Friday, January 20, 2017

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



Image may contain: 2 people


தமிழகம் முழுவதும் ரயில் மறியல் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ரயில்மறியல் அவர்களின் ஸ்பெஷல் போராட்டம், ரயிலுக்கும் அவர்களுக்கும் உள்ள "ரயில் சிநேகம்" அப்படி.


கலைஞருக்கு ரயில் பயணம் மிக பிடிக்கும், அதனால் "திருட்டு ரயில்" என அவரை கலாய்த்தவர்களும் உண்டு


வைகோ கூட அந்த "ரயில் பயணத்திலே.." என சொல்லி கலைஞரை தாக்குவார்


கலைஞரின் அசத்தல் போராட்டம் அப்படி ரயில் மறியலில்தான் தொடங்கியது,


கல்லக்குடி எனும் ஊர் பெயரினை டால்மியாபுரம் என மாற்றிவிட திமுக துடித்தெழுந்தது, ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் டால்மியாபுரம் எனும் போர்டின் மீது கல்லகுடி என போஸ்டர் ஒட்டுவதுதான் அண்ணா அறிவித்த போராட்டம்


மிக சாதரண போராட்டம்


கலைஞரோ அதனை பெரிதாக மாற்றினார், அன்று அவர் பேச்சிய பேச்சு மகா உருக்கமானது "குழந்தையினை முத்தமிட்டேன், அன்னையிடம் விடைபெற்றேன்" என ரத்தம் தெறிக்க அவர் பேசிய பேச்சில் கூட்டம் ஆர்பரித்தது


அக்கூட்டத்தோடு ரயில் நிலையம் சென்றார் கலைஞர், கைது செய்யுங்கள் என நின்றார், போலிசாரோ இதற்கெல்லாம் கைது இல்லை என்றார்கள்,


போஸ்டர் ஒட்டிவிட்டு இப்பொழுதாவது என்னை பிடியுங்கள் என நின்றார் கலைஞர் , மறுத்தது போலிஸ்


அவ்வளவுதான் ரயில் தண்டவாளத்தில் படுத்து ஆர்பாட்டம் தொடங்கிவிட்டார், அகதளம் ஏக அழிச்சாட்டியம். தலைவனே படுத்தபின் தொண்டர்கள் என்ன செய்ய? பெரும் குழப்பம் வெடித்து துப்பாக்கி சூடுவரை சென்றது


கலைஞர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டார், பாம்புகள் பல்லிகள் அங்கு இருந்ததா தெரியாது, ஆனால் பாட்டு காவியமானது தமிழர் எல்லோருக்கும் தெரியும்


அதாவது அண்ணா சொற்படி கேட்டிருந்தால் கலைஞர் காணாமலே போயிருப்பார், எப்படி செய்தால் அது கவனிக்கபடும், எப்படி செய்தால் அது பரபரப்பாகும் எனும் வித்தை கலைஞருக்கே தெரிந்தது


அண்ணா அசந்து நின்ற சமயம் அது. கருணாநிதியினை எல்லா தலைவர்களும் வித்தியாசமாக பார்த்த தருணம் அது.


ஆளுமையும் மிரட்டலுமிக்க தலைவராக அப்பொழுதுதான் கலைஞர் உலகிற்கு அறிமுகமானார்


போராட்டம் எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு புதுவிதி அவரால் அன்று எழுதபட்டது, அதுவே பின்னாளில் திமுகவின் வெற்றிக்கெல்லாம் அஸ்திவாரமாக நின்றது


அப்படி எல்லாம் சிந்தித்த தலைவரின் மகன் மறுபடியும் அதே ரயிலினை மறிக்க போகின்றாராம், என்ன வளர்ச்சி இது?


ஒரு ஏரோபிளேனை மறைக்கும் அளவிற்காவது வளர கூடாதா? 50 வருடமாக ரயிலை மட்டும் நிறுத்துவார்களா?


இந்த சம்பிரதாய போராட்டம் எல்லாம் திமுகவினை வளர்க்காது, மாறாக அதனை கீழேதான் கொண்டு செல்லும்


பெரும் போர்குணம் கொண்ட கட்சியினை, எப்படி ஸ்டாலின் சாதாரண ஆட்டுமந்தையாக மாற்றுகின்றார் என்பதையும், ஒரு கூரான வாளினை எப்படி துருபிடிக்க விடுகின்றார் என்பதையும் தமிழகம் பார்த்துகொண்டிருக்கின்றது


இம்மாதிரி அப்பிராணிகள் திமுக எனும் கட்சியினை கொண்டு செல்ல முடியாது


ஆளும் கட்சி சறுக்கும் இடங்களில் எதிர்கட்சி முந்திகொண்டு திமிறவேண்டும் என்பது அரசியல் பாலபாடம், ஸ்டாலின் அதனை செய்யவில்லை


இவரை பார்த்தால் அப்பாவியாகத்தான் தெரிகின்றார், ஒருவேளை தந்தையினை போல தண்டவாளத்தில் தலைவைக்கும் ஐடியா ஏதும் இருக்குமோ?


கலைஞர் ஓடாத ரயில்முன் படுத்தார் , அதாவது ரயிலை கிளம்பவிடாமல் படுத்தார் என்பார்கள்.


இவர் ஆர்வகோளாறில் ஓடும் ரயில்முன் பாய்ந்துவிட்டால்.. அப்படி எல்லாம் இருக்காது, ரயில் வராத நேரங்களில் மறிக்க முயற்சிக்கலாம்





























No comments:

Post a Comment