Thursday, January 12, 2017

ஜல்லிக்கட்டுச் செய்திகள் ....

https://youtu.be/dAT9md3_Fkk





எல்லா தலைவர்களும் ஜல்லிகட்டு பற்றி பேசியாகிவிட்டது, இந்த வைகோ என்பவரை மட்டும் காணவில்லை


அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்?


தலையில் துண்டை கட்டிகொண்டு வாடிவாசல் வரையாவது நடக்க கூடாதா?




இவர் பேச்சினை கேட்டு காளைகளுக்கு ரத்தம் சூடாகிவிடகூடாது என யோசிக்கின்றாரோ?










ஜல்லிகட்டு அனுமதிக்காக ஸ்டாலின் தலமையில் திமுக ஆர்ப்பாட்டம்


திராவிட நாட்டினை மீட்க கிளம்பிய இயக்கம், இப்படி திராவிட காளை மாட்டையாவது மீட்கவா கெஞ்சி கொண்டிருக்கின்றது?


அய்யகோ என்ன கொடுமை இது?






ஜல்லிகட்டு நடத்தவிடாதை கண்டித்து ஏன் டெல்லி எம்பிக்கள் ராஜினாமா செய்ய கூடாது?


அதனை கொண்டுவரமுடியாத பன்னீர் அரசு ஏன் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய கூடாது?


இதுவே கலைஞர் ஆட்சி என்றால் இப்படித்தான் பொங்குவார்கள், அவர் ராஜினாமா செய்ய வேண்டும், சென்னையினை காலி செய்ய வேண்டும் என ஏக முழக்கமிடுவார்கள்





இப்பொழுது சத்தமே இல்லை

டெல்லி எம்பிக்கள் ராஜினாமா செய்தால்தான் என்ன?

எப்படியும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா எல்லாம் தரமாட்டார்கள்,

கிளம்பி வாருங்கள்

தமிழகத்திற்காக ஒன்றுமே செய்யாத, அல்லது செய்ய விரும்பாத உங்களுக்கு பெரும் எண்ணிக்கை பதவி எதற்காக??

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தால் என்ன?





சிம்புவை நேரில் சந்தித்து சீமான் வாழ்த்து


இருவரும் சேர்ந்து ஏதும் கூட்டம் போட்டு பேசி தொலைத்துவிடாதீர்கள்


இந்த ஜல்லிகட்டே வேண்டாம் என தமிழகம் முடிவுசெய்துவிடும்..






தடையினை மீறி ஜல்லிகட்டு நடத்தினால் ஜனாதிபதி ஆட்சி : சு.சாமி எச்சரிக்கை


சரி, அந்த ஜனாதிபதி ஆட்சியிலும் ஜல்லிகட்டு நடத்தினால், அடுத்தது ஐ.நா ஆட்சியா?


தடையினை மீறி போராடாமல் தமிழகம் தன் உரிமையினை பெற்றதாக வரலாறே இல்லையே




வரலாறு அதனைத்தான் சொல்கின்றது


தடையினை மீறித்தான் அது சாதி ஒழிக்க கிளம்பிற்று, தடைகளை மீறித்தான் அது தேவதாசி முறையினை ஒழிக்க கிளம்பிற்று


போராடி போரடித்தான் அது கொஞ்சமேனும் தன்னை நிறுத்திற்று.


தடையினை மீறி கொந்தளித்துதான் அது சென்னை முதல் குமரி வரை மீட்டது, அப்படி மீறித்தான் இந்தி நுழையாமல் காத்தது, அப்படி தடைகளை மீறித்தான் மாநில சுயாட்சிக்கு அது மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டியது


மிசா தடைகள அது அப்படித்தான் தைரியமாக எதிர்கொண்டு இந்தியாவிற்கே வழிகாட்டியது


தடைகளுக்கு தமிழகம் ஒரு காலத்திலும் அஞ்சியதில்லை


இந்த ராமசந்திரன் என்பவர் பின் தமிழகம் செல்ல தொடங்கியது முதலும், அவரையும் அவர் கட்சியினை சமாளிக்க திமுக திசைமாறிய பின்னுமே இந்த ஒரு சுணக்கம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.


தமிழனின் போர்குணம் இந்த ராமசந்திரன் கோஷ்டி அரசியலுக்கு வந்தபின்புதான் மங்கிற்று, பின்வந்த காலங்களில் மறந்தே போயிற்று


பின் எப்படி அக்கட்சி ஆளும்பொழுது சில அதிரடிகளை எதிர்பார்க்க முடியும்?


பழைய தமிழகமாக இருந்திருந்தால் எப்பொழுதோ சு.சாமி கொடும்பாவி எரிப்பு, அவர் பொம்மையினை மாட்டுகாலில் மிதிக்க விடுதல் என இறங்கியிருக்கும்


இப்பொழுது ஆளும் கட்சி ஒரு பொம்மை, எதிர்கட்சியும் பொம்மை


அதனால் சு.சாமி போன்ற பொம்மைகள் எல்லாம் பேசிகொண்டிருக்கின்றான‌


தமிழகம் எப்போதும் போர்குணம் கொண்டதுதான், ஆனால் பாழாய் போன அரசியல்வாதிகளால் அது திணறிகொண்டிருக்கின்றது


அது பழைய தமிழகமாக எழுந்துவிட்டால் நாடு தாங்காது


ஆனால் அப்படி எழுப்பிவிடும் வேலையில்தான் பாஜக அரசு இறங்கியுள்ளது.


வெள்ளையன் ஆட்சியில் சட்ட மறுப்பு இயக்கம் சரியாம், இன்று அப்படி ஒரு பைத்தியகார சட்டத்தினை மறுத்தால் அது தவறாம்.


உரிமையினை காக்க சட்டத்தை மறுக்கலாம் என எங்களுக்கு சொல்லி தந்தது காந்தி, திராவிடம் உரிமையினை மறுக்கும் சட்டம் என் ..க்கு சமம் என்றார் பெரியார்


நாங்கள் காந்தியினையும் , பெரியாரையும் மறக்கபோவதே இல்லை..


வரலாறேல்லாம் தடையினை மீறியே தன்னை காத்துகொண்ட தமிழகம், தடைகளை மீறித்தான் தன் உரிமையினை காக்க முடியுமென்றால்...


இதனை போல ஆயிரம் தடைகளை அது மீறிகொண்டுதான் இருக்கும்






தமிழகத்தின் சில கோயில்களிலும், நேபாளத்திலும் சில திருவிழாக்களின் பொழுது ஏராளமான எருமை பலியிடும் நிகழ்வு உண்டு


அதுவும் நூறு, ஆயிரம், லட்சம் என ஏராளமான எருமைகள் பலியிடபடும்


இந்த பீட்டா மற்றும் விலங்குநேய அமைப்புகள் அப்பொழுது என்ன புடுங்கிகொண்டிருக்கும் என்பதுதான் தெரியவில்லை...




ஜல்லிகட்டுக்கு தடை என்றால் இந்த எருமைவெட்டிற்கும் தடை விதிக்க வேண்டுமல்லவா யுவர் ஆணர்....


ஜல்லிகட்டு சில கோயில்களின் சம்பிரதாயம், கோவிலுக்கு வளர்த்த காளைகளை தொட்டு விளையாடுவது சாட்சாத் சிவபெருமானோடு ஆடுவது என்பது ஐதீகம் என அதனை கோவிலோடு அடையாளமாக்கினால் எந்த கோர்ட் தடுக்கும்?


இனி அதனைத்தான் செய்யவேண்டும்


இத்தேசத்தில் சட்டங்கள் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யாது,


ஆனால் மதம் எல்லா பாதுகாப்பினையும் வழங்கும்.






ஜல்லிகட்டு தடைக்கு காங்கிரசும் திமுகவும் காரணம் என சிலர் கிளம்பிவிட்டான்


அவனுக்கென்ன?, இவ்வருடம் மழை ஏன் இல்லை என்றாலும் அதற்கும் திமுகவும் காங்கிரசும் காரணம் என சிரிக்காமல் சொல்வான், அது ஒருவகையான மனகோளாறு


சரி அப்படி தவறு அவர்கள் பக்கம் என்றால் இன்று ஆளும் பாஜகவும், அதிமுகவும் அதனை சரிசெய்யலாம் அல்லவா?




கேட்டால் அது எப்படி? அவர்கள் தவறு செய்தால் நாங்கள் எப்படி சரி செய்ய முடியும்? செய்யமாட்டோம், ஆனால் அவர்களை திட்டிகொண்டே இருப்போம் என்கின்றார்கள்


அப்படியானால் நீங்கள் ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்? அவர்களே போதாதா?


அதாவது அவர்களாலும் முடியவில்லை அதனைபோல உங்களாலும் முடியவில்லை என சொன்னால்தான் என்ன?






போகிக்கு எல்லோரும் கொளுத்த தொடங்கிவிட்டார்களாம்


மிக பழமையானது என 1990களின் குஷ்பூ படம்தான் நம்மிடம் இருக்கின்றது,


அதனை நெருப்பில் எறிய மனம் வருமா?


அதற்கு பதிலாக போகியினை புறக்கணிக்கலாம்..









No comments:

Post a Comment