரகாட்ம் ஆடும்,


சில வவ்வால் போல தலைகீழாக தொங்கும், நள்ளிரவு ஆந்தையாக, ஆற்றோரம் கழுதையாக அப்படி கத்திகொண்டே இருப்பார்கள்





ஆனால் அதிமுக அரசு என்றால் மட்டும் ஒரு பயலும் "தார்மீக பொறுப்பு" "ராஜினாமா" என சொல்லவே மாட்டான்.

இந்த களபேரத்தில் எங்காவது அப்படி ஒரு குரல் ஒலிக்குமா? ஒலிக்காது

இதே கலைஞர் அரசு என்றால் இந்நேரம் அவர் செத்தே தீரவேண்டும் என சொல்லி கொண்டிருப்பார்கள்









நாமெல்லாம் ஜல்லிகட்டு வேண்டும் என போராட, உலகமோ அந்த அமெரிக்க ஜல்லிகட்டு காளை வேண்டாம் என போராடுகின்றது

அதாகபட்டது டிரம்பிற்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.






ஜெயா டிவி செய்திகளில் குபீர் காமெடி...

https://youtu.be/0bs3JDOLju0

 






எத்தனை செய்திகளை சுற்றிவந்தாலும் ஜெயாடிவி கொடுக்கும் செய்திகளின் குபீர் சிரிப்பே தனி, திருந்தவே கூடாது என ஜெயா சமாதியில் சத்தியம் எடுத்திருப்பவர்கள் அல்லவா? தொடர்கின்றார்கள்


சின்னம்மா அனுப்பித்தான் பன்னீர் ஜல்லிகட்டினை நடத்த டெல்லியில் பேசினாராம், சின்னம்மா அனுப்பித்தான் எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் சென்றார்களாம், சின்னம்மா ஆளனுபித்தான் மோடி மிரண்டாராம்.


சின்னம்மா அனுப்பித்தான் மீணவர்கள் மீன்பிடிக்கின்றார்களாம், சின்னம்மா அனுப்பித்தான் பெண்கள் தோட்டத்தில் புல்வெட்டுகின்றார்களாம்.


சின்னம்மா சொல்லித்தான் காளைகள் வாடிவாசலுக்கே சில இடங்களில் வந்ததாம்.


இப்படி தமிழகத்தில் சின்னம்மா அனுப்பித்தான் எல்லா காரியங்களும் செய்யபடுகின்றன, அதாவது எல்லோரையும் எங்கும் அனுப்பிகொண்டே இருக்கின்றார் சின்னம்மா


அப்படிபட்ட சின்னம்மா ஜெயலலிதாவினையும் அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பியே இருக்கின்றார் என்பது உலகமே அறிந்தது


நாம் சொல்வது ஜெயாவினை அப்பல்லோவிற்கு அனுப்பினார் சின்னம்மா, நீங்களாக ஏதும் கற்பனை செய்துகொள்ள கூடாது.


காமெடியன்கள் என்றாலும் கவனமானவர்கள் விவசாயிகள் எல்லாம் சின்னம்மா சொல்லித்தான் செத்தார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்













போராட்டம் திசை மாறுகிறது : ஹிப் ஹாப் தமிழன் ..

https://youtu.be/fkNAxUNCgx0

 

அவர் ஹிப்காப் தமிழரோ அல்லது ஹிஹிஹிஹ் தமிழரோ நமக்கு தெரியாது, ஆனால் கோவை நிலவரத்திற்கு பின் அவர் சொல்லும் விஷயங்கள் சரியானவை


அங்கு அப்படித்தான் நிலமை மாறிகொண்டிருக்கின்றது, அங்கென்றல்ல பல இடங்களில் போராட்டம் திசைமாறுகின்றது


எப்படிபட்ட ஊர் கோயமுத்தூர், மகா அமைதியான மக்கள், உழைப்பாளிகள், மரியாதை தெரிந்தவர்கள் என அதன் அடையாளம் உயர்வானவை. அந்த அடையாளத்தில்தான் அது பெரும் தொழில்நகரமாக உருவெடுத்தது


தமிழ்கத்தின் மிக தனித்த அமைதியின் அடையாளமாக இருந்தது கோயமுத்தூர், வெள்ளந்தியான உழைப்பாளிகள் அவர்கள். மிக மிக உற்சாகமான மக்கள் அவர்கள்.


1990க்கு பின் அதன் வரலாற்றில் கரும்புள்ளியாக விரும்பதகாத சம்பவங்கள் நிகழ்ந்தன, பின் அது அடங்கியது. ஜல்லிகட்டு விவகாரத்தில் அது மறுபடியும் நிகழகூடாது


அங்கிருக்கும் மதவாதிகளை விரட்டாமல் இனி கோயமுத்தூரை காப்பாற்றமுடியாது என்பது போல் தெரிகின்றது.


ஜல்லிகட்டினை மீட்டெடுத்திருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் பழம்பெரும் தனித்த‌ அடையாளத்தையும் மீட்டெடுக்கட்டும்


கோவை மக்கள் "ரெம்ப" சிந்திக்கவேண்டிய நேரமிது

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் ...


இறந்து 50 நாட்கள் தான் இருக்கும் அதற்குள் ஜெயலலிதாவினை சுத்தமாக மறந்தேவிட்டது தமிழகம்


அவர் மரணத்திலிருக்கும் மர்மத்தை கூட அறிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை, அதாவது தொலையட்டும் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்


சர்வாதிகாரிகள் அவ்வளவு வேகமாக மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியபடுகின்றார்கள் என்பதனை வரலாறு தமிழகத்திலும் நிரூபித்திருக்கின்றது.





இப்படி மறக்கபட்டிருக்கும் ஜெயலலிதாதான் 100 நாளைக்கு முன்புவரை தமிழகத்தின் அபிமான தலைவி

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம்







பன்னீரை திருப்பி அனுப்புபவர்கள் அதிமுக அரசினையும் சேர்த்து விரட்டினாலே அவர்கள் நோக்கம் உண்மை என பொருள்


பன்னீர் மட்டும் வேண்டாம், அதிமுக அரசு தொடரட்டுமென்றால் இவர்களின் தூண்டுகோல் யாரென சொல்லி தெரியவேண்டியதில்லை


விரட்டினால் அதிமுக அரசினையும் சேர்ந்துவிரட்டுவொம் என ஒரு போராளி சொல்வானால் அவனை வாழ்த்த தயாராக இருக்கின்றோம்




ஆனால் அப்படி ஒருவனும் தென்படவில்லை






எப்படியோ ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த சனியனின் நூற்றாண்டு விழா என்பதினை சுத்தமாக மறந்தது தமிழகம்


அதில்தான் பரம திருப்தி,


அப்படியே அந்த சனியனின் நினைவுகளை தமிழகம் சுத்தமாக தலைமுழுகட்டும்








அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்!!!

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்.


ஆக ஜல்லிகட்டு அரசியல் விளையாட்டாக திசை திருப்பிவிடபட்ட மர்மம் புரிகின்றது


நிரந்தர தடை நீக்கம் வேண்டும் என்பவர்கள், உச்ச நீதிமன்றம் நிரத்தர தடை என சொன்னபின்பு அல்லவா போராட வந்திருக்கவேண்டும்


என்ன சொன்னார்கள்? அரசு ஏதேனும் செய்து விளையாட விடவேண்டும் என போர்கொடி தூக்கபட்டது, அதன்படி அரசுகள் இறங்கி வந்தன‌


இப்பொழுது நிரந்தர தடை நீக்கம் என திசை மாற்றுகின்றார்கள், இது இவ்வளவு பெரும் எழுச்சிக்கு பின் நிரந்தர தடை நீக்கமாகவே மாறும் என்ற அடிப்படை சட்ட சிந்தனை கூட இல்லை


ஆக நடக்கும் காட்சிகள் பலவற்றை சிந்திக்க வைக்கின்றன, கதை வேறு எங்கோ சுற்றுகின்றது


பன்னீர் அரசு ஜல்லிகட்டு விஷயத்தில் மக்களிடம் நல்ல பெயர் பெற்றுவிட கூடாது எனும் அம்புகள் ஏவபடுகின்றன, அவர் சிக்கிகொண்டிருக்கின்றார்.


அலங்காநல்லுர் மக்கள் மிக பெரும் தவறான முன்னுதாரத்தினை தொடங்கிவிட்டார்கள், தமிழகம் முழுக்க அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிய குரல்களை அசட்டை செய்து, அவர்களின் ஆதரவாளர்கள் முகத்தில் கரி பூசுகின்றார்கள்


ஆக இதில் யாருக்கு மகிழ்ச்சி என்றால்


தீபா பெயர் அடங்கி போனதில் சசிகலாவிற்கு மகிழ்ச்சி, ஓரளவு வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருந்த பன்னிர் செல்வம் இப்பொழுது சிக்கிகொண்டிருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி


பைரவா படம் தோல்வி மறைந்ததை கூட்டத்தில் கலந்து மறைத்த விஜய்க்கு மகிழ்ச்சி


அவசர சட்டமாவாது கிடைத்ததே என்பதில் சில இடங்களில் விளையாடும் ஜல்லிகட்டுமக்களுக்கு மகிழ்ச்சி


ஆக சசிகலா, விஜய், அவசர சட்ட ஆதரவாளர்ளுக்கு மகிழ்ச்சி


தீபா கோஷ்டிக்கு பெரும் ஏமாற்றம்.


பிளீஸ் ஒரு ஓரமாக எங்களையும் கத்த விடுங்கள் என நின்ற ஸ்டாலின், சீமான் போன்ற கோஷ்டிகளுக்கு மிகுந்த ஏமாற்றம், ஆனால் இப்பொழுது நிரந்தர நீக்கம் என திசைதிருப்பமுடியாதா? என ஒரு ஏக்கம்


அலங்காநல்லூர் மக்கள் செய்திருப்பது எப்படிபட்ட தவறு என பின்னாளில் அவர்கள் உணர்வார்கள், இது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌


கிடைத்த ஆதரவினையும், கிடைத்த நம்பிக்கையினையும், இறங்கி வந்த அரசினையும் வைத்து காரியம் சாதிப்பதே நல்லதே அன்றி, வீண் பிடிவாதமும் வறட்டு சித்தாந்தமும் ஏதும் நன்மை பயக்காது


கூர்ந்து கவனித்தால் மக்கள் எழுச்சி பெறவேண்டும் என்று அரசு அமைதி காத்திருப்பது தெரிகின்றது, ஆனால் எழுச்சி எதிர்பாரா பேரெழுச்சி என்பதில் அது திகைக்கின்றது, நிலமை கை மீறி சென்றுவிட்டது


ஒரு படியினை அசால்ட்டாக தாண்டிய பன்னீர் அடுத்த வகையில் சிக்குகின்றார்,ஏதும் தவறான முன்னுதாரணமாகிவிட கூடாது, அது பல இனம் வாழும் நாட்டில் சரிவராது என இனி மத்திய அரசும் யோசிக்கும்


வேறு வகையான சிக்கலுக்கு இழுத்து செல்கின்றார்கள்


இதுவரை நடந்தது நன்றாக நடந்தது, இனி நடக்கபொவது ஏதும் நன்றாக இருப்பதாக தெரியவில்லை


ஆக ஜல்லிகட்டு எனும் விளையாட்டினை வைத்து ஆளாளுக்கு பெரும் அரசியல் சதுரங்கம் ஆடிகொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது


இனி நிலமை இப்படி மாறலாம்


பன்னீர் சரியில்லை அவர் பதவி விலகட்டும் இன்னொருவர் வரட்டும் என எங்காவது குரல் எழும்பினால் அதன் பின் சசிகலா கும்பல் சிரிக்கின்றது என பொருள்


பன்னீர் வென்றெடுப்பார் நாங்கள் துணை நிற்கின்றோம் என மத்திய அரசு களமிறங்கினால் அங்கு பிஜேபி கும்பல் சிரிக்கின்றது என பொருள்


ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் மறு தேர்தல் நடக்கட்டும், முடிந்தால் அவர்கள் திரும்ப வரட்டும் பார்க்கலாம், பீட்டாவினை தமிழகத்தை விட்டே விரட்டுவோம், என தமிழகம் கிளம்பினால் மட்டுமே தமிழகத்தில் உண்மை புரட்சி ஏற்பட்டிருக்கின்றது என பொருள்


நிரந்தர நீக்கம் கொடுக்கமுடியாத அரசு நிரந்தரமாக நீங்கட்டும் என் கோஷங்கள் எழும்பினால்தான் இது உண்மையான புரட்சி


ஆக குறுகிய காலம் விளையாடவேண்டிய ஜல்லிகட்டு பெரும் சகுனி மூளையுடன் ஆடவேண்டிய சதுரங்கமாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை


ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது புகழ்பெற்ற யூதமொழி


அப்படி நன்றாக தொடங்கிவிட்டதை எப்படி முடிக்கபோகின்றோம் என்பதைத்தான் தமிழகம் பார்க்க போகின்றது.


பன்னீரை ஓட விரட்ட முயற்சிக்கின்றார்களே ஒழிய, இந்த அரசே வேண்டாம் என்ற குரல் எங்காவது கேட்கின்றதா? நியாயபடி அதுதான் கேட்க வேண்டும், ஆனால் கேட்கவில்லை


எப்படி? அதுதான் மகா மர்மம்.


நிரந்த தர தடை விலக்கா தமிழக‌ அரசு நிரந்தரமாக நீங்கட்டும் என்றுதானே சொல்லவேண்டும்? ஒரு பயலும் சொல்லமாட்டேன் என்கின்றான் ஏன்?


இதில் வைகோ விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கபோவதாக அண்மை செய்தி சொல்கின்றது


இடிந்துவிழும் கூரைக்கு அடியில் நின்று அவர் பேட்டி கொடுக்கட்டும், எத்தனையோ முறை இடியும் கூரை அப்பொழுதும் இடிந்து விழாதா?, நிச்சயம் இடிந்து விழும் என நம்புகின்றோம்..


நம்பிக்கைதானே வாழ்க்கை.

Saturday, January 21, 2017

வாடிவாசலை பன்னீர் செல்வம் திறப்பார், காளைகள் துள்ளி குதிக்கும் ....

https://youtu.be/KGW4ALzCLyc

வெற்றியினை பெற்றுவிட்ட போராட்டத்தை திசைதிருப்பும் செயல்கள் நடைபெற தொடங்கியிருப்பது போல தெரிகின்றது


உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை, தமிழர்களின் எழுச்சியினை கண்டு திகைக்கும் அரசுகள் அவசரசட்டத்தினை கொண்டுவந்து ஜல்லிகட்டினை நடத்துகின்றன‌


இது தற்காலிக நடவடிக்கை என்பது யாருக்கு தெரியாது? நடத்த கூடாது என்ற நிலையிலிருந்து நடத்தி தீரவேண்டும் எனும் நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றோம்


இதோ இப்பொழுது போட்டி நடத்த தடை இல்லை, இந்த வருடத்திற்கான போட்டி இனி நடத்தலாம்


முன்பும் வருடத்திற்கு ஒருமுறைதான் நடத்திகொண்டிருந்தோம்.


உச்சநீதிமன்றம் இனி என்ன தீர்ப்பினை வழங்கினாலும் சிக்கல் இல்லை, காரணம் மாநிலத்தின் பெரும் எழுச்சி எனும் இன்னொரு தரப்பினை இதுவரை நீதிமன்றம் பார்க்கவில்லை.


இதோ உலகமே பார்த்து மிரண்டு நிற்கும் இந்த ஒரு பாயிண்ட் போதும், உச்சநீதிமன்றம் தானாக தலையாட்டும் இல்லாவிட்டால் அதன் நீதி பெரும் கேலிகூத்தாகும், அதற்கு அது இடம்கொடுக்காது


ஆக இனி உச்சநீதிமன்றம் வழிக்கு வந்தே தீரவேண்டும், இல்லை என்றால் நீதி இல்லை அது பீட்டாவின் கைக்குள் இருக்கின்றது என சந்தி சிரித்துவிடும்


ஆக வெற்றி என்பதை பெற்றாகிவிட்டது


இப்பொழுது சீமான் போன்ற அரைவேக்காடுகள் நிரந்தரமாக தடையினை நீக்கவேண்டும், இது ஏமாற்றுவேலை என கத்த தொடங்கியிருக்கின்றன‌


அவர்களுக்கு என்றுமே அமைதியான முடிவுகள் விருப்பமில்லாதது, பலபேரை கொல்லாமல் அவர்களுக்கு தூக்கம் வராது. பலர் செத்தால்தான் அவர்கள் அரசியல் பயணம் செய்யமுடியும்


திகைத்து நிற்கும் அரசாங்கங்கள் இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்ற நிலைக்கு வந்தாயிற்று


ஆக இப்பொழுது ஜல்லிகட்டினை நடத்திவிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்ப்பதே அறிவுடடமை. அதனை விட்டுவிட்டு நிரந்தர தடை நீக்கினால்தான் விளையாட விடுவோம் என்பது அறிவுடமை அல்ல‌


அது மாநில அமைதியினை குலைக்கும் உள்நோக்கம் மட்டுமன்றி, இது எல்லை மீறி செல்கின்றது என இதுவரை நம்மை ஆதரிப்பவர்களை எல்லாம் முகம் சுழிக்க வைக்கும்


வெண்ணெய் திரளும்பொழுது தாளி உடையவிட கூடாது


நெடுங்கால போராட்டம் என்பது மொத்தத்தையும் சீரழித்துவிடும் அபாயம் உண்டு


பிடிவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு எல்லை உண்டு, இதோ இந்தியாவினை அலறவைத்து ஜல்லிகட்டினை மீட்டாகிவிட்டது, அவசர சட்டம் இயற்றும் அளவு நிலமை சீரியஸ் என சொல்லும்பொழுது உச்சநீதிமன்றம் இனி தடுக்க முடியாது


காட்சிகள் மாறிவிட்டன, ஆக விளையாடுவதுதான் சரி. அதற்காக போராட்டத்தை கைவிட அவசியமில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்


முதலில் காளையொடு விளையாடுவோம், இனி யாரும் தடுக்கமுடியாது. வெற்றியினை பெற்றாகிவிட்டது. இதனை இப்படியே விடமுடியாத கும்பல் தவறான வதந்திகளை பரப்பிவருகின்றது


இந்த சீமான் போன்ற நரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறவிலையே, தங்களுக்கு இதில் பங்கு வராதே, 4 பேர் சாகட்டும் ரத்த ஆறு ஓடட்டும் என ஏதாவது சொல்லும்


அவனை போன்றவர்களை பிடித்து வெளியே தள்ளுவதே போராட்டத்திற்கு நல்லது.


வெற்றிபெற்ற மகிழ்ச்சியோடு ஜல்லிகட்டிற்கு கைதட்டலாம், போட்டி நடக்கட்டும்


இன்னொரு முறை விபரீத முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் பலமுறை யோசிக்கும், எடுக்கவும் எடுக்காது. மத்திய அரசின் ஒத்துழைப்பும் சில தீர்ப்புகளை மாற்றும்


ஆக நமது உரிமையினை மீட்டுவிட்டோம், அதை கொண்டாடலாம்


இன்னும் போரட காரணங்கள் இல்லை, அப்படி இனி காரணம் உருவானால் அதனை எப்படி தூக்கி எறியவேண்டும் என இப்பொழுதுதான் படித்திருக்கின்றோம்


இனியும் அஞ்சவோ, சந்தேகபடவோ என்ன இருக்கின்றது? வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை பெற்றாகிவிட்டது


ஆனால் ஒரு ஆச்சரியம்


இந்த தமிழகம்தான் அதிமுக அரசு வேண்டும் என தேர்தலில் தேர்ந்தெடுத்தது, ஜெயா மறையும் பொழுதும் அது மறு தேர்தல் கேட்கவிலை, ஆட்சி பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கபொழுதும் அது அமைதிகாத்தது


இப்பொழுது அதே பன்னீர்செல்வம்தான் இவ்வளவு தூரம் செயல்பட்டு ஜல்லிகட்டை நீக்க போராடி வெற்றி கொடுத்தும் இருக்கின்றார்


ஆனால் அவர் இப்போது விளையாடுங்கள், அடுத்துள்ள காரியத்தை பின்னால் பார்க்கலாம் எனும்பொழுது யோசிக்கின்றது


நம்பமுடியாமல் யோசிக்கின்றதாம்


அட இந்த யோசனை தேர்தலுக்கு முன்பாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்


போகட்டும்


தமிழகம் யோசித்து போரட கிளம்பியாயிற்று, இனி எல்லாம் நலம், யாவரும் நலம்.


சரி முதல்வர் மாநில பொறுப்பனவர் மக்களுக்கு சில அறிவுரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கின்றார். பொறுப்பு அவருக்கு இருக்கின்றது, அவர் பேசலாம்


இந்த போராட்டகாரர்களை கலைந்து செல்ல சொல்ல சசிகலா யார்?, மாணவர்களே கலைந்து செல்லுங்கள் என உத்தரவிட அவர் யார்?


இவ்வளவிற்கும் தேர்தல் பிரச்சாரம் கூட செய்தவரில்லை, இந்த எழுச்சி தமிழகத்தை கண்ட பின்னும் அவருக்கு ஞானம் பிறக்கவில்லை போலும்.


சிலர் பட்டுத்தான் திருந்துவார்கள்..


அவருக்கு தமிழர்கள் மீது என்ன அதிகாரம்? என்ன உரிமையில் அவர் பேசிகொண்டிருக்கின்றார்? யார் அதிகாரம் கொடுத்தது?


ஜெயாவிற்கு ஏதோ நல்ல நேரம் சென்றுவிட்டார், இப்பொழுது இருந்தால் இந்நேரம் இருக்கும் எழுச்சிக்கு அழ அழ விரட்டியிருப்பார்கள், அவர் இமேஜ் மண்ணாங்கட்டி எல்லாம் நொறுக்கபட்டிருக்கும்


ஜெயாடிவி மட்டும் பார்த்துகொண்டிருந்தால் இப்படித்தான் புத்தி போகும்,


சூழ்நிலையோ வெளிஉலகமோ, பக்கத்து தெருவோ தெரியாது


தமிழர்கள் மீது சசிகலா எனும் பொறுப்பில் இல்லாத நபர் வைக்கும் சில கோரிக்கைகள் கண்டிக்கபடவேண்டும்.


பிரதமரும், ஜனாதிபதியும், ஆளுநரும், முதல்வரும் பேசவேண்டிய இடத்தில் சசிகலா என்ன பேசுவது?


அவர்களே திகைத்து நிற்கும் நேரத்தில் இவருக்கு என்ன அவசரம்?


இதனை முதலில் கண்டித்துவிட்டு வாடிவாசலை திறக்கலாம்..

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி





வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி


ஒன்றுபட்ட தமிழர்களின் ஓங்கிய குரலுக்கு வெற்றி


மாணவ புரட்சிக்கு வெற்றி, மாணவியர் துணிவிற்கு வெற்றி, தமிழக அரசின் ஒத்துழைப்பிற்கும் நன்றி





இந்த உணர்ச்சி பூர்வமான நேரத்திலும் ஜெயா டிவி அதே சின்னம்மா காமெடி செய்துகொண்டிருக்கின்றது

ஏய் பீட்டாவே

ஜல்லிகட்டு காளைகளை நாங்கள் பார்த்துகொள்கின்றோம், அந்த ஜெயாடிவியில் சிரிக்காமல் கடும் மன அழுத்தத்தில் வேலைசெய்யும் அந்த அப்பாவிகளை அந்த "சின்னம்மா வதை" எனும் கொடுமையிலிருந்து காப்பாற்று

விலங்குகள் நலன் மட்டும்தான் பேசுவீர்களா, இந்த "சின்னம்மா வதை"படும் அந்த வாய்பேசும் ஜீவன்களை கண்டுகொள்ள மாட்டீர்களா?

8 கோடி தமிழர்களை தவிக்க விட்ட பாவத்தை அந்த "சின்னம்மா வதை"யிலிருந்து அந்த சில ஜீவன்களை விடுவித்து பாவத்தை துடைத்துகொண்டு இந்தியாவினை விட்டு ஓடிவிடுங்கள்













இந்த போரட்ட வெற்றிக்கு மாணவர்களே மகா முக்கியம் தவிர எந்த அரசியல் கட்சியும் அல்ல, எந்த கட்சியும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது : தமிழிசை

அட இது என்ன இப்பொழுது எல்லாம் ஒழுங்காக நடக்கின்றது, கனவா நிஜமா?

தமிழகம் பொங்கிய புரட்சியில் நம்ம தமிழிசைக்கு கூட அறிவு வந்துவிட்டதே, அப்படி அதிர்ச்சி வைத்தியம் நடந்திருக்கின்றது


அந்த அதிர்ச்சியில் இவ்வளவு நாளும் புலம்பிகொண்டிருந்த தமிழிசை இப்பொழுது குணமாகிவிட்டார்

வாழ்க்கையிலே முதல் முறையாக எவ்வளவு அழகாக பேசியிருக்கின்றார்

இப்படி இன்னும் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் திருந்தி நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்களோ தெரியாது..

அதிர்ச்சி வைத்தியம் வேலை செய்கின்றது












பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா?

https://youtu.be/P6gYarRlX_0

ஏம்பா ஜெயாடிவி குரூப்ஸ், சின்ன அம்மா ஜல்லிகட்டு தடை உடைத்தார், சின்ன அம்மா சாதித்தார் என சொல்லிகொண்டே இருக்கின்றீகளே, அந்த சாதனையினை சின்னம்மா கொஞ்சம் மெரீனா பக்கமோ அல்லது ஜல்லிகட்டு பக்கமோ சென்று விளக்கினால்தான் என்ன?


எவ்வளவு பெரும் சாதனையினை உங்கள் சின்னம்மா செய்திருக்கின்றார்? அதனை தமிழகம் முழுக்க சென்று மக்களுக்கு தெரிவிக்காமல் இப்படியா ஜெயா வீட்டில் அமர்ந்திருப்பார்


இப்படி பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா? அவர் தன்னடக்கம் வாழ்க‌




ஆனால் நாளை தேர்தல் என்றால் சின்னம்மா இப்படி இருக்க முடியுமா? வோட்டு கேட்க வெளிவந்துதானே ஆகவேண்டும்


போயஸ் கார்டனிலிருந்தே ஜல்லிகட்டை மீட்டதாக சொன்னது போல, தேர்தலில் சொல்லமுடியுமா?


ஜெயாடிவி மட்டும் வாக்களித்தால் போதும் என எண்ணிகொண்டிருக்கிப்பார்கள் போலிருக்கின்றது


இல்லாவிட்டால் இப்படி எல்லாம் அவிழ்த்து விடமாட்டார்கள். ஆனால் ஜெயாடிவி குரூப்ஸ் வோட்டு கூட விழுமா என்பதே சந்தேகம்


குபீர் சிரிப்பினை அடைத்துகொண்டு சீரியசாக செய்தி தயாரிப்பதும், அதனை கொஞ்சமும் சிரிப்பு இன்றி வாசிப்பதும் எவ்வளவு பெரும் சித்திரவதைகள்?


அந்த சித்திரவதைகளை அந்த பணியாளர்கள் மறக்கவா போகின்றார்கள்???






கலைஞர் டிவியில் ஆயுத எழுத்து படம் ஓடிகொண்டிருக்கின்றது, பாரதி ராஜா சீரியசாக சொல்லிகொண்டிருக்கின்றார்


"நாம படிக்கல, வேற தொழில் தெரியாது. இந்த பயலுக மட்டும் அரசியலுக்கு வந்தானுகண்ணு வச்சிக்க, நாம சோத்துக்கு அலைய வேண்டியதுதான்"


படம் கலைஞர் டிவியில் ஓடிகொண்டிருப்பதுதான் ஹைலைட்








தேசிய கொடி புனிதமானது...





Image may contain: sky and outdoor


ஜல்லிகட்டு தடைக்கு தமிழகம் போராடிகொண்டிருக்க , பல வழிகளில் எல்லோரும் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டிருக்க சிலருக்கு தேசியகொடியினை வைத்து எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என சிந்தனை ஓடிகொண்டிருக்கின்றது


அதாவது அதனை தலைகீழாக ஏற்றலாமா? அதில் எதிர்ப்பு கோஷம் எழுப்பலாமா? அசோக சக்கரத்திற்கு பதில் காளையினை வைப்போமா? என ஏக அழிச்சாட்டிய சிந்தனைகள்.


சிலருக்கு தேசியகொடியினை ஏற்றவே கூடாது எனும் முடிவு.





ஜனவரி 26 நாம் குடியரசான நாள், அதாவது ஒவ்வொரு இந்தியனை காக்கவும், நாட்டை காக்கவும், கலாச்சாரங்களை காக்கவும் சட்டங்கள் உண்டு என அறிவிக்கபட்ட நாள். இந்த சட்டங்களில்தான் இந்நாடு இயங்கிகொண்டிருக்கின்றது.

அன்று பீட்டா எல்லாம் இல்லை, அதனால் அம்பேத்கர் சட்டங்களை சுதந்திரமாக இயற்றமுடிந்தது, இன்று அப்படி அல்ல அடிக்கடி அதற்கு வெள்ளை அடிக்கின்றார்கள், சில நேரம் அவசரமாக அதனை சுரண்ட வேண்டி இருக்கின்றது

நிச்சயமாக ஜனவரி 26ம் தேதி இந்திய சட்டத்தின் நாள். அந்த சட்டத்தின் சில பிரிவுகள் நமக்கு எதிராக இருப்பதை எதிர்க்க வேண்டும், மொத்த சட்டங்களையும் அல்ல.

காரணம் நமக்கு பாதுகாப்பினையும் பல உரிமைகளையும் அச்சட்டமே கொடுத்திருக்கின்றது

அந்த பாதுகாப்பில்தான் நாமெல்லாம் குரல் எழுப்ப முடிகின்றது

ஆக அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அடிக்கடி அந்த சட்டத்திற்கு சில ஜோடிப்புகளை செய்கின்றார்கள் அல்லவா? அதாவது இவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் இம்மாதிரியான சட்ட சேர்ப்புகளுக்கும், சில சிக்கல்களுக்கும் காரணம்

அதனால் நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அந்த மாதிரி ஆட்சியாளர்களுக்கு? சில உரிமைகளை சட்டத்தின் மூலம் விளையாடும், அந்நிய சக்திகளுக்காக விளையாடும் ஆட்சியாளர்களுக்கு

தேசிய கொடி புனிதமானது, அதனை தொட முடியாது. அது நம்மை நாமே அவமானபடுத்துவது பொன்றது

ஜனவரி 26ல் தேசியகொடியினை ஏற்றத்தான் வேண்டும்

முழு உரிமை இருக்கும்பொழுது கம்பத்தின் உச்சம் வரை ஏற்றுவோம், இப்பொழுது நமக்கு சில உரிமைகள் இல்லை

அதனால் அரைகம்பத்தில் பறக்க வைக்கவும் முடியாது, யார் மண்டையினை போட்டார்கள் என பெரும் சர்ச்சை வரும்

அதனால் முக்கால் கம்பத்தில் பறக்க விடலாம்

யாரும் கேட்டால் சொல்லலாம், முழு உரிமை கிடைத்தால் முழுவதுமாக ஏற்றலாம், உரிமை குறைவு என்பதால் உயரம் குறைந்து பறக்கின்றது போதுமா?

அப்படி இல்லை என்றால் கால்கம்பத்தில் பறக்கவிடலாம், கேள்விகள் வரும்,

ஏன் இப்படி பறக்கவிட்டீர்கள்?

ஆளுபவர்கள் உண்மையாக செத்துவிட்டால் அரைக்கம்பம், எங்களை பொறுத்தவரை உயிரோடு செத்துவிட்டார்கள் அதனால் கால்கம்பம்





























கேள்வி கேட்கிறானாம் கேள்வி?





எவனோ ஒருவன் முகநூலில் போராட்டகாரர்களுக்கு 50 கேள்விகள் என அடுக்கிகொண்டிருக்கின்றான்


அவன் 50 அல்ல 500 கேள்விகள் அடுக்கினாலும் ஒரே பதில்தான்


தமிழகத்திலும் ஒரு பெரும் கூட்டம் எந்த தலைவனின் அழைப்புமின்றி கூடமுடியும் , அது முதல்வரை அலறி அடித்து ஓடவைக்க முடியும் , டெல்லியினை யோசிக்க வைக்க முடியும் காட்டினோமா இல்லையா?





என்ன சொன்னாய்? போலிஸ் ஆதரவாக இருக்கின்றதா? கிட்டத்ட்ட 800 இடங்களில் திரண்டிருக்கும் மக்களை என்ன செய்து அடக்க முடியும்? உலகம் கவனிக்கும்பொழுது அது சர்வதேச சிக்கல் ஆகாதா?

மக்கள் எழுச்சிக்கு முன் அரசு மண்டியிடுகின்றது புரிகின்றதா?

நீ தனியாக இருந்து 5000 கேள்விகளை எழுப்பி நீயே தனியாக பதில் எழுதிகொள், மனப்பாடமாக படித்துகொள். எங்களுக்கு என்ன?

எம்மிடம் இருப்பது ஒரே பதில்தான். பெரும் அச்சத்தை ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் மவுன ஆதரவாளரான உன் போன்றவர்களுக்கும் தமிழகம் ஏற்படுத்தியிருக்கும் அச்சம்

அந்த அச்சமும் யோசிப்பும் வெற்றியினை நோக்கி போராட்டத்தை நகர்த்துகின்றன, அதனை நெருங்கிகொண்டிருக்கின்றோம்

முதலில் தடை விலகட்டும், அதன் பின் எத்தனை முறை யோசித்து கைவைப்பார்கள் என்பது உனக்கே புரியும்

சரி எங்களுக்கு வேலை இருக்கின்றது, நீ தாளில் 50, 500, 5000000 என கேள்விகளை எழுதிகொண்டே இரு....








என்னடா தளபதி பெரிய தளபதி?





பிரிவினை நிகழா கழகத்தின் அக்காலத்தில் அண்ணா அக்கழகத்தின் "தளபதி" என அறியபட்டார். எங்கும் தளபதி என ஒரே அழிச்சாட்டியம். எம்.ஆர் ராதா போன்றவர்களுக்கு அதில் எரிச்சல் வந்தது, வாய்பிற்காக காத்திருந்தார்கள்


நாடகமே அவர்கள் பிராதனம், பின்பு அதனை ஆட்சியிலும் இன்றுவரை நடத்தி கொண்டிருக்கின்றார்கள் என்பது வேறுவிஷயம்.


அன்று மேடையில் நடத்திகொண்டிருந்தார்கள் , அந்த ஒத்திகைதான் இன்றுவரை கழகங்களுக்கு கை கொடுத்துகொண்டிருக்கின்றது





கலைஞரும் எம்.ஆர் ராதாவும் நடித்த நாடகம் அது, தளபதி தளபதி என கலைஞர் புகழ்ந்துகொண்டிருந்தார் கலைஞர், எரிச்சலின் உச்சிக்கு சென்ற ராதா வசனத்திலிருந்து விலகி கோபமாக சொன்னார்

"என்னடா தளபதி பெரிய தளபதி? எத்தனை போர் நடத்தினான் அந்த தளபதி அத முதல்ல சொல்லு.."

இன்னொருவன் மேடையில் இருந்தால் தலையினை சொரிந்துவிட்டு ஆசிரியரிடம் அழசென்றிருப்பான், காரணம் பதில் வரி தெரியாது, அது நாடகத்தில் இல்லாதது

சுதாரித்த கலைஞர் அசால்ட்டாக சொன்னார் "வெட்டினால்தான் கத்தியா?, கொத்தினால்தான் பாம்பா?, பாய்ந்தால்தான் புலியா? எப்படி இருந்தாலும் அவை அப்படியே, அதனை போலவே யுத்தம் நடத்தினாலும் நடத்தாவிட்டாலும் அவனே எங்கள் தளபதி"

கூட்டம் கைதட்டியது, திகைத்து நின்றார் ராதா, அதன் பின் பேச்சை வளர்க்கவில்லை. நாடகம் அதன் புள்ளிக்கு நகர்ந்தது

இப்படி எதிர்பாரா கலைஞரின் பதில் பெரும் புகழ்பெற்றது, கலைஞரின் சாதுர்யம் பாரீர் என போஸ்டர் அடிக்காமல் கர்ண செய்திகளாக பரப்பிகொண்டிருந்தனர்

கொஞ்சநாள் கழித்து எம்.ஆர் ராதாவின் காதுக்கும் செய்தி சென்றது, அமைதியாக முணகினார் ராதா " சும்மா பேசிக்கிட்டே பொம்ம மாதிரி இருப்பவன் எல்லாம் தளபதின்னு சொல்லிகிட்டு இருக்கானுக.. தளபதிண்ணா ஒரு ஸ்பெஷல் வேண்டாமா?..

இத சொன்னா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுக"

இந்த முக ஸ்டாலின் போராட்டம் ரயில் மறியல், உண்ணாவிரதம் என கிளம்ப , திமுகவினர் எல்லாம் தளபதி தளபதி என ஆர்பரிக்க அந்த காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன‌

"சும்மா பேசிக்கிட்டே பொம்ம மாதிரி இருப்பவன் எல்லாம் தளபதின்னு சொல்லிகிட்டு இருக்கானுக.."

பரபரப்பாக ஒரு போராட்டமும் இல்லை, உணர்ச்சியூட்டம் வழி தெரியவில்லை, மிக சரியாக கருத்துக்களை எடுத்துவைக்கும் வாதமும் தெரியவில்லை

இன்னொரு ஜெயலலிதாவாக ஸ்டாலின் மாறிகொண்டிருக்கின்றார் என்பது மட்டும் புரிகின்றது.

எப்படிபட்ட சுவாரஸ்ய மனிதர் கலைஞர், அவர் அருகிலிருந்து பார்த்து ஒன்று கூடவா அவரைபோல் உருவாகவில்லை???

நிச்சயமாக சொல்லலாம் கலைஞர் போல ஸ்டாலினும் அண்ணா சமாதியில்தான் உண்ணாவிரதம் இருந்திருப்பார், ஆனால் இப்போது அங்கு நுழையமுடியாது என்பதால் வள்ளுவர் கோட்டம்

போராளிகள் வள்ளுவர் கோட்டத்தை விட்டிருக்கின்றார்கள் என்பதை மட்டும் ஜல்லிகட்டு சர்ச்சையில் கண்டுபிடித்திருக்கின்றார்

மற்றபடி ஒரு சுவாரஸ்ய அசைவும் இல்லை, பிரதமரை சந்திக்கவில்லை, திமுக எம்பிக்கள் டெல்லியில் அதிரடி காட்டவில்லை, தமிழக அரசுக்கும் நெருக்கடி கொடுக்கவில்லை

இது கலைஞரின் அரசியல் அல்ல, இது முழுக்க முழுக்க ஜெயாவின் அரசியல்

ஒருவேளை ஸ்டாலின் ஜெயா ரசிகராக இருந்திருப்பாரோ? , தலைவர் பாணியில் நாமும் முணுமுணுக்க வேண்டியதுதான்

"நமக்கு எதுக்கும் வம்பு சொன்னா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுக..சும்மா தளபதி தளபதிண்ணு சொல்லிட்டே இருப்பானுக.."








ஜெயா டிவியும் சின்னம்மாவும் ....




இந்தியாவும் உலகமும் தமிழக ஜல்லிகட்டு போட்டியினை வியப்பாகவும், பெருமையாகவும் பார்த்துகொண்டிருக்கும் பொழுது ஜெயா டிவி மட்டும் சசிகலாவினை பெருமையாக பார்த்துகொண்டே இருக்கின்றது


அதாவது ஜல்லிகட்டு நடத்த சின்னம்மா பெரும் பாடு படுகின்றார், மக்களை சந்திக்கின்றார், மத்திய அரசின் முதுகில் சாத்துகின்றார் என ஏக இம்சைகள்


ஆனால் சந்திக்கும் மக்கள் எல்லாம், சின்னம்மா ஜல்லிகட்டை நடத்த நீங்கள் பாடுபடுங்கள், நன்றிகடனாக நீங்கள் முதல்வாராக நாங்கள் பாடுபடுகின்றோம் என கண்ணீரை துடைகின்றார்களாம்





இனி ஜல்லிகட்டு நடந்தால் அந்த டிவி என்ன சொல்லும்?

சின்னம்மாவின் சினம்கொண சீற்றத்தால் பணிந்த மத்திய அரசு வாடிவாசலை திறந்தது என சொல்லும் அதனையாவது சிரித்து கடந்துவிடலாம்

ஆனால் அவர்கள் அப்படி விட்டுவிடுபவர்களா அவர்கள்? அதற்கு மேலும் சொல்வார்கள்

"50 எம்பிக்கள், 130 எம்எல்ஏக்கள் வாழ்த்தியதில் ஜல்லிகட்டில் கலந்து காளையினை அடக்கினார் சின்ன அம்மா, அடங்கிய காளை மாலையினை சின்னம்மா கழுத்தில் மாலையாக போட்டது

உடனே கூடியிருந்த வெளிநாட்டுக்காரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கண்காணிப்பாளர்கள், விலங்கியல் ஆர்வலர்கள் , பொதுமக்கள் எல்லோரும் சின்னம்மா முதல்வராக வற்புறுத்தினார்கள்" என சொல்லும்

அவர்கள் நிச்சயம் சொல்வார்கள், அவர்கள் இருக்கும் கனவு உலகம் அப்படியானது. அவ்வுலகத்தில் சசிகலா, ஜெயாடிவி என இருவர் மட்டுமே இருக்கின்றார்கள்

அதுவும் மகா இயல்பாக, சீரியசாக சொல்வார்கள் பார்த்தீர்களா? அதனை எப்படி தலையில் அடித்து கடந்து செல்ல முடியும் என்றுதான் தமிழகம் யோசித்து கொண்டிருக்கின்றது.

அந்த ஜெயா டிவி செய்தி தயாரிக்கும் குழுவினை ஒருமுறை பார்த்து வாயில் கைவைத்து சிரிக்கவேண்டும்,

அதற்குள் அவர்களே அழுதுவிடுவார்கள், அவர்கள் நிலை அப்படி. அந்தோ பரிதாபம்.








போயஸ் கார்டனில் சசிகலாவும் பன்னீர்செல்வமும் சந்தித்து ஆலோசனை



இருபெரும் அறிவாளிகள் எப்பொழுதுமே அடிக்கடி சந்தித்து ஆலோசனைகளை பரிமாறிகொள்வார்கள் என அன்றே சொன்னான் சாணக்கியன்.






ஜெயா முதல்வராக இருந்தால் புரட்சி தலைவியின் அரசின் நடவடிக்கை.


பன்னீர் முதல்வராக இருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை


ஆக அது தமிழக அரசு என்பதை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை

ஜெயா டிவி இம்சைகள்




 


திருநாவுக்கரசர் வேதனை.... குஷ்பு சாதனை...



எம்ஜிஆருக்கு பின் ஆர்.எம் வீரப்பன் முதல்வராக இருந்த வாய்ப்பினை நானே கெடுத்தேன், அதன் விளைவால் தமிழ்நாடு நாசமாய் போயிற்று, அதிமுகவிற்கு யாரோ உரிமை கொண்டாடுகின்றான் : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேதனை


இவர் இப்பொழுது காங்கிரஸ் கட்சி அல்லவா?, பின் ஏன் கடந்த காலங்களை பற்றி இவ்வளவு கவலைபடுகின்றார். இவர் கெடுத்த கெடுதல் யாருக்கு தெரியாது?


அதனால் அதிமுகவில் மீண்டும் இணைந்து அன்று செய்த அதே தவறை இன்று சரிசெய்தால் என்ன? செய்யலாம் அல்லவா? யார் தடுத்தார்கள்


அன்று இவர் அதிமுகவினை கெடுத்தது போல தமிழக காங்கிரஸையும் கெடுத்துவிடலாம், அதனால் இவர் செய்ய வேண்டியது என்ன?


தலைவி குஷ்பூவினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கிவிட்டு இவர் ஓதுங்கிவிடலாம், இல்லாவிட்டால் இன்னொரு நாளில் வேறு கட்சியில் குஷ்பூ பெரும் பதவிக்கு வந்துவிட்டால் என்ன சொல்வார்?


அன்று குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவரானால் தமிழகம் உருப்பட்டிருக்கும் என வருதுவாரா இல்லையா? ஆனால் ஆகபோவது என்ன?


அதனால் இன்றே தமிழக காங்கிரஸினை குஷ்பூவிடம் ஒப்ப்டைத்துவிட்டு இவர் அதிமுகவில் இணைந்து தவறை சரி செய்தல் நல்லது.












ஏன் எங்கள் அபிமான குஷ்பூ அரசியலுக்கு மகா பொருத்தமானவர் என சொல்கின்றோம் என்றால், அவருக்கு ஏன் இத்தனை லட்சம் ரசிக கண்மணிகளும் தொண்டர் படையும் இருக்கிறது என்றால் இந்த முழக்கத்திற்காகத்தான்

இப்படி பீட்டாவினை செவிட்டில் அறைந்தது போல கேள்வி எழுப்பும் தமிழக அரசியல்வாதி யாராவது உண்டா? நிச்சயம் இல்லை

ஆங்கில அழகென்ன, அதன் உச்சரிக்கும் கோப தொணி என்ன?


ஆங்கிலமே இன்று அழகானது அவரால்..

எங்கள் பெண் சிங்கம் கர்ஜிக்கும் அழகு என்ன கம்பீரம்? எத்தனை துல்லியம்?

வாழ்த்துக்கள் குஷ்பூ, உங்கள் முழக்கம் இன்னும் பல உரிமைகளை தமிழகத்திற்கு மீட்டு தரட்டும்..

எங்களோடு எங்களாக முழங்கியதற்கு கோட்டான கோடி நன்றி





















































Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: முதல்வர், இன்னும் பிற .....

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன், சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி


முதல்வராக இவர்தான் தொடங்கிவைக்க வேண்டும், ராமராஜனையா அழைக்க முடியும்?


ஒருவேளை சின்னம்மா முந்திகொள்வார் என்ற அச்சம் இருக்குமோ? அவர் கவலை அவருக்கு.






கொசுறு 


பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்: தனுஷ்


இல்லை, மிகபெருமை என அறிக்கை விட்டு பாருங்கள், அதன் பின் தெரியும்,


மெரினா கூட்டம் தெரிந்திருக்கும் அல்லவா?




மெரினா என்ன மெரினா சிம்பு வீட்டு முன்னாலும் ஒரு கூட்டம் உண்டு, சிம்பு விடுவாரா?


எப்படியோ தனக்கும் நடிக்க வரும் , கூடவே பல்டியும் அடிக்கவரும் என தனுஷ் நிருபித்துவிட்டார்


மாமனார் 8 பல்டி என்றால் மருமகன் 16 பல்டி அடிப்பார் போல,


நல்ல பல்டி குடும்பம்.


இன்னும் மனிதர் பீட்டா விருதை கூவத்தில் எறியவில்லை .


ம்ம் கூவத்தில் எறிவீர்களா மிஸ்டர் தனுஷ்? முடியுமா?


அது என்னபடம்? என்னை நோக்கி பாயும் தோட்டாவா?


பாய்ந்துவிடுமா? பார்த்துவிடுவோமா?







மலேசிய தமிழர்கள் முதன் முறையாக தமிழக தமிழர்களை வித்தியாசமாக‌ பார்க்கின்றார்கள்

கொஞ்சமாவது நிமிர்ந்து நடக்க முடிகின்றது

வாழ்த்துக்கள் ஸ்டுடன்ஸ்




 

பீட்டா ஆதரவாளர் ராதா ராஜனின் கொச்சையான விமர்சனம்



Image may contain: 1 person, text



மிக மிக சீரியசாக கண்டிக்க வேண்டிய விஷயம் இது, காமெடிக்கெல்லாம் இடமே இல்லை


100 பேருக்கு மேல் ஒரு கூட்டம் கூடவேண்டுமென்றால் சென்னையில் அங்குதான் கூட்டவேண்டும் அப்படித்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டமும் தொடங்கியது, அது வெற்றிபெறும் நிலையினை எட்டியிருக்கின்றது


மொத்த தமிழகம் பொங்கியதும் மத்திய அரசே பின் வாங்கிற்று, இனி இந்த எழுச்சியினை உச்சநீதிமன்றமும் தடுத்துவிடமுடியாது, இந்த அவமானத்தில் முகம் தொங்க போட்ட பீட்டாவும், இறைச்சிக்கும் தோலுக்கும் விலங்குகள் கொல்லபடும்பொழுது கண்ணை மூடும் விலங்கு ஆர்வலர்களும் அரற்றுகின்றனர்


அதில் ஒன்றுதான் இந்த ராதா ராஜனோ, ராத்திரி ராஜனோ


அம்மணிக்கு பொறுக்கவில்லை, மிக மட்டமாக பேசியிருக்கின்றார் அதாவது மெரினா மோசமான இடமாம், உடலுறவு இலவசம் என்றாலும் அங்கு கூட்டம் கூடுமாம்


வயிற்றெறிச்சலில் வார்த்தைகள் வருவது சகஜம் தான், காளை முட்டி 4 பேர் சாவுங்கள், காளைக்கு கொம்பு முளைக்காமல் போகட்டும் என சாபமிட்டால் சரி


ஆனால் குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் எல்லாம் கூடியிருக்கும் பொழுது இவர் இப்படி பேசுவது தாங்குமா?


உடலுறவு கிலோ என்னவிலை, எங்கு கட்டணம்? எங்கு இலவசம் என்பதெல்லாம் நமக்கு தெரியாது, ஆனால் மெரினாவில் இலவசம் என்று இவர் சொல்லியிருப்பது அவர் ஆராய்சி


எங்காவது படகுக்கு அடியில் படுத்து மறைந்து பல விஷயங்களை பார்த்து , ஆராய்ந்து கட்டுரை எழுதியிருக்கலாம், அவர் சாகசம் அப்படி இருக்கலாம்.


ஆனால் இப்பெரும் போராட்டம் வெற்றி பேறும்பொழுது ஏன் இப்படி பேசவேண்டும்?


விலங்குகளோடு பழகி பழகி விலங்கு போலவே சிந்தின்றார், அதாவது மிருக மந்தையில் இருபால் விலங்குகள் என்ன செய்யுமோ அப்படி சிந்திருக்கின்றார்.


விலங்கோடு விலங்கானால் புத்தி இப்படித்தான் போகும், ஆனால் ஆடை எல்லாம் உடுத்தியிருப்பதால் இப்போதைக்கு பிரச்சினை இல்லை


ஏம்மா ராத்திரி ராதா


காந்தி அன்று மெரினாவில் பேசும் பொழுதும், பாரதியாரும் வஉசியும் முழங்கும்பொழுது கூட்டம் எதற்கு கூடிற்று?


அண்ணாவும் கலைஞரும் கண்ணதாசனும் முழங்கும்பொழுது கூட்டம் எதற்கு கூடிற்று?


அட அவ்வளவு ஏன் தினகரன் கோஷ்டி கடலுக்கு கர்த்தரை அறிவிக்கும்பொழுது கூடிய கூட்டம் எதற்கு கூடிற்று?


ஈழ அமைப்புகள் கடலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்தும்பொழுது கூடிய கூட்டம் எதற்கு கூடிற்று?


காந்தி காலத்தில் நீங்கள் இல்லை, அண்ணா காலத்திலும் இல்லை ஆனால் தினகரன் காலத்திலும், ஈழஅமைப்பு காலத்திலும், இன்னும் பல மாநாடுகள் நடக்கும்ப்பொழுதும் இங்குதானே இருந்தீர்கள்? சொன்னீர்களா


ஜெயா அடக்கம் நடைபெறும் பொழுது கூடிய கூட்டம் என்ன? அப்பொழுது சொன்னீர்களா? இந்த வார்த்தையினை சொன்னால் என்ன? முடியுமா?


இப்பொழுது மட்டும் சொன்னால் என்ன வயிற்றெறிச்சல் இருக்க வேண்டும்?


நமது வீட்டு மாட்டினை நாம் தொட்டு ஆடும்பொழுது எங்கிருந்தோ வந்து ஏய் ஆடாதே என்பார்களாம், நாமும் பொத்திகொண்டு போகவேண்டுமா? என மானத்தில் பொங்கி கடற்கரையில் கூடிய கூட்டத்தினையா அவமானபடுத்தினீர்கள்


முடியாது, நிச்சயம் நீங்கள் தமிழராய் இருக்கமுடியாது, தமிழ்பேசினாலும் சேர்த்துகொள்ள முடியாது


எனினும் ஒரு வேண்டுகோள்


கொஞ்சநாளைக்கு மும்பை சன்னிலியோன் அருகே சென்று பதுங்கிகொள்வது உங்களுக்கு நல்லது, காரணம் அவர்தான் இந்திய பீட்டா தூதுவராம், உங்கள் நட்பு வட்டம்தான்


இந்த கட்டணமில்லா உடலுறவு எங்கே கிடைக்கும் என்பது அம்மணிக்கு நன்றாக தெரியும் விசாரித்துகொள்ளவும்


பீட்டா அதனைத்தான் ஊக்குவிக்க வந்தது, இல்லாவிட்டால் சன்னிக்கு விருது கொடுக்கும் அவசியம் என்ன?


இனி உங்களுக்கும் தரும், சன்னிக்கும் உங்களுக்கும் ஒரே விருது


விருதினை நீங்கள் வைத்துகொள்ளுங்கள், எருது விஷயம் உங்களுக்கு வேண்டாம்


மெரினாவில் எதற்காக கூடினார்கள் என்ற சந்தேகம் இன்னும் உங்களுக்கு இருக்கின்றதா? தீர்த்துவிடலாம்


ஜல்லிகட்டு வேண்டும் என குரலெழுப்பியவர்கள் மெரினாவில் கூடினார்கள், போராடினார்கள்


அப்படி நீங்களும், சன்னி லியொனும் இன்னும் பலரும் மெரினாவில் இலவச உடலுறவு என அறிவித்துபாருங்கள், முடியுமா?


எவ்வளவு கூட்டம் வருகின்றது என அப்பொழுது புரியும்


அதனை செய்யுங்கள், பீட்டாவின் சிறந்த மனிதர் என புகழபடும் சன்னிலியோன் தயாராக இருக்கின்றார், எதற்கும் தயாராக நிற்கின்றார்


மான உணர்வுக்கு கூடும் கூட்டமென்ன என்பதும், நீங்கள் சொல்லும் காரியத்திற்கு கூடும் கூட்டமென்ன என்பதும் அன்று விளங்கும்


மெரினாவில் ஜல்லிகட்டிற்காய் கூடிய இளைஞர் சார்பாக இந்த சவாலை ஏற்றுகொள்ள முடியுமா?




ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

https://youtu.be/5RJxGUT7yE4


ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, மத்திய அரசு இதில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது


தகுந்த நம்பிக்கையான முடிவுகள் இன்றி முதல்வர் பன்னீர்செல்வம் அவசரசட்டம் பற்றி அறிவிக்க முடியாது, ஆக ஏதோ விரைவாக நடக்க இருக்கின்றது.


இந்த‌ அரசும் இரும்பு கரம், அலுமினிய கரம் என இறங்காமல் மக்களை பற்றி சிந்தித்திருப்பது நீண்ட நாளைக்கு பின் மக்கள் சொல்வதை கேட்கும் அரசு அமைந்திருக்கின்றது என எண்ண வைத்திருக்கின்றது


நிச்சயம் ஜெயா இருந்தால், எப்படி சிந்திப்பார் என்றால், அது என்ன தமிழகம் சொல்லி நான் கேட்பது?. நான் என்று சொல்கிறனோ அன்று ஜல்லிகட்டு நடந்தால் போதும். அந்த அளவில்தான் சிந்தனை இருக்கும்.


நானே தீர்ப்பு கவலையில் இருக்கும்பொழுது இந்த பொங்கலே எதற்கு? இதில் ஜல்லிகட்டு வேறா? ம்ம்ம் போய் ஆலயங்களில் எனக்காக மொட்டை போடுங்கள் என்ற அளவில்தான் அவர் அணுகுமுறை இருக்கும்


அவர் ஆண்ட காலங்கள் அப்படித்தான் இருந்தன‌


பொதுவாக அதிமுக அரசு ஆளும் காலங்களில் எல்லாம் துப்பாக்கி ஓசையும், லத்தி சத்தமும் அடிக்கடி கேட்கும். ஒரு அடிமைதனத்தில் ஆட்சி நடக்கும், கட்சி போலவே


எம்ஜிஆர் அப்படித்தான் ஆண்டார், அடிதடி படங்களின் ஹீரோ அல்லவா? அதனால் அடித்துவிரட்டுவதில் அவருக்கொரு சந்தோஷம்


தமிழக போராட்டங்களையும் , அதில் நடந்த துப்பாக்கி சூடு போலிஸ் அராஜகம் எல்லாம் அதிமுக காலங்களில் அதிகமாகவே தமிழக பக்கங்களில் காணபடும்


அந்த காட்சிகள் நினைவுக்கு வந்துதான் அச்சமாக இருந்தது, ஆனால் தமிழன் பன்னீர்செல்வம் அதனை மாற்றி பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவர அமைதியாக முயற்சிக்கின்றார்


தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கபட்டிருக்கின்றது, அந்த அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்


இதில் தமிழக பத்திரிகைகள் பங்கு பாராட்டதக்கது, அரசியல் தலையீடு இன்றி பத்திரிகைகளை சுயமாக விட்டால் அவை எப்படிபட்ட சமூக பணியினை ஆற்றமுடியும் என அவை காட்டின‌


டிவிக்களில் நியூஸ் 7 அப்படி முழுநேரமாக செய்தது, நல்ல டிவி அது, சினிமா குப்பைகள் இல்லாததால் தமிழகத்து சிஎன்என் அல்லது அல்ஜசீரா என பெயரெடுக்கும் காலம் வந்துவிட்டது.


வாழ்த்துக்கள்


பொதுவாக நல்ல அரசுகளும், விழிப்பான மக்களும் இருக்கும் இடத்தில் பன்னாட்டு நிறுவணங்கள் வாலை சுருட்டி அமைதியாக இருக்கும்


காஸ்ட்ரோ அப்படி கியூபாவினை வைத்திருந்தார், சீனா , சிங்கப்பூர் என முன்னேறும் நாடுகள் நிலை அப்படி


பொலிவியா மக்கள் அப்படி தண்ணீரை சுரண்டவந்த அமெரிக்க கம்பெனியினை விரட்டினார்கள்


நமது அண்டை மாநிலம் கேரளத்தில் ஏதும் பன்னாட்டு கம்பெனி தலையிட முடியும்?


தமிழகம் சும்மாவே இருந்ததால் பீட்டா எல்லாம் ஆடி பார்த்தது, ஓங்கி அடித்துவிட்டால் அப்படியே அமைதியாகிவிடுவார்கள், ஆனால் வேறுவழியில் நுழைய பார்ப்பார்கள். விழித்திருந்து அடித்துகொண்டே இருந்தோமானால் அதன் பின் வேறுபக்கம் ஓடிவிடுவார்கள்


இந்த பீட்டாவின் இந்திய உறுப்பினர்கள் எல்லாம் இனி தமிழின துரோகிகள், எங்காவது தமிழகத்தில் தென்பட்டால் பிடித்து நல்ல திமிலங்காளை முன்னால் கட்டி வைக்க வேண்டும்


இந்த ஜல்லிகட்டு சர்ச்சையில் தேசியகொடி வேண்டாம், ஜன 26 கருப்புகொடி, அது இது என என்னவெல்லாமோ பேசினானே அவனை எல்லாம் அலங்காநல்லூரில் காளை காலுக்கடியில் இடவேண்டும்


நாம் நமது நாட்டில் மோதுவோம், கத்துவோம் நமக்குள் சண்டையிடுவோம். ஒரு இந்தியன் தன் சொந்த அரசுடன் மல்லுகட்டாமல் தான்சானியா அரசிடமா சண்டையிடமுடியும்?


அப்படி நம் அரசுடன் ஜல்லிகட்டிற்கு மல்லுகட்டினோம்


இது சொந்த உள்நாட்டு விஷயம், அண்ணன் தம்பி சர்ச்சை அவ்வளவுதான், ஜல்லிகட்டு விளையாட எல்லாம் தனிநாடு கேட்கமுடியாது, விளையாடுவதற்கு ஒரு நாடா?


இந்த நூற்றாண்டில் உலகில் பெரும் எழுச்சி எழுந்தது, ஆனால் தமிழ்நாட்டில் தமிழருக்காக எழும்பிய எழுச்சியில் இந்தி எதிர்ப்பிற்கு பின் நம் தலைமுறையில் நாம் பார்த்த எழுச்சி இது


ஒரு தலைமுறை எப்படி போராடவேண்டும்? எப்படி அரசினை பணிய வைக்கமுடியும் என காட்டிவிட்டது. இளம் தலைமுறை அதனை கவனிக்கின்றது


இனி பெரும் குழப்படிகளும் உரிமை மீறல்களும் வரும்பொழுது தன்னை காக்கும் முறையினை தமிழகம் தன் கண்முன் கண்டுவிட்டது


குழந்தைகளை அழைத்து சென்று போராட்டம் என்றால் என்ன என்பதை கண்ணார காட்டியாயிற்று, இனி அவை மறக்காது. தேவைபட்டால் கையில் எடுக்கும்


"ஜல்லிகட்டு நம் உரிமை, எங்கள் உரிமை எங்களுக்கு" என அந்த பிஞ்சுகளும் களத்திற்கு வந்திருப்பதை எண்ணி ஆனந்தம் பொங்குகின்றது, நல்ல வழிகளை போதிக்கின்றோம்


இத்தனை ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் உண்டே, என்னதான் சமூகபொறுப்பு படிக்கின்றார்களோ என எண்ணியதுண்டு, காட்டிவிட்டார்கள்


கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்திற்கு விடிகின்றது, விடிவெள்ளி தெரிகின்றது


ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் எளிதில் ஓயாது, பல வழிகளில் அது வரும்


ஜாதி,மதம், இனம், அண்டைநாடு, கட்சி,சினிமா, வர்க்கபேதம் என பலவழிகளில் நம்மை பிரித்து மோதவிட்டு பார்க்கும்


மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலங்கள் இனிதான் இருக்கின்றன, அதற்கென்ன எதனையும் காதில் வாங்காவிட்டால் முடிந்தது விஷயம்


நம்மாலும் உலகம் கவனிக்கும் பெரும் போராட்டத்தை நடத்த முடிந்த்திருக்கின்றது


கூடங்குள போராட்டத்திற்கும் மொத்த தமிழகமும் இப்படி பொங்கியிருந்தால் அதுவும் வென்றிருக்கும், ஆனால் மதசாயம் பூச அது முடக்கபட்டது


எப்படியாயினும் இனி தமிழக எதிர்ப்புகள் மிக ஒற்றுமையாக வலுவாக கிளம்ப தொடங்கிவிட்டது, ஆற்றல்மிக்க இளம் தலைமுறை வந்துவிட்டது என்ற பயத்தை காட்டிவிட்டோமல்லவா?


அந்த பயம் ஆட்சியாளர்களுக்கு சாதாரணமானது அல்ல‌


அதில் இனி பலமுறை யோசித்தே தமிழக விஷயங்களில் முடிவெடுப்பார்கள், அதனை காலம் இனி உணர்த்தும்


களத்தில் வந்த எல்லோருக்கும் குறிப்பாக குழந்தை முதல் எங்கோ அமெரிக்க மூலையில் கொடிபிடித்த நண்பர்கள் வரை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்


ஒவ்வொரு தமிழனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்த போராட்டம் இது என்பதை மிக உறுதியாக சொல்லமுடியும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்


குறிப்பாக அந்த பதிவு போட்டவரை தேடிகொண்டிருக்கின்றேன், அது இப்படி இருந்தது


"ஜல்லிகட்டு விளையாட தெரியாதவன் எல்லாம் எதுக்கு போராட்டம் பன்றான் என்ற கேள்விக்கு


ம்ம் நீ மட்டும் தாலிகட்டிற கல்யாணத்துக்கு ஏன் எல்லோரும் வாராங்க, எல்லோரும் உன் பொண்டாட்டி கழுத்துல‌ தாலி கட்டட்டுமா.."

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?




உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?


நீதிமன்றங்களில் உண்மையினை சொல்லி என்ன செய்யமுடியும்? வழக்கறிஞர்களே பொய்யில் வாதாடுவார்கள் என்பது உலகறிந்தது.


எல்லா நீதிமன்றங்களிலும் பொய்யான வாதமே வெல்லும் முன்பு ஜெயாவிற்கு ஜாமீன் கிடைத்தது போல‌





அதனை வள்ளுவன் பொய்மையும் வாய்மையிடத்து என எப்பொழுதோ எழுதிவைத்தும் விட்டான்

வள்ளுவன் வழியிலே தமிழகமும் சொல்லலாம்

"ஜல்லிகட்டு கலாச்சார பண்டிகை என்றால் வீட்டிற்கு வீடு பொங்கல் பானை வைப்பது போல காளை அடக்குவார்கள் அப்படி அல்ல‌

அது தமிழகம் முழுக்க அல்லாமல் மிக சில இடங்களில் ஆலயம் சம்பந்தபட்ட விளையாட்டு.

அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் எல்லாம் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட காளைகளை மட்டும்தான் தொட்டு விளையாடுகின்றார்கள்

அவை எல்லாம் கோவில் காளைகள், கோவில் யானை இருக்கின்றதல்லவா? அப்படி கோவில் காளைகள்

அவற்றை தொட்டு ஆசிபெறுவது பக்தர்கள் நம்பிக்கை, அது அழிக்கும் சிவனின் வாகனம் என்பதால் மிக துணிந்தவர்கள் மட்டும் தொட்டு ஆசி வாங்குவார்கள்

அஞ்சியவர்கள் தள்ளிநின்று வணங்குவார்கள்

இது முழுக்க முழுக்க மத வழிபாட்டு கொண்டாட்டம்

இந்த மத நம்பிக்கையில் தலையிட சுப்ரீம் கோர்ட், ஐ.நா, பீட்டா, டிரம்ப் என யாருக்கும் உரிமை கிடையாது,

அப்படி உரிமை உண்டென சொல்வீர்கள் என்றால் ரம்ஜானுக்கும் பக்ரீத்திற்கும் அறுக்கபடும் ஆடு மாடுகளை தடுத்துவிட்டு அலங்காநல்லூர் கோவில் காளைகள் பக்கம் வாருங்கள்.."

என ஒரு வழக்கறிஞர் முழங்கினால் உச்ச நீதிமன்றம் என்ன கிழித்துவிடும்

ராஜாஜி, எத்திராஜ் போன்ற வக்கீல் சிங்கங்கள் இருந்த தமிழகத்தில் நல்ல வழக்கறிஞருக்கு பஞ்சமாகிவிட்டது

அதாவது அவர்களை போல‌ குதர்க்கமாக சிந்திப்பவர்களே நல்ல வழக்கறிஞர்களாக முடியும், இப்போதுள்ள தமிழக வழக்கறிஞர்கள் எல்லாம் மகா அப்பாவிகள் போல..





முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்





Image may contain: 1 person


ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி


ஆக அவசர சட்டத்திற்கு முன்பே வாய்ப்பு இருந்திருக்கின்றது, ஆனால் உங்கள் புரட்சிதலைவி, இதய தெய்வம் அதனை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்கின்றீர்கள்


அந்த தலைவி தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கின்றார் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றீர்கள்


உங்கள் புரட்சி தலைவி பிறப்பிக்காத அவசரசட்டத்தை நீங்கள் பிறப்பிக்க போகின்றீர்கள் வாழ்த்துக்கள்.


ஆக இப்படி ஒரு வாய்ப்பு தமிழர்கள் பொங்கி எழுந்தால்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றது அல்லவா?


பாருங்கள் பன்னீர் செல்வம், இத்தனை முறை முதலமைச்சராக இருந்திருக்கின்றீர்கள், இப்படி ஒரு வழி இருப்பது தெரிந்ததா?


தமிழகம் எப்படி புரிய வைத்திருக்க்கின்றது பார்த்தீர்களா? இன்னும் நிறைய புரியவைக்கும்,


4 வருடத்தில் நீங்கள் பெரும் சட்டமேதையாகவே பதவி விலகுவீர்கள். அவ்வளவு சட்டங்களை நீங்கள் இனி படிப்பீர்கள்


உங்களின் இந்த வாக்குறுதியினை நம்பி கலைந்து செல்ல முடியாது.


முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்


நீங்கள் டெல்லியிலிருந்து டிவியில் பார்த்துவிட்டு வந்தால் போதும்


போராளிகள் ஜல்லிகட்டு ஆதரவாளரே தவிர, வீரர்கள் அல்ல. அவர்கள் களம் புகும் அவசியம் இல்லை, அதற்கு வீரர்கள் உண்டு, அதனால் போராளிகள் சாவகாசமாக இங்கே அமரலாம்.


3 நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நீங்கள் உறுதிகொடுக்கும் "ஓரிரு நாட்கள்" அதிகமில்லை, பிரச்சினை இல்லை


உங்களுக்கும் சென்னையில் பெரும் வேலை இருப்பதாக தெரியவில்லை


அதனால் முதலில் வாடிவாசல் திறக்கட்டும் ஜல்லிகட்டு நடக்கட்டும்


அதன் பின் நீங்களும் வாருங்கள், அவர்களும் கலைவார்கள்.


அது இருக்கட்டும்


2 வருடமாக இப்படி ஒரு வாய்ப்பு இருந்தும் அதனை செய்யாத உங்கள் தலைவியினை இனி கிழிய கிழிய திட்டுவார்களே


தடுக்கமுடியுமா பன்னீர் செல்வம்?
















































வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்!



No automatic alt text available.


ஜல்லிகட்டிற்காக ஏராளமானோர் கட்சி பாகுபாடின்றி தங்கள் முகநூல்படத்தினை மாற்றி இருக்கின்றார்கள்


அது பாராட்டபட வேண்டிய விஷயம் , ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது


கலைஞரை மிக கடுமையாக விமர்சித்தவன் எல்லாம் முரசொலியில் அவர் இலச்சினையாக வைத்திருந்த ஜல்லிகட்டு படத்தினை, அதாவது "வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்" என்ற வசனத்துடன் கூடிய ஜல்லிகட்டு படத்தினை வைத்திருக்கின்றார்கள்


பெரும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஏன் கொலைவெறி தாக்குதலுக்கும் இடையில் முரொசொலி பத்திரிகையினை கலைஞர் கிட்டதட்ட 74 வருடங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தினார்


அதனால் அவர் பட்ட அடிகள் கூட உண்டு, மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் உண்டு.


வாழ்வா? சாவா? எனும் மரண போராட்டத்தில்தான் மிக துணிச்சலாக அவர் எழுதினார்.


அந்த நேரத்தில்தான் அந்த இலச்சினை சூட்டபட்டது, அதாவது ஜல்லிகட்டில் காளையினை அடக்கும் வீரமுள்ளவன் தமிழன் என அர்த்தமாக வைக்கபட்டது


அதாவது தமிழகம் என்றுமே ஒரு போராட்ட களமாகவே இருக்கும், போராடாமல் எந்த உரிமையும் இங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து அர்த்தமாக செய்திருக்கின்றார்


இன்று தமிழர் எல்லாம் அதனை உயர்த்தி பிடிக்கின்றனர்


அவர் பேசமுடியா நிலைக்கு சென்றாலும் கிட்டதட்ட 73 ஆண்டுகளுக்கு முன்பே அவர் உருவாக்கிய படம் நமக்கெல்லாம் இன்று தேவைபடுகின்றது


ஆக கலைஞரும் அவரின் உழைப்பும் என்றைக்கும் தமிழகத்திற்கு தேவை என்பது எவ்வளவு அழகாக தெரிகின்றது


கவனியுங்கள், அந்த கலைஞர் கொடுத்த அடையாளம் இன்று தேவைபடுகின்றதே ஒழிய, எம்ஜிஆர் உயர்த்திய டாய்டெல் சிம்பல் யாருக்கு தேவை?


ஜெயா காட்டிய ஒற்றை விரல் அடையாளம் யாருக்கு தேவை?


கலைஞர் நமக்கு ஜல்லிகட்டு இலச்சினையினை உருவாக்கினார், வைத்து போராடுகின்றோம்.


எம்ஜிஆர் காஷ்மீர் தொப்பி தந்தார், ஜெயா கோர்ட் தந்தார், சசிகலா ஒரு வித கொண்டை அடையாளம் தமிழகத்திற்கு தந்திருக்கின்றார், அதனை வைத்து என்ன செய்ய?


இன்று ஆச்சரியமாக அதிமுகவினரும் கலைஞரின் முரசொலி இலச்சினையினை தயக்கமே இன்றி பிடித்துகொண்டிருக்கின்றனர் , அப்படியாவது மானம் பெறட்டும் அடிமை வம்சம்


போராடாமல் இந்தியாவில் வாழமுடியாது என்பதை கணித்து ஜல்லிகட்டு அடையாளத்தை வசனத்தோடு கொடுத்த கலைஞரின் உழைப்பு, தமிழரின் அடிமடியிலே கைவைக்கும்பொழுது தேவைபடுகின்றது


இதனால்தான் சொல்வது நாம் திமுக அல்ல, ஆனால் இந்தநாட்டின் சில அணுகுமுறைக்கு அவர் கட்டாயம் தேவை, அவரை விட்டுவிட முடியாது.


ஜல்லிகட்டு தடையில் அது அவ்வளவு உறுதியாக தெரிகின்றது.


அம்மனிதனை பார்க்கவேண்டும் போலிருக்கின்றது. எங்கே அய்யா இருக்கின்றீர் நீர்?,


கை கொடுக்கவேண்டும் போலிருக்கின்றது



























சொந்த மண்ணுக்கு செல்லும் போது...

https://youtu.be/5OjzTxntdxk



சொந்த மண்ணுக்கு செல்லும் டிக்கெட் கையில் கிடைத்துவிட்டாலே ஒரு இனம்புரியாத ஏக்கம் மனதில் வந்துவிடுகின்றது


சோறு இறங்காது, தூக்கம் வராது, அந்த நினைவுகளை தவிர‌ வேறு எதுவும் தோன்றா நிலை அது


இன்னும் சிலநாட்களில் அம்மண்ணை மிதிக்கபோகின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சி, ஆனால் சுவரில் அடிக்கபட்ட பந்தினை போல வேகமாக‌ திரும்பவேண்டும்.


என்ன வாழ்க்கை இது?


பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால்தான் நிம்மதி என்பார் கண்ணதாசன், அது உண்மையும் கூட‌


அப்படி சென்றவுடனும் அழவேண்டும், விட்டு பிரியும்பொழுதும் அழவேண்டும்


அமைதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்வில் சொந்தமண்ணிற்கு சென்று திரும்புவது என்பது ஒரு வகையான ஆனந்த வலி, அந்த வலி ஆற கொஞ்சநாள் ஆகும்


ஆயிரம் திட்டங்களோடும், எராளமானோரை சந்திக்கவேண்டும் என ஒவ்வொரு முறையும் எழுதிவைத்துவிட்டு வருவதுதான், ஆனால் தாயினையும், தாய் மண்ணையும் கண்டபின் எல்லாம் மறந்துவிடுகின்றது.


இம்முறை ஓரிருவரையாவது பார்க்க முயற்சிக்கலாம், நம்மையும் மதித்து அழைக்கின்றார்கள் என்பது பெரும் விஷயம். ஒரு முறை நம்மை சந்தித்துவிட்டால் அதன் பின் அழைக்கவே மாட்டார்கள் என்பதால் விட கூடாது.


தெரியாமல் இவனை சந்தித்துவிட்டோமே என அவர்களை கதற வைத்துவிட்டு வந்துவிட்டால் அதன் பின் ஏன் அழைக்கபோகின்றார்கள்?


பக்கத்து வீட்டுக்காரன் தடையினை மீறி அவன் கன்றுகுட்டியில் ஒன்றை அடக்கி பலர் முகத்தில் கரிபூசும் திட்டமும் இருக்கின்றது


வரவேண்டும், ஆனால் பெரும் எதிரிகளை சம்பாதித்திருக்கின்றேன், சீமான் கோஷ்டி, சின்னம்மா கோஷ்டி, சாதி கோஷ்டி என ஏகபட்ட எதிரிகள்.


எப்படி செல்லலாம்?


அங்கிள் சைமன் ஈழகதையில் சொன்னது போல வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணமாக மாற்றிவிடவேண்டியதுதான்


தொப்பி வைத்து, கண்ணாடி போட்டு, கன்னத்தில் மரு வைத்து வந்துவிடவேண்டியதுதான், கண்டிப்பாக ராஜபாளையம் பஸ்டாண்ட் வரை சென்று நிற்கவேண்டும்.


நீண்ட நாளைக்குபின் சொந்தமண்ணை பார்ப்பது பெரும் உற்சாகம், அந்த உற்சாகத்தில்தான் தொடர்ந்து இயங்க முடியும்


கடிகாரம் மிக மெதுவாக நகர்வது போல தோன்றிகொண்டிருக்கின்றது.


அந்த ஊர் நினைவுகள் வருகின்றது, அது மகா வித்தியாசமான கிராமம், மிக சிறிய ஊர் ஆனால் பெரும் சுவாரஸ்யமானது , ஆனால் நாம் சீரியசாக மட்டும் கூடாது, தொலைத்துகட்டி விடுவார்கள்.


முடிந்த வரை ரசித்து சிரிக்கலாம், தள்ளி நின்று கவனித்து வாய்விட்டு சிரிக்கலாம்,


கொஞ்சநாள் அரசியலுக்கு விடுமுறை விட்டுவிட்டு அங்கு போய் சிரித்துவரவேண்டும்,


அங்கும் சீமான்கள் உண்டு, வைகோ உண்டு, சு.சாமி உண்டு, உடன்பிறவா சகோதரி உண்டு, சின்னம்மா உண்டு, பன்னீர் உண்டு
கலைஞர் உண்டு என்பதால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.


ஆனால் எல்லாவற்றையும் ரகசியமாக செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதவர்கள் போல மவுனம் காத்து மோடி போலவே கள்ள கண்ணீர் விடுபவர்களும் உண்டு,


அதனையும் ரசித்து விடலாம், என்ன பிரமாதம்? மோடியினை விடவா நடித்துவிடுகின்றார்கள் என நினைத்தால் சிரிப்பு வந்துவிடும்.


இப்படி எல்லாவற்றையும் ரசித்து கடந்தாலும், பிரியும் பொழுது மனம் உடைந்து அழுதுதான் கிளம்பவேண்டும்


விஸ்வாமித்திரன் கதறிகொண்டிருந்த‌ தசரதனுக்கு சொன்ன அந்த வரிகளை நினைத்து ஆறுதல் அடைந்து கண்களை துடைத்துவிட்டு கிளம்பவேண்டும்


"தசராதா கோடி கொடுத்தாலும் உன் மகன்கள் உன்னை பிரிவார்களா? அவர்களாக செல்வார்களா?


விதி அவர்களை இழுத்துகொண்டு ஓடுகின்றது, அவர்களாக செல்லவில்லை, அதற்கு முன் நாம் என்ன செய்யமுடியும்?"


அந்த விஸ்வாமித்திரர் வரிகளே நமக்கு ஆறுதல், என்ன இருந்தாலும் முனிவன் அல்லவா?